சென்னைப் புத்தகக் காட்சியில் (2022) இந்த வருடம் கண்ணில் பட்ட முதல் வானொலி புத்தகம் ஞா.மாணிக்கவாசகன் எழுதிய "வானொலியின் கதை". புத்தகத்தின் விலை ரூ.40/- மட்டுமே.
புத்தகத்தின் சிறப்புகளில் ஒன்று "வானொலி" இதழின் முக்கியப்பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ளது. குறிப்பாக 1938-ம் வருஷம் ஜூன் மாதம் 16-ம் தேதி வியாழக்கிழமை சென்னை வானொலி நிலையம் - முதல் நாள் நிகழ்ச்சிகளின் அட்டவணையை அப்படியே வானொலி இதழில் இருந்து நகல் எடுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பண்பலை வானொலிகளின் முதல் நாள் ஒலிபரப்பு இப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். 1938-ல் இதனை ஆவணப்படுத்தியுள்ளனர்.
சமீபகாலமாக வானொலியை என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதையும் ஒப்பீடு செய்து தெரிந்து கொள்ளலாம். வரலாறு நம் கண் முன்னே அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
"ரேடியோ ரிப்பேர் செய்வது எப்படி?" என்ற தலைப்புகளில் நூல்கள் வந்துள்ள அளவுக்கு ரேடியோ பற்றிய நூல்கள் வரவில்லையே என்ற ஆதங்கம் தான் ஞா.மாணிக்கவாசகனை இந்த நூலினை எழுதத் தூண்டியதாம். அதுவே எனக்கும்!
அரங்கில் நூல் கிடைக்கும் இடம் உமா பதிப்பகம். வானொலி ஆர்வலர்களும், இதழியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் அரங்கினை தேடி கண்டுபிடித்துக் கொள்வார்கள்!
#வானொலி #வானொலியின்கதை #சென்னைப்புத்தகக்காட்சி #chennaibookfair #radio #book