Tuesday, February 15, 2022

வானொலி தொடர்பான மூன்று புத்தகங்கள்

 

 பல்கலைக் கழக மானியக் குழு வைக்கும் தேசிய தகுதித் தேர்வில் (National Eligibility Test) வானொலி புத்தகங்கள்  தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது குறித்து சமீபத்தில் எழுதியிருந்தேன்.

அதில், வானொலித் தொடர்பான புத்தகங்களை எழுதிய திரு.கோ.செல்வம் (உங்கள் வானொலி), திரு.வெ.நல்லதம்பி (உலகமேலாம் தமிழோசை) மற்றும் தங்க.ஜெய்சக்திவேல் எழுதிய  "உலகவானொலிக
ள்" உள்ளிட்ட புத்தகங்களில் "உலக வானொலிகள்" புத்தகத்தினை தவிர மற்ற இரண்டு புத்தகங்களை பற்றி எந்த விபரமும் இணையத்தில் கிடைக்கவில்லை என்று JNU தமிழ் துறை மாணவர் தமிழ் பாரதி கேட்டிருந்தார். அவருக்காக இந்தப் பதிவு.

 

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு பற்றி இலங்கையில் பிறந்து, பிற்காலத்தில் இந்தியாவில் வசித்த சிவ பாதசுந்தரம் எழுதிய "ஒலிபரப்புக் கலை" புத்தகத்திற்கு பிறகு நீண்ட காலமாக வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக்காக எந்த ஒரு புத்தகமும் வெளியாகவில்லை.

அந்த குறையைப் போக்க வந்த புத்தகம் தான் இந்த கோ.செல்வம் அவர்கள் எழுதிய "உங்கள் வானொலி". 300 பக்கங்களுக்கும் மேல், விரிவாக எழுதப்பட்ட இந்த புத்தகம் தான் ஒரு காலத்தில் வானொலி இதழியல் பயில்வோருக்கு கையேடாக இருந்தது. இன்று இந்த புத்தகம் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தமான செய்தி.

 


அடுத்து வெ.நல்லதம்பி அவர்கள் எழுதிய "உலகமெலாம் தமிழோசை". இந்த புத்தகம் 2010 வாக்கில் வெளிவந்ததால், ஒரு சில வானொலி ஆர்வலர்களிடம் இருக்க வாய்ப்புண்டு. நமது சர்வதேச வானொலி மாத இதழில் இந்த புத்தகத்தின் மதிப்புரையை எழுதியதால், ஒரு சில நேயர்களும் வாங்கினர். இன்னும் ஒரு சில புத்தக விற்பனையாளர்களிடம் இந்த புத்தகம் கிடைக்க வாய்ப்புள்ளது. சென்னைப் புத்தகக்காட்சியில் துணிந்து தேடலாம்.

இந்த மூன்று புத்தகங்களின் அட்டைப்படத்தினை மாணவர் தமிழ் பாரதிக்காக இங்கே பதிவு செய்கிறேன். "ஒலிபரப்பு கலை" புத்தகத்தினைப் பற்றி விரிவாக மற்றொருப் பதிவில் எழுதுகிறேன்.


4 comments:

JAY MEDIA STUDIES said...

நான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம், காட்சி தொடர்பியல் துறையில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிகிறேன். எம் மாணவர்கள் பெரும்பாலும் கிராமபுற மற்றும் மலைவாழ் சூழலில் இருந்து வருகின்றனர். தமிழ் மீதும் ஊடகங்களில் குறிப்பாக வானொலி மீதும் அதிக நாட்டம் கொண்டவர்கள் எனவே இந்த புத்தகங்கள் அச்சு பிரதிகளாகவோ அல்லது மின்னணு பிரதிகளாகவோ இருந்தால் இந்த இளம் வயதினரை படிக்கச் செய்து வானொலி பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றேன்.

Unknown said...

என்னிடம் உள்ளது இரு நூல்

Unknown said...

இதனை pdf ஆக அனுப்ப இயலுமா அண்ணா

Unknown said...

எங்கு கிடைக்கும். எனக்கு மூன்று புத்தகங்களும் ேதவை