Showing posts with label தந்தி. Show all posts
Showing posts with label தந்தி. Show all posts

Thursday, August 08, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 10

இந்தியாவில் தந்தி 


இந்தியாவில் 1855-ம் ஆண்டு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை இந்திய தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இது 1990-ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக தந்தி சேவையின் பயன்பாடு தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பி.எஸ்.என்.எல் தந்திப் பிரிவின் பொது மேலாளர் ஷமீம் அக்தார் வழங்கியுள்ளார்.
இந்த அறிக்கை அனைத்து தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கும், வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தந்தி பதிவு அலுவலகங்கள் வரும் ஜூலை 15-ம் திகதிக்கு பின்னர் தந்திகளை பெறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை முழுவதும் நிறுத்துவதற்கு பதிலாக, இதனை இந்திய தபால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 01, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 9

அடுத்த மாதம் 15–ந் தேதியில் இருந்து நூற்றாண்டை கடந்த ‘தந்தி’ சேவையை நிறுத்த முடிவு பி.எஸ்.என்.எல். தகவல்


நூற்றாண்டை கடந்து மக்கள் மத்தியில் பிரபலமான ‘தந்தி’ (டெலிகிராம்) சேவையை அடுத்த மாதம் (ஜூலை) 15–ந் தேதியில் இருந்து நிறுத்திவிட முடிவு செய்து இருப்பதாக பாரத் சஞ்சார் நிகாம் (பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் அறிவித்து உள்ளது.
தகவல் பரிமாற்றத்துக்கு ‘தந்தி’
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நல்லது, கெட்டது என எல்லாவித தகவல் பரிமாற்றத்துக்கும் “தந்தி’’ (டெலிகிராம்) சேவைதான் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
160 ஆண்டுகளைக்கடந்த தந்தி சேவை, கடந்த 1850–ம் ஆண்டுவரையில் தபால்–தந்தி துறை என்று இருந்தது. பின்னர் இந்த சேவை தனித்தனியே பிரிக்கப்பட்டது.
அறிவியல் வளர்ச்சி
செல்போன், இ.மெயில், ஸ்மார்ட் போன் என்று காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், ‘தந்தி’ சேவையை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டனர். எந்தவொரு தகவலையும், செல்போனில் எஸ்.எம்.எஸ்.மூலமாக தெரிவிக்கத்தொடங்கிவிட்டனர்.
இதனால், தந்தி சேவை குறைந்து டெலிபோன் துறைக்கு வருமானமும் வெகுவாக குறைந்துள்ளது.
எனவே, கடந்த சில ஆண்டுகளாக, தந்தி அலுவலகங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. சமீபகாலமாக பெயரளவுக்கு ஒரு சில தபால் நிலையங்களில் மட்டுமே தந்தி சேவை உள்ளது.
இதற்கிடையே, தந்தி சேவையை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடலாம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜூலை 15 முதல் நிறுத்த முடிவு
இது குறித்து, பி.எஸ்.என்.எல்.தந்தி சேவை பிரிவின் மூத்த பொது மேலாளர் சமீம் அக்தர் அனைத்து தந்தி அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வரும் ஜூலை 15–ந் தேதியில் இருந்து தந்தி சேவையை முற்றிலுமாக நிறுத்திவிடவேண்டும். பொதுமக்கள் தரும் தந்தியை பெறவோ, டெலிவரி செய்யவோ வேண்டாம்’’ என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழகத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தந்தி சேவை நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில், தபால் துறையிடம் ஆலோசனை நடத்தியபின்னரே, தந்தி சேவையை ஜூலை மாதம் 15–ந் தேதியில் இருந்து முற்றிலுமாக நிறுத்திவிடுவது என்று முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.
எதிர்ப்பு
பி.எஸ்.என்.எல்.எடுத்துள்ள இந்த முடிவுக்கு தேசிய டெலிகிராப் ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.பட்டாபிராமன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். இதேபோல் பல்வேறு சமூக சேவை அமைப்புகளும் கடும் எதிர்ப்புத்தெரிவித்து உள்ளன.

Thursday, July 25, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 8

விடை பெறுகிறது 

நாட்டில், 160 ஆண்டு கால பழமை வாய்ந்த, தந்தி சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.

இணையதளம்:தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக இருந்தது.சில ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில், போன் மூலம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி, இ - மெயில் மூலம் விரிவான தகவல் களை அனுப்புதல் போன்றவற்றை, அனைத்து தரப்பினரும் பின்பற்ற துவங்கியதை அடுத்து, தந்தி பயன்பாடு, வெகுவாக குறைந்து விட்டது.

கடந்த, 160 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள இந்த சேவை, இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது.அஞ்சல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட இந்த சேவை, கடந்த சில ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. வணிகரீதியில், லாபம் தராத இந்த சேவையை, ஜூலை, 15 முதல் நிறுத்திக் கொள்ள, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது.இது குறித்து, மத்திய அரசிடம், அந்த நிறுவனம் அனுமதி கோரிய போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனமே முடிவெடுக்கலாம் என, அரசு கூறிவிட்டது.

சுற்றறிக்கை:@@இதையடுத்து, ஜூலை, 15ம் தேதி முதல், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தந்தி இருக்காது. அடுத்த, ஆறு மாதங்களுக்கு, அரசின் ஆணைகள், சுற்றறிக்கைகள் மட்டுமே, தந்தி சேவை மூலம் அளிக்கப்படும். அதன் பிறகு, முழுமையாக, தந்தி சேவை நிறுத்தப்படும் என, டில்லியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவன, மூத்த பொது மேலாளர், சமீம் அக்தர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, July 18, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 7

160 ஆண்டுகள் சேவை

திருச்சி : ''....... சீரியஸ் ஸ்டார்ட் இம்மீடியட்லி'' இந்த வாசகம் ஒரு தலைமுறைக்கு முன்பு வரை ஏக பிரபலம். இதை பரப்பியதில் டெலிகிராம் எனப்படும் தந்திகளுக்குத்தான் முக்கிய பங்கு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதி வடிவம் டெலிகிராம் எனப்படும் தந்தி. ஒரு தலைமுறைக்கு முந்தைய மக்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போனது இந்த டெலிகிராம். தகவல் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில், திருமணம், வேலை, வாழ்த்து, இறப்பு என அத்தனை செய்திகளையும் தந்தி கொண்டு சேர்த்திருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டும் இருந்த நடைமுறை பின்னர் முன்னாள் எம்பி நல்லசிவம் நாடாளுமன்றத்தில் எடுத்த முயற்சியால் தமிழிலும் புழக்கத்தில் வந்தது. 

இந்தியாவில் கடந்த 1850ல் சேவையை தொடங்கியது முதல் மகிழ்ச்சி சம்பவங்களையும் அதற்கு நேரான துக்க விஷயங்களையும், அவசர தகவல்களையும் எழுத்துப்பூர்வமாக மக்களிடம் எடுத்துச்சென்றது தந்தி. தந்தி என ஒன்று வந்துவிட்டால் மனம் படபடக்காத மனிதர்கள் இருக்கமுடியாது. மக்களின் உணர்வுகளோடு ஒன்றிப்போன தந்தி சேவை தற்போது தனது இறுதி நாளை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஜூலை 15ம் தேதி முதல் டெலிகிராம் சேவை நிறுத்தப்பட உள்ளது.

ஆரம்பத்தில் தபால் தந்தித்துறையின் கீழ் இருந்த இந்த சேவை பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் வந்தது. தற்போது ஸ்மார்ட் போன், இ மெயில், எஸ்எம்எஸ், சாட்டிங் போன்ற நவீன தொலை தொடர்பு சேவைகளின் வரவால் டெலிகிராம் ஓரங்கட்டப்பட்டது. இன்றைய இளம் தலைமுறை பலருக்கு தந்தியின் பயன்பாடு, செயல்பாடு கூட தெரியாது. நாளடைவில் டெலிகிராமுக்கு இருந்த வரவேற்பு குறைந்தது. எழுத்துக்களை எண்ணி எண்ணி டைப் அடித்து அனுப்பப்பட்டு வந்த சேவை, வளவளவென பேச வைத்த செல்போன் நிறுவன வரவுகளால் தந்தியின் மகத்துவமும் தேவையும் குறைந்தது. 

இந்த நிலையில்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் தந்தி சேவையை ஜூலை 15 முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. தந்தி புக்கிங் செய்வதற்கு கடைசி நாளும் அதுதான். இதுகுறித்த சுற்றறிக்கையை மூத்த பொது மேலாளர் ஷமீம் அக்தர் இந்தியாவில் உள்ள பல்வேறு தொலைதொடர்பு மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார்.
எனினும், பல்லாண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் தந்தி முறையை நிறுத்தக்கூடாது; அது தொடர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, July 11, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 6

குட் பை!

முன்னொரு காலத்தில் தந்தி வீடு தேடி வந்தால் இதயம் துடி துடிக்க என்ன செய்தி வந்துள்ளதோ என குடும்பமே பத பதைத்த நியாபகங்கள் பலருக்கும் இருக்கும்..ஆனால் இப்போதைய காலத்தில் செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் மாடர்னாகி விட்ட நிலையில், நமது பாரம்பரியமான, பதை பதைக்க வைக்கும் இந்த தந்தி சேவைக்கு வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் ’குட் பை’ பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இப்போது சகலரும் உபயோகிக்கும் செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 – 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், பெரும்பாலானோர் பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்ததனர்.
இந்தியாவில் 1855-ம் ஆண்டுதான் தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சேவை இந்திய தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இது 1990-ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் 2003 வாக்கில் 500 ரூபாய்க்கு செல்போன், இன்கம்மிங் கட்டணம் இலவசம், அவுட்கோயிங் ரூ. 1 அல்லது 2 ரூபாய்தான் என தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போன் சேவை சந்தையில் களமிறங்கியதிலிருந்து, குடிசை வீடு முதல் கோபுரங்கள் வரை அங்கிங்கெனாதபடி எல்லார் கையிலும் செல்போன்கள்.
அத்துடன் கம்ப்யூட்டர் புழக்கம் உள்ளவர்கள் இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என தங்களது தகவல் பரிமாற்றங்களை ஹைடெக்க்காக மாற்றிக் கொண்டுவிட்டனர்.
இதன் விளைவு தந்தி என்ற ஒரு சேவை இருப்பதே பெரும்பாலானோருக்கு மறந்துவிட்டதால்,அச் சேவையை வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ( தந்தி சேவை) சீனியர் ஜெனரல் மேனஜர், பல்வேறு தொலைபேசி மாவட்ட மற்றும் சர்க்கிள் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் இந்த அறிக்கை அனைத்து தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கும், வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தந்தி பதிவு அலுவலகங்கள் வரும் ஜூலை 15-ம் தேதிக்கு பின்னர் தந்திகளை பெறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை முழுவதும் நிறுத்துவதற்கு பதிலாக, இதனை இந்திய தபால் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/

Thursday, July 04, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 5

ஜூலை 15ல் தந்தி சேவை நிறுத்தம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்புக்கு எதிர்ப்பு
தபால் துறை மூலம் அளிக்கப்படும் தந்தி சேவை, ஜூலை 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தந்தி சேவைப் பிரிவின் மூத்த பொது மேலாளர் சமீம் அக்தர், அனைத்து தந்தி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வரும் ஜூலை 15ம் தேதியில் இருந்து தந்தி சேவையை முழுமையாக நிறுத்திவிட வேண்டும் என்றும், மக்களிடம் இருந்து தந்தி பெறவோ, அதனை வினியோகிக்கவோ வேண்டாம் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தபால் துறையிடம் கலந்தாலோசித்த பின்னரே, உள்நாட்டு தந்தி சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தந்தி சேவையை நிறுத்தும் பி.எஸ்.என்.எல். முடிவுக்கு தேசிய தந்தி சேவை ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக சேவை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இ-மெயில், எஸ்எம்எஸ் போன்றவற்றின் வரவால் தந்தி அனுப்புவது குறைந்தது. அதனால், 160 ஆண்டு கால தந்தி சேவை நிறுத்தப்படுகிறது.

Thursday, June 27, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 4

முடிவுக்கு வருகிறது 160 ஆண்டுகால தந்தி சேவை!

புதுடெல்லி: செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் ஹைடெக்காக மாறிவிட்ட நிலையில்,  தந்தி சேவையை  ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

செல்போன்கள் 90 களின் மத்தியிலேயே இந்திய சந்தைக்கு வந்தபோதிலும் 2001 - 2002 வரை செல்போன்களின் விலையும், அதில் பேசுவதற்கான கட்டணமும் அதிகமாக இருந்ததால், மரணச் செய்தி, திருமண, பிறந்த நாள் வாழ்த்து என ஆத்திர அவசரத்திற்கு பொது தொலைபேசி சேவையுடன், தந்தி சேவையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுதான் வந்தது.

ஆனால் 2003 வாக்கில் 500 ரூபாய்க்கு செல்போன், இன்கம்மிங் கட்டணம் இலவசம், அவுட்கோயிங் ரூ. 1 அல்லது 2 ரூபாய்தான் என தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்போன் சேவை சந்தையில் களமிறங்கியதிலிருந்து, குடிசை வீடு முதல் கோபுரங்கள் வரை அங்கிங்கெனாதபடி எல்லார் கையிலும் செல்போன்கள்.
படிப்பறிவு இல்லாதவர்கள் கூட சிவப்பு பட்டன், பச்சை பட்டன் என செல்போன் அழைப்பை பக்காவாக டீல் செய்ய கற்றுக்கொண்டுவிட்ட நிலையில், கணினி புழக்கம் உள்ளவர்கள் இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என தங்களது தகவல் பரிமாற்றங்களை ஹைடெக்க்காக மாற்றிக்கொண்டுவிட்டனர். 

விளைவு தந்தி என்ற ஒரு சேவை இருப்பதே பெரும்பாலானோருக்கு மறந்துவிட, இன்றைய இளைய தலைமுறைக்கோ தந்தி சேவை என்ற ஒன்று இருப்பதே தெரியாத நிலை.இவற்றையெல்லாம் மீறி தந்தி கொடுக்க செல்பவர்களை, " இந்த காலத்தில் தந்தியா...? ஹே...ஹே..!" என உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்கள் ஏளனமாக பார்க்கின்றனர். 

இப்படியான ஒரு நிலையில் தபால் அலுவலகங்களில் தந்தி சேவை பிரிவு காத்து வாங்குவதால், அச்சேவையை வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ( தந்தி சேவை) சீனியர் ஜெனரல் மேனஜர், பல்வேறு தொலைபேசி மாவட்ட மற்றும் சர்க்கிள் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளதாகவும்,  அதில் 2013 ஜூலை 15 ஆம் தேதியுடன் தந்தி சேவையை நிறுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி பி.எஸ்.என்.எல்.  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தந்தி சேவை நிறுத்தப்படுவதால், கூடுதலாக இருக்கும் பணியாளர்களை மொபைல் போன் சேவைகள், தரை வழி இணைப்பு தொலைபேசி சேவைகள் மற்றும் பிராண்ட்பாண்ட் சேவைகள் போன்றவற்றிற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
Source; http://news.vikatan.com

தந்தியடிக்கிறது தந்தி – 3

160 ஆண்டுகள் பழமைவாய்ந்த "தந்தி' சேவைக்கு மூடு விழா


தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தொலைபேசி, செல்பேசி (எஸ்.எம்.எஸ்.), கம்ப்யூட்டர் (இ-மெயில்), "ஸ்மார்ட் ஃபோன்' என தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சி, 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவைக்கு மூடு விழா காண வைத்துள்ளது.
முன்னர் சமிக்ஜைகள் மூலமும், மனிதர்கள் மற்றும் பறவைகள் மூலமும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளில் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்புவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த கால தாமதத்தைக் குறைக்கும் வகையில், 19-ஆம் நூற்றாண்டில் மின் தந்தி சேவை கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷியாவைச் சேர்ந்த பவுல் ஷில்லிங் என்பவர்தான், 1832-இல் மின்காந்த அலைகளின் மூலம் செயல்படும் தந்தி சேவையை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இருந்து அவருடைய குடியிருப்பின் இரு அறைகளில் தனித் தனி கருவிகளைப் பொருத்தி, மின் காந்த அலைகள் மூலம் நீண்ட தொலைவுக்கு தகவல் அனுப்பும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி மின் தந்தி சேவைக்கு அடித்தளமிட்டார்.
மோர்ஸ் கோட்: அதன் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதனையும் செய்தார். இதற்கு உதவியாக அவருடைய உதவியாளர் ஆல்ஃபிரட் வெயில் "மோர்ஸ் கோட்' சிக்னலைக் கண்டுபிடித்தார்.
இவருடைய கண்டுபிடிப்பு மூலம், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்பே, உலக நாடுகளால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வரும் தந்தி சேவைக்கு அடித்தளமானது.
இந்தியாவில் தந்தி சேவை: இந்தியாவைப் பொருத்தவரை 1850-ஆம் ஆண்டிலேயே தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக, கொல்கத்தா - டயமண்ட் ஹார்பர் இடையே சோதனை அடிப்படையில் தந்தி கேபிள் போடப்பட்டு பின்னர் 1851 முதல் செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.
1902 முதல் வயர்-லெஸ் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-இல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உருவாக்கப்பட்டு பிறகு அந்த நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தொலைபேசி சேவை பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகும், தந்தி சேவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த அளவுக்கு அவசரச் செய்திகளை பறிமாற்றம் செய்வதில் தந்தி சேவை பெரும்பங்கு ஆற்றி வந்தது.
தந்தி என்றாலே கிலி: குறிப்பாக தொலைபேசி சேவை இல்லாத காலத்தில், உறவினர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டிய சோக மற்றும் மகிழ்ச்சியான செய்திகளைத் தெரிவிக்க இந்தச் சேவையையே மக்கள் நம்பியிருந்தனர்.
குறிப்பாக, சொல்லப்போனால் அப்போது எந்த வசதிகளும் இல்லாத கிராமப் பகுதிகளுக்கு உறவினரின் இறப்புச் செய்தியை தெரிவிப்பதற்கான ஒரே தகவல் தொழில்நுட்பமாக தந்தி சேவை மட்டுமே இருந்தது.
கிராமத்தில் உள்ள ஒருவருக்கு தந்தி வந்திருக்கிறது என்றால், அதைப் படிப்பதற்கு முன்பே அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துவிடும்.
அதுமட்டுமன்றி, வர்த்தக ரீதியிலான தகவல் தொடர்பிலும் தந்தி முக்கிய பங்காற்றி வந்தது. வர்த்தகர்கள் இதுபோன்று வரும் தந்தியை, சட்ட ஆவணமாகவும் பாதுகாத்து வைத்தனர்.
இதுபோன்று மக்களிடையே முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த இச்சேவையின் பயன்பாடு 2003-ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.
"செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது.
அதாவது, 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் நின்றுவிட்டது. இதன் காரணாக 2005-இல் 8 பேராக இருந்த தந்தி ஆபரேட்டர்களின் எண்ணிக்கை 2010-இல் அலுவலகத்துக்கு ஒரு தந்தி ஆபரேட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டது' என்றார் பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர்.
தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததைத் தொடர்ந்து, இச்சேவையைக் கைவிட பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். (சென்னை) பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறியது:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தந்தி சேவை பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட காரணத்தால், இச் சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்திவிடுமாறு தொலைத்தொடர்பு இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூலை 15-ஆம் தேதி முதல் தந்தி சேவை இருக்காது என்றார்.
இன்று எத்தனை தகவல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் காலம் காலமாக மக்களோடு ஒன்றியிருந்த தந்தி சேவைக்கு கனத்த இதயத்தோடு விடை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகளில் தந்தி சேவை உள்ளது

உலக அளவில் 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவை ரஷியா, ஜப்பான், பெல்ஜியம், கனடா ஜெர்மனி, மெக்ஸிகோ, பஹ்ரைன், ஸ்லோவேனியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது.
ஆனால், ஆஸ்திரேலியா, மலேசியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தந்தி சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
பிரிட்டிஷ் அரசு தந்தி சேவையை கடந்த 2003-இல் தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.
அமெரிக்க அரசும் 2006 ஜனவரி 27 முதல் தந்தி சேவை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது.
நேபாளத்தில் 2009 ஜனவரி 1 முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.
ஆஸ்திரேலிய அரசு 2011 மார்ச் 7-ஆம் தேதி தந்தி சேவையை நிறுத்தி விட்டது. இருந்தபோதும் பீச்வொர்த்தில் உள்ள விக்டோரியா நகரில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக தந்தி சேவையை வைத்துள்ளது.
மலேசியாவில் 2012 ஜூலை 1-ஆம் தேதி முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.
அயர்லாந்து அரசு 2002 ஜூலை 30 முதல் தந்தி சேவையை நிறுத்தி விட்டது.
நியூசிலாந்தில் 1999-இல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக மட்டும் 2003 முதல் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது.

Thursday, June 20, 2013

தந்தியடிக்கிறது தந்தி - 2

ஜூலை 15 முதல் 160 ஆண்டு கால பழமை வாய்ந்த தந்தி சேவை நிறுத்தம்

தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.
கடந்த 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக இருந்தது. சில ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில், போன் மூலம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி, "இ - மெயில்' மூலம் விரிவான தகவல்களை அனுப்புதல் போன்றவற்றை, அனைத்து தரப்பினரும் பின்பற்ற துவங்கியதை அடுத்து, தந்தி பயன்பாடு, வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த, 160 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள இந்த சேவை, இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. அஞ்சல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட இந்த சேவை, கடந்த சில ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. வணிகரீதியில், லாபம் தராத இந்த சேவையை, ஜூலை, 15 முதல் நிறுத்திக் கொள்ள, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது. இது குறித்து, மத்திய அரசிடம், அந்த நிறுவனம் அனுமதி கோரிய போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனமே முடிவெடுக்கலாம் என, அரசு கூறிவிட்டது.
இதையடுத்து, ஜூலை, 15ம் தேதி முதல், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தந்தி இருக்காது. அடுத்த, ஆறு மாதங்களுக்கு, அரசின் ஆணைகள், சுற்றறிக்கைகள் மட்டுமே, தந்தி சேவை மூலம் அளிக்கப்படும். அதன் பிறகு, முழுமையாக, தந்தி சேவை நிறுத்தப்படும் என, டில்லியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., நிறுவன, மூத்த பொது மேலாளர், சமீம் அக்தர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.