Showing posts with label மார்க்கோனி. Show all posts
Showing posts with label மார்க்கோனி. Show all posts

Saturday, December 01, 2018

மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் - ஜகதீஷ் சந்திர போஸ்







முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் பற்றி குறித்திருந்தார் , அவற்றை உருவாக்கி காட்டியிருந்தார் ஹெர்ட்ஸ். இருபத்தி நான்கு அடி மட்டுமே அளவு கொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ, வழிகாட்டியோ இல்லாமல் இது சார்ந்த ஆய்வில் தானே இறங்கினார் போஸ். லாட்ஜின் ஹெர்ட்ஸ் மற்றும் அவருக்கு பின்வந்தவர்கள் என்கிற புத்தகம் தந்த உந்துதலில் இயங்கினார்.

கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார். அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். ஆனால், அந்தக் கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணர முடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்த கருவியில் கொண்டுவந்தார்.

மேலும் குறித்து சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றி அமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார் ; சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார். கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறை கடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து, மீண்டும் அதை திரும்பப் பெறுகிற மாயத்தை செய்தது.

அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்து. ஐந்து மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு "மைக்ரோவேவ்" என்று அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடி மருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ்.

அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார்.


ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் "U" வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச ட்யூபை நேராக மாற்றினார். "S" என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார். அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு, "தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேடண்ட் செய்ய மறுத்தது",

“என் தந்தையைப் போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை” என்றார். அந்த போஸ் கண்டுபிடித்த கருவியை "தான் கண்டுபிடித்தேன்" என்று பதிவும் செய்து கொண்டார் மார்க்கோனி.

போஸ் தான் அதைக் கண்டு பிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது....

விரிவாக படிக்க

நன்றி newstm.in


Monday, July 07, 2014

ஜூன் 2, 1896- வானொலிக்கான காப்புரிமையை மார்க்கோனி பெற்ற நாள்

கூப்பிடுகிற தூரம் என மக்கள் சொல்வார்கள். “கூப்பிடுகிற தூரத்தை” அதிகமாக்க உழைத்த பலரில் மார்க்கோனி ( 1874 -1937) முக்கியமானவர்.
மார்க்கோனி இத்தாலி நாட்டின் ஒரு பணக்கார வீட்டு பிள்ளை. அவர் பள்ளிக்கு போகவில்லை.வீட்டிலேயே படித்தவர். 20 வயதில் தனது வீட்டில் வேலைக்காரருடன் சேர்ந்து ஒரு ஆய்வுக்கூடத்தை அவர் அமைத்தார். அதில் கம்பியில்லா தந்திக்கான ஆரம்ப கட்ட கருவிகளை உருவாக்கினார்.தந்திக் குறியீடுகளை அலையாக்கி பரப்பும் கருவியும் அந்த அலையை வாங்கி திரும்பவும் தந்திக் குறியீடுகளாக மாற்றி பதிவு செய்யும் கருவியும் அதில் இருந்தது.
தனது கண்டுபிடிப்பை பற்றி இத்தாலியின் தபால்-தந்தி அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் “பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பவேண்டியவன்” என அமைச்சர் எழுதினார். பிறகு மார்க்கோனி இங்கிலாந்திற்கு போனார்.
லண்டனின் தபால்-தந்தி துறை இன்ஜீனியர் வில்லியம் பிரீஸ் மார்க்கோனிக்கு ஆதரவு அளித்தார். மார்க்கோனி யின் கண்டுபிடிப்புக்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் காப்புரிமை கிடைத்தநாள் இன்று. பல தொடர் ஆராய்ச்சி களுக்குப் பிறகு 1897ல் டிரான்ஸ்மீட்டரை அவர் உருவாக்கி னார். 1897-ல் மே 13 ந் தேதி ‘நீங்கள் தயாரா?' என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்தினார். மூழ்கும் கப்பலில் இருந்து பயணிகள் அவரது கருவியால் காப்பாற்றப்பட்டனர். அமெரிக்காவில் படகுப்போட்டி முடிவுகள் உடனுக்குடன் கிடைத்தன. 1901-ல் 2100 மைல்களை கடந்து செய்தியை அனுப்பினார்.
நிறைவாக மார்க்கோனியின் அங்கீகரிக்கப்பட்டார். இத்தாலி அவரை அழைத்து மரியாதை செய்தது. 1909-ல் கம்பியில்லாத் தந்திமுறையில் ஏற்கனவே பல ஆய்வுகள் செய்திருந்த 'கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்' என்ற ஜெர்மானி யருடன் இணைந்து மார்க்கோனிக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்று கம்பியில்லாத தந்தி காலாவதி யாகி விட்டது. ஆனால் அதன் வாரிசுகளான வானொலி, தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றால் கம்பியில்லா அலைபரப்பும் முறை விண்ணை தாண்டிவிட்டது.
மனிதனின் குரல் கூப்பிடும் தூரத்தை தாண்டி இன்று பிரபஞ்சம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது.

நன்றி: http://tamil.thehindu.com/ Published: June 2, 2014