Thursday, February 07, 2013

உலக வானொலி நாள்


ஒவ்வொரு ஆண்டும் உலக வானொலி நாள் 13 பிப்ரவரி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையிலும் அன்றைய தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதில் “தமிழும் உலக வானொலிகளும்” என்ற தலைப்பினில் சிற்றலை வானொலியின் முதுபெரும் நேயரும் ஓய்வு பெற்ற தலைமை அசிரியருமான திரு. பத்தமடை எஸ்.கந்தசாமி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

 ‘உலக வானொலி நாள்’ உலக அளவில் கொண்டாடப்படும் இடங்கள் அறிய இங்கே சொடுக்கவும்

யுனஸ்கோவின் ‘உலக வானொலி நாள்’ சிறப்பு இணைய பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும்

Wednesday, February 06, 2013

லோட்டஸ் தெரு


லாமாக் கோவில் புத்தர் சிலைகள் பலவற்றின் பெயர்கள் நமது தமிழ் பெயருடன் ஒன்றிணைகிறது. மிக முக்கியமாக சாக்கியமுனி, போதிசத்துவர், சிம்கநாதா மற்றும் பைசாஜ்ஜிய குரு போன்ற பெயர்களைக் கூறாலாம். 

மாலையில் நாங்கள் சென்றது லோட்டஸ் தெரு. அடேங்கப்பா... என்றது மனது, காரணம் அவ்வளவு வகையான மதுக்கடைகள். அங்கே எந்தக்கடையிலும் நம் ஊரைப் போன்று கூட்டம் இல்லை. பெரிய பெரிய டின்னில்களில் தான் மது வகைகளை விற்கிறார்கள். ஆனால் அங்கு நான் காபி மட்டுமே குடிதேன் என்றால் யாரும் நம்ப மாட்டீகள். எனக்கான காபியை ரூ.180 கொடுத்து சரஸ்வதி வாங்கிக் கொடுத்தார்கள். 



அதன் பின் மாலையில் நாங்கள் சீன தேசிய அக்ரோபடிக் குழுவின் நடனத்தினைக் காண சென்றோம். முதலில் நான் நினைத்தேன், இது சாதாரண சர்கஸ் நிகழ்ச்சி தானே என்று. அதன் பின் தான் உணர்ந்தேன் எவ்வளவு அருமையான இந்தக் கலையை சாதாரண சர்கஸ் என்று நினைத்துவிட்டேன் என்று. 

அவ்வளவு அற்புதமாக இருந்தது. அதில் ஆடப்பட்ட Buck Jump, Butterfly dancing, Bamding ball, Color umbrellas, Advancement tumbling மற்றும் Bicycle skill போன்றவற்றை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதைப் பற்றி விரிவாக உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன். 

என்ன ஒரு ஒற்றுமை, என்ன ஒரு திறமை. காண கண் கோடி வேண்டும். வாழ்நாளில் கண்டிப்பாக இது போன்றதொரு விளையாட்டினை அனைவரும் ஒரு முறையேனும் காண வேண்டும். மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம் - தங்க.ஜெய்சக்திவேல்

Wednesday, January 30, 2013

ஜெயங்கொண்டத்தில் இருந்து சீனாவிற்கு

போதிசத்துவரும் லாமாக் கோவிலும்



நண்பர்களே எனது நான்காவது நாள் சீனப் பயணமாக நான் இன்று சென்ற இடம் லாமாக் கோவில். காலையில் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்காக எனது விருப்பப் பாடல்களை பதிவு செய்தேன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரஸ்வதி இன்று என்னுடன் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார்கள். 

அதன் பின் நாங்கள் இன்று மதியம் இந்தியன் கிட்சன் எனப்படும் இந்திய உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் உணவகத்திற்கு சென்றோம். என்னுடன் சரஸ்வதி மற்றும் மோகன் வந்தனர். மிகவும் அருமையான உணவு வகைகளை அங்கு சாப்பிட்டு மகிழ்ந்தோம். 

அங்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து சீனாவில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் செந்தில் நாதன் எனும் நண்பரை சந்தித்தேன். அவரிடம் நீண்ட நேரம் பேச்சுத்தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது நமது நண்பர் திரு.கலைவாணன் ராதிகா அவர்களை நினைத்துக் கொண்டேன். 

அந்த இந்தியன் கிட்சன் அமைந்துள்ள இடம் உலகின் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள அதிமுக்கியப் பகுயாகும். இதனால் அங்கு பல்வேறு நாட்டினரைக் காண முடிந்தது. 

அதன் பின் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

Thursday, January 24, 2013

WRTH பி 12 புதுப்பிப்புகளை இலவசமாக பதிவிறக்கலாம்

WRTH பி 12 (குளிர்கால) ஒலிபரப்பு அட்டவணை மேம்படுத்தல் மற்றும் கோப்பு வெளியாகியுள்ளது. இந்த கோப்பு PDF வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இலவசமாக WRTH இணையதளத்தில் (http://www.wrth.com) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பில் ஏற்கனவே WRTH அச்சு பதிப்பில் வந்த தகவலிகளுடன் புதிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச வானொலிகளின் ஒலிபரப்பு அட்டவணை மாற்றங்களை இது கொண்டுள்ளது.
(சீன் டி கில்பர்ட், சர்வதேச ஆசிரியர் - WRTH (உலக வானொலி தொலைக்காட்சி கையேடு)

Wednesday, January 23, 2013

சீன தமிழ் எண்கள் ஒரு ஒப்பிட்டு



12 மணிக்கு முன்னதாக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. அந்த நினைவிடத்தின் இருபுறமும் முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளது. ஒன்று தேசிய மாநாட்டு கூட்ட அரங்கு, மற்றொன்று தேசிய அருங்காட்சியகம். இதனை அடுத்து நாங்கள் மதிய உணவினை தலைவர் கலைமகள், தேன்மொழி மற்றும் மேகலாவுடன் இணைந்து சாப்பிட்டோம். அந்த உணவினை சாப்பிட்ட இடம் முக்கியமானது. ஆம் அது அரண்மனை அருங்காட்சிய நுழைவாயிளில் உள்ள ஒரு உணவகம். 

அதன் பின் நாங்கள் சென்றது அரண்மனை அருங்காட்சியகம். மிகப்பெரிய அந்த அரச மாளிகையை ஒரு நாளில் நிச்சயம் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அது பெரிது. எனக்காக தேன்மொழி அவர்கள் ஆங்கிலத்தில் வழிகாட்டக் கூடிய ஒரு தானியங்கி வழிகாட்டியை வாங்கித் தந்தார்கள். கலைமகளும் இடையிடையே அந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். அங்கு நாங்கள் பார்த்த முக்கியக் காட்சியகங்களில் ஒன்று கடிகாரங்கள் வைக்கப்பட்டு இருந்த அருங்காட்சியகம். 

கலைநயம் கொண்ட பல்வேறு கடிகாரங்கள் அந்தக் காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த அரண்மனைப் பற்றி மட்டுமே பக்கம் பக்கமாக எழுதத் தகவல்களை அங்கு பார்த்தேன். அவை நிச்சயம் விரிவாகப் பதிவுசெய்யப்படும். இரவு தமிழ் பிரிவினருடன் சீன வானொலிக்கு சொந்தமான உணவகத்தினில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சந்திப்பில் அனைவருக்கும் நினைவுப் பரிசினை எங்களின் மன்றம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பினில் வழங்கினேன். 


அதில் முக்கியமானது, காந்தளகம் பதிப்பகம் வெளியிட்ட உலகப்படம். அதில் உலக நாடுகளுடன் அந்தக் காலத்தில் தமிழர்கள் மேற்கொண்ட வணிகத் தொடர்புகள் மற்றும் உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் இடங்கள் ஆகியவை அந்தப் பெரிய சுவற்றில் மாட்டப்படும் வரைபடத்தினில் உள்ளது. அத்துடன் சின்னப்பா தமிழர் எழுதி தமிழம்மா பதிப்பகம் வெளியிட்ட 'தமிழரின் காலக் கணக்கு'எனும் சிறு நூலினை அன்பளிப்பாக தமிழ் பிரிவின் பணியாளர்களுக்கு வழங்கினேன்.

அந்த நூலின் சிறப்பு யாதெனில், சீன எண்களை தமிழ் எண்களுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை அதில் எழுதப்பட்டுள்ளதாகும். அது மட்டுமல்லாமல் அகில இந்திய வானொலி வர்த்தக சேவையின் இயக்குனர் முனைவர் சேயோன் அவர்களின் தெளிவுரையுடன் வெளிவந்துள்ள திருக்குறள் கையடக்க பதிப்பினையும் வழங்கி மகிழ்ந்தேன். நான்காம் நாள் பயண அனுபவங்கள் அடுத்த கட்டுரையில்... 

Tuesday, January 22, 2013

நோர்வேயில் ‘தமிழ்3′ எனும் புதிய வானொலி

நோர்வேயில் 'தமிழ்3′ எனும் பெயரில் புதிய வானொலி சேவை இன்று முதல் ஆரம்பம்


tamil-3.png
இதன் முதலாவது ஒலிபரப்பு நாளை புதன்கிழமை (16.01.2013) இடம்பெறவுள்ளது. ஓவ்வொரு புதன் கிழமைகளிலும், மாலை 8 மணி முதல் பின்னிரவு 11 மணி வரையான 3 மணி நேரம் தமிழ்3 வானொலியின் ஒலிபரப்புகளை நோர்வேயிலும் உலகெங்குமுள்ள தமிழ் மக்களும் கேட்க முடியும்.
கடந்த புதன் அன்று இடம்பெற்ற பரீட்சார்த்த ஒலிபரப்பினைத் தொடர்ந்து, நாளை முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வழமையான ஒலிபரப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் வாழ்வை எதிரொலிக்கும் வானொலியாக இது தனது ஊடகபப் ணிகளை முன்னெடுக்கும் என என இந்த வானொலி முயற்சி பற்றித் நோர்வே தமிழர் கற்கை மையம்
தெரிவித்துள்ளது.
 
ஓஸ்லோ பகுதிகளில் வசிப்போர் FM107.7 பண்பலை ஊடாகவும், ஒஸ்லோவிற்கு வெளியில் வசிப்பவர்கள் Cable TV இணைப்பின் ஊடாக 95.5 அலைவரிசையிலும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் http://interfm.no/  இணையத்தின் ஊடாகவும், தமிழ்3 இன் ஒலிபரப்பினைக் கேட்டு மகிழலாம்.
 
அறிவித்தல், விளம்பரம், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு: radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சலுடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
Source: http://www.yarl.com