"ரேடியோ எப்படி இயங்குகிறது?" சமீபத்தில் சென்னை கிழக்கு பதிப்பகத்தின் "பிராடிஜி' நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள கையடக்க புத்தகம். என். சொக்கன் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தைப் பற்றி இவர் கூறும்போது, ""தகவல், அறிவு, இசை, கொண்டாட்டம் என்று நம்மைத் தொடர்ந்து மகிழ்வித்துக் கொண்டிருக்கும் ரேடியோவின் வியப்பூட்டும் கதை'' தான் இந்த நூல் என்கிறார்.
80 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் அதிசய அலைகள், மின் காந்தமும் மசாலா தோசையும்!, மின்சாரக் காந்தம், அலை பாயுதே, கம்பிகள் இல்லாத உலகம், அலைவழித் தந்தி, கொடுக்கல் வாங்கல், கைப்பிடிக்குள் உலகம், ஒலிப்பதிவு - ஒலிபரப்பு, இருவழிப் பாதை, அன்றும் இன்றும் என்றும் ஆகிய 12 தலைப்புகளில் எளிதாக அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆசிரியர் எழுதியுள்ளார். நூலின் கூடுதல் சிறப்பாக ஒன்பது படங்களை தேவையான இடங்களில் வெளியிட்டுள்ளனர்.
நம்மில் பலருக்கு இன்றும் எப்.எம்.மிற்கு விரிவாக்கம் தெரியாது. அதே போன்று ஏ.எம். என்று ஒன்று உள்ளது பற்றியும் அறிய மாட்டார்கள். இவைகளை எளிய தமிழில் படத்துடன் விளக்கியுள்ளார். நூலின் விலை ரூ. 25 தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
New Horizon Media Pvt. Ltd.,
33/15, Eldams Road,
Alwarpet,
Chennai - 600 018.
Ph: 044 - 4200 9601.
E-mail: mchokkan@gmail.com
No comments:
Post a Comment