சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Tuesday, May 12, 2009
எதிரொலி
அக்டோபர் - நவம்பர் 2008 இதழில் "அந்தி நேரத்து சிந்துகள்" - நாகபூஷணி கருப்பையா அவர்களின் சிறப்பு செவ்வி படித்தோம். பல புதிய தகவல்களை அந்தப் பேட்டியில் அவர் வழங்கியுள்ளார்கள். வானொலி கேட்காதவர்களையும் கேட்க வைத்துவிட்டார். அன்பான சகோதரி சொன்ன அனைத்து தகவல்களும் அருமை. மேலும் டிசம்பர் இதழ் பல பயனுள்ள சிற்றலை ஆன்டனாக்களைப் பற்றிய விபரங்களை வழங்கியது.
- லால் சந்திரன், இலால்குடி
கோகுலம் கதிர் ஜனவரி மாத இதழில் "உலகெங்கும் தமிழ் முழக்கம்" கட்டுரை பல தகவல்களை வானொலி நேயர்களுக்கு வழங்கியது. சர்வதேச வானொலிகளின் அலைவரிசை விபரங்களும் அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது சிறப்பு. தங்கள் பணி சிறக்க சர்வதேச வானொலி நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
- பொருனை பாலு, திருநெல்வேலி
டிசம்பர் இதழில் கிழக்கு தாம்பரம் வி. பாலு அவர்களின் உதவியுடன் வெளிவந்த "இலகுவான சிற்றலை ஆன்டனாக்கள்" பற்றிய விபரங்கள் தெள்ளத் தெளிவாகவும், படங்களுடனும் வெளிவந்துள்ளது சிறப்பு. எங்களைப் போன்ற வானொலி நேயர்களுக்கு அந்த இதழ் அறிய பொக்கிசமாகும்.
- கே.சி. சிவராஜ், இடப்பாடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment