லண்டன் : இலங்கை நிலவரம், இந்திய மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கூடுதல் செய்திகளை வழங்கும் வகையில் 10 நாட்களுக்கு தினமும் காலையிலும் சிறப்பு செய்திகளை ஒலிபரப்பவுள்ளது பிபிசி தமிழோசை வானொலி.
இன்று முதல் வரும் 20ம் தேதி வரை இந்திய நேரப்படி தினமும் காலை 7 மணிக்கு 15 நிமிடம் இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஒலிபரப்பாகும். இந்த ஒலிபரப்பை 19 மீட்டர் (15285 kHz), 16 மீட்டர் (17515 kHz) சிற்றலைவரிசையில் கேட்கலாம்.
மேலும் www.bbctamil.com இணையத் தளத்திலும் கேட்கலாம்.
இது குறித்து பிபிசி தமிழோசை தலைவரான திருமலை மணிவண்ணன் கூறுகையில்,
இலங்கை யில் நடந்து வரும் விவகாரங்கள், இந்திய மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டும், இது குறித்த செய்திகளை உடனுக்குடன் நேயர்களுக்கு வழங்கவும் வழக்கமான எங்கள் செய்தித் தொகுப்போடு (இந்திய-இலங்கை நேரப்படி தினமும் இரவு 9.15 மணிக்கு ஒலிபரப்பாவது) இந்த சிறப்பு ஒலிபரப்புக்கும் பிபிசி தமிழ் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த காலங்களில் செய்ததைப் போலவே எங்களது நேயர்களை நேரடியாக பாதிக்கும் நிகழ்வுகள் குறித்து இந்த கூடுதலான செய்தித் தொகுப்பை வானொலி, இணையத் தளத்தின் மூலம் உடனுக்குடன் வழங்குகிறோம் என்றார்.
( Thatstamil.oneindia.in 12-05-2009)
No comments:
Post a Comment