எனது ஐந்தாவது நாள் சீனச் சுற்றுப்பயணம் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அதற்கான காரணத்தினை நீங்களே இந்தக் கட்டுரையின் முடிவில் அறிவீர்கள். காலையில் எங்களது பல்கலைக்கழக மாணவர்களுக்காக நான் தாயாரிக்கும் ஆவண படத்திற்கான காட்சிகளை சீன வானொலியின் பல்வேறு பகுதிகளில் எடுத்தேன். அதன் பின் நட்புப் பாலம் நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவில் தமிழ் பிரிவின் நிபுனர் தமிழன்பன் அவர்களுடன் கலந்து கொண்டேன். மதிய உணவுக்கு பின் தமிழ் பிரிவின் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். அவர்களுக்காக ஒரு மணி நேரம் "இந்தியாவில் வானொலி: நேற்று, இன்று, நாளை" என்ற தலைப்பினில் ஒரு சிறப்புரை ஆற்றினேன். மதியம் நாங்கள் சென்றது பீகிங் பல்கலைக்கழகம். 1902ல் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்திற்கு என்னுடன் அன்பான இலக்கியாவும், பண்பான மேகலாவும் வந்தனர். பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்தாலும் மறக்க முடியாத இடம் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள செயற்கை ஏரி. நம்பமுடியாத அளவில் அந்த ஏரி ஒரு செயற்கையான ஆற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதில் பணி கட்டியாகி இருந்தது. மேலும் பல்கலைக்கழகத்தினில் நாங்கள் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு சென்றோம். அதன் பின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகத்திற்கு சென்றோம். கல்வியாளராக இந்த இடங்கள் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்தது.
தமிழ்பிரிவின் பயண திட்டத்தில் இந்த இடம் இல்லை, ஆனாலும், எனது வேண்டுதலை ஏற்று தேன்மொழி இதனை கலைமகளோடு இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்து இருந்தார்கள். இதற்காக பல முன் ஏற்பாடுகளை செய்தவர் இலக்கியா. ஆக ஐந்து நாட்கள் பயணம் இனிதே நிறைவடைந்து நாளை ஆறாவது நாள் பயணமாக நாங்கள் செல்ல உள்ள இடம் பீஜிங்கின் மிக முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் இடம்.
உலகில் உள்ள அனைத்து வகையான வானொலிப் பெட்டிகளும் கிடைக்கும் ஒரே இடம். கலைமணி இதற்காக பல ஏற்பாடுகளைச் செய்தார். நாளை என்னுடன் துணையாக வருபவர் மீண்டும் சரஸ்வதி.
– அன்புடன் தங்க.ஜெய்சக்திவேல் |
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Friday, November 30, 2012
செயற்கை ஏரியில் பீகிங் பல்கலைக்கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment