வணக்கம் நண்பர்களே , நான் தற்பொழுது சீன வானொலிக்கான பீஜிங் பயணத்தில் இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் உள்ளேன். இன்று நண்பரும் முதுபெரும் டிஎக்ஸ்ருமான திரு.விக்டர் குணதிலகே அவர்களை சந்திக்க உள்ளேன். விக்கட அவர்கள் வாய்ஸ் அப் அமெரிக்காவின் முழு நேர கண்காணிப்பாளர். அவரிடம் இல்லாத வானொலிப் பெட்டிகள் இல்லை எனக் கூறலாம். இன்று முழுவதும் அவருடன் தான் எனது பொழுது கழிய உள்ளது.
வானொலி பயணத்தில் பலபுதிய நண்பர்களை சந்திப்பது என்றுமே ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஏற்கனவே திரு.விக்டர் அவர்களை சென்னையில் வைத்து சந்தித்தாலும், இன்று அவரை அவரின் நாட்டில் வைத்து சந்திப்பதில் எனக்குமகிழ்ச்சியைத் தருகிறது.
இன்றைய பயணத்தில் ஒரு சில மிக்கிய இடங்களை இலங்கையில் காண ஏற்பாடு ஆகியிருக்கிறது. அவை எந்த இடங்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். நானும் தான் அதே ஆர்வத்துடன் உள்ளேன். காரணம் இதுவரை அவர் கூறியது ஒன்று தான். ஆம், "உங்களை ஒரு முக்கிய இடத்துக்கு அழைத்து செல்கிறேன், தாயாராக இருங்கள்" என்பது தான் அது. மீண்டும் உங்களை இரவு வலைப்பூ வழியாக சந்திக்கிறேன்.
3 comments:
உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் !
29.11.2012 அன்று நான் இதில் பதிவு செய்திருந்த இக்கட்டுரையின் முதல் பகுதிக்கான கருத்துகள் மற்றும் திரு.விக்டர் குணதிலகே(4S7 VK) குறித்தும் பதிந்த வரிகள் ஏனோ இடம் பெறவில்லையே........?
விழுப்புரம்-கே.ஜமீல் அஹ்மத்
ஏன் என்று தெரியவில்லை ஜமீல் அய்யா? முடிந்தால் மீண்டும் ஒரு முறை அதனை பதிவேற்றவும்..
Post a Comment