பழம்பெரும் நாடக நடிகர் கூத்தபிரான் காலமானார். தனது வாழ்க்கையை, ஆல் இந்தியா ரேடியோவில், அறிவிப்பாளராக துவக்கிய கூத்தபிரான், குழந்தைகளுக்காக அவர், நாடகங்களை எழுதி இயக்கி நடிக்கச் செய்தார். 1970ம் ஆண்டுவாக்கில், இளைய தலைமுறையினரிடையே, 'வானொலி அண்ணா' என்று அன்போடு அழைக்கப்பட்டார். கூத்தபிரான், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்பிக்கும் பொருட்டு, 800க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். சினிமா மற்றும் டிவிக்களின் வருகையால், ஒருபோதும் நாடகக்கலை பாதிக்கப்படாது என்றும், மற்ற ஊடகங்களை விட, நாடகங்களில் தான், பார்வையாளர்களின் பங்கு பெருமளவு இருப்பதாக அவர் கூறியிருந்தார். ஐந்து தலைமுறை மக்களை மகிழ்வித்த கூத்தபிரான், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2003ம் ஆண்டில், மாநில அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மியூசிக் அகாடமி, நாடக கலா சிரோன்மணி விருது வழங்கி கவுரவித்தது.
நன்றி / தினமலர் 23டிச 20142
வானொலி அண்ணா காலமானார்
பிரபல நாடகக் கலைஞரும் வானொலியில் நாடகங்கள் நடத்தி வானொலி அண்ணா என புகழ்பெற்றவருமான கூத்திபரான் நேற்று மரணமடைந்தார். நாடகங்களின் மீத தணியாத காதல் கொண்ட அவர் தம் இறுதிக் காலம் வரை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அக்காலத்து வானொலியில் குழந்தைகளுக்கான நாடகங்களை தம் குரலில் ஏற்ற இறக்கங்களோடு பேசி குழந்தைகள் மனதில் நீங்காத இடம் பெற்றிருந்தார். நாடக உலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர். கூத்தபிரான் இதுவரை 1000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி. அவரது இழப்பு நாடக உலகிற்கும் நகைச்சுவை விரும்பிகளுக்கும் ஒரு பேரிழப்பு என்றால் அது மிகையில்லை. சென்னையில் நேற்று முன்தினம் நாடகம் நடித்து விட்டு ஒரு நிகழ்சிக்காக நேற்று ஹைதரபாத் சென்றவர் இரவு தூங்கும் போது மரணமடைந்தார்.அவருக்கு வயது 84 .அவரது உடல் ஐதராபாத்திலிருந்த்து இன்று சென்னை அடையாரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப் படுகிறது. அவரது உடலுக்கு பிரபலங்கள் மரியாதை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. -
See more at: http://www.thinakkural.lk/
வானொலி அண்ணா காலமானார்
3
டிச
2014
No comments:
Post a Comment