சீன வானொலி தெற்காசியா மையத்தின் துணைத் தலைர் சட்வௌ ஜியௌ, தமிழ்ப் பிரிவின் துணைத் தலைவர் வாணி உள்ளீட்ட மூவர் குழு, 2015ஆம் ஆண்டு 2ஆம் நாள் வெள்ளிக்கிழமை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பரிமாற்றப் பயணம் மேற்கொண்டுள்ளது. இப்பயணத்தின் போது, சீன வானொலிக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கும் இடையேயான 'கன்ஃபூசியஸ் வகுப்பு' தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்விழாவில் பங்கேற்றுள்ள பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் ஜி.ஜேம்ஸ் பிச்சை 'கன்ஃபூசியஸ் வகுப்பினை' அமைக்க தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, இந்த வகுப்பின் எதிர்காலம் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் தலைவர் முனைவர் ஆர்.சரவணன் செல்வனுடன் வகுப்பை உருவாக்கும் விவரங்களை விவாதித்தது சீன வானொலி பிரதிநிதிக் குழு. சீன வானொலி கன்ஃபூசியஸ் வகுப்பை உருவாக்கும் பணிகளை சட்வௌ ஜியௌ அம்மையார் அறிமுகம் செய்தார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாவது 'கன்ஃபூசியஸ் வகுப்பானது', சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்பார்ந்த பரிமாற்றத்திற்கு பாலமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன், இப்பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் தலைவர் முனைவர் ஆர்.சரவணன் செல்வனுடன் வகுப்பை உருவாக்கும் விவரங்களை விவாதித்தது சீன வானொலி பிரதிநிதிக் குழு. பாரதியார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்படும் சீன மொழி வகுப்பறையையும் பார்வையிட்டன குழுவினர்.
நன்றி: சீன வானொலி தமிழ் பிரிவு
No comments:
Post a Comment