காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களில் மத்திய அரசின் சேவைகளை எளிய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் 33 புதிய எப்எம் வானொலி சேனல்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் எல்லை அருகே வசித்து வரும் மக்களுக்கு மத்திய அரசின் புத்தாண்டு பரிசாக புதிய எப்எம் வானொலி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் 18 சேனல்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களில் 15 சேனல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானொலிதான் எளிய மக்கலை சென்றடையும் ஊடகமாக உள்ளது. தொலை காட்சி ஒளிபரப்பு கிடைக்காத இடத்திலும் வானொலி செயல்படும். மேலும் மின்சாரம் இல்லாத இடத்திலும் வானொலியை கேட்க முடியும் எனவே எளிய மக்கள் வானொலியை விரும்புகின்றனர். மேலும் எப்எம் சேனல்களை ஏலத்திற்கு விடுவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.550 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். நன்றி ; தினபூமி 19-1-2015 |
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Sunday, March 01, 2015
33 புதிய எப்எம் வானொலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment