வெளிநாட்டுத் தமிழ் வானொலிகளின் வரலாற்றில் முதன் முறையாக ஒரே சமயத்தில் பனிரெண்டு வெவ்வேறு சிற்றலைவரிசைகளில் ஒலிபரப்பும் முதல் தமிழ் வானொலியாக பாகிஸ்தான் வானொலி அமைந்துள்ளது. கடந்த வாரம் HFCC வெளியிட்ட அலைவரிசை அட்டவணையில் இது இடம் பெற்றுள்ளது. இதில் ஏதோ தவறு இருப்பதாக நோக்கர்கள் கருதுகிறார்கள். அப்படி தவறு ஏதும் இல்லையெனில், வானொலி ஒலிபரப்பில் சாதனையாக கருதப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன் ஒரே சமயத்தில் நான்கு சிற்றலை வரிசையில் சீன வானொலி ஒலிபரப்பியதே சாதனையாகக் கருதப்பட்டது. வரும் அக்டோபர் 25, 2015 முதல் 9390, 9610, 9705, 9795, 9800, 11805, 11820, 11865, 15185, 15290,
15540 மற்றும் 17600 ஆகிய அலைஎண்களில் இந்திய நேரம் மாலை 0630 - 0700 (1300-1330 UTC) வரை ஒலிபரப்ப உள்ளது பாகிஸ்தான் வானொலி. அகில இந்திய வானொலியின் திரைக்கடல் ஆடிவரும் தமிழ் நாதம் ஆறு வெவ்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு
http://www.hfcc.org/data/schedbyfmo.php?seas=B15&fmor=PBC
பாகிஸ்தான் வானொலியின் இணையதளம்
http://www.radio.gov.pk/externalservice
1 comment:
வானொலி ஆர்வலர்களுக்கு ஓர் அருமையான வசதி இது.....
Post a Comment