Showing posts with label பாகிஸ்தான் வானொலி. Show all posts
Showing posts with label பாகிஸ்தான் வானொலி. Show all posts

Monday, October 12, 2015

பாகிஸ்தான் வானொலி ஒரே சமயத்தில் பனிரெண்டு வெவ்வேறு சிற்றலைவரிசைகளில் ஒலிபரப்ப உள்ளது


வெளிநாட்டுத் தமிழ் வானொலிகளின் வரலாற்றில் முதன் முறையாக ஒரே சமயத்தில் பனிரெண்டு வெவ்வேறு சிற்றலைவரிசைகளில் ஒலிபரப்பும் முதல் தமிழ் வானொலியாக பாகிஸ்தான் வானொலி அமைந்துள்ளது. கடந்த வாரம் HFCC வெளியிட்ட அலைவரிசை அட்டவணையில் இது இடம் பெற்றுள்ளது. இதில் ஏதோ தவறு இருப்பதாக நோக்கர்கள் கருதுகிறார்கள். அப்படி தவறு ஏதும் இல்லையெனில், வானொலி ஒலிபரப்பில் சாதனையாக கருதப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன் ஒரே சமயத்தில் நான்கு சிற்றலை வரிசையில் சீன வானொலி ஒலிபரப்பியதே சாதனையாகக் கருதப்பட்டது. வரும் அக்டோபர் 25, 2015 முதல் 9390, 9610, 9705, 9795, 9800, 11805, 11820, 11865, 15185, 15290, 15540 மற்றும் 17600 ஆகிய அலைஎண்களில் இந்திய நேரம் மாலை 0630 - 0700 (1300-1330 UTC) வரை ஒலிபரப்ப உள்ளது பாகிஸ்தான் வானொலி. அகில இந்திய வானொலியின் திரைக்கடல் ஆடிவரும் தமிழ் நாதம் ஆறு வெவ்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு
http://www.hfcc.org/data/schedbyfmo.php?seas=B15&fmor=PBC
பாகிஸ்தான் வானொலியின் இணையதளம்
http://www.radio.gov.pk/externalservice

Tuesday, February 02, 2010

பாகிஸ்தான் வானொலி மீண்டும் தமிழில்

பாகிஸ்தான் வானொலி நீண்ட நாட்களுக்கு பிறகு தற்பொழுது தமிழில் தனது சேவையைத் மீண்டும் தொடங்கியுள்ளது. இவர்களது நிகழ்ச்சிகளை தினமும் இந்திய நேரம் மாலை 06.30 முதல் 07.00 மணி வரை 25 மீட்டர் 11525 கிலோ ஹேர்ட்ஸ் மற்றும் 19 மீட்டர் 15630 கிலோ ஹேர்ட்ஸில் கேட்கலாம்.