Wednesday, August 22, 2018

ஹாம் ப்ரோசைன்ஸ்


மோர்ஸ் குறியீட்டில் ஒலிபரப்பும் பொழுது, கவனமாக கேட்டல் வேண்டும். எந்த அளவிற்கு நம் சிந்தனையை ஒருங்கிணைத்து கேட்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் பதிலினையும் உடனடியாக கொடுக்க முடியும். மோர்ஸ் குறியீட்டில் ஒரு சில புதிய எழுத்துக்களை நீங்கள் கேட்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக மோர்ஸ் குறியீட்டில் தொடங்கும் போதும், முடிக்கும் போதும் சொல்லுகின்ற வார்த்தை. இப்படியான சுருக்க வார்த்தைகளை நாம் ‘ப்ரோசைன்ஸ்’ என்கிறோம். Procedural Signs என்பதன் சுருக்கமே இந்த ‘ப்ரோசைன்ஸ்’.

 

நம் குரலின் ஊடாக தொடர்புகொள்ளும் பொழுது, நாம் நம் உரையாடலை முடிக்கும் பொழுது ‘ஓவர்’ என்போம். அதனையோ ப்ரோசைனில் சொல்லும் பொழுது ‘கே’ என்ற வார்த்தைக்கான மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்துவோம். ஒரு சில ப்ரோசைன்ஸ் இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக பி.கே எனும் எழுத்து. இதற்கு அர்த்தம், ‘பிரேக்’ என்பதாகும்.

 

ஒரு சில சமயங்களில் இரண்டு, இரண்டு எழுத்துக்களை சேர்த்து அனுப்புவதும் உண்டு. உதாரணமாக ‘எஸ்.கே’ மற்றும்  ‘கே.என்’. இங்கு ‘எஸ். கே’ எனில், “end of contact” என்று அர்த்தம், ‘கே.என்’ எனில், “only the station I am in contact with start transmitting” என்று அர்த்தம். இது போன்று இன்னும் ஏராளமான ப்ரோசைன்ஸ் எழுத்துக்கள் உள்ளன. அவற்றை விரிவாக  இந்த பகுதியில் நாம் காணலாம்.

 

மோர்ஸ் குறியீட்டில் ஒலிபரப்பும் பொழுதும், ஒலிபரப்பினை நிறைவு செய்யும் பொழுதும், நாம் ‘73’ என்ற எண்ணைப் பயன்படுத்துகிறோம். இதற்கு ‘best regards’ என்று பொருள். CUL என்ற மூன்று எழுத்து வார்த்தைக்கு  see you later என்று பொருள். ப்ரோசைனில் சரியான எழுத்துக்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக ‘எஸ்.கே’ எனில் “உங்களுடனான இந்த ஒலிபரப்பினை மட்டும் இத்துடன் நிறைவு செய்கிறேன்” என்று பொருள். ஆனால் அதுவே ‘சி.எல்’ என்று நீங்கள் ஒலிபரப்பும் பட்சத்தில் அதற்கு “ஹாம் வானொலி பெட்டியை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டு செல்கிறேன்” என்று அர்த்தம்.

 

நகைச்சுவையாக ஒரு சில சமயங்களில் இந்த ஹாம் குறியீடுகள் பயன்படுத்தப்படுவதும் உண்டு. உதாரணமாக shave and haircut என்பதற்கு ‘டிட்-டிடிடிட்-டிட்’ என்றும், அதற்கு பதிலாக ‘டிட்டிட்’ என்று அனுப்புவதும் உண்டு. மேலும், நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, பேச்சினை முடிக்கும் முன்னர், “டிட்லி பம்ப்-டி-பம்ப்” என்று நகைச்சுவையாக சொல்வதுண்டு.  இதற்கு ‘எஸ்.கே’ என்பது பொருள். அதாவது “எனது பேச்சை இத்துடன் முடித்துக் கொண்டு கிளம்புகிறேன்” என்று பொருள்.


ப்ரோசைன்ஸ் 

AA - அனைத்துக்கும் பிறகு (All after)


- வரி முடிவு (End Of Line)

AB – அனைத்திற்கும் முன் (All before)

ABT – பற்றி (About)

ADEE – முகவரியாளர் (Addressee)

ADR – முகவரி (Address)

ADS – முகவரி (Address)

AGN – மீண்டும் (Again)

AM – பண்பேற்ற அலைவீச்சு (Amplitude Modulation)

ANI – ஏதேனும் (Any)

ANS – பதில் (Answer)

ANT – உணர்கொம்பு (Antenna)

- செய்தியின் முடிவு (End of message)

- நிற்க, காத்திரு (Stand by; wait)

- மின் அஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு (used for the @ sign for E-Mail Addresses New proposal is AC run together)

BCI – ஒலிபரப்பு குறிக்கீடு (Broadcast Interference)

BCL – ஒலிபரப்பினைக் கேட்பவர் (Broadcast Listener)

BCNU – உங்களைப் பார்ப்பது (Be seeing you)

BD – மோசமான (Bad)

BK – தடை (Break, Break in)

BN – எல்லாவற்றிற்கும்; இருந்திருக்கும் (All between; Been)

- முகவரி மற்றும் உரையின் இடையே (Separation (break) between address and text) உரை மற்றும் கையொப்பத்திற்கு இடையில் (between text and signature)

BTH - இருவரும் (Both)

BTR – சிறந்த (Better)

BTW – வழி மூலம் (By The Way)

BUG – அரை தானியங்கி சாவி (Semi-Automatic key)

BURO – பணியகம் (Bureau)

B4 – முன் (Before)

Wednesday, August 15, 2018

இந்தியாவில் 347 வானொலிகள்


 இந்தியாவில் தனியார் துறை பண்பலை வானொலிகள் 2000-த்திற்கு பிறகே வந்தன. இன்று இவை பொதுத் துறை வானொலிகளுக்கு சவால் விடும் அளவுக்கு தனது ஒலிபரப்புகளை செய்து வருகின்றன. 2018 ஜூலை 23-ன் கணக்கின் படி இந்தியாவில் 347 வானொலிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இவற்றில் மிக அதிக வானொலிகளை பெற்றுள்ள முதல் மூன்று நிலையங்களாக சூரியன் எஃப்.எம் (ரெட் எஃப்.எம்), பிக் எஃப்.எம் மற்றும் ரேடியோ மிர்ச்சி ஆகியவற்றை கூறலாம். தமிழகத்தில் 29 தனியார் பண்பலை நிலையங்கள் ஒன்பது வெவ்வேறு ஊர்களில் இருந்து தற்பொழுது ஒலிபரப்பி வருகின்றன.

Friday, August 10, 2018

வெளிநாட்டு சேவைக்கு ஆபத்து

அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு சேவை நிறுத்த வேண்டிய அபாய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் உட்பட 27 மொழிகளில் 108 நாடுகளுக்கு ஒலிபரப்பாகிவரும் இந்த சேவைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.97 கோடிகள் செலவாகிறது. இந்த பணத்தினை இது வரை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் செலவு செய்து வந்தது. இனி இதனை வெளியுறவு அமைச்சகம் கொடுத்தால் மட்டுமே ஒலிபரப்ப முடியும் என பிரசார் பாரதி அறிவித்துள்ளது.


The external services division of All India Radio (AIR) is caught in a turf war between the ministry of information and broadcasting (MIB), which runs it and the ministry of external affairs (MEA), which is expected to fund it.

While the MIB wants the service to continue and even expand; MEA has been suggesting shutting down the programmes, pointing out that the service offered through short wave transmission has outlived its utility and does not attract listeners abroad, said an MIB official aware of the developments.

Wednesday, August 08, 2018

முதல் பண்பலை ஒலிபரப்பு


 

இன்று வானொலி என்றாலே எஃப்.எம் என்று சொன்னால் மட்டுமே தெரிகின்றது. அந்த அளவிற்கு பண்பலை வானொலிகள் மக்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், அதன் தெளிவு. பண்பலை வானொலியின் ஆய்வு 1930-களில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. ஆனால் யார் முதல் சோதனை ஒலிபரப்பினை செய்தார்கள்? யார் முதல் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பினை செய்தார்கள் போன்றவற்றில் இன்றும் சர்ச்சை உண்டு.

 

எட்வின் ஆம்ஸ்ட்ராங் அவர்களால் W2XMN எனும் வானொலியில், முதல் பண்பலை ஒலிபரப்பானது சோதனை முறையில் ஒலிபரப்பப்பட்டது என்று சொன்னாலும், 1937-ல் W1XOJ எனும் வானொலி மசாசூட்ஸில் தனது முதல் பண்பலை  சோதனை ஒலிபரப்பினை செய்ததுவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1939, 24 ஜூலையில் முறையான பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்டதாக ‘ரேடியோ ஆன்லைன்’ இணையதளம் கூறுகிறது. இப்படியாக பண்பலை வானொலியின் வரலாறு சென்றாலும், இந்தியாவில் முதல் பண்பலை ஒலிபரப்பானது, 23 ஜூலை 1977-ல் சென்னையில் அகில இந்திய வானொலியால் தொடங்கப்பட்டது. இதற்கான ஆன்டனாக்கள், தூர்தர்ஷன் டவரில் அமைக்கப்பட்டது.

Saturday, August 04, 2018

சென்னைப் பல்கலைக்கழகத்தில் “ஹாம் வானொலி”

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் "ஹாம் வானொலி" (ஆர்வலர் வானொலி) என்ற ஒரு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த பாடத்தினை பல்கலைக்கழக்தில் 80+ துறைகளில் படிக்கும் எந்த மாணவரும் விருப்பப் பாடமாக (Elective) எடுத்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இது தொடர்பாக தமிழில் வெளிவந்துள்ள மூன்று ஹாம் ரேடியோ புத்தகங்களையும் அறிமுகப்படுத்தி மகிழ்கிறோம்.

Inline image