Showing posts with label ரேடியோ மிர்ச்சி. Show all posts
Showing posts with label ரேடியோ மிர்ச்சி. Show all posts

Saturday, August 10, 2024

இலவசமாக டி.ஆர்.எம் வானொலிப் பெட்டி

 ரேடியோ மிர்ச்சி தொடங்கப்பட்ட புதிதில் 


தனது நேயர்களுக்கு இலவசமாக வழங்கிய எஃப்.எம் வானொலிப் பெட்டி இது. ஒரு வேலை தனியார் துறைக்கு டி.ஆர்.எம் ஒலிபரப்பு செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தால், இது போன்று டி.ஆர்.எம் வானொலிப் பெட்டிகளையும் நேயர்களுக்கு  இலவசமாக தனியார் வானொலிகள் கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?! 

Wednesday, August 15, 2018

இந்தியாவில் 347 வானொலிகள்


 இந்தியாவில் தனியார் துறை பண்பலை வானொலிகள் 2000-த்திற்கு பிறகே வந்தன. இன்று இவை பொதுத் துறை வானொலிகளுக்கு சவால் விடும் அளவுக்கு தனது ஒலிபரப்புகளை செய்து வருகின்றன. 2018 ஜூலை 23-ன் கணக்கின் படி இந்தியாவில் 347 வானொலிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இவற்றில் மிக அதிக வானொலிகளை பெற்றுள்ள முதல் மூன்று நிலையங்களாக சூரியன் எஃப்.எம் (ரெட் எஃப்.எம்), பிக் எஃப்.எம் மற்றும் ரேடியோ மிர்ச்சி ஆகியவற்றை கூறலாம். தமிழகத்தில் 29 தனியார் பண்பலை நிலையங்கள் ஒன்பது வெவ்வேறு ஊர்களில் இருந்து தற்பொழுது ஒலிபரப்பி வருகின்றன.

Saturday, February 18, 2012

பத்திரிகைகளில் வானொலி



  • விகடன் வரவேற்பறை: தமிழ் அலைவரிசை – ஆனந்த விகடன், ப47, 17 ஆகஸ்டு 2011 | 
  • ஒரு சங்க முழக்கம் – புதிய தலைமுறை, ப44, 28 ஜூலை 2011 | 
  • எப்.எம் ஏஞ்சல்ஸ் – மங்கையர் மலர், ப20, ஜூன் 2011 | 
  • வானொலி: நாடக உலகின் வாடா மலர் சுகி. சுப்பிரமணியம் - தினமணி, ப6, 21 ஆகஸ்டு 2011 | 
  • ஹலோ எப்.எம் 106.4ன் சிறந்த மனிதர் யார்? -தினத்தந்தி, ப24, 31 டிசம்பர் 2011 |
  • ஹலோ எப்.எம். 2010 பட்டம் யாருக்கு? - தினத்தந்தி, ப8, டிசம்பர் 2011
  • ரேடியோ மிர்ச்சி: பறந்து போன மதுரை மாப்பு…- என் விகடன், ஆனந்த விகடன், 3 மார்ச் 2011 | 
  • ஹலோ எப்.எம்-மின் நான்கு முழு பக்க விளம்பரங்கள் – ஆனந்த விகடன், 16 மார்ச் 2011 | 
  • மூங்கில் மூச்சு: இலங்கை வானொலி பற்றிய கட்டுரை – ஆனந்த விகடன், ப46, 9 மார்ச் 2011
  • ஹலோ தமிழா: இரண்டு முழு பக்க விளம்பரம் - ஆனந்த விகடன், ப26, 30 மார்ச் 2011 |
  • அகில இந்திய வானொலி அலுவலர் சங்க மாநாடு – தினகரன், ப18, 27 பிப்ரவரி 2011 |
  • பல்லாங்குழி ரகசியம் – என் விகடன், ஆனந்த விகடன், ப123, 9 மார்ச் 2011 | 
  • பேச்சுதான் என் மூச்சு - என் விகடன், ஆனந்த விகடன், ப122, 9 மார்ச் 2011 | 
  • நெல்லை படிப்பு பார்ட்டி - என் விகடன், ஆனந்த விகடன், ப124, 16 மார்ச் 2011 | 
  • அஞ்சறை பெட்டி: இரண்டு முழு பக்க விளம்பரம் - என் விகடன், ஆனந்த விகடன், ப26, 6 ஏப்ரல் 2011 | 
  • ரேடியோ மிர்ச்சி: கோலி சோடா “பொய் சொல்லுங்க சார்” - என் விகடன், ஆனந்த விகடன், ப117, 27 ஏப்ரல் 2011 |
  • சூரியன் எப்.எம்: யாழ் சுதாகர் “துன்பம் துறந்தவன் நான்” - ஆனந்த விகடன், ப28, 20 ஏப்ரல் 2011 | 
  • பிபிசி என்பதன் விரிவாக்கம் என்ன? போட்டி - மங்கையர் மலர், ப288, பிப்ரவரி 2011 |
  • ஹலோ எப்.எம்: சம்பளத்தை கடவுள்கிட்டே கேளுங்க - என் விகடன், ஆனந்த விகடன், ப128, 30 மார்ச் 2011 | 
  • ஹலோ எப்.எம்: கவிப்பேரரசுவின் 30 ஆண்டு முத்துக்கள் (விளம்பரம்) - ஆனந்த விகடன், 27 ஜூலை 2011 | 
  • ரெக்கார்டு கலெக்ஷன் - என் விகடன், ஆனந்த விகடன், ப125, 10 ஆகஸ்ட் 2011 | 
  • ஹலோ எப்.எம்: சுடிதார் நாட்டாமை - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப130, 16 மார்ச் 2011 | 
  • ரேடியோ மிர்ச்சி: கோவை அலார பார்ட்டி - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப130, 16 மார்ச் 2011 | 
  • ரேடியோ மிர்ச்சி: குட்டி குஷ்பு - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப131, 16 மார்ச் 2011 | 
  • ஹலோ எப்.எம்: படிங்க ப்ளூ கலர் பிட்டு…பிடிங்க ஹலோ எப்.எம் - என் விகடன் கிப்ட்டு - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப103, 15 ஜøன் 2011 | 
  • ஹலோ எப்.எம்: கோவை வாலுப் பையன் - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப125, 2 மார்ச் 2011

Thursday, August 14, 2008

சென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை

சர்வதேச வானொலி இதழ் வெற்றிகரமாக தனது புதிய பரிமாணத்தோடு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதழ் படிப் படியான வளர்ச்சியையும், பாராட்டுகளையும், பலதரப் பட்ட மக்களிடமிருந்து பெற்று வருகிறது. நாளுக்கு நாள் பண்பலைகளின் எண்ணிக்கையும், பெருகிக் கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் தனியார், அரசுப் பண்பலைகளின் எண்ணிக்கை பத்து. ஒவ்வொரு பண்பலையும் தன்னை முதன்மைப் படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சூரியன், ரேடியோ மிர்ச்சி போன்ற பண்பலைகளானாலும் சரி, புதிதாக தொடங்கப்பட்ட ஹலோ,ஆஹா பண்பலையானாலும் சரி. சர்வதேச வானொலி இதழ் முழுக்க, முழுக்க வானொலி சார்ந்த செய்திகளையும், வானொலியின் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி குறித்த கட்டுரைகளை மட்டுமேவெளியிட்டு வரும் ஒரே தமிழ் இதழ் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். நமது இதழ் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிமையான நேரத்தில் சென்னையில் பண்பலைகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பினை அறிய முதன்முறையாக எவ்வித விருப்பு, வெறுப்புகளும் இன்றி, சுமார் ஆயிரம் பேரிடம் நேரடியாக சில வினாக்களுடன் தொடர்பு கொண்டோம். அதன்படி, ரேடியோ மிர்ச்சி 98.3 எப். எம், அதிக அளவில் மக்கள் விரும்பும் பண்பலையாக உள்ளது. மக்களுக்கு அதிக அளவில் பரிசுகளைத் தரும் பண்பலையாக ரேடியோ ஒன் மற்றும் ரேடியோ மிர்ச்சியைத் தேர்வு செய்துள்ளனர். தனியார் பண்பலைகளின் படையெடுப்புகளுக்கு இடையேயும், மத்திய அரசின் ரெயின்போ எப்.எம் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், இதனைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இன்னும்முனைப்புடன் செயல்படவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது ரெயின்போ எப்.எம். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதன்படி வானொலியில் தாங்கள் கேட்கும் நிகழ்ச்சியானது வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ, அல்லது நேரத்தை வீணடிக்கிற நிகழ்ச்சியாக மட்டுமோ இருந்தால் போதாது என்பதைப் பிரதிபலிப்பதாகவேமக்களின் மதிப்பீடு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ ஆண்டாண்டுகளாக கோலோச்சி வந்த சூரியன் பண்பலையை மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மறக்கத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. (தொடரும்)