Saturday, March 28, 2020

வரலாற்றில் முதன் முறையாக 7.15 செய்தியறிக்கை நிறுத்தம்

All India Radio suspends their 7.15 news bulletins!

அகில இந்திய வானொலியின் வரலாற்றில் முதன் முறையாக காலை 7.15 தமிழ் தேசிய செய்தியறிக்கை மட்டுமல்லாது மதியம், இரவு உட்பட மூன்று வேலை தேசிய செய்தி அறிக்கைகளும் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பேரிடர் கால உண்மைத் தகவல்களுக்கு இருந்த ஒரு ஊடகமும் காணாமல் போனது வருத்தமே! 

தமிழக நேயர்களால் 'டெல்லி செய்தி' என்றும், திருமதி.சரோஜ் நாராயணசாமி, திரு.ராஜாராம் உட்பட பல முக்கிய செய்தி வாசிப்பாளர்களை அடையாளம் காட்டிய இந்த செய்தி அறிக்கை, இது போன்று முற்றிலுமாக என்றும் நிறுத்தப்பட்டது இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்து வானொலிகளும் தேசிய செய்தி அறிக்கைகளை நிறுத்தியுள்ளதற்கு காரணம் பணியாளர் பற்றாக்குறை என அறிவித்துள்ளது. மாறாக எஃப்.எம் ரெயின்போ ஒலிபரப்பில் செய்திச் சுருக்கங்களை மணிக்கு ஒரு முறை கொடுத்துக் கொண்டும், கொரோனா சிறப்பு செய்தி அறிக்கைகளையும் வழங்கி வருகிறது. இந்த பேரிடர் காலத்திலும் பணியில் உள்ள செய்தியாளர்களுக்கு ஒரு சல்யூட்!


Sent from Yahoo Mail for iPhone

No comments: