சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Monday, January 31, 2022
பிரியா கிஷோர் மறைந்தார்
Friday, January 28, 2022
SLBC’s certificate Course on Radio Production
இலங்கை வானொலியானது வானொலியில் அறிவிப்பாளர் ஆக விரும்புபவர்களுக்கு, அறிவிப்பாளர் பயிற்சியை, இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர்களைக் கொண்டு வழங்குகிறது. தமிழ் மொழிக்கான பயிற்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வழங்கப்படுகிறது.
இது தவிர வானொலி நிகழ்ச்சியை தயாரிப்பதற்கான பயிற்சியையும் வழங்குகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு விளம்பரத்தில் உள்ள தொலைப்பேசி எண்களை இலங்கை வாசிகள் தொடர்புகொள்ளலாம். (ஜெய்சக்திவேல்)
#இலங்கை #வானொலி #slbc #radio
BBC Budget cut / பிபிசி நிதி குறைப்பு
Wednesday, January 26, 2022
World Radio Day / உலக வானொலி தினம் 2022
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13, உலக வானொலி தினமாகக் யுனஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகிறது. வாருங்கள் இந்த வருடமும் சிறப்பு உலக வானொலி தின அஞ்சல் அட்டையுடன் இணைந்து கொண்டாடலாம்.
Proclaimed in 2011 by the Member States of UNESCO, and adopted by the United Nations General Assembly in 2012 as an International Day, February 13 became World Radio Day (WRD). The theme of the 2022 edition of World Radio Day is thus devoted to "Radio and Trust". Let's come and celebrate the event with webinar's, seminars, workshops and exhibitions. More details on first comment.
#wrd #worldradioday #radio #unesco #webinar #உலகவானொலிதினம் #வானொலி #ரேடியோ
Sunday, January 23, 2022
யு ஜி சி கேள்வித்தாளில் வானொலி
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வருடத்திற்கு இரண்டு முறை தேசிய தகுதித் தேர்வினை (National Eligibility Test) நடத்துகிறது. 2021ஆம் ஆண்டில் முதுகலை தமிழ் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் வானொலி தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதில், வானொலித் தொடர்பான புத்தகங்களை எழுதிய திரு.கோ.செல்வம் (உங்கள் வானொலி) மற்றும் திரு.வெ.நல்லதம்பி (உலகமேலாம் தமிழோசை) அவர்களின் வரிசையில் தங்க.ஜெய்சக்திவேல் எழுதிய 'உலக வானொலிகள்' புத்தகத்தினையும் இணைத்து கேள்வியாக கேட்டுள்ளனர்.
இந்த தேர்வினை எழுதிய JNU தமிழ் துறை மாணவர் தமிழ் பாரதி, சமீபத்திய சந்திப்பில் இந்த விபரத்தினை கூறினார். நேற்று இந்த வினாத்தாளையும், விடைகளையும் UGC இணையத்தில் வெளியிட்டுள்ளது.
ஒரு வகையில் இது மகிழ்ச்சியான செய்தி. வானொலித் தொடர்பான எழுத்தாளர்கள் வரிசையில் நம்மையும் அங்கீகரித்துள்ளது UGC. இன்னொரு வகையில், இந்த கேள்வி தவறானது. "கீழ்கண்ட புத்தகங்களில், வானொலிக்கு தொடர்பில்லாத புத்தகம் எது? என்று கேள்வி இருந்திருக்கலாம். எது எப்படியோ, கேள்வியை எடுத்தவர் சம கால ஊடக சூழலை அவதானித்து வந்துள்ளார். மகிழ்ச்சி!
#UGC #JNU #NET #வானொலி #பல்கலைக்கழகமானியக்குழு
Saturday, January 22, 2022
ஆஜாத் ஹிந்த் வானொலி அஞ்சல் அட்டை
சீன வானொலியின் புதிய ஒளிபரப்பு
அகில இந்திய வானொலி சமீப காலமாக பல ஒலிபரப்புகளை மூடியும், மாற்றம் செய்தும் வருகின்றது. குறிப்பாக முதலில் டெல்லி அகில இந்திய வானொலியில் செயல்பட்ட செய்திக் குழுவை அந்தந்த மாநிலங்களுக்கு மாற்றம் செய்யதது. அதன் பின் வெளிநாட்டு சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்திற்கு என்று இருந்த ஒரே ஒரு சிற்றலை ஒலிபரப்பும் அதன் பின் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் மத்திய அலைவரிசையிலும் கை வைத்துள்ளார்கள்.
இந்த சூழலில் தான் பல சர்வதேச ஊடங்கள் புதிதாக தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பிபிசி தமிழ், தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.40க்கு உலக செய்தியறிக்கையை வழங்கி வருகிறது. இது தவிர வார இறுதியில் 'கிளிக்' என்ற அறிவியல் நிகழ்ச்சியையும் ஒளிபரப்பி வருகிறது.
அதேப் போன்று சமீபத்தில் ஜெர்மனியின் பொது சேவை ஒலிபரப்பு நிறுவனமான Deutsch Welle (DW) புதிய தலைமுறையுடன் இணைந்து Eco India என்ற தமிழ் நிகழ்ச்சியை சனிக்கிழமை மாலை வேலையில் ஒளிபரப்பி வருகிறது.
கடந்த வாரம் முதல் நம் அண்டை நாடான சீனாவின் பொது சேவை ஒலிபரப்பு நிறுவனமான China Media Group (CMG), தந்தி தொலைக்காட்சியுடன் இணைந்து தினமும் மாலை 6.40க்கு "சி.எம்.ஜி. செய்திகளை" ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. மிக நேர்த்தியாக, சுவாரஷ்யமான செய்திகளை திருமலை சோமு தொகுத்து வழங்கிவருகிறார்.
20-1-2022 முதல் இலங்கை வானொலியும் மீண்டும் "கொழும்பு சர்வதேச ஒலிபரப்பினை" மத்தியலை 873 கிலோ ஹெர்ட்சில் காலை 7.00 முதல் 8.00 மணி வரை ஒலிபரப்பத் தொடங்கியுள்ளது.
அனைத்துல நாடுகள் தங்களின் ஒலி, ஒளிபரப்புகளை மீட்டுருவாக்கம் செய்துவரும் இந்த சுழலில் தான், நமது அகில இந்திய வானொலி பல்வேறு ஒலிபரப்புகளையும், தூர்தர்ஷனின் LPT மற்றும் HPT ஒளிபரப்பிகளையும் நிறுத்திவருகிறது. சமூக ஊடங்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளது பெரிதும் ஆபத்தான ஒன்று. ஒலி, ஒளிபரப்புத் துறையில் முன் அனுபவம் இல்லாதவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவதே இவற்றிற்கெல்லாம் ஒரு காரணமாக நோக்கர்களால் கருதப்படுகிறது.