Showing posts with label எஸ். பி. மயில்வாகனம். Show all posts
Showing posts with label எஸ். பி. மயில்வாகனம். Show all posts

Thursday, April 22, 2010

எஸ்.பி.மயில்வாகனன்: தமிழ் வர்த்தக சேவையின் பிதாமகர்


அமரர் எஸ்.பி மயில்வாகனனின் குரலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.


இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவை ஒலி பரப்பில் தமது கம்பீரமான குரலால் உலகெங்குமுள்ள கோடிக் கணக்கான தமிழர்களையெல்லாம் ஈர்த்தவர் அறிவிப்பாளர் அமரர் எஸ்.பி.மயில்வாகனன் அவர்கள்.

1954 இல் இலங்கை வானொலியில் பணியாற்றத் துவங்கிய இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வானொலியில் ஆற்றிய பணிகளும்...நிகழ்த்திய சாதனைகளும் இன்றுவரை எவராலும் நெருங்க முடியாதவை.

இலங்கையில் மட்டுமன்றி தென்னிந்தியாவில் பட்டி தொட்டியெங்கும் இவர் புகழ்... பிரபல சினிமாக் கதாநாயகர்களுக்கு இணையாகப் பரவியது.

இவரை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தக் காலத்திலே லட்சக்கணக்கான நேயர்கள் துடித்திருக்கிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர்கள்,பாடகர்கள், பாடகிகள் மட்டுமன்றி அந்தக் காலத்தின் முன்னணிக் கதா நாயகர்கள் பலரும் எஸ்.பி.மயில்வாகனனின் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள் என்பதை பழைய பத்திரிகைச் செய்திகளின் மூலம் அறிந்து வியக்க முடிகிறது.

1950 களிலும்...1960 களிலும் இவரது அறிவிப்பினால் அடையாளம் காட்டப்பட்டு புகழ் பெற்ற பாடல்கள் அதிகம்.பாடகர்கள்,இசையமைப்பாளர்கள் அதிகம்.

மயில்வாகனனின் புகைப் படத்தை ஒவ்வொரு இசையமைப்பாளனும்..பாடகனும்...தமது இல்லத்தில் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என ...அந்தக் காலத்தின் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மனம் திறந்து கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

எஸ். பி. மயில்வாகனம், ( பி: யாழ்ப்பாணம்) இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தக சேவையின் பிதாமகர் என்று கருதப்படுபவர். உலக ரீதியாக பலராலும் அறியப்பட்ட தமிழ் வானொலி அறிவிப்பாளர் ஆவார். தென்னிந்தியாவில் பொதுமக்கள் மத்தியிலும், சினிமா கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு உடையவராக விளங்கியவர். இவரது மனைவியாரான செந்தில்மணி மயில்வாகனம் வானொலியில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பவராகவும் இருந்தவர். நகைச்சுவை நடிகர் தங்கவேல் நடிதத திரைப்படமொன்றில் இவரைப்பற்றி குறிப்பிடுவதாக காட்சி ஒன்று உண்டு.


Thursday, April 01, 2010

இலங்கை வானொலி

இலங்கை வானொலி


இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில்பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த பின்னர் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப் பட்டது.


ஆரம்பம்

1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராகும். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.

கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோவாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.

இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேச படைகளுக்க்கு செய்திகள் ஒலிப்பரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்


1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.

1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.


புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள்

இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா இன்னும்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து http://ta.wikipedia.org/wiki/இலங்கை_வானொலி