Showing posts with label பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில். Show all posts
Showing posts with label பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில். Show all posts

Saturday, November 24, 2012

பீஜிங் பயணத்தில் இலங்கை

வணக்கம் நண்பர்களே , நான் தற்பொழுது சீன வானொலிக்கான பீஜிங் பயணத்தில் இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் உள்ளேன். இன்று நண்பரும் முதுபெரும் டிஎக்ஸ்ருமான திரு.விக்டர் குணதிலகே அவர்களை சந்திக்க உள்ளேன். விக்கட அவர்கள் வாய்ஸ் அப் அமெரிக்காவின் முழு நேர கண்காணிப்பாளர். அவரிடம் இல்லாத வானொலிப் பெட்டிகள் இல்லை எனக் கூறலாம். இன்று முழுவதும் அவருடன் தான் எனது பொழுது கழிய உள்ளது.

வானொலி பயணத்தில் பலபுதிய நண்பர்களை சந்திப்பது என்றுமே ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஏற்கனவே திரு.விக்டர் அவர்களை சென்னையில் வைத்து சந்தித்தாலும், இன்று அவரை அவரின் நாட்டில் வைத்து சந்திப்பதில் எனக்குமகிழ்ச்சியைத் தருகிறது.




இன்றைய பயணத்தில் ஒரு சில மிக்கிய இடங்களை இலங்கையில் காண ஏற்பாடு ஆகியிருக்கிறது. அவை எந்த இடங்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். நானும் தான் அதே ஆர்வத்துடன் உள்ளேன். காரணம் இதுவரை அவர் கூறியது ஒன்று தான். ஆம், "உங்களை ஒரு முக்கிய இடத்துக்கு அழைத்து செல்கிறேன், தாயாராக இருங்கள்" என்பது தான் அது. மீண்டும் உங்களை இரவு வலைப்பூ வழியாக சந்திக்கிறேன்.