Showing posts with label ஹாம். Show all posts
Showing posts with label ஹாம். Show all posts

Thursday, April 11, 2024

வானொலிப் பெட்டிகளைக் கொண்ட அருங்காட்சியகம்

 


















சமீபத்தில் எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு ஆச்சர்யம், அங்கு ஏராளமான VHF, HF வானொலிப் பெட்டிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் வால்வ் வானொலி பெட்டி மற்றும் கிராமபோன் பெட்டியும் உள்ளடக்கம்.

மிக முக்கியமாக நம்நாட்டிலேயேத்  தமிழகப் போலீஸாரால் தயாரிக்கப்பட்ட "வான்தந்தி" வானொலிப் பெட்டியும் இதில் அடங்கும். வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

#வான்தந்தி

Friday, March 22, 2024

ஹாம் வானொலி நிலையம்

 

ஹாம் வானொலி வகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களைக் களத்திற்கு அழைத்துச் சென்று, எப்படி அவை இயங்குகின்றன என்பதை நேரடியாக காட்டுவதை  வழக்கமாகக் கொண்டுள்ளோம். 


அந்த வகையில் இந்த ஆண்டும் மாணவர்களை அழைத்துச் சென்ற இடம் VU2OW ஹாம் ஸ்டேசன். எப்பொழுது அழைத்துக் கூறினாலும், அன்போடு வாருங்கள் என்பார் திரு.ராஜேஷ் (VU2OW). இந்த முறையும் கடைசி நிமிடத்தில் தான் அவரை அழைத்து மாணவர்களோடு வருவதாகக் கூறினேன், அன்போடு வாருங்கள் என்றார்.


மற்ற ஹாம் நிலையத்தை விட இவரின் நிலையம் தனித்துவமானது. ஒரே இடத்தில் வால்வ் வானொலிப் பெட்டியில் இருந்து DMR உட்பட அனைத்து செயற்கைக்கோள் ஒலிபரப்புகளை கேட்கவும், ஒலிபரப்பைச் செய்யவும் கூடிய ஒரே நிலையமாக VU2OW உள்ளது.


மேலும் ஒவ்வொரு முறை இவரது இல்லத்திற்கு செல்லும் போதும், அவர்களின் குடும்பத்தார் கொடுக்கும் வரவேற்பு, மாணவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தரக்கூடியதாக இருக்கும். 


Homebrewங்கிலும் அசத்தி வரும் திரு.ராஜேஷ், இந்த முறையும் பல்வேறு சோதனை முயற்சிகள் செய்து வருவதாகக் கூறினார். குறிப்பாக அவரது மகன் செய்த அழகான கீ போர்ட் ஒன்றினைப்  பார்த்து அசந்தே விட்டோம். அதிக உழைப்பினைத் தாங்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.


அவரது வீட்டின் மாடியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டனாக்கள் தனித்துவமானவை. பத்துக்கும் மேற்பட்ட ஒலிபரப்பிகளைப் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது சாதாரண விடயம் அல்ல. உண்மையிலேயே இன்றைய நாள் மாணவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தினைக் கொடுத்திருக்கும் எனலாம்.


#ஹாம் #ரேடியோ #வானொலி #ham #radio #vu2ow #feildvisit

Sunday, September 27, 2009

ஆனைமலை அமெச்சூர் ரேடியோ கிளப்

ஆனைமலை அமெச்சூர் ரேடியோ கிளப் வரும் அக்டோபரில் ஹாம் தேர்வினைப் பொள்ளாச்சியில் நடத்த உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ANAMALAI AMATEUR RADIO CLUB, SHRI KRISHNAA VITHAYAALAYAM MATRIC SCHOOL, Divansha pudur (Post), Pollachi, Coimbatore (Dt), Tamilnadu. (K.Ibrahim, VU3IRH – 98420 63686)

Friday, April 10, 2009

இத்தாலிய வானொலியில் ஹாம்

இத்தாலிய வானொலியில் இயங்கி வரும் ஹாம் வானொலி குழுமமானது, தற்பொழுது புதிய வண்ண அட்டையைத் தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. II2RAI எனும் Call Sign பெறப்பட்டு 55 வருடங்கள் நிறைவடைவதை ஒட்டி தற்பொழுது, இதன் ஒலிபரப்புகளை கேட்டு நிகழ்ச்சி திறனாய்வு கடிதம் அனுப்புபவர்களுக்கு மட்டும் அனுப்ப உள்ளது. மேலதிக விபரங்களுக்கு Gruppo ARCAL Radioamatori Rai, C/o. Stanza 3602 - C.P. RF - TV RAI Milano, Corso Sempione, 27, 20145 Milano, Italy. E-mail: iq2rd@rai.it. ùNôÓdL www.iq2rd.it