Showing posts with label Babul Gupta. Show all posts
Showing posts with label Babul Gupta. Show all posts

Monday, March 19, 2012

கடலில் பயணிக்கும் கப்பல்களுக்காக ஒரு வானொலி


கனடா: உலகெங்கும் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்காக டைம் சிக்னல் வானொலிகள் (Time Signal Station) செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் குறைந்த சக்தியில் ஒலிபரப்பி வருவதால் நாம் கேட்பது சிரமம். ஆனாலும் ஒரு சில சமயங்களில் தெளிவான வானிலையின் போது இந்த வானொலிகளைக் கேட்கலாம். கனடாவில் இருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பி வரும் இஏம CHU Canada தற்பொழுது இந்தியாவில் இரவு நேரங்களில் கிடைத்து வருகிறது. இவர்களது சிக்னலானது இந்திய நேரம் இரவு 8.50 மணிக்கு (1450 UTC)
ஆங்கிலத்தில் 3330 அலைஎண்கள் 90 மீட்டரில் ஒலிபரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:

CHU Canada, Time Signal Station, Institute for National Measurement
Standards,
National Research Council of Canada (NRC-INMS),
1200, Montreal Road, Bldg M-36,
Ottawa, Ontario, K1A OR6,
Canada.
Email: radio.chu@nrc-cnrc.gc.ca
Web: www.inms-ienm.nrccnrc.gc.ca
(Babul Gupta)

Monday, March 05, 2012

இந்தியப் பெருங்கடலில் ஒரு வானொலி


டியாகோ கார்சியா: இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு நேர் கீழாக அமைந்துள்ள ஒரு சிறு தீவு தான் டியாகோ கார்சியா. அமெரிக்க படை வீரர்கள் தங்கியுள்ள இந்த தீவினுல் செல்வது அவ்வளவு எளிதள்ள. ஆனால் அவர்கள் ஒலிபரப்பும் வானொலியான AFRTS-சை நேயர்கள் கேட்கலாம். கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல் நீங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதினால் அதற்கு பதிலும் வண்ண அட்டை வடிவில் உங்களுக்கு அனுப்புகின்றனர். தற்பொழுது
இவர்களது நிகழ்ச்சிகளை தினமும் இந்திய நேரம் மாலை 6 மணி முதல் (1230 உலக நேரம்) ஆங்கிலத்தில் 12759 kHz USB அலைஎண்கள் 22 மீட்டரில்
கேட்கலாம். தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
American Forces Radio and Television Service (AFRTS),
NMC Det AFRTS-DMC,
23755 Z St., Bldg. 2730,
Riverside, CA 92518-2017,
USA.
Email: qsl@dodmedia.osd.mil
டியாகோ கார்சியா தவிர இவர்களது நிகழ்ச்சிகள் Barrigada(Guam), Keflavik(Iceland), Pearl Harbour(Hawaii), Key West(Florida) and Peurtorica ஆகிய இடங்களில் இருந்தும் ஒலிபரப்பாகி வருகிறது. (Babul Gupta, Rajeesh Ramachandran).

Tuesday, February 21, 2012

அமெரிக்கா WTJC இருந்து வண்ண அட்டை



WTJC Family Christian Radio தனது நேயர்களுக்கு தற்பொழுது அமெரிக்காவில் இருந்து வண்ண அட்டையை உடனுக்குடன் அனுப்பி வருகிறது. இவர்களது நிகழ்ச்சியானது இந்திய நேரம் காலை 8 மணிக்கு (0130 UTC) ஆங்கிலத்தில் 9370 அலைஎண்கள் 31 மீட்டரில் ஒ−பரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
WTJC, Fundamental Broadcasting Network,
#520, Roberts Road, Newport,
NC 28570,
USA.
Email: fbn@fbnradio.com
Web: www.fbnradio.com
(Babul Gupta)