Showing posts with label EchoLink. Show all posts
Showing posts with label EchoLink. Show all posts

Monday, June 05, 2017

ஸ்மார்ட் போன் உலகத்தில் ஹாம் வானொலி



இது ஸ்மார்ட் போன் உலகம். அனைத்து ஊடகங்களும் இன்று நம் கைபேசியிலேயே பார்க்கக்கூடிய வடிவில் வந்துவிட்டது. ஹாம் வானொலியும் அந்த வரிசையில் தற்பொழுது இணைந்து கொண்டது. ஹாம் வானொலித் தொடர்பாக சமீப காலமாக பலப்பல புதிய ஆப்கள் வந்த வண்ணமுள்ளது. இந்த வாரம் நாம் பார்க்கவுள்ள ஆப் இன்றுள்ள ஹாம் வானொலிப் பயன்பாட்டாளர்கள் கொண்டாடும் ஒரு ஆப் ஆகும். எக்கோ லிங்க் (EchoLink) எனப்படுகின்ற இந்த கூகுள் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் உலகெங்கும் உள்ள ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். VHF வானொலிப் பெட்டி நம் கையில் இல்லையென்றாலும், அந்த வானொலிப் பெட்டியை இயக்குபவர்களுடன் தொடர்பு கொள்வதுதான் இதன் சிறப்பாகும். இலவசமாக கிடைக்கும் இந்த அப்ளிகேசனை அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியாது. ஹாம் வானொலி உரிமம் உள்ளவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேசனை இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் 151 நாடுகளில் இருந்து உபயோகப்படுத்தி வருகின்றனர். இவர்களது இணையதள முகவரி www.echolink.org என்பதாகும். தமிழகத்தில் உள்ளவர்கள் ஹாம் வானொலி உரிமத்தினைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் காணலாம்.