Thursday, June 30, 2022

வானொலி நாளை

தமிழின் வளர்ந்துவரும் முக்கிய ஊடகமான TN MEDIA 24ல் வானொலி தொடர்பாக மூன்று பாகங்கள் கொண்ட நீண்ட பேட்டியினை நண்பர் நேசகானம்  Praba Karan அவர்கள் எடுத்தார்கள்.  அதில் Public Service Broadcasting, All India Radio, External Service, Shortwaves, FM, Internatinal Radio, DAB, DRM, SDR, Ham Radio, Community Radio, Podcasting, Private Radio உள்ளிட்ட இன்னும் பல தலைப்புகளில் பேசியுள்ளோம். அதன் முதல் பகுதியை இந்த தொடுப்பில் கேட்கலாம்.


https://m.youtube.com/watch?v=_rX0oe5S_GU


#PublicServiceBroadcasting, #AllIndiaRadio, #ExternalService, #Shortwaves, #FM, #InternatinalRadio, #DAB, #DRM, #SDR, #HamRadio, #CommunityRadio, #Podcasting, #PrivateRadio #dxing #dx #sw #mw

Inline image

Inline image


Wednesday, March 02, 2022

மார்ஷல் ரோட்டின் வானொலி Audio visual media in Chennai


Inline image



Chennai Book Fair 2022


வரலாற்றினை இன்று சுவாரஷ்யமாக சொல்லுவது ஒரு கலையாகி வருகிறது. சென்னையைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்தாலும், இந்த மூன்று பாகங்கள் கொண்ட "Madras: A 400 year record of the first city of Madras India" தனித்துவமானது. இதனை திரு.எஸ்.முத்தையா தொகுத்துள்ளார்.


இதில் என்னை கவர்ந்த கட்டுரை, சென்னையில் வானொலி வந்த வரலாற்றினைப் பல முக்கியத் தகவல்களுடனும், ஆதாரத்துடனும் பதிவு செய்துள்ளார் திரு.சி.ஆர்.ராமசாமி. 


நானூக் கட்டடம் இருந்த இடத்தினையும், மார்ஷல் சாலையையும் இன்றும் கடக்கும் போது, இந்த புத்தகத்தினை மறக்க முடியாது. கொஞ்சம் விலை அதிகம், என்றாலும் அத்தனை தகவல்களுக்கும், விலை ஒரு பொருட்டல்ல. பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.


#சென்னைபுத்தககாட்சி #வானொலி #மார்ஷல்ரோடு #அகிலஇந்தியவானொலி #chennaibookfair 

Sunday, February 20, 2022

வானொலியின் கதை

சென்னைப் புத்தகக் காட்சியில் (2022) இந்த வருடம் கண்ணில் பட்ட முதல் வானொலி புத்தகம் ஞா.மாணிக்கவாசகன் எழுதிய "வானொலியின் கதை". புத்தகத்தின் விலை ரூ.40/- மட்டுமே. 


புத்தகத்தின் சிறப்புகளில் ஒன்று "வானொலி" இதழின் முக்கியப்பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ளது. குறிப்பாக 1938-ம் வருஷம் ஜூன் மாதம் 16-ம் தேதி வியாழக்கிழமை சென்னை வானொலி நிலையம் - முதல் நாள் நிகழ்ச்சிகளின் அட்டவணையை அப்படியே வானொலி இதழில் இருந்து நகல் எடுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர். 


சமீபத்தில் தொடங்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பண்பலை வானொலிகளின் முதல் நாள் ஒலிபரப்பு இப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். 1938-ல் இதனை ஆவணப்படுத்தியுள்ளனர். 


சமீபகாலமாக வானொலியை என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதையும் ஒப்பீடு செய்து தெரிந்து கொள்ளலாம். வரலாறு நம் கண் முன்னே அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.


"ரேடியோ ரிப்பேர் செய்வது எப்படி?" என்ற தலைப்புகளில்  நூல்கள் வந்துள்ள அளவுக்கு ரேடியோ பற்றிய நூல்கள் வரவில்லையே என்ற ஆதங்கம் தான் ஞா.மாணிக்கவாசகனை இந்த நூலினை எழுதத் தூண்டியதாம். அதுவே எனக்கும்!


அரங்கில் நூல் கிடைக்கும் இடம் உமா பதிப்பகம். வானொலி ஆர்வலர்களும், இதழியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் அரங்கினை தேடி கண்டுபிடித்துக் கொள்வார்கள்!



Inline image



#வானொலி #வானொலியின்கதை #சென்னைப்புத்தகக்காட்சி #chennaibookfair #radio #book

Tuesday, February 15, 2022

வானொலி தொடர்பான மூன்று புத்தகங்கள்

 

 பல்கலைக் கழக மானியக் குழு வைக்கும் தேசிய தகுதித் தேர்வில் (National Eligibility Test) வானொலி புத்தகங்கள்  தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது குறித்து சமீபத்தில் எழுதியிருந்தேன்.

அதில், வானொலித் தொடர்பான புத்தகங்களை எழுதிய திரு.கோ.செல்வம் (உங்கள் வானொலி), திரு.வெ.நல்லதம்பி (உலகமேலாம் தமிழோசை) மற்றும் தங்க.ஜெய்சக்திவேல் எழுதிய  "உலகவானொலிக
ள்" உள்ளிட்ட புத்தகங்களில் "உலக வானொலிகள்" புத்தகத்தினை தவிர மற்ற இரண்டு புத்தகங்களை பற்றி எந்த விபரமும் இணையத்தில் கிடைக்கவில்லை என்று JNU தமிழ் துறை மாணவர் தமிழ் பாரதி கேட்டிருந்தார். அவருக்காக இந்தப் பதிவு.

 

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு பற்றி இலங்கையில் பிறந்து, பிற்காலத்தில் இந்தியாவில் வசித்த சிவ பாதசுந்தரம் எழுதிய "ஒலிபரப்புக் கலை" புத்தகத்திற்கு பிறகு நீண்ட காலமாக வானொலி நிகழ்ச்சி தயாரிப்புக்காக எந்த ஒரு புத்தகமும் வெளியாகவில்லை.

அந்த குறையைப் போக்க வந்த புத்தகம் தான் இந்த கோ.செல்வம் அவர்கள் எழுதிய "உங்கள் வானொலி". 300 பக்கங்களுக்கும் மேல், விரிவாக எழுதப்பட்ட இந்த புத்தகம் தான் ஒரு காலத்தில் வானொலி இதழியல் பயில்வோருக்கு கையேடாக இருந்தது. இன்று இந்த புத்தகம் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்பது ஒரு வருத்தமான செய்தி.

 


அடுத்து வெ.நல்லதம்பி அவர்கள் எழுதிய "உலகமெலாம் தமிழோசை". இந்த புத்தகம் 2010 வாக்கில் வெளிவந்ததால், ஒரு சில வானொலி ஆர்வலர்களிடம் இருக்க வாய்ப்புண்டு. நமது சர்வதேச வானொலி மாத இதழில் இந்த புத்தகத்தின் மதிப்புரையை எழுதியதால், ஒரு சில நேயர்களும் வாங்கினர். இன்னும் ஒரு சில புத்தக விற்பனையாளர்களிடம் இந்த புத்தகம் கிடைக்க வாய்ப்புள்ளது. சென்னைப் புத்தகக்காட்சியில் துணிந்து தேடலாம்.

இந்த மூன்று புத்தகங்களின் அட்டைப்படத்தினை மாணவர் தமிழ் பாரதிக்காக இங்கே பதிவு செய்கிறேன். "ஒலிபரப்பு கலை" புத்தகத்தினைப் பற்றி விரிவாக மற்றொருப் பதிவில் எழுதுகிறேன்.


Saturday, February 12, 2022

கோடைப் பண்பலையின் உலக வானொலி தின கொண்டாட்டம்

World Radio Day Celebrations-6

Let's celebrate World Radio Day with AIR Kodai FM 100.5. 


கோடைப் பண்பலை (100.5) வானொலியில் நாளை (13-2-2022) ஞாயிறு மதியம் 11.00 மணிக்கு இணைய உள்ளேன். 

வாருங்கள் உலக வானொலி தினத்தினை கோடைப் பண்பலை  வானொலியோடு இணைந்து கொண்டாடுவோம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள கார்த்திகேயன் அவர்களுக்கும், நிலைய இயக்குநருக்கும் நன்றி!



Inline image


#worldradioday #wrd2022 #Jaisakthivel #ஜெய்சக்திவேல் #உலகவானொலிதினம் #வானொலி #கோடைப்பண்பலை

Friday, February 11, 2022

இணைய வானொலிகளின் நோக்கம் மற்றும் வாய்ப்புகள் / Internet Radio: Purpose and Prospects

World Radio Day Celebrations - 4

Internet Radio: Purpose and Prospects


உலக வானொலி தின கொண்டாட்டங்களில் புது தில்லி நிஸ்கார்ட் அமைப்பு நடத்தவுள்ள வெப்பினாரில் "இணைய வானொலிகளின் நோக்கம் மற்றும் வாய்ப்புகள்" தொடர்பான தலைப்பில் பேச உள்ளேன். வாய்ப்பு இருப்பவர்கள் இணைய வழியில்  கலந்துகொள்ளலாம்.


#niscort #worldradioday #wrd2022 #webinar #jaisakthivel #உலகவானொலிதினம் #வானொலி #வெப்பினார் #ஜெய்சக்திவேல்



Inline image


Thursday, February 10, 2022

உலக வானொலி நாள் சிறப்புக் கருத்தரங்கம்

World Radio Day Celebrations: 3


பன்னாட்டு தமிழ் மற்றும் தொடர்பியல் ஆய்வு மையம்

International Research Centre for Thamizh and Communication Studies(IRCTCS)

தமிழ்நாடு, இந்தியா


உலக வானொலி நாள் சிறப்புக் கருத்தரங்கம்


தலைப்பு 

 "ஆம்! வானொலி இன்று முக்கியமானதும் நம்பகமானதும் ஆகும்"


சிறப்பு பேச்சாளர் :

முனைவர்.தங்க.ஜெய்சக்திவேல்

உதவிப் பேராசிரியர், 

இதழியல் மற்றும் தொடர்பாடல் துறை,

சென்னை பல்கலைக்கழகம்.


நாள் - 13.02.2022

காலை - 10.00மணி


கூகுள் மீட் - 

https://meet.google.com/iuf-rttx-mfk


World Radio Day - Yes To Radio, Yes To Trust



Inline image


#உலகவானொலிதினம் #வானொலி #வெப்பினார் #ஜெய்சக்திவேல்

#WorldRadioDay #unesco #IRCTCS #webinar #jaisakthivel