சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Tuesday, April 28, 2009
செயின்ட் மரியா டி கலேரியா ஒலிபரப்பு
தனது காலை மறு ஒலிபரப்பில் அலைவரிசை மாற்றத்தினை செய்து உள்ளது. காலை 7.50 முதல் 8.10 வரை 31 மீட்டர் 9545 கிலோ ஹெர்ட்சில் செயின்ட் மரியா டி கலேரியா ஒலிபரப்பு தளத்தில் இருந்து செய்கிறது.
Monday, April 27, 2009
ஜக்கிய அரபு குடியரசில் இருந்து வானொலிக் குடும்பம் தமிழில்..
இரவு ஒலிபரப்பானது தமிழில் 7.30 முதல் 8.30 வரை 16 மீட்டர் 17810 கி.ஹெர்ட்சில் ஜக்கிய அரபு குடியரசில் உள்ள தாபயா எனும் நகரத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. இரவு 8.30 முதல் 9.30 வரை 31 மீட்டர் 9585 கிலோ ஹெர்ட்சில் ஜெர்மனியில் உள்ள நவுன் நகரத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. தொடர்பு முகவரி: Tamil Section, Family Radio (WYFR), C/oRev. Alexander, Tekkali – 532 201, Andra Pradesh
Sunday, April 26, 2009
ரேடியோ வேவ்ஸ் இன்டர்நேஷனல்: குறுந்தகடு
ஐரோப்பிய கண்டத்தில் இருந்து ஒலிபரப்பாகும் இந்த வானொலியானது தற்பொழுது தனது நேயர்கள் எழுதும் ஆங்கில கடிதங்களுக்கு உடனுக்குடன் பதிலினை அனுப்பி வருகிறது. அத்துடன் நான்கு வண்ண மயமான வண்ண அட்டைகள், குறுந்தகடு மற்றும் அவர்களது வானொலி நிலையத்தின் விபரங்களையும் இணைத்து அனுப்பி வருகின்றனர். விரிவான விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: LURTC, Erglu Iela 7, LV-1012 Riga, Latvia, E-mail: rwaves@free.fr
Saturday, April 25, 2009
ரேடியோ டமாஸ்கஸ் பதில் வழங்கி வருகிறது
பல வானொலிகள் சமீபகாலமாக நேயர்களுக்கு கடிதங்களை அனுப்புவதை நிறுத்திவிட்டது. ஒரு சில சிறிய நாடுகள், தற்பொழுதும் நேயர்களுக்கு உடனுக்குடன் பதில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ரேடியோ டமாஸ்கஸ் தற்பொழுது வண்ண அட்டை, பெனன்ட், ஸ்டிக்கர், சிரியாவின் வரைபடம் ஆகியவற்றை அனுப்பி வருகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: English Section, Radio Damascus, P.O. Box: 4702, Damascus, Syria. E-mail: radiodamasco@yahoo.com. Web: www.rtv.gov.sy (2100-2200 UTC 9330 Khz)
Friday, April 24, 2009
இஸ்லாமிய குடியரசின் ஈரான் வானொலி
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒரு வேறுபட்ட நாள்காட்டியை ஈரான் வானொலி தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த வருடம் - ஈரானில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களை மையப்படுத்தியதாக வெளிவந்துள்ள அந்த நாள்காட்டியானது பெரிய போஸ்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழு வழு தாளில் அச்சிடப்பட்டுள்ள அந்த நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய முகவரி: Mr. M. Safdari, English Section, Voice of the Islamic Republic Iran, 5, Barkhamba Road, New Delhi - 110 001. E-mail: englishradion@irib.ir
Thursday, April 23, 2009
ரேடியோ கனடா இண்டர்நேஷனல்: நாள்காட்டி
ஒவ்வொரு ஆண்டும், பல வானொலிகள் அழகான நாள்காட்டிகளை அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது கனடா வானொலி தனது நேயர்களுக்கு மாதாந்திர நாள்காட்டியை அனுப்பி வருகிறது. உலகெங்கும் உள்ள முக்கிய இடங்களை மையப்படுத்தி மாதத்திற்கு ஒன்றாகப் பதிப்பித்துள்ளனர். தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய முகவரி: Mr. Bill Westenhaver, English Section, Radio Canada International, Box 5207, Chanakyapuri, New Delhi - 110 003. E-mail: info@rcinet.ca
Tuesday, April 21, 2009
ஜப்பான் சிற்றலை வானொலி மன்றம்
சிற்றலை ஒலிபரப்பினை கேட்கும் நேயர்கள் ஜப்பானில் அதிகம். இந்த மன்றமானது ஹெச்.சி.ஜெ.பி. மற்றும் ஏ.டபிள்யூ.ஆர். வானொலிகளில் டி.எக்ஸ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது. அந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு விமர்சனம் எழுதுபவர்களுக்கு 2009-ஆம் வருடத்திற் கான புதிய வண்ண அட்டையை அனுப்பி வருகின்றனர். 2009-ஆம் "எருது' ஆண்டாக ஜப்பானிய அரசு கொண்டாடுகிறது. இதனை மையப்படுத்தியே நேயர்களுக்கு வண்ண அட்டையை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். தொடர்பு முகவரி: Japan Shortwave Club (JSWC), C/o T Ohake, 5-31-6, Tamanawa, Kamakura 247-0071, Japan. (Toshimichi Ohtate)
Saturday, April 18, 2009
எமக்கு வந்தவை
தைவான்: ரேடியோ தைவான் இண்டர்நேஷனல்: புதிய இயக்குனர் திருமதி. Alice Huei-eu Kao அவர்களின் வாழ்த்துக் கடிதம், 2009 வாழ்த்து அட்டை.
இந்தியா: FEBA Radio: புதிய நிகழ்ச்சி நிரல், பாக்கெட் நாள்காட்டிகள்.
ஜெர்மன்: ஜெர்மன் வானொலி: 2009 வாழ்த்து அட்டை, 2009 WRTH, D&C Magazine, Duetschland Magazine, டிராவல் பேக், உலகப்பட ஸ்டிக்கர்.செக் குடியரசு: ரேடியோ பிராஹா: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், காந்தத்திலான வானொலி ஸ்டிக்கர், வண்ண அட்டை.
நெதர்லாந்து: ரேடியோ நெதர்லாந்து: குளிர்கால காலைப் பொழுதில் பூசம் கிராமபுரத்தில் எடுக்கப்பட்ட வண்ண அட்டை (எண்:2)
ஜப்பான்: ரேடியோ ஜப்பான் (இந்தி பிரிவு): புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், இந்தி மாத இதழ், வண்ண அட்டை, இந்தி நிகழ்ச்சி தர அட்டவணை. 2009 வாழ்த்து அட்டை.
இந்தியா: அகில இந்திய வானொலி: வெளிநாடு மற்றும் உள்நாட்டு அலைவரிசை விபரங்களைக் கொண்ட நிகழ்ச்சி நிரல் பட்டியல்கள்.
நியூசிலாந்து: ரேடியோ நியூசிலாந்து இண்டர்நேஷனல்: 60ஆம் ஆண்டு சிறப்பு வண்ண அட்டை, நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்டிக்கர்.
ஈரான்: இஸ்லாமிய குடியரசு வானொலி: 2009 வாழ்த்து அட்டை ஸ்டிக்கர், ஈரானிய இலக்கிய மாத இதழ், பெரிய போஸ்டர் நாள்காட்டி.
இந்தியா: வாய்ஸ் ஆஃப் பிராபஸி: ""மேலான வாழ்வுக்கு வழி'' பாட புத்தகங்கள், கடித உரை.
கொரியா: கொரியன் புராட்காஸ்டிங் சர்வீஸ்: "கே பாப் கனெக்சன்' நிகழ்ச்சியின் ஒரு வருட நிறைவு நினைவு வண்ண அட்டை, நிகழ்ச்சி நிரல் பட்டியல், நிகழ்ச்சி தர அட்டவணை.
வத்திகான்: ரேடியோ வத்திகான்: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், 2009 நாள்காட்டி, ஒலிபரப்பிகளை மையப்படுத்திய வண்ண அட்டை.
சீனா: சைனா ரேடியோ இண்டர்நேசனல் (ஆங்கில பிரிவு): 2009 நாள்காட்டி, குவாஸ்ஸி பொது அறிவுப் போட்டி, வினாத்தாள், வண்ண அட்டை, நிகழ்ச்சி நிரல் பட்டியல்.
கனடா: ரேடியோ கனடா இண்டர்நேசனல்: புத்தக வடிவிலான மாதாந்திர நாள்காட்டி.
வத்திகான்: ரேடியோ வத்திகான் (தமிழ் பிரிவு): வத்திகான் வானொலி தமிழ் மாத இதழ்.
பல்கேரியா: ரேடியோ பல்கேரியா: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல்.

Friday, April 17, 2009
யுரோப்பியன் டி.எக்ஸ் கவுன்சில் கூட்டம்
ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் "யுரோப்பியன் டி.எக்ஸ் கவுன்சில்' ஆண்டு தோறும் கருத்தரங்கினை நடத்தி வருகிறது. இதில் ஐரோப்பிய வானொலி நிலையங்களும் கலந்து கொள்வதே இதன் சிறப்பு. இந்த ஆண்டிற்கான கூட்டமானது வரும் ஆகஸ்ட் 28 முதல் 30 வரை ஐயர்லாந்தில் நடைபெற உள்ளது, கூட்டம் நடைபெறும் இடம்: Grand Carnal Hotel, Grand Canal Street, Balls bridge, Dublin 4, Ireland. Web: www.grandcanalhotel.com
Thursday, April 16, 2009
இண்டர்நேசனல் ரேடியோ கிளப் ஆஃப் அமெரிக்கா
அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் இந்த மன்றமானது மத்திய அலையில் தொலைத் தூரத்தில் இருந்து ஒலிபரப்பும் நாடுகளைக் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக 510 கி.ஹெ. முதல் 1720 கி.ஹெ. வரையிலான அலைவரிசையைக் கேட்கின்றனர். இவர்கள் "டி.எக்ஸ். மானிட்டர்" எனும் இதழை (வருடத்திற்கு 30 இதழ்கள்) வெளியிட்டு வருகின்றனர். இதில் வானொலி நிலையங்கள் தொடர்பான கட்டுரை, வானொலிப் பெட்டிகளின் விமர்சனம், தொழில்நுட்ப கட்டுரைகள், டி.எக்ஸ். டிப்ஸ் எனப் பலப் பயனுள்ளத் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். மேலதிக விபரங்களுக்கு: The International Radio Club of America, P.O.Box: 60241, LaFayetter, LA 70596. Web: www.ircaonline.org
Monday, April 13, 2009
டிஜிட்டல் முறையில் அகில இந்திய வானொலி
உலக நாடுகள் பலவும் தனது ஒலிபரப்பினை டிஜிட்டல் முறையில் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் நமது அகில இந்திய வானொலியும் டிஜிட்டல் ஒலிபரப்பினைத் தொடங்கியுள்ளது. கடந்த 16 ஜனவரி அன்று பிரசார் பாரதியின் முதன்மை செயல் அலுவலர் பி.எஸ்.. லாலி அவர்களால், புது தில்லிக்கு அருகில் உள்ள காம்ப்பூர் ஒலிபரப்பு தளத்தினில் இருந்து இது தொடங்கி வைக்கப்பட்டது. வெளிநாட்டு சேவை மற்றும் விவித பாரதி நிகழ்ச்சிகளை இதில் கேட்கலாம். டிஜிட்டல் ஒலிபரப்பு பற்றிய உங்களின் கருத்துக்களை அகில இந்திய வானொலி வரவேற்கிறது. இந்திய நேரம் இரவு 11.15 முதல் அதிகாலை 4 மணி வரை 9950 கி.ஹெ. (31 மீட்டர்) டி.ஆர்.எம். வானொலிப் பெட்டியில் கேட்கலாம். உங்கள் கடிதம் சென்று சேர வேண்டிய முகவரி: The Spectrum Manager, All India Radio, Room No: 204, Akashvani Bhavan, New Delhi - 110001. E-mail: v_baleja@hotmail.com (Jose Jacob)
Sunday, April 12, 2009
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவ டெலனோ ஒலிபரப்பி
சிற்றலை ஒலிபரப்பிகளை பார்ப்பதே நம்மில் பலருக்கு அறிதாக கிடைக்கும் வாய்ப்பாக உள்ளது. ஆனால் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா டெலனோ ஒலிபரப்பிகளை வீடியோவில் காண ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம், டெலனோ ஒலிபரப்புத் தளத்தினை முழுமையான வகையில் இந்த வீடியோவில் காணலாம். நீங்களும் அதனைக் காண விரும்பினால் சொடுக்கவும்.
Saturday, April 11, 2009
ஹாம் வானொலிக்காக...
மார்ச் மாதம் முதல் சர்வதேச தொலைத் தொடர்பு குழுமமானது 7100 கி.ஹெ. முதல் 7200 கி.ஹெ. வரையிலான அலை எண்களை ஹாம் வானொலிக்காக ஒதுக்க உள்ளது. இதன் காரணமாக அகில இந்திய வானொலியானது 7105 கி.ஹெ. முதல் 7195 கி.ஹெ. வரையில் அதாவது 41 மீட்டரில் ஒலிபரப்பி வருவதை வேறு அலைவரிசைகளுக்கு மாற்ற உள்ளது. (ஜோஸ் ஜேக்கப்)
Friday, April 10, 2009
இத்தாலிய வானொலியில் ஹாம்
இத்தாலிய வானொலியில் இயங்கி வரும் ஹாம் வானொலி குழுமமானது, தற்பொழுது புதிய வண்ண அட்டையைத் தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. II2RAI எனும் Call Sign பெறப்பட்டு 55 வருடங்கள் நிறைவடைவதை ஒட்டி தற்பொழுது, இதன் ஒலிபரப்புகளை கேட்டு நிகழ்ச்சி திறனாய்வு கடிதம் அனுப்புபவர்களுக்கு மட்டும் அனுப்ப உள்ளது. மேலதிக விபரங்களுக்கு Gruppo ARCAL Radioamatori Rai, C/o. Stanza 3602 - C.P. RF - TV RAI Milano, Corso Sempione, 27, 20145 Milano, Italy. E-mail: iq2rd@rai.it. ùNôÓdL www.iq2rd.it
Wednesday, April 08, 2009
தமிழ் சிற்றலை வானொலிகள்
Tuesday, April 07, 2009
சர்வதேச வானொலி ஏப்ரல் 2009
வழக்கமான பகுதிகளுடன் இந்த மாத இதழ் வெளிவந்துவிட்டது. அமெரிக்காவில் புதிதாக அறிமுகமாகியுள்ள "டை-வேவ்" டி.ஆர்.எம் வானொலி பெட்டி பற்றிய விபரங்களுடன், சர்வதேச அளவில் ஒலிபரப்பாகிவரும் தமிழ் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசைப்பட்டியலுடன், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
புத்தக தேவைக்கு 98413 66086. ஆண்டு சந்தா ரூ. 100/-
குறுந்தகவல் ஊடாக வானொலி தகவல்கள்
Monday, April 06, 2009
சர்வதேச வானொலி மார்ச் 2009
மிகுந்த தாமத்தில் மார்ச் இதழ் தற்பொழுது வெளிவந்துவிட்டது. இந்த இதழ் வளமையான இதழ் போன்று இல்லாமல் சற்றே மாறுபட்டு வெளிவந்துள்ளது. சூரியப் புள்ளிகள் (Sunspot) எப்படி சிற்றலை ஒலிபரப்பினை பாதிப்படையச் செய்கிறது என்பதனை விரிவாக விளக்கியுள்ளார் திரு. வி. பாலசுப்ரமனியம். அவரைத் தொடர்பு கொள்ள 99520 67358. புத்தக தேவைக்கு 98413 66086. ஆண்டு சந்தா ரூ. 100/-
இலங்கை வானொலி இளம் அறிவிப்பாளர் ராதிகா கலைமணி -சிறப்பு செவ்வி
84 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட இலங்கை வானொலியின் இளம் அறிவிப்பாளர்களில் ஒருவரும், வெகு வேகமாக தனது இளம் பிராயத்திலேயே அறிவிப்பாளர்களில் முன்னணியில் திகழும் ஒருவருமான செல்வி ராதிகா கலைமணி (இச்செவ்வியை எமக்கு வழங்கிக் கொண்டி ருக்கும்போது இவர் செல்வியாக இருந்தார். தற்போது இவரது செவ்வி நமது இதழில் பிரசுரமாகும் காலத்தில் இவர் திருமதியாகி விட்டார். இவரது திருமணம் கடந்த வருடம் 2008 கடைசி பகுதியில் நடை பெற்றது. இவரது கணவர் பெயர் வின்சன் என்பது குறிப்பிடத்தக்கது.) அவர்கள் நமது இந்திய திருநாட்டிற்கு தனது அத்தை யாரானா மூத்த ஒலிபரப்பாளர் செல்வி. நாகபூஷணி அவர்களுடன் தமிழகத்தின் தலைநகராம் சிங்கார சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இவர்கள் இருவரையும் இலங்கை வானொலியின் நேயர் என்ற வகையில் நேரில் காண ஆவல் அதிகம் இருந்தாலும் தொலைபேசி வழியாக நமது சர்வதேச வானொலி இதழுக்காக பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அறிவிப்பாளர் என்ற பதவிக்கு வந்த பின்னர் இலங்கையில் கூட எந்தவொரு ஊடகங்களுக்கும் செவ்வி அளித்திராத நிலையில் - இந்தியாவில் குறிப்பாக நமது இதழுக்கு மனமுவந்து செவ்வி அளித்தார்.
ராதிகா என்பது இவரது பெயர். தந்தையின் பெயர் கலைமணி. இரு பெயரையும் இணைத்துக் கொண்டு ராதிகா கலைமணி என்ற பெயருடன் வானொலியில் வலம் வருகிறார். இவர் பிறந்தது இலங்கை நாவலப்பெட்டியில், இடையில் சிறிது காலம் ஹம்பளையில் இருந்தார். தற்போது நாவலப்பெட்டி பிரதேசத்தையே வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். தாயார் பெயர் ராஜேஷ்வரி, உடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். ஒருவர் மணிகண்டன். படித்துக் கொண்டிருக்கிறார்; மற்றொருவர் விஷ்ணுவர்த்தன். இவர் கத்தாரில் பணியாற்றுகிறார். அக்கா ஒருவர் திருமணமாகி நாவலப்பெட்டியில் வசித்து வருகிறார். இவரது தந்தையுடன் பிறந்த இரு சகோதரியர். ஒருவர் இந்தியாவில் சென்னையில் குடியிருந்து வருகிறார். மற்றொருவர் இலங்கை வானொலியில் புகழ் பெற்ற ஒலிபரப்பாளராக திகழ்ந்து வரும் செல்வி. நாகபூஷணி கருப்பையா அவர்கள். சித்தப்பா ஒருவர் பெயர் கருணாநிதி. அம்மாவின் குடும்பத்தினர் எவருமில்லை.
இலங்கையில் =ஏ+ லெவல் என்று சொல்லப்படுகின்ற பொது தர உயர்தரம் (அட்வான்ஸ் லெவல்) வரை கல்வி பயின்றவர். இவரது அத்தை நாகபூஷணி கருப்பையா அவர்கள் இலங்கை வானொலியில் பிரபல அறிவிப்பாளராக இருந்த காரணத்தினால் இவருக்கும் தானும் ஒரு ஒலிபரப்பாளராக வரவேண்டும் என்ற ஆவல் ஏற்படவே, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் அறிவிப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தார்.
சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். இலங்கை வானொலி அதன் அறிவிப்பாளர்களை எத்தனை கடுமையான பயிற்சிகளை வைத்து தெரிவு செய்து ஒலிபரப்புத் துறைக்குள் அனுமதிக்கிறார்கள் என்று. அதனால் தானோ என்னவோ இத்தனை வருடங்களாக இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் அதன் தனித்தன்மையை இழக்காமல் இருக்கின்றனரோ!
அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப் பிக்கும் போதே கல்லூரி படிப்பை இறுதி செய்த பின்தான் ஒரு ஆசிரியையாகவும் வரவேண்டுமென்ற ஆவலும் இருந்த காரணத்தினால் ஒரே நேரத்தில் ஆசிரியைப் பணிக்கும் விண்ணப்பித்தார்.
இறைவன் சித்தமென்னவோ இவர் இலங்கை வானொலிக்கு ஒரு நல்ல அறிவிப்பாளினி கிடைக்க வேண்டுமென முடிவு செய்திருந்ததனால் இலங்கை வானொலியிலிருந்து அழைப்பு வரவே - அங்கு சென்றார்.
இவருடன் ஒலிபரப்புத் துறைக்கு வருவதற்காக விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 400 பேர். அவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 20 பேர். இவர்களிலும் இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வில் தெரிவானவர்கள் ஏழு பேர். அந்த ஏழு பேரில் இவரும் ஒருவர். ஏனையவர்களில் இவரைத் தவிர மற்றொரு பெண்மணி ரம்யா என்பவர் வேறு வேலை கிடைத்துவிடவே அங்கு சென்று விட்டார்.
கிருபா என்பவர் இலங்கையிலுள்ள அரசு தமிழ்த் தொலைக்காட்சியான நேத்ராவுக்குச் சென்றுவிட்டார். ஷாகீர் முகம்மது, ஹாரீஸ், ஜனோஸ் மரைக்காயர், முபாரக் முகைதீன் போன்றோர் தென்றல் பண்பலை வானொலியில் அறிவிப்பாளர் களாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். (இலங்கை வானொலியில் ஏ-லெவல் முடித்திருப்பவர்களையும் அறிவிப்பாளர் பணிக்கு தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்கின்றனர்.)
அறிவிப்பாளர் பணிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் வானொலி நிலையத்தின் உள்ளேயே நான்கு மாதங்கள் கடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டில் இவர் அறிவிப்பாளர் பணிக்கு தெரிவாகி 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி முதன் முதலாக தனது குரலை வானொலியில் ஒலிக்கச் செய்தார்.
இலங்கை வானொலியில் ஓர் நல்ல வழக்கம் உண்டு. சிரேஷ்ட அறிவிப்பாளர் களுடன் புதிதாக ஒலிபரப்பாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களை இணைந்து பணியாற்ற விடுவர். மூத்த அறிவிப்பாளர் களும் பரந்த மனப்பான்மையுடன் இவர்களது பெயரை கூறி அறிமுகம் செய்து வைப்பர். இவ்வாறு பயிற்சி அறிவிப்பாள ராக இருந்த சில தினங்களுக்குப் பின் 2008-பிப்ரவரி மாதத்திலிருந்து தனது பெயரை வானொலியில் அறிவித்தார். இவருக்கு மூத்த ஓய்வு பெற்ற அறிவிப்பாளரும் தற்போது பணிப்பாளர் குழு உறுப்பினராக இலங்கை வானொலியில் பணியாற்றி வரும் திரு. மயில்வாகனம் சர்வானந்தா மற்றும் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு - தேசிய சேவையின் பணிப்பாளருமான திரு.கே. ஜெயகிருஷ்ண ராஜா, நாகபூஷணி கருப்பையா ஆகியோர் பயிற்சி அளித்துள் ளனர்.
ஒலிபரப்பாளராக வருவதற்கு முன் இவரது குரல் வானொலியில் ஒலித்திரா ததால் இவர் முதன் முதலாக தென்றல் வானொலியில் அறிவிப்பாளராக ஒலிவாங் கியின் முன் அமர்ந்தபோது ஏற்பட்ட பதட்டத்தினால் குரல் நடுங்கியதாகவும் அதை அவதானித்த பிற கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பதற்றம் நடுக்கம் எல்லாம் ஓர் மூன்று மாதங்களுக்குத்தான். அதன் பின் தேறிவிட்டார். இவருக்குத் தமிழ் தவிர, ஆங்கிலமும் சிங்கள மொழியிலும் நன்கு புலமையுண்டு. மூத்த அறிவிப்பாளர்கள் அனைவரையும் தனக்கு பிடிக்கும் என பொதுவாக இவர் கூறினாலும் தான் நேரில் கண்ட வரையிலும், கேட்ட வரையிலும் மூத்த அறிவிப்பாளர்களாக ராஜேஸ்வரி சண்முகம், ஜெயலட்சுமி சந்திரசேகர், நாகபூஷணி கருப்பையா, பி.எச். அப்துல் ஹமீது, ஜெயகிருஷ்ணா, கலிஸ்டா லோக்கஸ் ஆகியோர் தன்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்கிறார்.
மூத்த ஒலிபரப்பாளர் நாகபூஷணி கருப்பையாவினுடைய வழியையும், உச்சரிப் பையும் தான் பின்பற்றி வருவதாக பெருமைபடக் கூறும் இவர், அவரைப்போல தானும் ஒரு பிரபல அறிவிப்பாளராக வருங்காலங்களில் திகழ வேண்டுமென ஆர்வமுடன் உள்ளார். அதனால் தானோ என்னவோ இவரது குரலை இனங்கண்டு கொள்ளும் நேயர்கள் இவரது குரல் அவரது அத்தை நாகபூஷணியின் குரலைப் போலிருப்பதாகவும் தெரிவிப்பதாக பெருமையாகக் குறிப்பிட்டார். - கன்னியாகுமரி சகாதேவன் விஜயகுமார் (9841377947)

Labels:
இலங்கை வானொலி,
சகாதேவன் விஜயகுமார்,
ராதிகா கலைமணி
Sunday, April 05, 2009
ஐ.பி.சி. தமிழ்
அண்மைக் காலங்களில் சி.ஆர்.ஐ.யின் சக்தி வாய்ந்த ஆங்கில ஒலிபரப்பு ஐ.பி.சி. தமிழை இடையூறு செய்கிறது. அது ஏன்? (மும்பை சுகுமார்)
ஐ.பி.சி. நேயர்களுக்கு தெரியாத தகவல் ஒன்று, இங்கிலாந்தில் இருந்து ஐ.பி.சி. தமிழ் ஒலிபரப்பினாலும், அதன் ஒலிபரப்பிகள் அமைந்துள்ளது என்னவோ ஜெர்மனியில். அதே போன்று சீன வானொலியானது சமீபகாலமாக உலகெங் கும் தனது சிற்றலை வரிசைகளை நிறுவி வருகின்றது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத் தொடர்பு குழுமத்தில் சீன வானொலியானது உறுப்பு நாடாக இல்லை. இதனால் எந்த வித கட்டுப்பாடும் இன்றி, அனைத்து அலைவரிசைகளிலும் மிகுந்த சக்தியுடன் ஒலிபரப்பினைச் செய்து வருகிறது. இதனால் பல வெளிநாட்டு வானொலிகளின் ஒலிபரப்புகளில் தடை ஏற்படுகிறது. மேலும் உயர் சக்தி வாய்ந்த ஒலிபரப்பு கோபுரங்களை திபெத்தில் உள்ள லாசா பகுதியில் அமைத்துள்ளது. இந்த ஒலிபரப்பிகளின் மூலமே தமிழ் உட்பட ஏராளமான தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஒலிபரப்புகளைச் செய்து வருகிறது. வரும் காலங்களில் சி.ஆர்.ஐ-யும் சர்வதேச தொலைத் தொடர்பு குழுமத்தில் உறுப்பினராக சேரும் என நம்பலாம். - Sarvadesa Vaanoli Jan 2009
Subscribe to:
Posts (Atom)