எனது ஐந்தாவது நாள் சீனச் சுற்றுப்பயணம் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. அதற்கான காரணத்தினை நீங்களே இந்தக் கட்டுரையின் முடிவில் அறிவீர்கள். காலையில் எங்களது பல்கலைக்கழக மாணவர்களுக்காக நான் தாயாரிக்கும் ஆவண படத்திற்கான காட்சிகளை சீன வானொலியின் பல்வேறு பகுதிகளில் எடுத்தேன். அதன் பின் நட்புப் பாலம் நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவில் தமிழ் பிரிவின் நிபுனர் தமிழன்பன் அவர்களுடன் கலந்து கொண்டேன். மதிய உணவுக்கு பின் தமிழ் பிரிவின் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். அவர்களுக்காக ஒரு மணி நேரம் "இந்தியாவில் வானொலி: நேற்று, இன்று, நாளை" என்ற தலைப்பினில் ஒரு சிறப்புரை ஆற்றினேன். மதியம் நாங்கள் சென்றது பீகிங் பல்கலைக்கழகம். 1902ல் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்திற்கு என்னுடன் அன்பான இலக்கியாவும், பண்பான மேகலாவும் வந்தனர். பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்தாலும் மறக்க முடியாத இடம் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள செயற்கை ஏரி. நம்பமுடியாத அளவில் அந்த ஏரி ஒரு செயற்கையான ஆற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதில் பணி கட்டியாகி இருந்தது. மேலும் பல்கலைக்கழகத்தினில் நாங்கள் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு சென்றோம். அதன் பின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகத்திற்கு சென்றோம். கல்வியாளராக இந்த இடங்கள் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்தது.
தமிழ்பிரிவின் பயண திட்டத்தில் இந்த இடம் இல்லை, ஆனாலும், எனது வேண்டுதலை ஏற்று தேன்மொழி இதனை கலைமகளோடு இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்து இருந்தார்கள். இதற்காக பல முன் ஏற்பாடுகளை செய்தவர் இலக்கியா. ஆக ஐந்து நாட்கள் பயணம் இனிதே நிறைவடைந்து நாளை ஆறாவது நாள் பயணமாக நாங்கள் செல்ல உள்ள இடம் பீஜிங்கின் மிக முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் இடம்.
உலகில் உள்ள அனைத்து வகையான வானொலிப் பெட்டிகளும் கிடைக்கும் ஒரே இடம். கலைமணி இதற்காக பல ஏற்பாடுகளைச் செய்தார். நாளை என்னுடன் துணையாக வருபவர் மீண்டும் சரஸ்வதி.
– அன்புடன் தங்க.ஜெய்சக்திவேல் |
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Friday, November 30, 2012
செயற்கை ஏரியில் பீகிங் பல்கலைக்கழகம்
போதிசத்துவரும் லாமாக் கோவிலும்
நண்பர்களே எனது நான்காவது நாள் சீனப் பயணமாக நான் இன்று சென்ற இடம் லாமாக் கோவில். காலையில் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்காக எனது விருப்பப் பாடல்களை பதிவு செய்தேன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரஸ்வதி இன்று என்னுடன் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார்கள். அதன் பின் நாங்கள் இன்று மதியம் இந்தியன் கிட்சன் எனப்படும் இந்திய உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் உணவகத்திற்கு சென்றோம். என்னுடன் சரஸ்வதி மற்றும் மோகன் வந்தனர். மிகவும் அருமையான உணவு வகைகளை அங்கு சாப்பிட்டு மகிழ்ந்தோம். அங்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து சீனாவில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் செந்தில் நாதன் எனும் நண்பரை சந்தித்தேன். அவரிடம் நீண்ட நேரம் பேச்சுத்தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது நமது நண்பர் திரு.கலைவாணன் ராதிகா அவர்களை நினைத்துக் கொண்டேன். அந்த இந்தியன் கிட்சன் அமைந்துள்ள இடம் உலகின் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள அதிமுக்கியப் பகுயாகும். இதனால் அங்கு பல்வேறு நாட்டினரைக் காண முடிந்தது. அதன் பின் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அங்குள்ள புத்தர் சிலைகள் பலவற்றின் பெயர்கள் நமது தமிழ் பெயருடன் ஒன்றிணைகிறது. மிக முக்கியமாக சாக்கியமுனி, போதிசத்துவர், சிம்கநாதா மற்றும் பைசாஜ்ஜிய குரு போன்ற பெயர்களைக் கூறாலாம். மாலையில் நாங்கள் சென்றது லோட்டஸ் தெரு. அடேங்கப்பா... என்றது மனது, காரணம் அவ்வளவு வகையான மதுக்கடைகள். அங்கே எந்தக்கடையிலும் நம் ஊரைப் போன்று கூட்டம் இல்லை. பெரிய பெரிய டின்னில்களில் தான் மது வகைகளை விற்கிறார்கள். ஆனால் அங்கு நான் காபி மட்டுமே குடிதேன் என்றால் யாரும் நம்ப மாட்டீகள். எனக்கான காபியை ரூ.180 கொடுத்து சரஸ்வதி வாங்கிக் கொடுத்தார்கள். அதன் பின் மாலையில் நாங்கள் சீன தேசிய அக்ரோபடிக் குழுவின் நடனத்தினைக் காண சென்றோம். முதலில் நான் நினைத்தேன், இது சாதாரண சர்கஸ் நிகழ்ச்சி தானே என்று. அதன் பின் தான் உணர்ந்தேன் எவ்வளவு அருமையான இந்தக் கலையை சாதாரண சர்கஸ் என்று நினைத்துவிட்டேன் என்று. அவ்வளவு அற்புதமாக இருந்தது. அதில் ஆடப்பட்ட Buck Jump, Butterfly dancing, Bamding ball, Color umbrellas, Advancement tumbling மற்றும் Bicycle skill போன்றவற்றை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதைப் பற்றி விரிவாக உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன். என்ன ஒரு ஒற்றுமை, என்ன ஒரு திறமை. காண கண் கோடி வேண்டும். வாழ்நாளில் கண்டிப்பாக இது போன்றதொரு விளையாட்டினை அனைவரும் ஒரு முறையேனும் காண வேண்டும். மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம் - தங்க.ஜெய்சக்திவேல் |
Sunday, November 25, 2012
விமான நிலையத்தில் சோனி ஐ.சி.எப்.7600 ஜி.அர்
Saturday, November 24, 2012
பீஜிங் பயணத்தில் இலங்கை
வானொலி பயணத்தில் பலபுதிய நண்பர்களை சந்திப்பது என்றுமே ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஏற்கனவே திரு.விக்டர் அவர்களை சென்னையில் வைத்து சந்தித்தாலும், இன்று அவரை அவரின் நாட்டில் வைத்து சந்திப்பதில் எனக்குமகிழ்ச்சியைத் தருகிறது.
இன்றைய பயணத்தில் ஒரு சில மிக்கிய இடங்களை இலங்கையில் காண ஏற்பாடு ஆகியிருக்கிறது. அவை எந்த இடங்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். நானும் தான் அதே ஆர்வத்துடன் உள்ளேன். காரணம் இதுவரை அவர் கூறியது ஒன்று தான். ஆம், "உங்களை ஒரு முக்கிய இடத்துக்கு அழைத்து செல்கிறேன், தாயாராக இருங்கள்" என்பது தான் அது. மீண்டும் உங்களை இரவு வலைப்பூ வழியாக சந்திக்கிறேன்.