Wednesday, January 30, 2013

ஜெயங்கொண்டத்தில் இருந்து சீனாவிற்கு

போதிசத்துவரும் லாமாக் கோவிலும்



நண்பர்களே எனது நான்காவது நாள் சீனப் பயணமாக நான் இன்று சென்ற இடம் லாமாக் கோவில். காலையில் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்காக எனது விருப்பப் பாடல்களை பதிவு செய்தேன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரஸ்வதி இன்று என்னுடன் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார்கள். 

அதன் பின் நாங்கள் இன்று மதியம் இந்தியன் கிட்சன் எனப்படும் இந்திய உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் உணவகத்திற்கு சென்றோம். என்னுடன் சரஸ்வதி மற்றும் மோகன் வந்தனர். மிகவும் அருமையான உணவு வகைகளை அங்கு சாப்பிட்டு மகிழ்ந்தோம். 

அங்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து சீனாவில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் செந்தில் நாதன் எனும் நண்பரை சந்தித்தேன். அவரிடம் நீண்ட நேரம் பேச்சுத்தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது நமது நண்பர் திரு.கலைவாணன் ராதிகா அவர்களை நினைத்துக் கொண்டேன். 

அந்த இந்தியன் கிட்சன் அமைந்துள்ள இடம் உலகின் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள அதிமுக்கியப் பகுயாகும். இதனால் அங்கு பல்வேறு நாட்டினரைக் காண முடிந்தது. 

அதன் பின் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

Thursday, January 24, 2013

WRTH பி 12 புதுப்பிப்புகளை இலவசமாக பதிவிறக்கலாம்

WRTH பி 12 (குளிர்கால) ஒலிபரப்பு அட்டவணை மேம்படுத்தல் மற்றும் கோப்பு வெளியாகியுள்ளது. இந்த கோப்பு PDF வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இலவசமாக WRTH இணையதளத்தில் (http://www.wrth.com) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பில் ஏற்கனவே WRTH அச்சு பதிப்பில் வந்த தகவலிகளுடன் புதிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச வானொலிகளின் ஒலிபரப்பு அட்டவணை மாற்றங்களை இது கொண்டுள்ளது.
(சீன் டி கில்பர்ட், சர்வதேச ஆசிரியர் - WRTH (உலக வானொலி தொலைக்காட்சி கையேடு)

Wednesday, January 23, 2013

சீன தமிழ் எண்கள் ஒரு ஒப்பிட்டு



12 மணிக்கு முன்னதாக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. அந்த நினைவிடத்தின் இருபுறமும் முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளது. ஒன்று தேசிய மாநாட்டு கூட்ட அரங்கு, மற்றொன்று தேசிய அருங்காட்சியகம். இதனை அடுத்து நாங்கள் மதிய உணவினை தலைவர் கலைமகள், தேன்மொழி மற்றும் மேகலாவுடன் இணைந்து சாப்பிட்டோம். அந்த உணவினை சாப்பிட்ட இடம் முக்கியமானது. ஆம் அது அரண்மனை அருங்காட்சிய நுழைவாயிளில் உள்ள ஒரு உணவகம். 

அதன் பின் நாங்கள் சென்றது அரண்மனை அருங்காட்சியகம். மிகப்பெரிய அந்த அரச மாளிகையை ஒரு நாளில் நிச்சயம் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அது பெரிது. எனக்காக தேன்மொழி அவர்கள் ஆங்கிலத்தில் வழிகாட்டக் கூடிய ஒரு தானியங்கி வழிகாட்டியை வாங்கித் தந்தார்கள். கலைமகளும் இடையிடையே அந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். அங்கு நாங்கள் பார்த்த முக்கியக் காட்சியகங்களில் ஒன்று கடிகாரங்கள் வைக்கப்பட்டு இருந்த அருங்காட்சியகம். 

கலைநயம் கொண்ட பல்வேறு கடிகாரங்கள் அந்தக் காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த அரண்மனைப் பற்றி மட்டுமே பக்கம் பக்கமாக எழுதத் தகவல்களை அங்கு பார்த்தேன். அவை நிச்சயம் விரிவாகப் பதிவுசெய்யப்படும். இரவு தமிழ் பிரிவினருடன் சீன வானொலிக்கு சொந்தமான உணவகத்தினில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சந்திப்பில் அனைவருக்கும் நினைவுப் பரிசினை எங்களின் மன்றம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பினில் வழங்கினேன். 


அதில் முக்கியமானது, காந்தளகம் பதிப்பகம் வெளியிட்ட உலகப்படம். அதில் உலக நாடுகளுடன் அந்தக் காலத்தில் தமிழர்கள் மேற்கொண்ட வணிகத் தொடர்புகள் மற்றும் உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் இடங்கள் ஆகியவை அந்தப் பெரிய சுவற்றில் மாட்டப்படும் வரைபடத்தினில் உள்ளது. அத்துடன் சின்னப்பா தமிழர் எழுதி தமிழம்மா பதிப்பகம் வெளியிட்ட 'தமிழரின் காலக் கணக்கு'எனும் சிறு நூலினை அன்பளிப்பாக தமிழ் பிரிவின் பணியாளர்களுக்கு வழங்கினேன்.

அந்த நூலின் சிறப்பு யாதெனில், சீன எண்களை தமிழ் எண்களுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை அதில் எழுதப்பட்டுள்ளதாகும். அது மட்டுமல்லாமல் அகில இந்திய வானொலி வர்த்தக சேவையின் இயக்குனர் முனைவர் சேயோன் அவர்களின் தெளிவுரையுடன் வெளிவந்துள்ள திருக்குறள் கையடக்க பதிப்பினையும் வழங்கி மகிழ்ந்தேன். நான்காம் நாள் பயண அனுபவங்கள் அடுத்த கட்டுரையில்... 

Tuesday, January 22, 2013

நோர்வேயில் ‘தமிழ்3′ எனும் புதிய வானொலி

நோர்வேயில் 'தமிழ்3′ எனும் பெயரில் புதிய வானொலி சேவை இன்று முதல் ஆரம்பம்


tamil-3.png
இதன் முதலாவது ஒலிபரப்பு நாளை புதன்கிழமை (16.01.2013) இடம்பெறவுள்ளது. ஓவ்வொரு புதன் கிழமைகளிலும், மாலை 8 மணி முதல் பின்னிரவு 11 மணி வரையான 3 மணி நேரம் தமிழ்3 வானொலியின் ஒலிபரப்புகளை நோர்வேயிலும் உலகெங்குமுள்ள தமிழ் மக்களும் கேட்க முடியும்.
கடந்த புதன் அன்று இடம்பெற்ற பரீட்சார்த்த ஒலிபரப்பினைத் தொடர்ந்து, நாளை முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வழமையான ஒலிபரப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் வாழ்வை எதிரொலிக்கும் வானொலியாக இது தனது ஊடகபப் ணிகளை முன்னெடுக்கும் என என இந்த வானொலி முயற்சி பற்றித் நோர்வே தமிழர் கற்கை மையம்
தெரிவித்துள்ளது.
 
ஓஸ்லோ பகுதிகளில் வசிப்போர் FM107.7 பண்பலை ஊடாகவும், ஒஸ்லோவிற்கு வெளியில் வசிப்பவர்கள் Cable TV இணைப்பின் ஊடாக 95.5 அலைவரிசையிலும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் http://interfm.no/  இணையத்தின் ஊடாகவும், தமிழ்3 இன் ஒலிபரப்பினைக் கேட்டு மகிழலாம்.
 
அறிவித்தல், விளம்பரம், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு: radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சலுடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
Source: http://www.yarl.com

Saturday, January 19, 2013

சீன வானொலி தலைவர் கலைமகள் எழுதியுள்ள பயண நூல்


சீன வானொலியின் தமிழ் அறிவிப்பாளரான ஜியாவோ ஜியாங் (கலைமகள்) எழுதியுள்ள பயண நூலான சீனாவில் இன்ப உலா, சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சீன வானொலி உலகம் முழுவதும் பேசப்படும் சுமார் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறது. அதில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் நிகழ்ச்சிகள் சிற்றலையில் ஒலிபரப்பாகி வருகின்றன. தமிழகத்தில் வானொலி கேட்கும் பழக்கம் மிகுந்திருந்த காலத்தில் தொடங்கி தற்போது வரையிலும் சுமார் 25 ஆயிரம் பேர் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் தொடர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் சீனத் தமிழ் வானொலியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கடிதங்கள் தமிழ் நேயர்களிடம் இருந்து சீனாவுக்கு செல்வதாகவும், தமிழகத்தில் மட்டும் சீன வானொலிக்கு 500 மன்றங்கள் இருப்பதாகவும் கூறுகிறார் சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் தங்க.ஜெய்சக்திவேல்.
இத்தகைய பெருமைகளைக் கொண்ட சீன வானொலியின் தமிழ் ரசிகர்களுக்கு அறிவிப்பாளர் கலைமகள் மிகவும் பரிச்சயமானவர். சீன வானொலியின் சர்வதேச மொழிப் பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் அந்தந்த நாடு, மொழியைப் பேசும் மக்களைப் போன்றே புனைப் பெயர்களைச் சூடிக் கொள்கின்றனர். அவ்வாறு ஜியாவோ ஜியாங் என்ற இயற் பெயரைக் கொண்ட கலைமகளும் அங்கு பணியாற்றி வருகிறார்.
கடந்த 1999-ல் சீன வானொலியின் தமிழ் மொழிப் பிரிவில் சேர்ந்த இவர், தற்போது அந்த பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார். சீன செய்தி ஊடகப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டம் பெற்றுள்ள இவர், சிங்ஹூவா பல்கலைக்கழகத்தில் செய்தி, ஊடக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். எழுத்துத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள கலைமகள், சீனாவில் இன்ப உலா என்ற தலைப்பில் பயண நூல் எழுதியுள்ளார்.
சீனாவுக்கு சுற்றுலா செல்லும் தமிழர்கள் சீனப் பெருஞ்சுவரை மட்டுமே கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால் பெய்ஜிங்கிலும், ஷாங்காயிலும் காண வேண்டிய இடங்கள் பல உள்ளதாகவும், அவற்றைக் குறித்த வரலாற்றுத் தகவல்களையும் தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இந்த நூலை கெüதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 60 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த நூல், புத்தகக் காட்சியின் 283-வது அரங்கில் உள்ள கெüதம் பதிப்பக அரங்கில் கிடைக்கிறது. சீனாவைச் சேர்ந்த ஒருவர் தமிழில் நூல் எழுதியுள்ளது இதுவே முதல் முறை என்றும் சீனாவில் தமிழில் வெளியாகியுள்ள முதல் நூல் இது என்றும் கூறப்படுகிறது.
நன்றி: தினமணி 19 ஜனவரி 2012
Source: http://dinamani.com
Also read The Hindu: http://www.thehindu.com/news/international/chinas-first-tamil-author-looks-to-build-bridges/article4316604.ece?homepage=true

Wednesday, January 16, 2013

தியென்மென் சதுக்கத்திலும் அரண்மனை அருங்காட்சியகத்திலும்



மூன்றாவது நாள் நான் சென்ற இடங்களைக்கூறும் முன் இரண்டாம் நாள் நான் சீனப் பெருஞ்சுவரில் கண்ட அந்த அதிசயக் காட்சி பணி. ஆம், அந்தச் சுவர்களின் ஓரத்தினில் மலைகளின் மீது பணிக்கட்டிகள் உறைந்து காணப்பட்டது. சீனப் பெருஞ்சுவரின் மேலே செல்லச் செல்ல பணிகாற்றின் வேகம் அதிகமானது. மூச்சு விடவும் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதனை விரிவாக பிரிதொருப் பதிவில் உங்களோடு நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். அன்று மதியம் நாங்கள் சென்ற இடம் ஒலிம்பிச் போட்டிகள் நடைபெற்ற பறவைக் கூடு மைதானம். பணியுடன் அதிகமானக் காற்று அடித்ததால் விரிவாகக் காண முடியவில்லை. ஆனாலும் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தினை பார்த்த மகிழ்ச்சி மனதில்.

மூன்றாம் நாள் பயணம் பீஜிங் நகரத்தில் மேற்கொண்டோம். காலையில் சென்ற இடம் ஒரு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் தெரு. சீனாவின் பண்டைய காலத்தில் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட அந்தத் தெருவினை இன்றும் அதேப் போன்று பாதுகாத்து வருகின்றனர். தியென்மென் சதுக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்தத் தெருவில் அன்றைய காலகட்டத்தில் கிடைத்த உணவுகளை இன்றும் அந்த உணவு விடுதிகளில் தாயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றன. அங்கே இருந்த அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அலுவலகத்தில் சீனாவில் வெளியிடப்பட்ட அரியத் தபால் தலைகளைப் பார்வையிட்டேன். இரண்டு அஞ்சல் அட்டைகளை அங்கு வாங்கி இந்தியாவிற்கு அந்தத் தெருவின் நினைவாக அனுப்பினேன். அதன் பின் நாங்கள் சென்றது அதன் அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தியென்மென் சதுக்கம். மிகவும் அருமையாகப் பராமரிக்கப்பட்டுவரும் அந்த இடத்தினில் மாசெதுங் அவர்களின் நினைவிடம் உள்ளது. நாங்கள் மதியம் 12.30க்கு சென்றதால் அதனை மூடிவிட்டார்கள். 

Friday, January 11, 2013

வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு

ஜெஸிந்தா தற்கொலை: வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு

பிரிட்டனில் செவிலியர் ஜெஸிந்தாவின் மரணத்திற்கு காரணமாக அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து பொலிசார் பரிசீலித்து வருகின்றனர்.
பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் இந்திய பெண் ஜெஸிந்தா.
அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தது ஜெஸிந்தா தான் என தெரியவந்தது.
இதனையடுத்து மன உளைச்சலில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது லண்டனில் பெரிய பிரச்னையாக வெடித்தது. ஜெஸிந்தா மரணம் குறித்து லண்டன் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியுமா என கேட்டு, Prosecution துறையிடம் கருத்து கேட்டுள்ளனர். அந்த துறை ஒப்புதல் அளித்தால், ரேடியோ ஜாக்கிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே ஜெஸிந்தா மரணம் தொடர்பாக கிங்எட்வர்டு மருத்துவமனை மற்றும் அவுஸ்திரேலியா ரேடியோ நிறுவனத்துக்கு 60 கேள்விகளை கேட்டு ஜெஸிந்தா குடும்பத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
Source: http://www.newindianews.com / 24 டிசெம்பர் 2012

Thursday, January 10, 2013

சமுதாய வானொலி மூலம் 7 யூனியன் விவசாயிகள் பயன்

நாமக்கல்: ""வேளாண் அறிவியல் நிலையத்தில் அமையவுள்ள சமுதாய வானொலி மூலம், ஏழு யூனியன்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கமணி பேசினர்.நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், சமுதாய வானொலி நிலைய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் தங்கமணி, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள சமுதாய வானொலி நிலைய கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டி பேசியதாவது:நாமக்கல்லில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், சமுதாய வானொலி நிலையம் அமைப்பது மகிழ்ச்சிக்குரியது. இதன் மூலம் கால சூழ்நிலைக்கேற்ப பயிர் செய்வது தேவையான தகவல்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிய முடியும். இதன் மூலம், ஏழு யூனியன்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, விலையில்லா ஆடு குறித்த விவரம் அடங்கிய கேஸட், திட்ட செய்தி மலர் வெளியிடப்பட்டது. மேலும், சிறந்த விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் பிரபாகரன், எம்.எல்.ஏ., பாஸ்கர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக மண்டல திட்ட இயக்குனர் பிரபுகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=613502 / டிசம்பர் 25,2012

Wednesday, January 09, 2013

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய நோர்வே புலிகளுக்கான வானொலி கருவிகளை இறக்குமதி செய்தது – விக்கிலீக்ஸ்

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய நோர்வே அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக வானொலி கருவிகளை இறக்குமதி செய்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி இந்தக் குறிப்ப வெளியிடப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்க சமாதான செயலகத்தின் கோரிக்கைக்கு அமையவே நோர்வே, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வானொலி தொடர்பாடல் சாதனக் கருவிகளை இறக்குமதி செய்துள்ளது.
 
அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஆஸ்லி வில்ஸ் மற்றும் பிரதித் தூதுவர் லுயிஸ் அம்லீம் ஆகியோர் இந்தக் குறிப்பினை அனுப்பி வைத்துள்ளனர்.
 
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ட் பேர்க், தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக வானொலி தொடர்பு சாதனக் கருவிகளை தருவித்து கொடுத்ததாக சிங்கள கடும்போக்குக் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. எனவே, நோர்வேத் தூதுவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமென கோரியிருந்தன.
 
எனினும், இலங்கை சமாதானச் செயலகத்தின் கோரிக்கைக்கு அமைய ராஜதந்திர அடிப்படையில் இந்தப் தொடர்பாடல் சாதனங்களை நோர்வே புலிகளுக்காக தருவித்து கொடுத்ததாக அமெரிக்கத் தூதரகம், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
 
அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையிலான கடித தொடர்புகளை இதற்கான ஆதாரமாக அமெரிக்கத் தூதரகம் காட்டியுள்ளது.
 
நன்றி : விக்கிலீக்ஸ், கொலம்போ ரெலிகிராப் / 28 டிசம்பர் 2012
http://www.yarl.com/forum3/index.php?showtopic=113804 

டிஜிட்டல் ரேடியோ டிரான்ஸ்மிஷன் தொடர்பான AIBD / பிரசார் பாரதி உப பிராந்திய பட்டறை

புது தில்லி அனைத்து இந்திய வானொலி, பணியாளர்கள் பயிற்சி நிறுவனம் (தொழில்நுட்ப) வரும்11 டிசம்பர் 2012, சர்வதேச மட்டத்தில் பயிற்சி டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு பற்றிய பட்டறையை நடத்த உள்ளது. இதில் பூட்டான், இந்தியா, மலேஷியா, மாலத்தீவு, மொசாம்பிக், நேபால், நைஜீரியா மற்றும் தாய்லாந்து உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த ஒலிபரப்பு பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

விரிவான அறிக்கை / படங்கங்களுக்கு சொடுக்கவும்

http://www.aibd.org.my/node/3358

நன்றி: Sudipta கோஸ், கொல்கத்தா 

Wednesday, January 02, 2013

'சீனாவில் இன்ப உலா' - தலைவர் கலைமகள்


'சீனாவில் இன்ப உலா' என்னும் நூல் தயாராகிவிட்டது. இந்நூலை எழுதியர், சீன வானொலி தமிழ்ப்பிரிவின் தலைவர் கலைமகள் (நூலின் அட்டையில் இடம்பெற்றிருப்பவர்). சீனர் ஒருவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்டு, இந்தியாவில் வெளியிடப்படும் முதல் நூல் இது. எதிர்வரும் ஜனவரித் திங்கள் 11-ஆம் நாள் சென்னையில் துவங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு இந்நூல் வைக்கப்படும் (சீதாராமன் செல்வம்)