Wednesday, June 28, 2017

ஹாம் வானொலி ஒரு அறிமுகம் – 1



ஹாம் வானொலி எனப்படும் அமெச்சூர் வானொலிப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை. சொல்வதற்கும் சொற்பமானவர்களே உள்ளனர். ஏன் இது பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும்? இன்றைய இளைஞர்களுக்கு சமூக ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக திகழ்கின்றன. ஹாம் வானொலியும ஒரு விதத்தில் பொழுபோக்கு அம்சமாக இருந்தாலும், இதன் பயன் வேறுபட்டது.

மிக முக்கியமாக ஹாம் வானொலியின் பயன் இயற்கை சீற்றங்களின் போது தான். அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் செயல் இழந்துவிட்ட சூழ்நிலைகளில் இந்த ஹாம் வானொலிகள் தான் பெரிதும் பயன்படுகின்றன. ஆபத்துகால மேலாண்மையின் அனைத்து நாடுகளிலும் இதன் பங்கு பெரியது.

இன்றைய மின் அஞ்சல் மற்றும் முகநூல் காலகட்டத்திற்கு முன் நாம் அனைவரும் வானொலியையே ஹாம் வானொலியையே சார்ந்து இருந்தோம். அதற்கு காரணம் ஒரு பைசா செலவு இல்லாமல் உலகம் முழுவதும் ஹாம் வானொலி ஊடாக பேசிக்கொள்ளலாம். அதுவும் ஆபத்து காலகட்டத்திலும், இயற்கை சீற்றங்களின் போதும் இதன் பயன் அளவிடமுடியாதது.
இன்றும் ஹாம் வானொலியின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனால் இன்றைய ஹாம் வானொலிகள் படங்களையும் இணையத்தினையும் பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. இது பெரும்பான்மையோருக்கு தெரிய வாய்ப்பில்லை. இணையத்தினை ஹாம் வானொலியோடு தொடர்புபடுத்தினால் செலவு எதுவும் இல்லாமல் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதை தொடர்ந்து இந்தத் தொடரில் காணலாம்.

இந்தத் தொடரில் ஹாம் வானொலி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? உங்களுக்கான குழுவை எப்படி இதன் ஊடாக கண்டுபிடிப்பது. ஹாம் வானொலியில் எத்தனை வகைகள் உள்ளன. ஹாம் வானொலி உரிமத்தினை இந்தியாவில் பெற என்ன செய்ய வேண்டும். எப்படி எளிதாக ஹாம் தேர்வில் தேர்ச்சி பெறலாம்? உங்களுக்கான அடையாள குறியீட்டினை (Call Sign) எப்படி எளிதாகத் தேர்வு செய்வது போன்றவற்றை பார்க்கலாம்.

ஹாம் வானொலிகளை பயன்படுத்துவதற்கு முன் அது எந்த வகையான வானொலி அலைவரிசைகளில் கேட்கலாம். அதற்கான வானொலிப் பெட்டிகள் எவை? SSB, FM, HF, VHF மற்றும் UHF அலைரிசைகள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள இந்தத் தொடர் பயன்படும். பெரும்பான்மையோர் இது என்ன புதுக் கதை எனக் குழம்ப அவசியம் இல்லை. இவை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கவுள்ளோம்.

மேலும் உங்களுக்கான வானொலி நிலையத்தினை உங்கள் இல்லத்திலேயே குறைந்த செலவில் எப்படி அமைத்துக்கொள்வது? அந்த வானொலியில் எவற்றையெல்லாம் பேசலாம்? உலகம் முழுவதும் உங்கள் வானொலியை ஒலிக்கச் செய்ய எந்த வகையான ஆண்டனாக்களைப் பயன்படுத்தி ஒலிபரப்பலாம்? போன்றவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

ஹாம் வானொலியைப் பயன்படுத்துவது ஒரு கலை. எப்படி சர்வதேச ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்வது? உள்நாட்டில் உள்ள நிலையங்களை எப்படி அனுகுவது? சர்தேவ போட்டிகளில் எப்படி கலந்துகொள்வது போன்ற விபரங்களையும் காணலாம்.

ஹாம் வானொலி நிலையம் உங்களுடையது எனில் நீ்ங்கள் தான் அதன் இயக்குனரும் ஆவீர்கள். அப்படியான பணியில் உள்ள நீங்கள், உங்களுக்கான ஹாம் வானொலிப் பெட்டியை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களுக்கான நிலையத்தினை எப்படி வடிவமைப்பீர்கள்? அந்த வானொலி நிலையத்தின் துணை கொண்டு எப்படியெல்லாம் இந்த சமுதாயத்திற்கு உதவலாம்? என்பனப் போன்றவற்றையும் இந்தத் தொடர் உங்களுக்கு தெளிவாக்கும்.


மிக முக்கியமாக இந்தத் தொடரை ஐந்து பாகங்களாக பிரித்து வழங்கியுள்ளோம். முதல் பாகத்தில் ஹாம் வானொலியின் அறிமுகம், இரண்டாவதாக ஹாம் வானொலி உரிமத்தினை பெருவதற்கு செய்ய வேண்டியவை, மூன்றாவதாக எப்படி ஹாம் வானொலி துணைகொண்டு உலகம் முழுவதும் தொடர்பு கொள்வது, நான்காவதாக உங்களுடைய நிலையத்தினை எளிதாக அமைக்கும் முறை, ஐந்தாவதாக தொடக்க நிலையினர்க்கான அடிப்படைத் தகவல்களை காணலாம்.
- முனைவர் தங்க.ஜெய்சக்திவேல் (VU3UOM)

Monday, June 26, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 9

'Dina Ethal' the Tamil newspaper carrying the ninth part of "Ham Radio for Youth" article. In this week column we focus on the free Ham Radio catalogs and more!

 'தின இதழ்' நாளிதழில் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் ஒன்பதாவது பகுதியில் இலவச ஹாம் வானொலி விலைப்பட்டியல் புத்தகங்கள் பற்றி என பல்வேறு தகவல்களுடன் வெளிவந்துள்ளது. (நன்றி: வேலாயுதம், சுரேஷ்)


Thursday, June 22, 2017

‘உலக வானொலிகள்’ புத்தகம் தற்பொழுது இணையத்தில்


‘உலக வானொலிகள்’ புத்தகம் தற்பொழுது இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. உங்கள் இல்லத்தில் இருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். நாமக்கல் பகுதியில் வசிப்பவர்கள் 4 -வது தளம்,
ஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ், மோகனூர் ரோடு, நாமக்கல்லில் அமைந்துள்ள ஜீவா புத்தகாலயம் சென்று நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்.

ஜீவா புத்தகாலயம்
4 -வது தளம்,
ஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ்,
மோகனூர் ரோடு,
நாமக்கல் – 637001,
தமிழ்நாடு,
இந்தியா.
+91 – 7667 – 172 – 172
+91- 04286 – 223233
ccare@noolulagam.com
news@noolulagam.com  

Tuesday, June 20, 2017

தொடக்க நிலையினருக்கான ஹாம் வானொலி


ஹாம் வானொலித் தொடர்பாக உலகம் முழுவதும் ஏராளமாக புத்தகங்கள் வெளிவந்தாலும் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகம் தான் ஹாம் வானொலி பற்றி அறிந்து கொள்பவர்களுக்கு பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட புத்தகமாகும். Ham Radio For Beginners எனும் இந்தப் புத்தகம் ஹாம் வானொலிப் பற்றி அடிப்படைத் தகவல்ளைக் கொண்டுள்ளது. மைக்கேல் வேல்ஸ் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை பல அமெரிக்கர்கள் தங்களின் முதல் கட்டத் தேர்வுக்குப் பயன்படுத்துகின்றனர். அமேசான் இணைய தளத்தில் இந்தப் புத்தகத்தின் கிண்டில் பதிப்பு ரூ.199 க்கு கிடைக்கிறது.

Monday, June 19, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 8

"How to build your own antenna with out a paisa?!, and the etymology of HAM word"
For details...Don't missed to read today's 'Dina Ethal' " Ham Radio For Youth" full page article (part 8)
"இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் எட்டாவது பகுதியில் எப்படி உங்களுக்கான ஆண்டனாவை ஒரு பைசா செலவில்லாமல் அமைக்கலாம்?, 'ஹாம்' என்ற வார்த்தை எப்படி பிறந்தது, அறிந்து கொள்ள படியுங்கள் இன்றைய தின இதழை! (நன்றி: வேலாயுதம் சுரேஷ்)
www.dinaethal.com


Sunday, June 18, 2017

ரேடியோ ஆஸ்திரேலியாவில் தமிழ்


Photo Courtesy: Pathamadai Kandasamy

"ரேடியோ ஆஸ்திரேலியா" ஏ.பி.சி என்ற பெயரில் ஒலிரப்பாகி வந்தது. இந்த ஆண்டு தனது சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்திவிட்டது. 1984ல் வி.சக்ரபாணி ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். இவரே இந்திய இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை வாரம் தோறும் ஒலிபரப்பினார். இன்று தமிழும் இல்லை, சிற்றலையும் இல்லை! (Cricket Commentator  & Radio Australia former Tamil Service Announcer  Mr .V.Chakrapany (Photo courtesy:Radio Australia Programme guide, 1984) Via Pathamadai Kandasamy.)

Wednesday, June 14, 2017

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: சீன வானொலி போட்டி முடிவு

அன்பு நண்பர்களே. இத்துடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்னும் போட்டி நிறைவு பெறுகிறது. முகநூல் மற்றும் மின்னஞ்சலின் மூலம் இதில் ஆக்கமுடன் கலந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.
முதலில், இப்போட்டியில் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கான பதில்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்:
1. அ ஆ
2. அ ஆ
3. அ ஆ இ ஈ உ
4. அ ஆ இ
5. அ ஆ இ ஈ உ ஊ
நண்பர்கள் வழங்கிய சரியான பதில்களுக்கிணங்க, மொத்தம் 25 நண்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள்:
முதல் பரிசு ——
S.Selvam
ஜோதிலெட்சுமி 
பொருநை பாலு நெல்லை 
S.Shanmuga sundaram

இரண்டாவது பரிசு ——
Dr.T.Jaisakthivel
Prince Robert Singh
SENTHILVELU
A VELU
G.BAARATHI MOHAN
SUDARSHAN.S
Rajalakshmi
C.MALLIGA DEVI

மூன்றாவது பரிசு ——
Rakesh Rao
Satheeshvaran Parakiramasingam
Irfan Hassaly
S.v. Suventhan
Venthan Sana
Satchithananthan Palanisamy 
Manimaran Ponnampalam 
Nows Rusthy Abds 
Viluppuram Pandiyarajan 
Amma Amma
Kanistan Rameshkumar
YathuganeshInline image

Kaneshalingam 
Mm Rifas

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், போட்டியில் ஆர்வமுடன் பங்கெடுத்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
எதிர்காலத்தில், சீன வானொலி தமிழ் பிரிவு உங்களுக்காக மேலதிக போட்டிகளை நடத்தும் நண்பர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதை வரவேற்கின்றோம். நன்றி!


Sent from Yahoo Mail for iPhone

Tuesday, June 13, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 7

'தின இதழில்'(22-5-2017) - " இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் ஏழாவது பகுதியில் ஹாம் வானொலி தொடர்பான ஏர் டிராபிக் ரேடியோ   புத்தகம், ஹாம் வானொலிக்கான ஏர் டிராபிக் ஆன்றாய்ட் மற்றும் பல புதிய தகவல்களுடன் இங்கு படிக்கலாம்.



உங்கள் கருத்துக்களை

தின இதழ்
எண். 1, லெட்சுமி நகர்
முதல் மெயின் ரோடு
ஶ்ரீதேவி கார்டன்
வளசரவாக்கம்
சென்னை-60087

dinaethal@gmail.com


எனும் முகவரிக்கு எழுதலாம்.


வெரித்தாஸ் வானொலியின் பாரபட்சம்!

சிற்றலை வானொலி நேயர்கள் மத்தியில் ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வெரித்தாஸ் வானொலி படிப்படியாக தனது சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்தம் செய்யவுள்ளதாக கூறியது. ஆனால் தற்பொழுது அடுத்த ஆறு மாதத்திற்கான சிற்றலை அலைவரிசை பட்டியலை ‘உலக வானொலி தொலைக்காட்சி கையேடு’ வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த ஆறு மாதங்களுக்கு சிற்றலையில் வெரித்தாஸ் வானொலி ஒலிபரப்ப உள்ளது உறுதியாகியுள்ளது. இந்திய மொழிகளில் ஹிந்தி, வாங்காளம் மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் சிற்றலை ஒலிபரப்புள்ளது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் கைப்பேசி ஆண்டிராய்ட் சேவையில் செய்கிறது. இது பாராபட்சம் இன்றி வேறேன்ன?!

Source: WRTH.com

Monday, June 12, 2017

அமெரிக்க ரேடியோ ரிலே லீக்



ஹாம் வானொலிக்காக ஏராளமான இணைய தளங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில பக்கங்கள் தான் வானொலி நேயர்களுக்கு பயனுள்ள தளங்களாக இருந்துள்ளன.  அந்த வரிசையில் நாம் இந்த வாரம் பார்க்கவுள்ள இணையதளம் உலக அளவில் புகழ்பெற்ற ஹாம் வானொலிக்கான இணைய தளமாகும். அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டுவரும் இந்த இணைய தளமானது பல்வேறு பயனுள்ளத் தகவல்களைக் கொண்டுள்ளது. 1914 ல் ஹிரம் பெர்சி மேக்சிம் அவர்களால் தொடங்கப்பட்ட அமெரிக்க ரேடியோ ரிலே லீஃகின் இணைய தளம் தான் அது. இந்த www.arrl.org இணையதளமானது புதியவர்களுக்கும் பல பயனுள்ளத் தகவல்களைக் கொண்டுள்ளது.

Monday, June 05, 2017

இளைஞர்களுக்கான ஹாம் வானொலி - 6

5 ஜூன் 2017 இதழில் வெளியான..."இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" தொடரின் ஆறாவது பகுதியை இங்கு படிக்கலாம் (நன்றி: வேலாயுதம் சுரேஷ்)




ஸ்மார்ட் போன் உலகத்தில் ஹாம் வானொலி



இது ஸ்மார்ட் போன் உலகம். அனைத்து ஊடகங்களும் இன்று நம் கைபேசியிலேயே பார்க்கக்கூடிய வடிவில் வந்துவிட்டது. ஹாம் வானொலியும் அந்த வரிசையில் தற்பொழுது இணைந்து கொண்டது. ஹாம் வானொலித் தொடர்பாக சமீப காலமாக பலப்பல புதிய ஆப்கள் வந்த வண்ணமுள்ளது. இந்த வாரம் நாம் பார்க்கவுள்ள ஆப் இன்றுள்ள ஹாம் வானொலிப் பயன்பாட்டாளர்கள் கொண்டாடும் ஒரு ஆப் ஆகும். எக்கோ லிங்க் (EchoLink) எனப்படுகின்ற இந்த கூகுள் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் உலகெங்கும் உள்ள ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். VHF வானொலிப் பெட்டி நம் கையில் இல்லையென்றாலும், அந்த வானொலிப் பெட்டியை இயக்குபவர்களுடன் தொடர்பு கொள்வதுதான் இதன் சிறப்பாகும். இலவசமாக கிடைக்கும் இந்த அப்ளிகேசனை அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியாது. ஹாம் வானொலி உரிமம் உள்ளவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேசனை இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் 151 நாடுகளில் இருந்து உபயோகப்படுத்தி வருகின்றனர். இவர்களது இணையதள முகவரி www.echolink.org என்பதாகும். தமிழகத்தில் உள்ளவர்கள் ஹாம் வானொலி உரிமத்தினைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் காணலாம்.