சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Saturday, December 25, 2021
வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் வானொலிகள்
Wednesday, December 22, 2021
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் 2022 நாள்காட்டி
A Free Press Matters: VOA@80
சர்வதேச வானொலி நேயர்களுக்கு டிசம்பர் மாதம் எப்பொழுதுமே கொண்டாட்டமான மாதம். நேயர்களும் அனைத்து வானொலிகளுக்கும் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்புவர். அதே போல அந்த வானொலி நிலையங்களும் தனது நேயர்களுக்கு வாழ்த்து மடல்கள், நாள்காட்டிகள், டைரிகள், Year End Gifts என பல நினைவுப் பரிசுகளை அனுப்பிவைக்கும்.
சிற்றலை வானொலிகளின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்த பிறகு இந்த மாதிரியான நினைவுப் பரிசுகளும் குறைந்துவிட்டன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, இன்று பல்கலைக்கழக முகவரிக்கு அமெரிக்காவின் பொதுத் துறை வானொலியான "வாய்ஸ் அஃப் அமெரிக்கா" வானொலியின் 2022ஆம் வருடத்திற்கான மிக அழகான மாதாந்திர நாள்காட்டியை அனுப்பியிருந்தனர்.
இந்த நாள்காட்டியின் சிறப்புகளில் ஒன்று வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஒலிபரப்பி வரும் 47 மொழிகளின் ஒலிபரப்பாளர்களை ஆவணப்படுத்தியது. பழைய மொழிப்பிரிவின் புகைப்படங்களையும் இதில் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டு VOA தனது 80ஆவது ஆண்டினைக் கொண்டாடுகிறது. 1 பிப்ரவரி 1942ல் இந்த வானொலி தொடங்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தமிழ் மொழி ஒலிபரப்பினையும் இது செய்தது. நிலவில் மனிதன் இறங்கியதை வாஷிங்டன்னில் இருந்து நேரலையில் அன்று அறிவிப்பு செய்த திரு.நல்லதம்பி அவர்களை மறக்கவும் முடியுமா?
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவைத் தொடர்பு கொள்ள
To request a VOA calendar or information about VOA programming or frequencies: audiencemail [ at ] voanews.com
Voice of America
Public Relations
330 Independence Ave., S.W.
Washington, D.C. 20237
Phone: 1 (202) 203-4959
E-mail: askvoa@voanews.com
Web: www.voanews.com, www.insidevoa.com
FB: voiceofamerica, insidevoa
Twitter: @voanews, @insidevoa
Insta: voanews, insidevoa
Monday, December 20, 2021
உலக வானொலி தொலைக்காட்சி கையேடு - WRTH 2022
Sunday, December 19, 2021
கோவை அகில இந்திய வானொலி நிலையத்தின் திரு.தாமரைசந்திரன் காலமானார்
A Special cover on "Voice of Liberation"
Monday, November 08, 2021
கொழும்பு சர்வதேச வானொலி மீண்டும் தொடக்கம்
13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்திய நேயர்களுக்காக ஒலிபரப்பை மீண்டும் தொடங்கும் கொழும்பு வானொலி.
செய்தியை எழுதிய எஸ்.முஹம்மது ராஃபி மற்றும் வெளியிட்ட இந்து தமிழ் திசைக்கும் நன்றி.
http://dhunt.in/o6OoY?s=a&uu=0xedc74f81fc2a2254&ss=wsp
Source : "தி இந்து தமிழ்" via Dailyhunt
#இலங்கை #வானொலி #இந்துதமிழ்திசை #radio #slbc #dx
Sunday, August 15, 2021
காங்கிரஸ் ரேடியோ / a book on congress radio
https://www.thehindu.com/society/a-buzz-in-the-air-an-excerpt-from-congress-radio-usha-mehta-and-the-underground-radio-station-of-1942/article35891030.ece
Taliban change the Radio Afghanistan name to Voice of Sharia
Taliban take over radio station after capturing Kandahar
https://timesofindia.indiatimes.com/world/south-asia/taliban-take-over-radio-station-after-capturing-kandahar/articleshow/85321788.cms
Saturday, May 22, 2021
இணைய வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப யாரிடம் அனுமதி பெற வேண்டும்?
பிபிஎல் & ஐபிஆர்எஸ் இசை உரிமம் என்றால் என்ன?
பிபிஎல் (PPL) - ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமென்ஸ் லிமிடெட் மற்றும் ஐபிஆர்எஸ் (IPRS) - இந்தியன் பெர்ஃபாமிங் ரைட் சொசைட்டீஸ் லிமிடெட் இந்தியாவில் வெளியாகும் திரைப்படம், தனி ஆல்பம் போன்ற இசைகளுக்கான உரிமத்தை வழங்கும் இரண்டு முன்னணி நிறுவனங்கள் ஆகும்.
இசை உரிமம் என்பது கேசட், கிராமபோன் பதிவுகள், வானொலி, டிவி, குறுந்தகடுகள்
அல்லது ஆடியோ-விஷுவல் வடிவத்தில் முன்பே பதிவுசெய்யப்பட்ட இசை / பாடல்கள் நேரடி பாடல்கள்
பதிப்புரிமைச் சட்டம், 1957 இன் படி எந்தவொரு வணிக நோக்கங்களுக்காகவும் பொது இடங்களில்
இசையை வாசிப்பது, அல்லது ஒலி, ஒளிபரப்புவது கூடாது. அப்படி ஒலிபரப்ப வேண்டுமானால் இந்த
அமைப்புகளிடம் இருந்து உரிமத்தை முன்கூட்டியே பெறுவது கட்டாயமாகும். இது பற்றி மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.