Tuesday, June 13, 2023

முதல் பெண் உளவு ரேடியோ ஆபரேட்டர்




சமீபத்தில் வானொலித் தொடர்பாக ஒரு புத்தகத்தினை படிக்க வாய்ப்பு கிடைத்தது. வெப் சீரீஸ்க்கு தகுந்த உண்மைக் கதை இது. புத்தகத்தின் பெயர் Spy Princes: The life of the Noor Inayat Khan. மிகவும் சுவாரஷ்யமான ஆங்கிலப் புத்தகம் இது. எழுதியவர் Shrabani Basu. 230 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தினை Roli Books ரூ.495க்கு வெளியிட்டுள்ளது.

உளவு இளவரசி என்ற இந்தப் புத்தகம் இரண்டாம் உலகப் போரின்போது ரகசிய முகவராக மாறிய திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கானின் உண்மைக் கதைதான் இது. இவர் 1943இல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சுக்குள் ஊடுருவிய முதல் பெண் ரேடியோ ஆபரேட்டராகப் பணியாற்றினார். இவர் பயன்படுத்திய வானொலிப் பெட்டி மற்றும் ஏரியல்கள் இன்றும் இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

'மேடலின்' என்ற குறியீட்டு பெயரில் நூர் இராணுவத்தில் பணிபுரிந்தார். இவர் பணியாற்றிய படை தோல்வியை நோக்கி தள்ளப்பட்டது. இவர்தான் லண்டனுடன் வானொலி ஊடாக செய்தியை அனுப்பும் கடைசி இணைப்பாக இருந்தார். உயிர்  ஆபத்துகள் இருந்தபோதிலும் தனது பணியை கைவிட மறுத்து, போர் களத்தில் இருந்து ரகசிய வானொலி  ஒலிபரபினைச் செய்து செயல்பட்டார்.

இருப்பினும், இவர் ஜெர்மனியர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அந்த நாட்டின்  இராணுவத்தால் கைது செய்யப்பட்டு டச்சாவ் வதை முகாமில் சுடப்பட்டு 30 வயதில் இறந்தார்.

இவரது அசாதாரண துணிச்சலுக்காக பிரிட்டன் இவருக்கு மரணத்திற்குப் பின் ஜார்ஜ் கிராஸ் விருதை வழங்கியது, மேலும் பிரான்ஸ் இவருக்கு குரோயிக்ஸ் டி குரே விருது வழங்கியது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் பெண் உளவு ரேடியோ ஆபரேட்டராக இருந்துள்ளார் என்பது ஒரு வகையில் நமக்கெல்லாம் பெருமையே. நூர் இனாயத் கான் புகழ் ஓங்கட்டும்.

புத்தகம் வாங்குவதற்கான சுட்டி முதல் கமெண்டில்.
Limited-time deal: Spy Princess: The Life of Noor Inayat Khan https://amzn.eu/d/aPaop03

#வானொலி #சர்வதேசவானொலி #ரேடியோ #நூர்இனாயத்கான் #SpyPrinces  #NoorInayatKhan  #புத்தகம் #ShrabaniBasu #RoliBooks

Sunday, March 19, 2023

Sony ICF SW1ம் முஹம்மது ராஃபியும்

 நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை, நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில், நமக்கு அனுப்பி வைக்கும் அன்புள்ளங்களை என்னவென்று சொல்வது. 

சென்னைப் புதுக்கல்லூரியில் மாணவராக அறிமுகமாகி, இன்று தமிழின் முக்கிய நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றிவரும் அன்பு நண்பர் முஹம்மது ராஃபி (Rameswaram Rafi) சமீபத்தில் ஒரு கைப்பேசி அழைப்பில், "உங்களுக்கு ஒரு பரிசுப்பொதி வரும், வந்ததும் தெரியப்படுத்துங்கள்" எனப் பீடிகைப் போட்டார்.

அடுத்த நாளே வந்துவிட்டது. நான் சற்றும் எதிர்பாராதது அந்தப் பொதியில் இருந்தது. 1990களில் ரேடியோ ஜப்பான் அனுப்பிய அலைவரிசை விபரப்புத்தகத்தின் அட்டையில் மட்டுமேப் பார்த்த வானொலிப் பெட்டி அது.

நம் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அந்த சோனி வானொலிப் பெடிக்குத் தான் எவ்வளவு பாதுகாப்பு, மட்டுமல்ல இணைப்புகள்.

உலகை நம் உள்ளங்கைக்குள் அன்றே கொண்டுவந்தது இந்த சோனி வானொலிப் பெட்டி. கூடவே ஒரு அருமையான ஆக்டிவ் ஆண்டனாவையும் கொடுத்துள்ளனர். அவ்வளவு துள்ளியமாக தொலைத்தூர ஒலிபரப்புகள் கிடைக்கிறது. 

உடனே ராஃபியை அழைத்து, "எங்கே பிடித்தீர்கள்? விலை எவ்வளவு?" எனக் கேட்டேன். "நீங்களேக் கூறுங்கள், எவ்வளவு இருக்கும்?" என்றார். "இன்று சோனி நிறுவனம் இந்த வானொலிப் பெட்டியின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. எனவே, இதற்கு மதிப்பீடு இல்லை" என்றேன். 

ஆம், இது போன்ற வானொலிப் பெட்டிகள், நல்ல நிலையில் கிடைப்பதே அரிது. அப்படியிருக்க, எப்படி விலையை நிர்ணயம் செய்ய!

சற்றும் எதிர்பாராத நேரத்தில் வரும் அன்புப் பரிசுக்குத்தான் விலையேது?! அதுவும் நம் மாணவர்கள் கொடுக்கும் பரிசுக்கு நிச்சயம் விலை நிர்ணயம் செய்துவிட முடியுமா என்ன!

நன்றி ராஃபி! வானொலி மீது தீராப்பற்றுதல் கொண்டமைக்கும், அது தொடர்பான தொடர் செய்திக் கட்டுரைகளுக்கும்.

For more details about this radio, 

https://www.cryptomuseum.com/spy/sony/icfsw1/index.htm#:~:text=ICF%2DSW1%20is%20a%20miniature,the%20reception%20of%20Numbers%20Stations.


Monday, November 28, 2022

Broadcasting related definitive stamp from India Post!



இரண்டு வகையான அஞ்சல் தலைகளை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டு வருகிறது. அவை Commemarative Stamp and Definitive Stamp. 1988ல் தொலைக்காட்சி ஒளிபரப்பினை மையப்படுத்தி இந்த definitive அஞ்சல் தலையை 40 பைசாவுக்கு வெளியிட்டது. தற்பொழுது மீடியா தொடர்பான அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மத்தியில் மிகவும் விரும்பி வாங்கும் அஞ்சல் தலையாக இது உள்ளது. 40 பைசா அஞ்சல் தலை இன்று ரூ.10.00 க்கு விற்கப்படுகிறது. அடேங்கப்பா! எத்தனை மடங்கு அதிகமாகிவிட்டது!!

There are two types of postage stamps issued by the Indian Postal Department. They are Commemorative Stamp and Definitive Stamp. In 1988, the definitive postage stamp was issued for 40 paise, focusing on television broadcasts. It is currently the most sought-after stamp among media-related stamp collectors. A 40 paisa stamp is selling for Rs.10.00 today. Atengappa! How many times more!!
Credit: @hazeemmohammed

#indiapost #broadcasting #stamp #philatelic #philatelist #philately #tv #dish #transmitter

Saturday, November 26, 2022

First Special Cover for Community Radio / சமுதாய வானொலிக்காக, முதல் சிறப்பு அஞ்சல் உறை







India Post released a lot of special covers on Radio, but for the community radio, this is the first special cover dedicated to  Community Radio, which is run by an NGO called Snehapoorvam Educational Trust from Thrissur. 'My Radio 90 FM' starts broadcast on Nov. 1, 2022 from Poothole, Kerala.

இந்திய அஞ்சல் துறை  வானொலி தொடர்பாக  நிறைய சிறப்பு அஞ்சல் உறைகளை  வெளியிட்டுள்ளது, ஆனால் சமுதாய  வானொலிக்காக, முதல் சிறப்பு அஞ்சல் உறையை MY RADIO 90 FMக்காக வெளியிட்டது. இது திருச்சூரில் இருந்து சிநேகபூர்வம் கல்வி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. 'மை ரேடியோ 90 எஃப்எம்' நவம்பர் 1, 2022 அன்று கேரளாவின் பூத்தோலில் இருந்து ஒலிபரப்பைத் தொடங்கியது.

(Credits to  @writingfromthewonderland )

Friday, November 04, 2022

மோர்ஸ் கீ ஸ்டாம்ப் | Stamp on Morse Key


கடந்த இரண்டு மாதங்களாக, இந்த அஞ்சல் தலை ஆஸ்திரேலியாவில் வெளியானதில் இருந்து வாங்க வேண்டும் என இருந்தேன். ஆனால், ஒரு அஞ்சல் தலையை வாங்க நாம் ரூ.1200 செலவு செய்ய வேண்டியதாக இருந்தது. அஞ்சல் தலையின் விலை என்னவோ ரூ.60 தான், ஆனால் அஞ்சல் செலவும், கஸ்டம்ஸ் டூட்டியும் விலையை எகிரச் செய்கிறது. எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டு இருந்தேன். 
ஆனால் ஆச்சர்யம் பாருங்கள் போஸ்ட்கிராசிங் ஊடாக ஆஸ்திரேலியாவில் இருந்து சகோதரி  கேத்தரின், நம் ஆர்வத்தினை அறிந்து, நாம் கேட்காமலேயே வாங்கி அனுப்பிவிட்டார்.

மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு தேவையான ஒன்று, சரியான நேரத்தில் உங்களை வந்தடைந்தே தீரும். தேவையற்றது, யார் தடுத்தாலும்  விலகியேத் தீரும். யாரும், எதையும் நமக்கு கிடைக்க வேண்டிய ஒன்றைத்  தடுக்கவியலாது. கிடைக்க வேண்டிய நேரத்தில், கிடைத்தேத் தீரும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். 

A few postcards will surprise us. That kind of thing is this Maximum card from Australia. Thank you Katherine for this lovely Morse Key stamp and postcard.