Showing posts with label ஜெய்சக்திவேல். Show all posts
Showing posts with label ஜெய்சக்திவேல். Show all posts

Monday, June 29, 2026

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் எழுதிய "எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம்"


 கானல் அமீரகம்,

தமிழ் அலை இணைந்து நடத்திய

சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின்

"எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம்"

நூல் வெளியீட்டு விழாவில் எமது உரை 28.00வது நிமிடத்தில்...தொடுப்பு



நூல் அறிமுகம்:

தமிழ் வானொலிகள் வாயிலாக உலகமெங்கும் அறியப்ப யப்பட்ட சாத்தான்குளம் அப்துல்ஜப்பார் அவர்களின் நினைவலைகள் எனக்கு ம் இருக்கிறது ஒரு சரித்திரம் என்ற தலைப்பில் நூலாகி இருக்கின்றன. அவர் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் அவரது மகன் ஆசிப் மீரான். கிரிக்கெட் வர்ணனைகளின் அழகுக்காக என்றென்றும் அறியப்படுபவர் அப்துல் ஜப்பார். தான் எப்படி கிரிக்கெட் வர்ணனையாளராக ஆனேன் என அவர் எழுதி இருப்பதும், முதன் முதலாக வர்ணித்த ஒரு ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்திய தொடரும் மிக சுவாரசியம். ஆரம்பத்தில் தன் தந்தையைப் பற்றியும் தன் மகன், மகள் பற்றியும் அவர் எழுதிக்கொண்டே செல்வது இந்நூலை கீழே வைக்கவிடாமல் படிக்கச் செய்கிறது. 1950, ஜூன் 26. கொழும்பு வானொலியில் ஜப்பாரின் ஒலிபரப்பு வாழ்க்கை தொடங்கும் தினத்தில் நடந்தவற்றை எழுதி, பன்னிரெண்டில் தொடங்கி 82 வயது வரை தொடர்ந்தது என எழுதுகிறார். இக்காலகட்டத்தில் தனி மனிதர் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தாம் இவை என்றாலும் இந்த அனுபவங்கள் நம் பட்டறிவை விசாலமாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

வெளியீடு: கானல் அமீரகம், தமிழ் அலை, 044-24340200 விலை . 250

நன்றி: அந்திமழை | ஜூலை 2026

Friday, April 10, 2026

கலசலிங்கம் சமுதாய வானொலியில் அறிவிப்பாளர் பயிற்சி பட்டறை


கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் கலசலிங்கம் வானொலி நிலையம் சார்பில், காட்சி சார் அறிவியல் துறைத் தலைவர் முனைவர். கற்பக சுந்தரம் ஏற்பாட்டில் ஏப்ரல் 11, 2026 அன்று வானொலி அறிப்பாளர் குறித்த ஒரு நாள்  பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பில், வானொலித் துறையின் நுணுக்கங்கள் மற்றும் நேரடி அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கினோம்.  தனித்துவமான குரலால் வானொலித் துறையில் முத்திரை பதிக்க நினைப்பவர்களுக்கு, ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது.





















Friday, January 30, 2026

வானொலி ஆய்வுச் செம்மல்

மகிழ்ச்சியான செய்தி!

மதுரையில் நடைபெற்ற நேசகானம் வானொலியின் (Nesaganam Radio) 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், இணைய வானொலி இயக்குநர்கள் சங்கம் (Online Radio Directors Association) எமக்கு "வானொலி ஆய்வுச் செம்மல்" (Radio Research Excellence Award) விருதினை வழங்கி கௌரவித்தது.

வானொலி இதழியல், ஊடக ஆய்வுகளில் (Radio Journalism and Media Studies) யாம் ஆற்றிவரும் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்தை மிகுந்த நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த உயரிய விருதிற்கு எம்மைத் தேர்ந்தெடுத்த சங்கத்தின் நிர்வாகிகளான திரு.கே.பிரபாகரன், முனைவர்.எம்.முஹம்மது அஸ்கர், திரு.இராதகிருஷ்ணன் மற்றும் என்னை என்றும் ஊக்கப்படுத்தும் சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல், தொடர்பியல்  துறைக்கும், என் அன்பிற்குரிய மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வானொலித் துறையின் AI  எதிர்காலம் மற்றும் அதன் ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட இந்த விருது எமக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.

அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!

#





 

Tuesday, December 16, 2025

ஆகாஷ்வாணி 90 - சிறப்பு நேர்காணல்


 ஆகாஷ்வாணி 90 ஆண்டுகளை கொண்டாட உள்ள இந்த சமயத்தில், திருமதி. ராஜ ராஜேஸ்வரி தயாரிப்பில், யாம் பங்கேற்ற  சிறப்பு வானொலி நேர்காணல் நிகழ்ச்சி இன்று 16-12-2025 (பாகம் 1) மற்றும் வரும்  28-12-2025 (பாகம் 2) ஆகிய தேதிகளில் ஒலிபரப்பாகிறது; இந்த நிகழ்ச்சியை சென்னை முதன்மை அலைவரிசையில் காலை 08:45 மணிக்கும், FM ரெயின்போ அலைவரிசையில் மதியம் 02:15 மணிக்கும், மற்றும் விவித் பாரதி தமிழ் அலைவரிசையில் இரவு 07:00 மணிக்கும் கேட்டு மகிழலாம். News On Air செயலி ஊடாகவும் கேட்கலாம். விரையில் யூடியூப்பில் பதிவேற்றிய தொடுப்பையும் இங்கே இணைக்கிறோம்.


Saturday, October 18, 2025

சமுதாய வானொலி: உலக அரங்கில் ஒரு கண்ணோட்டம்


SRM பல்கலைக்கழகத்தில் BRIDGE 2025 – வளர்ச்சி, ஆளுமை, மற்றும் அதிகாரம் வழங்குவதற்கான வானொலி முயற்சிகளை கட்டமைத்தல் என்ற தேசிய கருத்தரங்கில் "சமுதாய வானொலி: உலக அரங்கில் ஒரு கண்ணோட்டம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன்.






எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SRMIST-KTR) முத்துச்சரம் சமுதாய வானொலி நிலையம் (90.4 MHz) ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கு, கொள்கை வகுப்பாளர்கள், ஊடக வல்லுநர்கள், மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு சிறப்பான தளமாக அமைந்தது.




ஆளுமைக் கட்டமைப்பு, உள்ளடக்க உருவாக்கம், உரிமம் வழங்குதல், மற்றும் திறன் மேம்பாடு போன்ற முக்கியமான அம்சங்களை இந்த நிகழ்வு மையப்படுத்தியது. வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, மற்றும் அடித்தட்டு மக்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் சமுதாய வானொலியின் முக்கியப் பங்கினை இது வலியுறுத்தியது.

சமுதாய வானொலியின் சர்வதேச நிலப்பரப்பு குறித்த எனது பார்வைகளைப் பகிர்ந்துகொண்டபோது, உலகளாவிய நடைமுறைகள் மற்றும் கூட்டு மாதிரிகள் எவ்வாறு உள்ளூர் அதிகாரமளித்தலையும் ஊடகப் பன்முகத்தன்மையையும் வலுப்படுத்த முடியும் என்பதை நான் முக்கியமாக எடுத்துரைத்தேன்.

(படத்தில்: கருத்தரங்க அமர்வில் இருந்து ஒரு தருணம்.)


#

Wednesday, July 24, 2024

லொயோலா கல்லூரி: வானொலிப் பயிற்சிப் பட்டறை

 










சமீபத்தில் லொயோலா கல்லூரி மாணவர்களுடன் வானொலித் தொடர்பான ஒரு பயிற்சிப்பட்டறைக்கு (Sound Stories: The Power of Audio Narratives) செல்லும் வாய்ப்பு பேரா.ரிஜிதா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறப்பானதொரு நாள் எனலாம். பேரா.உமா ஷக்தி அவர்களையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு!

இன்றைய மாணவர்கள் மத்தியில் வானொலி எப்படியான தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது? அவர்கள் வானொலியிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? எந்த வகையான பாட்காஸ்டினை அவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள்? போன்றத் தகவல்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. கற்றுக்கொண்டே இருப்பவர்களே, உண்மையான ஆர்வலர்கள்!

இயக்குநர் பேரா.சார்லஸ் துறை அவர்கள் இடைக்காட்டூர் பற்றியும், அங்கு அமைந்துள்ள மிக முக்கிய தேவாலயம் பற்றியும் பேசிக்கொண்டோம். அடுத்த பயணத்திற்கும் இதன் ஊடாகத் திட்டமிட்டோம்!

News on Air துணை கொண்டு மாணவர்களுக்குக் குரல் பயிற்சியும் வழங்கப்பட்டது. என்ன ஒரு ஆர்வம். நிறைவில் போஸ்ட்கிராஸிங் தொடர்பாக ஒரு வானொலி நிகழ்ச்சிக்கும் யோசனை கொடுக்கப்பட்டது. பேரா.உமா ஷக்தியின் "பணிப்பாலைப் பெண்" புத்தகத்தோடு விடைபெற்றேன்.


Sunday, January 14, 2024

சென்னைப் புத்தகக் காட்சியில் உலக வானொலிகள்

 

நண்பர்களும் வானொலி ஆர்வலர்களும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்,
எதை?

உங்களது புத்தகங்கள் புத்தகக் காட்சியில் எந்த அரங்கில் கிடைக்கும்?

இந்த ஆண்டு எனது புத்தகங்களில் "உலக வானொலிகள்" புத்தகம் மட்டுமே நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [NCBH (அரங்கு எண் F49)] அரங்கில் கிடைக்கும்.


இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து வானொலிகளும் பண்பலை, சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகள் மட்டுமல்லாது, பாட்காஸ்டிலும் ஒலிபரப்பத் தொடங்கிவிட்டன. இந்த நூலில் அந்த வானொலிகளின் இணைய முகரிகளோடு விரிவாகத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

சர்வதேச ஊடகங்களை, குறிப்பாக வானொலிகளை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பயனுள்ள புத்தகமாக இது இருக்கும்.

மற்ற புத்தகங்கள் அனைத்தும் அமேசானில் கிடைக்கும்.