பொது அறிவுப் போட்டியின் விதிகள்
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Monday, March 30, 2015
போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் பற்றிய பொது அறிவுப் போட்டி
பொது அறிவுப் போட்டியின் விதிகள்
Sunday, March 29, 2015
வானொலியின் வடிவம் மாற்றமடைந்துள்ளது
Sunday, March 22, 2015
தமிழக நேயர்களுக்கு இலங்கை வானொலி
போக்குவரத்து காவலர்கள் சோதனையின் போது நீங்கள் அந்த வானொலியைக் கேட்காமல் இருந்தீர்கள் எனில், அபராதத் தொகையைக் கட்டவேண்டியிருக்கும். இன்னும் சொல்வதானால், நீங்கள் அந்த வானொலிகளைச் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது கேட்காமல் செல்லும் பட்சத்தில் விபத்தில் சிக்கிக்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. காரணம் அந்த வானொலியில் உடனுக்குடன் அந்த சாலைப் பற்றியத் தகவல்கள் ஒலிபரப்பாகும். ஆக, வெளிநாட்டு வானொலிகளில் திரை இசையை ஒலிபரப்பாமல் நிகழ்ச்சிளை சுவாரஸ்யமாக வழங்க முடியும்போது, அது ஏன் இந்தியாவில் சாத்தியம் இல்லை? யோசிக்க வேண்டிய விடயம்.
சர்வதேச வானொலிகள் வைத்துள்ள போட்டிகள்
Radio Taiwan International - http://english.rti.org.tw/m/whatsNew/?recordId=8514 KBS World Radio Quarterly Quiz /About KBS World Radio/KBS World Radio - https://world.kbs.co.kr/english/about/about_quiz.htm Radio Prague - Mailbox - http://www.radio.cz/en/section/mailbox/mailbox-2015-03-21 Radio Prague - http://www.radio.cz/en/static/monthly-quiz/ Competition | The Voice Asia - http://thevoiceasia.com/competition/ Tyger Tyger, burning bright - RFI - http://mobile.english.rfi.fr/culture/Tyger-Tyger-burning-bright Euromaxx Quiz, March 21, 2015 | euromaxx quiz | DW.DE | 21.03.2015 - http://www.dw.de/euromaxx-quiz-march-21-2015/a-2256549 PopXport Quiz | PopXport | DW.DE | 20.03.2015 - http://www.dw.de/popxport-quiz/a-16311748 |
Sunday, March 15, 2015
மீண்டும் இலங்கை வானொலி
Sunday, March 08, 2015
ஞானவாணி நிறுத்தப்பட்டது
Tuesday, March 03, 2015
தமிழகத்தில் சமுதாய வானொலிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது
Sunday, March 01, 2015
33 புதிய எப்எம் வானொலி
காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களில் மத்திய அரசின் சேவைகளை எளிய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் 33 புதிய எப்எம் வானொலி சேனல்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் எல்லை அருகே வசித்து வரும் மக்களுக்கு மத்திய அரசின் புத்தாண்டு பரிசாக புதிய எப்எம் வானொலி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் 18 சேனல்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களில் 15 சேனல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானொலிதான் எளிய மக்கலை சென்றடையும் ஊடகமாக உள்ளது. தொலை காட்சி ஒளிபரப்பு கிடைக்காத இடத்திலும் வானொலி செயல்படும். மேலும் மின்சாரம் இல்லாத இடத்திலும் வானொலியை கேட்க முடியும் எனவே எளிய மக்கள் வானொலியை விரும்புகின்றனர். மேலும் எப்எம் சேனல்களை ஏலத்திற்கு விடுவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.550 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். நன்றி ; தினபூமி 19-1-2015 |
வானொலியில் ‘கிரீன்விச்’ நேரம்
பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின்பு, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் இடத்தை சுலபமாக அடையலாம் கண்டு கொள்ள கடக ரேகை, அட்ச ரேகை போன்ற கற்பனைக் கோடுகளை உருவாக்கினர். இதில் மையக்கோட்டை '0' டிகிரி என வைத்தனர். இதுதான் உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது. இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கிரீன்விச்' என்ற நகரின் மீது செல்வதால் இந்த கோட்டிற்கு அதே பெயரை வைத்தார்கள். நேரத்திற்கு 'கிரீன்விச் மெரிடியன் டைம்' என்று பெயர் வைக்கப்பட்டது. இதை சுருக்கமாக கிரீன்விச் நேரம் என்றனர். இந்த '0' டிகிரி 'லாங்கிடியூடில்' என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக வைத்து தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக்கொள்கின்றன. இந்தியாவின் கடிகார நேரம் அலகாபாத் வழியாகச் செல்லும் 82.5 டிகிரி லாங்கிடியூட்டை வைத்துதான் சொல்லப்படுகிறது. இந்திய நேரத்துக்கும் கிரீன்விச் நேரத்துக்கும் 5.30 மணி நேர வித்தியாசம் உள்ளது. அதாவது நமக்கு விடிந்து ஐந்தரை மணி நேரம் கழித்துதான் கிரின்விச்சில் விடியும். லண்டனில் இருக்கும் 'வெஸ்ட் மினிஸ்டர்ஸ் கிளாக்' என்பது உலகப் பிரசித்தி பெற்றது. இதை பிக்பென் கடிகாரம் என்றும் கூறுகிறார்கள். இந்த கடிகாரம் காட்டுவது கிரீன்விச் நேரத்தைத்தான். இதில் ஒரு மணிக்கு ஒரு முறை 'டிங்டாங்' என்று மணி அடிக்கும். இந்த மணிக்குதான் 'பிக்பென்' என்று பெயர். இந்த மணி ஓசையை பி.பி.சி. வானொலி தவறாமல் ஒலிபரப்பி வந்தது. சர்வதேச பயணம் மேற்கொள்ளும் போது புறப்பட்ட நாட்டின் நேரத்துக்கும், போய்ச்சேரும் நாட்டின் நேரத்துக்கும் வித்தியாசம் இருப்பதால் விமானங்களிலும் விமான நிலையங்களிலும் ஒரேவிதமான நேரத்தை கடைப்பிடிப்பார்கள். ஆங்கிலம் எப்படி உலகின் பொது மொழியாக உள்ளதோ அது போல கிரீன்விச் நேரம் உலகின் பொது நேரமாக இருக்கிறது. Source; Daily Thanh 20-2-2015 |
காரைக்கால் வானொலி நிலைய தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க
காரைக்கால் வானொலி நிலைய தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை) நிலைய உதவி இயக்குனர் சித்ரலேகா சுகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் அகில இந்திய வானொலி (பண்பலை 100.3) யில் தாற்காலிக அறிவிப்பாளராக பணியாற்ற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 50 வயதுக்கு மிகாதவராக, குறைந்தபட்சம் பட்டதாரி தகுதியுடையவராக, நல்ல குரல் வளம், கலை இலக்கியம் நாட்டு நடப்புகளில் ஆர்வம் உள்ளவராக இருப்பின் இந்த தாற்காலிக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். ஒரு முழு வெள்ளைத்தாளில் பெயர்,முழு முகவரி,தொலைபேசி எண் ,தங்களின் கலை இலக்கியம் தொடர்பான விபரங்கள்,வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகள் வழங்கி இருப்பின் அவை குறித்த விபரம், வயது,கல்வித்தகுதி, கணினி பயிற்சி போன்ற விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை சான்றுக்கான நகல்களுடன் காரைக்காலிலிருந்து 15 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டும் நிலைய இயக்குநர்,காரைக்கால் பண்பலை வானொலி நிலையம்,நேரு நகர்,காரைக்கால் 609 605 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் குரல் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.300, எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் ரூ.225 க்கான வங்கி வரைவோலை (ஈஈ) நிலைய இயக்குனர், ஆல் இண்டியா ரேடியோ,காரைக்கால் என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது அலுவலக நாள்களில் நிலையத்தில் நேரிலும் பணமாக செலுத்தி ரசீது பெற்று ரசீதினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கலாம்.வங்கி வரைவோலையின் நகல் குரல் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டண சலுகை பெற உரிய சாதி சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும். Source; Dinamani 6-1-2015 |