Tuesday, July 30, 2024

ஆஹா எஃப்.எம் : இப்படியும் ஒரு விளம்பர உத்தி

 குமுதம் இதழோடு இந்த ஆறு பக்க விளம்பர இணைப்பினை 2012ல் வெளியிட்டபோது எல்லோரும் அதிர்ந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த விளம்பரங்களை ஸ்ரீ ராம் கிரியேட்டிவ்ஸ் வடிவமைத்திருந்தார்கள். 
















Kumudam - Aahaa! FM Campaign, 6 Page Pullout AD & Press AD

Monday, July 29, 2024

பிபிசி டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம்


 பிபிசியின் டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டத்தில் இணைய விருப்பமா?


இந்த டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம் ஆறு மாதங்கள் கால அளவுடையது. பயிற்சிக் காலத்திற்கு உரிய ஊதியம் வழங்கப்படும். இதில் எப்படி இணைவது என்பது உட்பட இந்தத் திட்டம் குறித்து விரிவாக விளக்க எங்கள் குழு வரும் 30ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வருகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கும் அமர்வில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நீங்கள் கேட்கலாம். இந்த அமர்வில் கலந்து கொள்ள எந்த முன்பதிவும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

பன்முகப் பார்வையில் வத்திகான் வானொலி

 


Sunday, July 28, 2024

30 ஆண்டுகளைக் கொண்டாடும் WRMI வானொலி

 


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிற்றலை ஒலிபரப்பு பற்றிய ஜெஃப் வைட்டின் ஆர்வம் ஏப்ரல் 7ஆம் தேதியில், இந்தியாவின் பூனாவில் உள்ள அட்வென்டிஸ்ட் வேர்ல்ட் ரேடியோவில் இருந்து தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா? ஆரம்பகாலத்தில் DX நிகழ்ச்சி என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாது. தாமதமான அஞ்சல் ஒலிபரப்பை KCBI வானொலியில் ஒலிபரப்பியதாக அந்த நிகழ்ச்சியின் இறுதியில் குறிப்பிடுவார்கள். அந்த நேரத்தில் நிகழ்ச்சியின் தலைப்பு “ரேடியோ மானிட்டர்ஸ் இன்டர்நேஷனல்”, AWR ஸ்டுடியோவானது புறநகர் பூனாவில் அமைந்திருந்தது, மேலும் KCBI நிலையத்திலிருந்து ஒலிபரப்பானது Radio Earthஇன் அனுசரணையில் அக்டோபர் 1985இல் சில வாரங்களுக்கு ஒலிபரப்பப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது என்கிறார் ஜெஃப் வைட்.

Radio Earthஇல் நாங்கள் ஒருபோதும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியைச் செய்ததில்லை என்பது எங்களுக்குத் தோன்றியது, மேலும் இது எங்களின் வானொலிப் பற்றியச் சுவாரஸ்யமான கதையாகும், இது உண்மையில் சொல்லப்பட வேண்டியதாகும், ஏனெனில், நான் முதலில் சிற்றலை வானொலியின் நேயர். ஒரு வகையில், WRMI மூலம் நான் இன்று இருக்கும் இடத்திற்கு எப்படி வந்தேன் என்பதற்கான பாதையையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது. 

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரே ராபின்சன் இன்னும் இது பற்றிக் விரிவாகக் கூறும் பொழுது, "Radio Earth பற்றிய யோசனை 1978இல் ஜெஃப் வைட் மற்றும் ஜான் பீபே ஆகியோருக்கு இடையேயான உரையாடலுடன் தொடங்கியது, அந்த நேரத்தில் இருவரும் இல்லினாய்ஸில் உள்ள டிகால்பில் கல்லூரி மாணவர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் DeKalbஇல் WNIU-FMஇன் வானொலி செய்தி நிருபர்களாகவும் பகுதி நேரமாகப் பணியாற்றினர். ஒரு நாள் அவர்கள் செய்தி அறையைச் சுற்றி அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் இருவருமே சிற்றலை வானொலிகளைக் கேட்பவர்கள் என்பதைக் தெரிந்து கொண்டனர், மேலும் வணிக ரீதியாக சிற்றலை வானொலியை உருவாக்கும் ஜெஃப்பின் யோசனையால் ஜானும் ஆர்வமாக இருந்தார்."

அத்தகைய நிலையத்தைத் தொடங்குவதற்கு என்ன தேவை என்பதை அவர்கள் தீவிரமாக ஆராயத் தொடங்கினர், மேலும் இரண்டு நண்பர்களின் உதவியைப் பெற்றனர்:

மைக்கேல் பவுலோஸ், இல்லினாய்ஸ் எவன்ஸ்டனில் வழக்கறிஞராக இருந்தவர் மற்றும் WNIU-FMஇல் தலைமைப் பொறியாளராக இருந்த ஜான் ஃப்ரெபெர்க்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், அவர்கள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களை பொது நூலகங்களில் ஆராய்ச்சி செய்து, அறிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளை எழுதுதல்  மற்றும் விளம்பரம், பொறியியல், சட்டம் மற்றும் நிரலாக்க விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளப் பலரைச் சந்தித்தனர்.

கரீபியன் தீவில் ஒரு வணிக ரீதியிலான சிற்றலை நிலையத்தை உலகம் முழுவதும் ஒலிபரப்ப வைப்பதே அவர்களின் இலக்காக இருந்தது.   ஏழு 100 கிலோவாட் டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் ஏழு TCI Log Periodic ஆண்டெனாக்கள் வெவ்வேறு திசைகளில் ஒலிபரப்புச் செய்ய மொன்செராட்டிடம் இருந்து வாய்மொழி அனுமதியைப் பெற்றனர். பின்னர் அவர்கள் முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, இது மிகவும் கடினமாக இருந்தது எனலாம்.

டொமினிகன் குடியரசில் உள்ள Radio Clarin சிற்றலை சேவையின் இயக்குனரான ரூடி எஸ்பினல், Radio Earth குழுவில் சேர்ந்தார், மேலும் Radio Earth நிகழ்ச்சிகளை Radio Clarinஇன் 50 கிலோவாட் சிற்றலை  டிரான்ஸ்மிட்டர் மூலம் சாண்டோ டொமிங்கோவில் ஒலிபரப்புச் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதில் அவர் மிகவும் உதவியாக இருந்தார்.  அவர்கள் ஒலிபரப்பைத் தொடங்குவதற்கு முன்பே .



மொன்செராட்டில் தங்கள் சொந்த நிலையத்தை உருவாக்கவும் திட்டமிட்டனர்.

பின்னர் மே 1983இல், Radio Earth  குராக்கோ டூரிஸ்ட் பீரோ மற்றும் பல ஹோட்டல்களை வைத்திருக்கும் கம்பெனியிடமிருந்து விளம்பர ஒப்பந்தங்களைப் பெறுவதில் வெற்றி பெற்றது. எனவே, தெற்கு கரீபியனில் உள்ள டச்சு நாட்டுக்கு சொந்தமான தீவில் ஒரு ஸ்டுடியோவை அமைக்க அவர்கள் முடிவு செய்தனர், அங்கு அவர்கள் "தி வேர்ல்ட்" என்ற தலைப்பில் தங்கள் முதல் நிகழ்ச்சியை பதிவு செய்தனர், பின்னர் ஒவ்வொரு நாளும் (திங்கள் முதல் சனிக்கிழமை வரை) ஒலிபரப்புவதற்காக சாண்டோ டொமிங்கோ வரை ஒலி நாடாக்களை அனுப்பி வந்தனர்.  ரேடியோ கிளாரினின் சிற்றலை  டிரான்ஸ்மிட்டர் மூலம் 11700 kHzல் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது.

ஜெஃப் ஒயிட் குராக்கோவிற்கு நிகழ்ச்சியை வழங்க ஒப்புக்கொண்டார், ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த தரமான ஒரு மணி நேர நிகழ்ச்சியைத் தயாரிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தேவைப்படும் என்பதால், WNIU செய்தித் தொடர்பாளராக இருந்த  மற்றொரு முன்னாள் வானொலி தயாரிப்பாளரான மாட் பெல்லையும் இணைத்துக் கொண்டார். அவர்கள் சிகாகோவிலிருந்து குராக்கோவிற்கு ஸ்டுடியோ உபகரணங்களை அனுப்பி, குராசோ ஹில்டன் ஹோட்டலில் கலையகத்தை அமைத்தனர்.

மாட் மற்றும் ஜெஃப் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர், அதில் பல்வேறு செய்தி அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள், ஐரோப்பாவில் இருந்து டேவிட் மான்சன் பங்களித்த ஒலிக்கீற்றுக்கள், வெள்ளிக்கிழமைகளில் நேயர் கடித நிகழ்ச்சி, மற்றும் சனிக்கிழமைகளில் தகவல் தொடர்பு சார்ந்த “உரையாடல்” நிகழ்ச்சிகள் இங்கு குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)


Wednesday, July 24, 2024

லொயோலா கல்லூரி: வானொலிப் பயிற்சிப் பட்டறை

 










சமீபத்தில் லொயோலா கல்லூரி மாணவர்களுடன் வானொலித் தொடர்பான ஒரு பயிற்சிப்பட்டறைக்கு (Sound Stories: The Power of Audio Narratives) செல்லும் வாய்ப்பு பேரா.ரிஜிதா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறப்பானதொரு நாள் எனலாம். பேரா.உமா ஷக்தி அவர்களையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு!

இன்றைய மாணவர்கள் மத்தியில் வானொலி எப்படியான தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது? அவர்கள் வானொலியிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? எந்த வகையான பாட்காஸ்டினை அவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள்? போன்றத் தகவல்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. கற்றுக்கொண்டே இருப்பவர்களே, உண்மையான ஆர்வலர்கள்!

இயக்குநர் பேரா.சார்லஸ் துறை அவர்கள் இடைக்காட்டூர் பற்றியும், அங்கு அமைந்துள்ள மிக முக்கிய தேவாலயம் பற்றியும் பேசிக்கொண்டோம். அடுத்த பயணத்திற்கும் இதன் ஊடாகத் திட்டமிட்டோம்!

News on Air துணை கொண்டு மாணவர்களுக்குக் குரல் பயிற்சியும் வழங்கப்பட்டது. என்ன ஒரு ஆர்வம். நிறைவில் போஸ்ட்கிராஸிங் தொடர்பாக ஒரு வானொலி நிகழ்ச்சிக்கும் யோசனை கொடுக்கப்பட்டது. பேரா.உமா ஷக்தியின் "பணிப்பாலைப் பெண்" புத்தகத்தோடு விடைபெற்றேன்.