Showing posts with label seminar. Show all posts
Showing posts with label seminar. Show all posts

Wednesday, February 12, 2025

K.S.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி உலக வானொலி தினத்தைக் கொண்டாடுகிறது


திருச்செங்கோடு, பிப்ரவரி 13, 2025 – கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை, "வானொலியில் புரட்சி" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கை பிப்ரவரி 13, 2025 அன்று நடத்துகிறது.

இந்த கருத்தரங்கு, ஒலிபரப்பின் பாரம்பரியத்தையும் புதுமையையும் கொண்டாடும் வகையில், சங்கமம் அரங்கில் காலை 10:00 மணிக்கு நடைபெறும். சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். தங்க.ஜெயசக்திவேல் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்கள் பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, ஐடிஐ, துணை சுகாதார அறிவியல், நர்சிங், பார்மசி மற்றும் ஆசிரியர் கல்வி போன்ற பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன. கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்கோடு, நாமக்கல் - 637215, தமிழ்நாடு என்ற முகவரியில் அமைந்துள்ளது.

Friday, August 23, 2024

சென்னையின் AIR BAND ஒலிபரப்புகள்

 


சென்னையின் வானொலிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் நடந்த சென்னைத் தினத்தின் மூன்றாவது நாள் கருத்தரங்கில் அண்ணா எஃப்.எம், ஞானவாணி, எம்.ஓ.பி எஃப்.எம், லொயோலா எஃப்.எம், முத்துச்சரம், தென்றல் எஃப்.எம் மட்டுமல்லாமல், சென்னையின் வான் வெளியில் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்னற ஒலி அலைகளையும் ஆவணப்படுத்தும் விதமாக ஹாம் வானொலி மற்றும் AIR BAND ஒலிபரப்புகளைப் பற்றியும் விவாதித்த அற்புத நிகழ்ச்சி எனலாம் இதை.

நம்மில் எத்தனைப் பேர் 124.45 MHzல் ஒலிபரப்பாகிவரும் AIR BAND தகவல் தொடர்பினைக் கேட்டிருப்போம். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் மெரினா கடற்கரை மேலே வட்டமிடும் விமானங்களில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளும் இந்த அலைவரிசை Dxers மத்தியில் புகழ்பெற்றது. அடுத்த முறை, மெரினா கடற்கரைக்கோ அல்லது  St.Thomas Mountக்கு செல்லும் போது மற்றக்காமல் உங்களிடம் உள்ள AIR BANDகளை எடுக்கக்கூடிய XHDATA D-808 போன்ற வானொலிப் பெட்டியை எடுத்துச்செல்ல மறவாதீர்கள்!

இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக முனைவர்.சுரேஷின் உரை அமைந்தது எனலாம். Culture, Cultural தொடங்கி Stuart Hallல் கொண்டு வந்து வானொலியை இணைத்தது மிகச்சிறப்பு. வானொலியின் பிரதியை (text) முன் வைத்து செய்த இவரின் முனைவர் பட்ட ஆய்வு சர்வதேச வானொலிகளுக்கு ஒரு மணிமகுடம் எனலாம்.
























Tuesday, August 20, 2024

திகட்டத் திகட்ட வானொலித் தகவல்கள்

 தனியார் பண்பலை வானொலிகள் தொடர்பாகத் திகட்டத் திகட்டத் தகவல்களை அள்ளித்தெளித்தனர் இரண்டாம் ஆண்டு முதுகலை இதழியல் மாணவர்கள்!

"சென்னையின் வானொலிகள்" எனும் கருத்தரங்க வரிசையில் இன்று இரண்டாம் நாளில், "சென்னையின் தனியார் வானொலிகள்" குறித்து ஒன்பது மாணவர்கள் மிகவும் சிறப்பாகத் தங்களின் பார்வையை வைத்தனர்.























Monday, August 12, 2024

சென்னையின் வானொலிகள்

 


சென்னை தினத்தினையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நகரில் நடந்துவருகிறது. நாமும் ஏன் ஒரு நிகழ்ச்சி நடத்தக்கூடாது, என்ற எண்ணத்தில் உருவானது தான் "சென்னையின் வானொலிகள்"

மூன்று நாள் நிகழ்வாக இதனைத் திட்டமிட்டோம். முதல் நாள் நிகழ்வு 13 ஆகஸ்ட் 2024 அன்று "சென்னையின்  அரசு வானொலிகள்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

இரண்டாம் நாள் நிகழ்வு "சென்னையின் தனியார் வானொலிகள்" என்ற தலைப்பில் 20 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற உள்ளது. இதில் சென்னையில் ஒலிபரப்பாகிய,  ஒலிபரப்பாகிவரும் தனியார் பண்பலை வானொலிகளை விவாதிக்கவுள்ளோம்.

மூன்றாம் நாள் நிகழ்வு 21 ஆகஸ்ட் 2024 அன்று "சென்னையின் சமுதாய வானொலிகள்" என்ற தலைப்பில் நடைபெறும். வானொலி ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

#

All are cordially invited to a celebration of Radio in Madras, taking place tomorrow from 2:00 to 4:00 PM in the Seminar Hall, as part of the Madras Day week festivities.

Wednesday, July 24, 2024

லொயோலா கல்லூரி: வானொலிப் பயிற்சிப் பட்டறை

 










சமீபத்தில் லொயோலா கல்லூரி மாணவர்களுடன் வானொலித் தொடர்பான ஒரு பயிற்சிப்பட்டறைக்கு (Sound Stories: The Power of Audio Narratives) செல்லும் வாய்ப்பு பேரா.ரிஜிதா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறப்பானதொரு நாள் எனலாம். பேரா.உமா ஷக்தி அவர்களையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு!

இன்றைய மாணவர்கள் மத்தியில் வானொலி எப்படியான தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது? அவர்கள் வானொலியிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? எந்த வகையான பாட்காஸ்டினை அவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள்? போன்றத் தகவல்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. கற்றுக்கொண்டே இருப்பவர்களே, உண்மையான ஆர்வலர்கள்!

இயக்குநர் பேரா.சார்லஸ் துறை அவர்கள் இடைக்காட்டூர் பற்றியும், அங்கு அமைந்துள்ள மிக முக்கிய தேவாலயம் பற்றியும் பேசிக்கொண்டோம். அடுத்த பயணத்திற்கும் இதன் ஊடாகத் திட்டமிட்டோம்!

News on Air துணை கொண்டு மாணவர்களுக்குக் குரல் பயிற்சியும் வழங்கப்பட்டது. என்ன ஒரு ஆர்வம். நிறைவில் போஸ்ட்கிராஸிங் தொடர்பாக ஒரு வானொலி நிகழ்ச்சிக்கும் யோசனை கொடுக்கப்பட்டது. பேரா.உமா ஷக்தியின் "பணிப்பாலைப் பெண்" புத்தகத்தோடு விடைபெற்றேன்.