சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Friday, December 11, 2015
WRTH 2016
புத்தகத்தை வாங்க
Thursday, December 10, 2015
ஹாம் வானொலி இருந்திருந்தால்…
சென்னையில் உள்ள எப்.எம் வானொலிகள்
Wednesday, December 09, 2015
பேரிடர் வேளையில் வானொலி
சென்னை மழையில் உதவிய பழைய தொழில்நுட்பம் !
வடகிழக்கு பருவமழை காரணமாக இந்தாண்டு சென்னை கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையை சற்றும் கண்டிராத, எதிர்பார்த்திடாத சென்னையில் தங்கியிருந்த மக்கள், தற்போது சொந்த ஊருக்கே சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே மழை வெள்ளத்தால் சிரமப்பட்ட சென்னை வாசிகளுக்கு கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 30) தொடங்கிய தொடர்மழை தான் பேராபத்தை தந்தது. பெருமழை தொடர்ந்து 2 நாட்கள் வெளுத்துக்கட்டியது.
சென்னைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால், எல்லா புறமும் மக்களை நகர விடாமல் தவிக்கவிட்டது.
இன்று எட்டாவது நாள்.
சற்று மக்கள் மீண்டு வந்தாலும், உணவு இன்றி, தங்க இடமின்றி, உடுத்த உடையின்றி பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர், சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம், சென்னை மக்களின் அவதிக்கு மழை காரணமாக இருந்தாலும், தொலைத்தொடர்பும், போக்குவரத்தின்மையும் அவர்களை மேலும் துயரத்திற்கு ஆளாக்கியது.
ஆனால், இந்த பேரிடர் வேளையில் வானொலி நிறைய பேருக்கு ஆறுதல் அளித்ததாக சென்னைக்குள் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, எந்த பகுதியில் என்ன நடந்தது. எங்கு வெள்ளம் சூழ்ந்தது உள்ளிட்ட தகவல் அறிவிப்பாளர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தனர். மின்சாரம் இல்லாததால் தொலைக்காட்சி சேவையும் துண்டிக்கப்பட்டது.
வெள்ளம் புகுந்ததால் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்காலிகமாக சேவையை நிறுத்தின.
சென்னைக்கு வெளியே, போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், ஆங்காங்கே நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களில் இருந்தவர்களும், வானொலி சேவை மூலமே நிலைமையை தெரிந்துக்கொண்டனர்.
அகில இந்தியா வானொலியான அரசு பண்பலை சேவையில் மணிக்கொரு முறை ஒலிபரப்பான செய்திகள் அவர்களுக்கு தகவல்களை அறிந்துக்கொள்ள உதவியது.
மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும், அகில இந்தியா வானொலி நிலையம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஊருக்கு திரும்பி செல்வதை முடிவெடுத்த வெளியூர் மக்கள், சென்னைக்குள் வெள்ளத்தில் சிக்காமல் தப்பினர்.
கடந்த வாரத்தின் திங்கட் கிழமை மாலையில் இருந்து மூன்று நாட்கள் எந்த செல்பேசி தொடர்பும் இல்லாமல், போக்குவரத்தும் இல்லாமல், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அழைத்து சென்றுவிட்டது இந்த மழை....
அதேசமயம், படிப்படியாக மின்சாரம், தொலைபேசி சேவை, இணைய சேவை, போக்குவரத்து சீரானதால், 21ம் நூற்றாண்டுக்குள் சென்னை முழுவதுமாக மீண்டு வந்தது என்றே கூறலாம்.
Source: http://ns7.tv/ta/how-fm-radios-help-flooded-chennai.html
ஒரு வானொலி இருந்திருந்தால்...
ஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது? கேள்விக்கான பதில் இதோ
Amateur radio turns vital link when gadgets fail in floo...
Amateur radio turns vital link when gadgets fail in flood-hit Chennai
| |||||
Preview by Yahoo
| |||||
Monday, December 07, 2015
வெள்ள நிவாரணத்தில் வானொலி அறிவிப்பாளர்கள்
ஆர்.ஜே ரஞ்சித் :-
தனியார் வானொலி ஒன்றில் வேலை செய்யும் ரஞ்சித் உணவு மற்றும் மருந்துகள் விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார். கொசுக்கடி, சளி, காய்ச்சல் எனப் பலரும் அவதிப் படுகின்றனர், இவர்களுக்கு தொடர்ந்து இடைவிடாது காலை முதல் இரவு வரை ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருகின்றனது இவரது குழு.
தண்ணீர் பாட்டில்கள், நாப்கின் போன்றவற்றையும் இவரது குழு விநியோகிக்கிறார்கள். ஸ்டேட்டஸ் தட்டுவதை விட இவர் வீடியோ பதிவாக போடுவதால், பலருக்கு தகவல் சென்றடைகிறது. தன்னார்வலர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, நிறைய தன்னார்வலர்கள் வந்தால் நிறைய பேருக்கு உதவமுடியும் என்கிறார் ரஞ்சித்.
https://web.facebook.com/RJ.RANJITH.0303/?fref=photo
ஆர்.ஜே பாலாஜி :-
ஆர்.ஜே பாலாஜி பற்றிய அறிமுகம் தேவையில்லை. தான் வேலை பார்க்கும் எஃப்.எம் மூலமாக பல தன்னார்வாலர்களை ஒருங்கிணைத்தார் பாலாஜி.
மேலும் டுவிட்டர், ஃபேஸ்புக் மூலமாகவும் தொடர்ந்து யார், எங்கே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், எங்கே உணவு தேவைப்படுகிறது, யார் உணவு வழங்க தயாராக இருக்கிறார்கள் போன்ற விவரங்களை அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.
மேலும் மக்களுக்கு அவசியம் தேவைப்படக்கூடிய போர்வை, தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை பல இளைஞர்களோடு சேர்ந்து இணைந்து வாங்கி பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களுக்கு விநியோகம் செய்தார். ஆர். ஜே.பாலாஜியின் முயற்சி காரணமாக ட்விட்டரில் சென்னையில் மழை என்பது தேசிய அளவில் டிரென்ட் ஆனது. நடிகர் சித்தார்த், விஷ்ணு விஷால் ஆகியோரோடும் இணைந்து தொடர்ந்து இடைவெளியின்றி மீட்பு பணியில் ஈடுபட்டார் ஆர்.ஜே.பாலாஜி.
நன்றி: அபராஜிதன்
வானொலியின் அருமை
Wednesday, December 02, 2015
திருநெல்வேலி வானொலியின் 53 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
திருநெல்வேலி வானொலி 1.12.1961 அன்று தொடங்கப்பட்டு 53 ஆம் ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு 1.12.2015 மாலை 3 மணிக்கு திருநெல்வேலி அகிலஇந்திய வானொலி வளாகத்தில் ஆண்டுவிழா நடைபெற்றது.
Saturday, November 14, 2015
வானொலி போட்டிகள்
ஞானவாணி மீண்டும் ஒலிபரப்பு
Friday, November 13, 2015
Special EDXC Broadcast
Wednesday, October 21, 2015
சென்னை வானொலி நிலையத்தின் முதல் நிலைய இயக்குநர்
நன்றி: பசுபதி பதிவுகள், வழிகாட்டி: திரு. உமா காந்தன்
Tuesday, October 13, 2015
இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் நுாலின் வெளியீட்டு விழாவும்
நுாலின் முதற் பிரதியை புரவலா் திரு. ஹாசிம் உமர் அவர்களும் சிறப்புப் பிரதியை திரு. கருனை ஆனந்தம் [நாவலர் நற்பணிமன்றத் தலைவர்] மற்றும் சட்டதரனியான திருமதி. ஜெயந்தி விநோதன் அவர்களும் பெற்று நிகழ்வை கௌரவப்படுத்தினா்.
தொடா்ந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டத்தாபனத்தின் சுமார் பதினொரு மூத்த அறிவிப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய உரையாடல் அமைச்சரான கௌரவ மனோ கணேசன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அவரால் நிகழ்விற்க சமூகமளிக்க முடியவில்லை எனினும் அவர் சார்பாக அவரின் துணைவியார் நிகழ்வில் கலந்து கொன்டிருந்தார். அத்துடன் மேல் மாகான சபை உறுப்பினரான திரு. சன் குகவரதன் அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.
வரவேற்புரையை வழங்கி நிகழ்சிகளையும் தமது மதுரக் குரலினால் தொகுத்து வழங்கியிருந்தார் இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளரான செல்வி. க. நாகபபூசனி மற்றும் சட்டதரனி
செல்வி. எழில் மொழி ராஜகுலேந்திரா ஆகியோர்.
.
அது தவிர நான் ஒரு பத்திரிகையாளனோ சிறந்த படப்பிடிப்பாளரோ அல்ல. ஆயினும் என்னால் முடிந்தவரை இச் செய்திகளை தொகுத்து எழுதி காட்சிகளையும் இணைத்துள்ளேன்.