இந்த புகைப்படம் நமக்கு பல முக்கிய தகவல்களை கொடுக்கிறது. அதில் மிக முக்கியமானது, ஒலிப்பதிவு! இன்று போல் இல்லை அன்று. ஒலிப்பதிவு செய்ய கையோடு பெரிய டேப் ரெக்கார்டரையும் எடுத்து செல்லவேண்டிய காலகட்டம். குறிப்பாக கையடக்க ஒலிப்பதிவு கருவி (Walkman) கூட அறிமுகமாகாத காலகட்டம்.
அடுத்து, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சிறிய மைக். இது போன்ற மைக்குகளை இன்று நாம் காண்பது அரிது. எப்.எம் மைக் என்று பார்த்திருப்போம், அது போன்றது தான் இதுவும். ஆனால் இது ஒரு வயருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து டேபிளில் உள்ள கண்ணாடி டீ டம்ளர் மற்றும் குளிர்பான பாட்டில்.
அன்றைய இலங்கை வானொலியின் கேண்டீன், இருவரின் உடல் மொழி, ஆடைகள், சிகை
அழங்காரம், டை, கிருதா என இது போல இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
தொடர்பியல் ஆய்வுக்கு பெரிதும் உதவும் படம் இது. இந்த புகைப்படத்தை
பதிவிட்டது போல, அந்த பேட்டியையும் முழுமையாக வெளியிடலாம். கூடவே உங்களின்
இலங்கை வானொலி பயண அனுபவத்தினையும். நன்றி: திரு ராமகிருஷ்ணன்
#இலங்கை #வானொலி #SLBC #Radio
#இலங்கை #வானொலி #SLBC #Radio