Friday, August 23, 2024

சென்னையின் AIR BAND ஒலிபரப்புகள்

 


சென்னையின் வானொலிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் நடந்த சென்னைத் தினத்தின் மூன்றாவது நாள் கருத்தரங்கில் அண்ணா எஃப்.எம், ஞானவாணி, எம்.ஓ.பி எஃப்.எம், லொயோலா எஃப்.எம், முத்துச்சரம், தென்றல் எஃப்.எம் மட்டுமல்லாமல், சென்னையின் வான் வெளியில் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்னற ஒலி அலைகளையும் ஆவணப்படுத்தும் விதமாக ஹாம் வானொலி மற்றும் AIR BAND ஒலிபரப்புகளைப் பற்றியும் விவாதித்த அற்புத நிகழ்ச்சி எனலாம் இதை.

நம்மில் எத்தனைப் பேர் 124.45 MHzல் ஒலிபரப்பாகிவரும் AIR BAND தகவல் தொடர்பினைக் கேட்டிருப்போம். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் மெரினா கடற்கரை மேலே வட்டமிடும் விமானங்களில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளும் இந்த அலைவரிசை Dxers மத்தியில் புகழ்பெற்றது. அடுத்த முறை, மெரினா கடற்கரைக்கோ அல்லது  St.Thomas Mountக்கு செல்லும் போது மற்றக்காமல் உங்களிடம் உள்ள AIR BANDகளை எடுக்கக்கூடிய XHDATA D-808 போன்ற வானொலிப் பெட்டியை எடுத்துச்செல்ல மறவாதீர்கள்!

இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக முனைவர்.சுரேஷின் உரை அமைந்தது எனலாம். Culture, Cultural தொடங்கி Stuart Hallல் கொண்டு வந்து வானொலியை இணைத்தது மிகச்சிறப்பு. வானொலியின் பிரதியை (text) முன் வைத்து செய்த இவரின் முனைவர் பட்ட ஆய்வு சர்வதேச வானொலிகளுக்கு ஒரு மணிமகுடம் எனலாம்.
























1 comment:

sureshguruboy said...

சென்னைப் பல்கலைக்கழகம், இதழியல் மாணவர்களின் அர்ப்பணிப்பு அளப்பறியது. அவர்களின் களப்பணி கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். எனது மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கான அமர்வாக அமைந்தது. முனைவர் தங்க. ஜெய்சக்திவேல் அவர்களின் முன்னெடுப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனக்கு பேச வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றிகள் சார். #சர்வதேச_வானொலி