Showing posts with label mop fm. Show all posts
Showing posts with label mop fm. Show all posts

Sunday, March 02, 2025

20 ஆண்டைக் கொண்டாடும் எம்.ஓ.பி. சமுதாய வானொலி 107.8 MHz

எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தனது எம்.ஓ.பி. சமுதாய வானொலி நிலையம் 107.8 MHz. சார்பில் தேசிய வானொலி கருத்தரங்கை  நடத்துகிறது. "சமுதாய சேவையை கொண்டாடும் 20வது தேசிய வானொலி கருத்தரங்கு" என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு  நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கின்  தொடக்க விழா கல்லூரியின் இரண்டாம் தளத்தில் உள்ள கலையரங்கில் மார்ச் 12, 2025 காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கைத்  தொடங்கி வைக்கிறார். மேலும், சமுதாய வானொலி முன்னோடி டாக்டர். ஸ்ரீதர் ஆர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.


இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, "சமுதாய வானொலிக்கான பயனுள்ள திட்ட மேலாண்மை" மற்றும் "சமுதாய ஈடுபாடு மூலம் மக்களுடன் பாலங்களை உருவாக்குதல்" என்ற தலைப்புகளில் திறன் மேம்பாட்டுப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.

* முன்னாள் இயக்குனர் திரு. எம்.எஸ். பெருமாள், தூர்தர்ஷன் கேந்திரா, சென்னை அவர்கள் "சமுதாய வானொலிக்கான பயனுள்ள திட்ட மேலாண்மை" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

* சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் உதவிப் பேராசிரியர் திரு. ஜெய்சக்திவேல் அவர்கள் "சமுதாய ஈடுபாடு மூலம் மக்களுக்களுடன் பாலங்களை உருவாக்குதல்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இந்த கருத்தரங்கு  சமுதாய வானொலியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பங்களிப்பு குறித்து விவாதிக்க ஒரு தளமாக அமையும். மேலும், சமுதாய வானொலி துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த கருத்தரங்கில்  கலந்து கொள்ள வானொலி நேயர்கள்  அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.


 

Friday, August 23, 2024

சென்னையின் AIR BAND ஒலிபரப்புகள்

 


சென்னையின் வானொலிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் நடந்த சென்னைத் தினத்தின் மூன்றாவது நாள் கருத்தரங்கில் அண்ணா எஃப்.எம், ஞானவாணி, எம்.ஓ.பி எஃப்.எம், லொயோலா எஃப்.எம், முத்துச்சரம், தென்றல் எஃப்.எம் மட்டுமல்லாமல், சென்னையின் வான் வெளியில் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்னற ஒலி அலைகளையும் ஆவணப்படுத்தும் விதமாக ஹாம் வானொலி மற்றும் AIR BAND ஒலிபரப்புகளைப் பற்றியும் விவாதித்த அற்புத நிகழ்ச்சி எனலாம் இதை.

நம்மில் எத்தனைப் பேர் 124.45 MHzல் ஒலிபரப்பாகிவரும் AIR BAND தகவல் தொடர்பினைக் கேட்டிருப்போம். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் மெரினா கடற்கரை மேலே வட்டமிடும் விமானங்களில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளும் இந்த அலைவரிசை Dxers மத்தியில் புகழ்பெற்றது. அடுத்த முறை, மெரினா கடற்கரைக்கோ அல்லது  St.Thomas Mountக்கு செல்லும் போது மற்றக்காமல் உங்களிடம் உள்ள AIR BANDகளை எடுக்கக்கூடிய XHDATA D-808 போன்ற வானொலிப் பெட்டியை எடுத்துச்செல்ல மறவாதீர்கள்!

இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக முனைவர்.சுரேஷின் உரை அமைந்தது எனலாம். Culture, Cultural தொடங்கி Stuart Hallல் கொண்டு வந்து வானொலியை இணைத்தது மிகச்சிறப்பு. வானொலியின் பிரதியை (text) முன் வைத்து செய்த இவரின் முனைவர் பட்ட ஆய்வு சர்வதேச வானொலிகளுக்கு ஒரு மணிமகுடம் எனலாம்.