Thursday, December 27, 2018

இலங்கை வானொலி கேண்டீன்





இந்த புகைப்படம் நமக்கு பல முக்கிய தகவல்களை கொடுக்கிறது. அதில் மிக முக்கியமானது, ஒலிப்பதிவு! இன்று போல் இல்லை அன்று. ஒலிப்பதிவு செய்ய கையோடு பெரிய டேப் ரெக்கார்டரையும் எடுத்து செல்லவேண்டிய காலகட்டம். குறிப்பாக கையடக்க ஒலிப்பதிவு கருவி (Walkman) கூட அறிமுகமாகாத காலகட்டம்.


அடுத்து, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சிறிய மைக். இது போன்ற மைக்குகளை இன்று நாம் காண்பது அரிது. எப்.எம் மைக் என்று பார்த்திருப்போம், அது போன்றது தான் இதுவும். ஆனால் இது ஒரு வயருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து டேபிளில் உள்ள கண்ணாடி டீ டம்ளர் மற்றும் குளிர்பான பாட்டில்.

அன்றைய இலங்கை வானொலியின் கேண்டீன், இருவரின் உடல் மொழி, ஆடைகள், சிகை அழங்காரம், டை, கிருதா என இது போல இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தொடர்பியல் ஆய்வுக்கு பெரிதும் உதவும் படம் இது. இந்த புகைப்படத்தை பதிவிட்டது போல, அந்த பேட்டியையும் முழுமையாக வெளியிடலாம். கூடவே உங்களின் இலங்கை வானொலி பயண அனுபவத்தினையும். நன்றி: திரு ராமகிருஷ்ணன்

#இலங்கை #வானொலி #SLBC #Radio

Monday, December 24, 2018

மதுரையில் இருந்து ஒரு புதிய வானொலி / A new Internet Radio from Madurai

நான்மாடக் கூடலில் இசைத் தேடலுக்கு தீர்வாக (25 12 2018 ) இன்று இணைய உலகில் தடம் பதித்து,தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க வரும் ரேடியோ மதுரை குழுவினருக்கு என் நேசமான வாழ்த்துகள்!

தூங்கா நகரிலிருந்து நெஞ்சை விட்டு நீங்காத பாடல்களை சுழல விட்டு,
இதயங்களுக்கு ஆறுதல் அளித்து,
தமிழரின் கலை,இலக்கியம்,மரபு,கலாச்சாரம் சார்ந்து எண்ணற்ற படைப்புகளை உலகத் தமிழர்களுக்கு வழங்க வரும் உங்கள் முயற்சிக்கு நிச்சயம் வெற்றி உண்டு!


குழுவினருக்கு பாராட்டுகள்! 

Via காரைக்கால் கே.பிரபாகரன்

Monday, December 17, 2018

காரைக்கால் வானொலி

 
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவையை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்கால் பண்பலை வானொலி (100.3) ஒலிபரப்புத் திறன் 6 கிலோ வாட்டிலிருந்து 10 கிலோ வாட்டாக திங்கள்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கலந்துகொண்டு, நிலைய கட்டுப்பாட்டு அறையில் புதிய கூடுதல் திறனை மக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தார்.
நிலைய நேரடி நிகழ்ச்சியில், நேயர்களிடையே ஆட்சியர் பேசினார். காரைக்கால் வானொலி நிலையத்தில் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு செய்ததன் மூலம் பல மாவட்டங்களைச் சேர்ந்த நேயர்கள் நல்ல பயனை அடைவார்கள். கஜா புயலின்போது, காரைக்கால் வானொலியின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.
தொடர்ந்து புயல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதன் மூலம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வானொலி நிலையத்தின் பணி வரவேற்புக்குரியதாக இருந்தது. தொடர்ந்து அரசின் நலத் திட்டங்களின் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவை வெற்றிபெற வாழ்த்துவதாக நிகழ்ச்சியின்போது ஆட்சியர் குறிப்பிட்டார்.

விரிவாக படிக்க

Sunday, December 16, 2018

புதுவை அகில இந்திய வானொலி


புதுவை அகில இந்திய வானொலியில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 16-ஆம் தேதி) முதல் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இதுகுறித்து புதுவை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தலைவர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
மார்கழி மாதம் பிறக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாள்தோறும் அந்த மாதம் முடியும் வரை காலை 6. 10 மணிக்கு புதுவை வானொலியின் முதல் அலைவரிசையில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.
டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரி பாடிய திருப்பாவை பாடல்களுடன், ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமனுஜ மகாதேசிகன், திருக்கோயிலூர் ஜீயர் எம்பெருமானார் ஸ்ரீநிவாச ராமனுஜ ஆச்சார்யா, தேரெழுந்தூர் ராமபத்ராச்சாரி ஆகியோர் வழங்கிய விளக்க உரைகளை வானொலி தனது ஒலிக் களஞ்சியத்தில் இருந்து ஒலிபரப்பு செய்கிறது.

இதேபோல, பிரேமா, ஜெயா ஆகியோர் இணைந்து பாடியுள்ள திருவெம்பாவை பாடல்களுடன், சுகி சிவம், தெய்வநாயகம் ஆகியோர் வழங்கிய விளக்கவுரைகளும் ஒலிபரப்பாகின்றன. திருப்பள்ளி எழுச்சியில் சுகி சிவம் விளக்கவுரையுடன், சீர்காழி திருஞான சம்பந்தம் பாடியுள்ள பக்திப் பாடல்கள்
ஒலிபரப்பாகும். புதுவை வானொலியின் ரெயின்போ பண்பலை 102.8-இல் திருப்பாவை - திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களும், விளக்க உரைகளும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு ஒலிபரப்பாகும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமணி

Tuesday, December 11, 2018

இலங்கை வானொலி துறையில் தடம்பதித்த Yes Fm



நாட்டின் முதற்தர ஆங்கில வானொலி சேவையான Yes FM இன்று (10) தனது 25 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. ​1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி Yes FM இலங்கை வானொலி துறையில் தடம்பதித்தது.
சமகால இசையை இளம் இசை இரசிகர்கள் வசம் கொண்டுசேர்த்த Yes FM அவர்களை தம்வசம் ஈர்த்துக்கொண்டது.

சாதாரண வானொலிகளை மிஞ்சிய வகையில் கடந்த 25 வருடங்களாக இசைப்புரட்சி நடத்திவரும் Yes FM, எம்.எல்.ரீ.ஆர், மைக்கல் போல்ட்டன் மற்றும் வெங்க போய்ஸ் போன்ற புகழ்பூத்த மேலைத்தேய இசைக்குழுக்களின் இசைப்படைப்புக்களையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டுசேர்த்தது.

இலங்கை வானொலி வரலாற்றில் ஆங்கிலம் பேசும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ச்சியாக முதற்தரத்துடன் திகழும் யெஸ் எப்.எம். ரசிகர்களுக்கு இசையை மட்டும் வழங்காது தகவல்களையும் கொண்டுசேர்க்கும் ஊடகமாக பரிணமித்தது. யெஸ் எப்.எம். தனது 25 ஆவது பிறந்ததினத்தை எச்சலன் சதுக்கத்தில் இன்று கொண்டாடியது.

மேலும் படிக்க

Thursday, December 06, 2018

Ham Conference / ஹாம் ரேடியோ கருத்தரங்கு

தமிழ் நாட்டில் ஹாம் ரேடியோவிற்காக ஆண்டு தோறும் நடக்கும் ஒரே சந்திப்பு வரும் 9 பிப்ரவரி 2019-ல் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் நினைவுப் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும். ஆனால் அதற்கு பதிவு செய்தல் அவசியம்.

Those who are interested to know about Ham Radio. Please attend this  Mahameet conference. Registration is free. Register delegates will get the certificate. 

பதிவு செய்ய கீழ்கண்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYDrg4C8ma5RJVgQV3LeyWfvdppi6pcOGFmKiIaOrWJ3XHDw/viewform

Saturday, December 01, 2018

மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் - ஜகதீஷ் சந்திர போஸ்







முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் பற்றி குறித்திருந்தார் , அவற்றை உருவாக்கி காட்டியிருந்தார் ஹெர்ட்ஸ். இருபத்தி நான்கு அடி மட்டுமே அளவு கொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ, வழிகாட்டியோ இல்லாமல் இது சார்ந்த ஆய்வில் தானே இறங்கினார் போஸ். லாட்ஜின் ஹெர்ட்ஸ் மற்றும் அவருக்கு பின்வந்தவர்கள் என்கிற புத்தகம் தந்த உந்துதலில் இயங்கினார்.

கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார். அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். ஆனால், அந்தக் கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணர முடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்த கருவியில் கொண்டுவந்தார்.

மேலும் குறித்து சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றி அமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார் ; சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார். கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறை கடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து, மீண்டும் அதை திரும்பப் பெறுகிற மாயத்தை செய்தது.

அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்து. ஐந்து மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு "மைக்ரோவேவ்" என்று அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடி மருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ்.

அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார்.


ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் "U" வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச ட்யூபை நேராக மாற்றினார். "S" என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார். அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு, "தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேடண்ட் செய்ய மறுத்தது",

“என் தந்தையைப் போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை” என்றார். அந்த போஸ் கண்டுபிடித்த கருவியை "தான் கண்டுபிடித்தேன்" என்று பதிவும் செய்து கொண்டார் மார்க்கோனி.

போஸ் தான் அதைக் கண்டு பிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது....

விரிவாக படிக்க

நன்றி newstm.in


Sunday, November 25, 2018

உறவு சங்கம விழா 2018 / RadioVeritasAsia listeners Meet 2018

கவிதை, கட்டுரை, குறும்படம், ஓவியம் & நடனம்
ஆகிய போட்டிகளின் தலைப்புகளும் விதிமுறைகளும் 
#vuravuchangamam #RadioVeritasAsia #RVATamil #veritastamilpani

கவிதை  போட்டிக்கான தலைப்பு

இன்றைய இளையோரும் தமிழ் மரபும்

கவிதை 25 வரிகளுக்கு மிகாமல்
முதல் பரிசு ₹2,000
இரண்டாம் பரிசு ₹1,500
மூன்றாம் பரிசு ₹1,௦௦௦
உங்கள் படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2 டிசம்பர் 2018

கட்டுரை போட்டிக்கான தலைப்பு

இன்றைய இளையோரும் தமிழ் மரபும்

கட்டுரை 4 பக்கத்திற்கு மிகாமல்
முதல் பரிசு ₹2,000
இரண்டாம் பரிசு ₹1,500
மூன்றாம் பரிசு ₹1,௦௦௦
உங்கள் படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2 டிசம்பர் 2018

குறும்பட போட்டிக்கான தலைப்பு

இன்றைய இளையோரும் தமிழ் மரபும்

குறும்படம் 10 நிமிடத்திற்கு மிகாமல்
முதல் பரிசு ₹5,000
இரண்டாம் பரிசு ₹3,000
மூன்றாம் பரிசு ₹2,000
உங்கள் படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2 டிசம்பர் 2018 .

உங்களுடைய குறும்படங்களை உங்களுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து அதனுடைய லிங்கை எங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப நாங்கள் அதை #RadioVeritasTamil என்ற ஹேஸ்டேக் உடன் பதிவேற்றம் செய்வோம்.

நீங்களும் கூட அதே ஹேஸ்டேக் உடன் உங்களுடைய வலைதளங்களில் பதிவேற்றம் செய்யலாம். அதனை எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

இந்த பதிவேற்றத்தில் காணப்படும் share, comment & likes பொருத்து உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கப்படும்.

பள்ளி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி
தலைப்பு அன்பான வாழ்வு
முதல் பரிசு ₹2,000
இரண்டாம் பரிசு ₹1,500
மூன்றாம் பரிசு ₹1,000 பள்ளிகளியேயே ஓவியங்கள் வரைந்து 
தலைமை ஆசிரியரின் கடித்ததோடு கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
உங்கள் படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2 டிசம்பர் 2018.

இளையோருக்கான நடனப்போட்டி
நடனப்போட்டியின் பாடல்கள் 
விழிப்புணர்வு அல்லது கிறிஸ்துவ பாடல்களாக இருத்தல் அவசியம். 
ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல்,
5 முதல் 15 பேர் கொண்ட குழுக்களாக பங்கு பெறுதல் அவசியம்.
முதல் பரிசு ரூ. 10 ,000
இரண்டாம் பரிசு ரூ. 5 ,000
மூன்றாம் பரிசு ரூ. 3 ,000
போட்டி நடைபெறும் நாள் 9 டிசம்பர் 2018
நேரம்: காலை 9 மணி
இடம்: புனித அந்தோணியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாதாகோவில் தெரு மந்தவெளி சென்னை 28.

உங்கள் பெயர்களை பதிவு செய்ய, படைப்புகள் வந்துசேரவேண்டிய முகவரி

இயக்குநர், 
தோன் குவனெல்லா உயர் குருமடம், 
29 , பழைய காவல் நிலைய சாலை, 
கரையஞ்சாவடி, பூவிருந்தவல்லி, 
சென்னை 600056. 
அலைபேசி (0)80 56 18 81 40 .

நாள்: 02 .12 .2018 .

இடம்:
இடம்: புனித அந்தோணியார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாதாகோவில் தெரு மந்தவெளி சென்னை 28.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் நபர் கட்டாயமாக எங்கள் முகநூல் பக்கத்தை லைக் செய்திருக்க வேண்டும் .
எங்கள் 
 மின்னஞ்சல tamilrva@gmail.com

Inline image


Thursday, November 22, 2018

பிரசார் பாரதி தொடங்கப்பட்ட நாள் / Prasar Barathi Foundation Day

My talk on "Prasar Barathi Foundation Day" (special program) will be broadcast on 23-11-2018 in All India Radio Chennai A (720 kHz) @ 7 pm & FM Gold (100.1 MHz) @ 6 pm. Also all the All India Radio Stations in Tamil Nadu will relay the same @ 7 pm.

பிரசார் பாரதி தொடங்கப்பட்ட நாளை ஒட்டி எனது சிறப்புரையை 23-11-2018 அன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலியின் சென்னை நிலையம் அலைவரிசை ஒன்று (720 கி.ஹெ) மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து நிலையங்களும் ஒலிபரப்பு செய்யவுள்ளது. சென்னை எப்.எம் கோல்ட் 100.1 மெ.ஹெ-ல் மாலை 6 மணிக்கு இதே நிகழ்ச்சியை கேட்லாம்.

#பிரசார்பாரதி #அகிலஇந்தியவானொலி #PrasarBarathi #AllIndiaRadio #FMGold


Inline image

Inline image


லமாகான் அமெச்சூர் சந்திப்பு / The Lamakaan Annual Radio Convention 2019

வரும் 19 & 20 ஜனவரி 2019-ல் லமாகான் அமெச்சூர் ரேடியோ சந்திப்பு ஹைத்ராபாத்தில்
நடைபெற உள்ளது. பதிவு கட்டணம் ரூ.250. 

Registrations are now open for the most awaited technical event- *The Lamakaan Annual Radio Convention 2019 or LARC-19*
This power packed event will be for two days *(January 19th & 20th 2019)* with a whole lot of technical sessions, workshops, demos and informal meets thrown in. 
Sessions range from the simple arduino based projects to building the satellites. 
Workshops include the ubitx, antenna analyzers and much much more.... 
And of course one cannot miss the tasty hyderabadi biryani made available as a complementary lunch on the second day. Snacks and hyderabadi chai will be available throughout the day. 
*Registration fee is 250/- inclusive of both the days.*
*Hurry Up and visit LARC-2019 – Lamakaan Anual Radio Convention

LARC-2019 – Lamakaan Anual Radio Convention


for further details and online registration.*

Inline image


Sunday, November 18, 2018

பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை

சீனத் தலைநகரில் உள்ள பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் பல்வேறு வெளிநாட்டு மொழிகள் கற்பிகப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழ்த் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. நான்காண்டு பட்டபடிப்பு பாடத்திட்டம் கொண்ட இந்த தமிழ் வகுப்பில் 10 சீன மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதுகுறித்து அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் சூ ஷின் என்ற சீனப் பெண்ணைச் சந்தித்தோம்.. தமிழ் ஆர்வத்தால் தனது பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டு, தமிழால் பெருமை பெற்று விளங்கும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்: 

நன்றி:

தமிழ் வானொலிகளின் புதிய சிற்றலை அலைவரிசைகள் B18

Freq▼    Station               UTC               Days   Language Pwr Az           Transmitter Site

4920        AIR Chennai          00:15       02:45       1234567  Tamil       50            ND           IND Chennai
5965        CHINA RI                14:00       14:57       1234567  Tamil       100          173          TKS Kashi-Saibagh
7250        VATICAN RADIO    14:50       15:10       1234567  Tamil       250          270          PHL Tinang VAT
7270        ALL INDIA R           00:00       00:45       1234567  Tamil       100          ND           IND Chennai
7270        ALL INDIA R           11:15       12:15       1234567  Tamil       100          ND           IND Chennai
7360        CHINA RI                15:00       15:57       1234567  Tamil       100          173          TKS Kashi-Saibagh
7380        AIR Chennai          03:00       09:30       1234567  Tamil       50            ND           IND Chennai
9490        CHINA RI                15:00       15:57       1234567  Tamil       100          174          TKS Kashi-Saibagh
9505        VATICAN RADIO    14:50       15:10       1234567  Tamil       250          270          PHL Tinang VAT
9610        CHINA RI                14:00       14:57       1234567  Tamil       100          174          TKS Kashi-Saibagh
9610        Australia (HCJB)    13:00       13:15       ..3.5.7      Tamil       100          335          AUS Kununurra      HCA
9720        SRI LANKA BC       11:15       12:15       1234567  Tamil       125          345          CLN Trincomalee
9800        CHINA RI                 02:00       02:57       1234567  Tamil       100          173          TKS Kashi-Saibagh
9835        ALL INDIA R           00:00       00:45       1234567  Tamil       100          174          IND Delhi Kingsway)
11580      FEBA                      13:30       13:45       ..34...       Tamil       200          290          GUM Agana          
11590      ALL INDIA R           00:00       00:45       1234567  Tamil       250          120          IND Panaji             
11865      Australia (HCJB)    13:00       13:15       .2.456.     Tamil       100          310          AUS Kununurra      HCA
11865      Australia (HCJB)    13:15       13:30       ..3...7       Tamil       100          310          AUS Kununurra      HCA
11870      CHINA RI                 02:00       03:00       1234567  Tamil       100          173          TKS Kashi-Saibagh
11945      AWR                       15:00       15:30       1234567  Tamil       250          111          BUL (Sofia)            
13600      CHINA RI                 03:00       03:57       1234567  Tamil       500          234          CHN Kunming       
13695      ALL INDIA R           11:15       12:15       1234567  Tamil       500          108          IND Bengaluru      
13730      CHINA RI                03:00       03:57       1234567  Tamil       100          173          TKS Kashi-Saibagh
13795      ALL INDIA R           00:00       00:45       1234567  Tamil       500          108          IND Bengaluru

Friday, November 16, 2018

ரேடியோ காஷ்மீர் / Book on airwaves war in Indo-Pak conflict


Inline image

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு வானொலிக்கு பெயர் 'அகில இந்திய வானொலி', ஆனால் ஜம்மு காஷ்மீரில் மட்டும் அதற்கு பெயர் 'ரேடியோ காஷ்மீர்'. இது போன்று இன்னும் பல சுவாரஷ்யமான விபரங்கள் அறிந்து கொள்ள படியுங்கள் ராஜேஷ் பட் எழுதி இந்த வாரம் வெளிவந்த 'ரேடியோ காஷ்மீர்' எனும் இந்த புத்தகத்தினை. 

Book on airwaves war in Indo-Pak conflict

https://www.business-standard.com/article/pti-stories/book-on-airwaves-war-in-indo-pak-conflict-118111500544_1.html

Via Alokesh Gupta, DX_India

DX CONTEST 2018

The Czechoslovak DX Club's "Grand Tour Across All Continents" dx contest is to be held from Friday, 30 November 2018, 0000 UTC, to Sunday, 9 December 2018, 2400 UTC. It is open to all shortwave listeners regardless to their membership in any DX club.

Full details here:  

Thursday, November 15, 2018

இலங்கை வானொலி பற்றி தமிழகம் தந்திருக்கும் நூல்

நன்றி: இலங்கை தினகரன் வாரமஞ்சரி

இலங்கை வானொலி என்பது இலங்கையில் முதலில் தோன்றிய முதன்மை வானொலி நிலையகமாகும். சினிமாப் பாடல்களைக் கொண்டே சிறப்பான நிகழ்ச்சிகளை தயாரித்தவர்கள். இசை, நாடகம் மட்டுமன்றி அறிவியல், சமய, அரசியல், இலக்கிய நிகழ்ச்சிகளையும் தயாரித்தவர்கள்.

புலமைசார் பல ஒலிபரப்பாளர்களை உருவாக்கிய வானொலி நிலையமும் அதுவே.

இத்தகைய புகழ்பெற்ற இலங்கை வானொலி நிலையம் பற்றி இலங்கை மற்றும் இந்திய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று இப்பொழுது வெளிவந்திருக்கிறது. 'பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி' என்ற இந்த நூலை சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல்துறைப் பேராசிரியர் தங்க. ஜெய்சக்திவேல் தொகுத்துள்ளார்.

225 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மூன்று தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது. நூலில் 30 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை அறிஞர்கள் பலர் எழுதிய சிறப்பு மிக்க கட்டுரைகள் பல இந்நூலை அலங்கரிக்கின்றன.

'வர்த்தக ஒலிபரப்பின் தமிழ் வேர்: எஸ்.பி. மயில்வாகனம் என்ற தலைப்பில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதிய கட்டுரை சிறப்பிடம்பெறுகிறது.

'இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள்' என்ற நூலுக்கு நேர்மையான விமர்சமொன்றை பேராசிரியர் துரைமனோகரன் எழுதியுள்ளார்.

'கொழும்பு வானொலி' என்ற தலைப்பில் மூத்த ஒலிபரப்பாளர் அப்துல்ஜபார் ஆரம்ப கால இலங்கை வானொலியின் வரலாற்றை எழுதியுள்ளார். 'வானொலி நாடகங்கள்' பற்றி இரண்டு கட்டுரைகள் இடம்பெறுகின்றன. 'நாடகங்களின் நோக்கம்' பற்றி மூத்த ஒலிபரப்பாளரான ஜோர்ஜ் சந்திரசேகரன்.

விளக்கக் கட்டுரை எழுதியுள்ளார்.

'வானொலி நாடகங்களில் வரலாறு' என்ற தலைப்பில் முகநூலில் வானொலி பற்றி வசை பாடும் ஜி.பி. வேதநாயகம் வரலாற்றுக் கட்டுரை எழுதியுள்ளார்.

இலங்கை வானொலியின் ஆங்கில சேவையில் பல தமிழ் பேசும் ஒலிபரப்பாளர்கள் கடமையாற்றியிருக்கிறார்கள். இவர்கள் பற்றிய விபரக் கட்டுரையை கே.எஸ். சிவகுமாரன் எழுதியிருக்கிறார்.

இலங்கை ஒலிபரப்பாளர்கள் பலர் பலநூல்களை எழுதியிருக்கிறார்கள். இவர்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்ததாக தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

இலங்கை எழுத்தாளர்கள் மட்டுமன்றி இந்திய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை வானொலியின் அபிமானியும் சட்ட அறிஞருமான கொண்டேக் கவுண்டன் பாளையம். எஸ். முத்துக்குமார், 'தமிழகம் வந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளனர்.

இலங்கை வானொலியின் இன்னுமொரு அபிமானியான வள்ளியூர் ஏ.ஜீ.எஸ். ரவீந்திரன் 'இலங்கை வானொலி நிலையத்துக்கு தான் வந்த பயண அனுபவங்களைக் கட்டுரையாக எழுதியுள்ளார்.

'வானொலி மஞ்சரிகள்' என்ற தலைப்பில் மதுரைச் செல்வன் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். இந்நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் இலங்கை வானொலி மீது அபிமானம் கொண்டவர். ஏற்கனவே பி.பி.ஸி. தமிழோசையில் கடமையாற்றியவர். இதற்கு முன்பு 'சீனாவில் தமிழ் ஒலிபரப்பு' என்ற நூலை எழுதியிருந்தார்.

சென்னை பல்கலைக்கழக இதழியல் துறையினர் வெளியிட்ட இந்நூலை கொழும்பு பூபாலசிங்கம் புத்தக சாலையினர் இறக்குமதி செய்து வெளியிடுகின்றனர்.

தம்பிஐயா தேவதாஸ்

Saturday, November 03, 2018

அகில இந்திய வானொலியின் புதிய நிலையம் AIR Mathura & AIR Naushera

அகில இந்திய வானொலியின் புதிய நிலையம் மதுராவில் "மதுர பிருந்தாவனம்" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.


The 1 kW Medium Tx on AIR Mathura in Uttar Pradesh on 1584 kHz was decommissioned 2 days back viz. on  31 Oct 2018. This was replaced by new 10 KW FM tx on 102.2 MHz which was started last  month ie 18 Oct 2018.


This station identifies as "Akashwani "Mathura Brindavan". According to Hinduism, Lord Krishna was born here.

Every year on the Birthday of Krishna (date varies very year) there are special broadcasts from this station at around midnight  which is relayed by many stations of AIR.


--------------


The 10 kW FM tx of AIR Naushera  (Relay Station) in Jammu & Kashmir was started yesterday (1 Nov 2018) on 102.6 MHz.There is already a 20 kW MW Tx there operating on 1089 kHz.


Via Jose Jacob DX INDIA YG

Wednesday, October 24, 2018

சென்னையில் பிபிசி கருத்தரங்கு

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் பிபிசி-யானது 'பொய் செய்திகள்' குறித்த ஒரு நாள் கருத்தரங்கத்தினை நடத்துகிறது. இது வரும் 12 நவம்பர் 2018 அன்று காலை 10 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள முன் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

Tuesday, October 02, 2018

AAIR observes the External Broadcast Day

AIR observes the External Broadcast Day on 1st October 2018

Another momentous occasion for us in the External Services of All India Radio. For the first time in its history we are observing the External Broadcast Day on 1st October 2018. This also marks the beginning of a yearlong celebration of the 80th anniversary of External broadcast in India.

Eight decades is a long time in the life of an individual. Like in case of a human being as during this period , an institution traverses through many challenges, trials and tribulations. External Services of All India Radio is also no exception to this. Since its inception in 1939 it has passed through its hours of glory and relative sunset moments. From a buoyant high of 37 language broadcast at the height of the World War II in 1945 it plummeted to only 16 just before the dawn of Independence, when it was relegated to insignificance. Independence infused new life into it when it emerged as the voice of a newborn nation trying to announce herself to the world. Notwithstanding the initial bonhomie, external broadcast again fell into disuse as never ever its full potential as a significant tool for public diplomacy and instrument of foreign policy and international relations was fully comprehended, explored and hence not exploited by those in the business of diplomacy. Unlike elsewhere in the world; diplomacy, foreign policy and external broadcast continued to be conducted in silos. Over the years, this disconnect got ossified. World around was however changing in the meanwhile and was changing fast. Countries with whom we unfortunately have a zero sum relations were making strides in the domain of public diplomacy through the medium of radio adding language after language to their bouquet and were adopting modern technology to reach out to the world. In contrast, external broadcast here was gasping and battling out the institutional apathy. Four years ago when after an eventful tenure in the Ministry of Rural Development involving nationwide implementation of development communication strategies, I joined External Services Division for my second stint, the place appeared frozen in time and like a living fossil as I and my wife who accompanied me walked into the place. An all pervading gloom was writ large on every face as the diiktat for it's imminent closure had been received and everyone was waiting for the inevitable final pull of the hangman's lever. It was at this crucial cross roads of ESD's history , I was called upon by the Director General and given the mantle of External broadcast and reposed his trust . I felt humbled as giants and stalwarts of Indian and World broadcasting like Ms. Mehra Masani, P.C. Chatterjee, K.P. Shunghloo, U.L. Baruah , N.L Chawla among others had adorned this position. But the pygmy in me refused to be the daunted and become the " First minister in King's government to preside over its liquidation." Instead, I took the bull by horns. I gave myself 6 months to script the turn around story of External Broadcast or quit. It indeed was a tall order. Enthusing the colleagues who had their spirits at bootlace level and gaining their confidence to partner in this uphill ride and bringing the external stakeholders on board had to be done quickly. A technological leapfrogging was also crucial. I must confess, once convinced all my colleagues and my seniors particularly Mr. Fayyaz Sheheryar, the DG stood by me. The culmination of all that is, today no longer anyone talks about closing down ESD or it being " a colossal national wastage and Rs. 100 crore going down the drain." Now the talk is about strengthening the ESD. We have added new services. Gone digital. Have 28 multimedia Websites and Apps of international standard for our language services. We are now present on alternate platforms like Radio Garden, Tune in, Alexa voice command system. Our relationship with MEA is no longer episodic. We are reconnecting to our listeners and patrons every passing day on every platform in which we have made our presence.

It is in this backdrop, the celebration of the first External Broadcast Day and the beginning of the observence of the 80th anniversary is personally significant and gratifying for me.

Source : Amlanjyoti Majumdar
http://airddfamily.blogspot.com/2018/10/for-first-time-in-its-history-air-is.html