முன்னொரு காலத்தில் ராமேஸ்வரம் தீவில் ஒரு வழமை இருந்தது. மணமகள் மறுவீடு செல்லும் போது சீர்வரிசையில் அஞ்சரைப் பெட்டி இருக்குமொ இல்லையோ கண்டிப்பாக ஒரு பிலிப்ஸ் வானொலிப் பெட்டி இருக்கும். அதனை அந்த மணமகளும் மிகச் சிரத்தையோட வானொலிப் பெட்டியில் ஒலிக்கின்ற குரலை தன் தாய் தந்தையின் குரலாகவே பாவிக்க ஆரம்பித்து விடுவாள். இவ்வாறான பந்தம் இன்று தீவில் இல்லை. வானொலி பெட்டிக்கு பதிலாக பெரிய அளிவலான தொலைக்காட்சி பெட்டிகளை சீர்வரிசையில் சேர்த்து விடுகின்றார்கள்.
சமீபத்தில் தீவில் சென்றபோது தனுஸ்கோடி சென்றிருந்தென். இலங்கை வானொலியின் வர்த்தக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் தனுஸ்கோடி மக்களுக்கு இலங்கை இருந்து கடல் கடந்து வரும் சக்தி பண்பலையும், தென்றல் பண்பலையையும் கேட்பதை கவனித்தேன்.
தனுஸ்கோடி மக்களுக்கு என்று உள்ள ஒரெ ஊடகம் வானொலிப் பெட்டிகள் மட்டுமெ. அவர்கள் செய்திகள் கேட்பதற்கு தமிழ்நாடு வானொலிகளையும், பொழுதுபோக்கிற்கு இலங்கை வானொலியையுமும் நாடுகிறனர். முன்பு வானொலி கேட்பது போல் இன்று இலங்கை வானொலிகள் இல்லை எனவும், மிகுந்த இறைச்சலாக இருப்பதாகவும், ஆனால் வானொலி கேட்கும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை என்று தெரிவித்தார் ஒரு தனுஸ்கோடிவாசி என்னிடம்.
நேற்று மாலை பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார் என்ற தகவலை இலங்கை வலைத்தளங்களில் வாசித்தவுடனெயெ அவருடன் பணியாற்றிய ஜெயசீலன் ஐயாவிடம் கைபேசி வாயிலாக தெரிவித்தேன். மேலும் விரிவாக படிக்க சொடுக்கவும்
No comments:
Post a Comment