சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Saturday, March 24, 2012
நினைவலைகளில் சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம்
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் மறைவு!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த வானொலி அறிவிப்பாளர் வானொலிக்குயில் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார். தமிழ் வானொலிகளின் வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள ராஜேஸ்வரி சண்முகம் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். ராஜேஸ்வரி சண்முகம் உலகப் புகழ் பெற்ற தமிழ்ப் பெண் அறிவிப்பாளர்களில் முன்னணியில் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (உலகத் தமிழர்.காம் 24/04)
@@@@@@
வானொலிக் குயில் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
வானொலிக் குயில் என்று செல்லமாய் அனைவராலும் அறியப்பட்ட திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார். இலங்கை வானொலி வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள அன்னார் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். (அதரெண.காம் 24/03)
@@@@@@
வானொலிக் குயில் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!
வானொலிக் குயில் என்று செல்லமாய் அனைவராலும் அறியப்பட்ட திருமதி இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமாகிவிட்டார்.
இலங்கை வானொலி வரலாற்றில் தனக்கென தனியிடம் பதித்துள்ள அன்னார் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர். (படலை.காம் 24/03)
@@@@@@
இலங்கை வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் மரணம்
பிரபல அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். (தமிழ்வெளி.காம் 24/03)
@@@@@@
புங்குடுதீவைப் புகுந்த இடமாகக் கொண்ட சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. (புங்குடுதீவு.காம் 24/03)
@@@@@@
சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இரண்டாம் இணைப்பு:
யாழ்ப்பாணத்தில் வைத்து மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சியான பொங்கும் பூம்புனல் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட வழங்கியதில், ராஜேஸ்வரி சண்முகம் பிரபல்யம் பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துக்கு சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு காலமானார். அவரின் பூதவுடல் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (வாகீசம்.காம் 24/03)
@@@@@@
வானொலிக் குயிலின் குரல் ஓய்ந்தது
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் நேற்று (24.03.2012) வெள்ளிக்கிழமை தனது 72ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே காலமாகியுள்ளார்.
தமிழ் வானொலி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலி சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பலரது பாராட்டையும் பெற்றதுடன், சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றி இளைய தலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (Jaffnatoday.com 24/03)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment