பிரபல அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!
இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். ‘வானொலிக் குயில்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கைவானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.
கொழும்பை பிறப்பிடமாக கொண்ட ராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார். சிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். (தினக்கதிர் 23/03)

@@@@@@
பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் (Rajeshwari Shanmugam) இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.
"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். (தமிழ் மிரர் 23/03)
"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். (தமிழ் மிரர் 23/03)
@@@@@@
சிரேஸ்ட அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்
வானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் (Rajeshwari Shanmugam) இன்று காலமானார்
தமிழ் வானொலி வரலாற்றில் ராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு.
தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் பிறந்த இவர், சிறு வயதிலேயே இலங்கைக்கு வந்து வாழத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தமிழ்வின்.காம் 23/03)
அவரது குரலினைக் கேட்க இங்கு சொடுக்கவும்
No comments:
Post a Comment