Thursday, November 29, 2007

இலங்கை நேயர்கள் கவனத்திற்கு: பிபிசி தமிழோசை

இலங்கை நேயர்கள் கவனத்திற்கு

நேயர்களே, நேற்றைய (28/12/2007) பிபிசி தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.
நேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.
இலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.

நன்றி: பிபிசி தமிழோசை
Source: http://www.bbc.co.uk/tamil/news/story/
2004/05/040528_tamil_currentaffairs.shtml

Thursday, November 15, 2007

கோவையில் ரேடியோ சிட்டி


கோவையில் ரேடியோ சிட்டி தனது ஒலிபரப்பினை கடந்த 13 நவம்பர் 2007 அன்று 91.1 மெ.ஹெ-சில் தொடங்கியது.
ரேடியோ சிட்டியின் இயக்குனர் அபுர்வ புரோகிட் இது பற்றி கூறுகையில், " கோவையின் மொழியில் அனைத்து நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டு நேயர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த உள்ளது".
காலையில் "நம்ம சிட்டி, என்ரென்ரும் புண்ணகை ஆகிய நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் புகழ்பெறும் என நம்புகிறோம்" என்றார்.

Saturday, November 03, 2007

ஹாலோ எப்.எம் சோதனை ஒலிபரப்பு

கோவையில் ஹாலோ எப்.எம்-மின் சோதனை ஒலிபரப்பினை கடந்த நவம்பர் 1-ல் இருந்து கோவைப் பகுதி மக்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். முறையான ஒலிபரப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கோவையில் ரேடியோ மிர்ச்சி


கோவையில் ரேடியோ மிர்ச்சி தனது சோதனை ஒலிபரப்பினை கடந்த நவம்பர் 1, 2007 அன்று 98.3 மெ.ஹெ-சில் தொடங்கியது.
கோவை ரேடியோ மிர்ச்சியின் இயக்குனர் வினை பிரசாத் இது பற்றி கூறுகையில், " கோவை மொழியில் அனைத்து நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டு நேயர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த உள்ளது".
காலையில் "பில்டர் காபி, ஹாலோ மதுரை, லேடிஸ் காலனி, ஹோலி உடான்ஸ் அகியவையும் மதியம் ஜூட், கடல கடல ஆகிய நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் புகழ்பெறும் என நம்புகிறோம்" என்றார்.