Friday, October 19, 2007

பிபிசியில் ஆட்குறைப்பு

எமது லண்டன் பிபிசியில், ''குறைந்தளவிலான ஆனால், தனித்துவமிக்க சிறப்பான நிகழ்ச்சிகளைத் தயாரித்ததல்'' என்ற ஆறு ஆண்டுகாலத் தீவிரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனம், தனது ஊழியர்களில் 2500 பேரை ஆட்குறைப்புச் செய்யவுள்ளதாக உறுதி செய்துள்ளது.
ஆயினும் தமிழ் சேவை உள்ளடங்கலான பிபிசியின் உலக சேவைக்கு இந்த ஆட்குறைப்பினால், உடனடியான நேரடிப் பாதிப்பு எதுவும் கிடையாது.
அதேவேளை, புதிய ஆட்கள் பணிக்குச் சேர்க்கப்படவுள்ளதாலும், யதார்த்தமான விரயங்களைத் தவிர்ப்பதன் மூலமும் உண்மையான ஆட்குறைப்பின் அளவு குறைவாகவே இருக்கும் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.
இங்கு பிரிட்டன் எங்கிலும் தொலைக்காட்சி உரிம வரி செலுத்தும் பாவனையாளர்கள், தாம் விரும்பும் நிகழ்ச்சிகளை, தாம் விரும்பும் நேரத்தில் பார்த்துக் கேட்க வழி செய்யும் நோக்கில், இணையத்திலும், மற்றும் ஏனைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களிலும், புதிய முதலீடுகளையும் பிபிசி செய்யவுள்ளது.
இந்தத் திட்டத்தை பிபிசி மறு ஆய்வு செய்யாவிட்டால், வேலைநிறுத்தங்கள் தவிர்க்க முடியாதவையாகிவிடும் என்று தொழிற்சங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உலகின் அனைத்து ஊடகங்களின் மீதும் தாக்கம் செலுத்தவல்ல, டிஜிட்டல் புரட்சியை உள்வாங்கிக்கொள்ளும் வகையில், பிபிசியும் தன்னை சிறிதாக்கிக் கொண்டாலும், இவற்றுக்கு தம்மை பொருந்தும் வகையில் மாற்றிக்கொள்ளவுள்ளது என்று இந்தத் திட்டத்தை அறிவித்த போது பிபிசியின் பணிப்பாளர் நாயகம் மார்க் தாம்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆகவே குறைந்த அளவு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும், ஆனால், உரிமக் கட்டணம் செலுத்துவோர் அவற்றில் அவர்கள், விரும்பியவற்றை, விரும்பிய பொழுது பார்த்துக் கேட்க ஏதுவாக அவை இருக்கும்.
பிபிசியின் கட்டிடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும். மேற்கு லண்டனில் உள்ள டெலிவிஷன் செண்டர், இந்தக் காலகட்ட இறுதியில் விற்பனை செய்யப்படும்.
பணியாளர் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.
2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டாலும், யதார்த்தத்தில் அந்த எண்ணிக்கை 1800 மாத்திரமே, ஏனென்றால், நீக்கப்படும் பல ஊழியர்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப பணிகளுக்கான மீண்டும் உள்வாங்கப்படுவார்கள் என்றும் மார்க் தாம்சன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தளங்களுக்கான செய்திப் பீடங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதால், செய்திப் பிரிவில் பணியாற்றும், 400 ஆட்கள் குறைக்கப்படுவார்கள்.
ஆனால், புதிய, இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட செய்திச் சேவைக்காகவும், விளையாட்டுச் சேவைக்காகவும், 300 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் முதலீடு செய்யப்படும்.

//////////

Monday, October 15, 2007

திருநெல்வேலி ஹலோ எப்.எம்-மின் முகவரி


கடந்த 13 அக்டோபர் 2007 அன்று திருநெல்வேலியில் ஹலோ எப்.எம் 106.4 அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இந்த நிலையத்தின் பொறுப்பாளராக திரு. மணி சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேயர்கள் அஞ்சலில் தொடர்பு கொள்ள முகவரி:
ஹலோ எப்.எம்,மாலை முரசு பில்டிங்,

33, மதுரை ரோடு,

திருநெல்வேலி - 627 001
பேச: 99946 68223

தூத்துக்குடியில் ஹலோ எப்.எம் தொடங்கப்பட்டது


கடந்த 15 அக்டோபர் 2007 அன்று தூத்துக்குடியில் ஹலோ எப்.எம் 106.4 அலைவரிசையில் தொடங்கப்பட்டது. இந்த நிலையத்தின் பொறுப்பாளராக திரு. காந்தி கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்பு கொள்ள அலைபேசி எண்: 99427 07284.

நேயர்கள் அஞ்சலில் தொடர்பு கொள்ள முகவரி:

ஹலோ எப்.எம்,287,

பாளையங்கோட்டை ரோடு,

தூத்துக்குடி - 628 001.
பேச: 98849 43333

Friday, October 05, 2007

மதுரையில் ரேடியோ மிர்ச்சி

மதுரையில் ரேடியோ மிர்ச்சி தனது ஒலிபரப்பினை கடந்த 29 செப்டம்பர் 2007 அன்று 98.3 மெ.ஹெ-சில் தொடங்கியது.


மதுரை ரேடியோ மிர்ச்சியின் இயக்குனர் கிருஸ்ண குமார் இது பற்றி கூறுகையில், " மதுரையின் மொழியில் அனைத்து நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டு நேயர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த உள்ளது".


காலையில் "பில்டர் காபி, ஹாலோ மதுரை, லேடிஸ் காலனி, ஹோலி உடான்ஸ் அகியவையும் மதியம் ஜூட், கடல கடல ஆகிய நிகழ்ச்சிகள் நேயர்கள் மத்தியில் புகழ்பெறும் என நம்புகிறோம்" என்றார்.

தர்மபுரியில் அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.

தர்மபுரியில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. தற்சமயம் சென்னை நிலையத்தின் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்து வருகிறது. பண்பலை 102.5 மெ.ஹெட்சில் தனது ஒலிபரப்பினை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செய்து வருகிறது.

விரைவில் 10 கிலொவாட் சக்தியில் 100.2 மெ.ஹெர்ட்சில் ஸ்டீரியோ முறையிலான ஒலிபரப்பினை தொடங்க உள்ளது.அறுபது கி.மீ சுற்றளவில் தற்பொழுது இதன் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்.

தர்மபுரிக்கு அருகில் உள்ள அதியமான்கோட்டையில் 1999-ல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1999-ல் பணி நிறைவடைந்தது. 2002 அக்டோபர் 2-ல் தனது முதல் சோதனை ஒலிபரப்பினைச் செய்தது.