Tuesday, May 22, 2007

அன்புடன் ஒலி 96.8

ஒலியில் நடக்கும் அண்மைய நிகழ்ச்சிகள் பற்றி தெரிய வேண்டுமா?இவ்வாரம் ஒலியில் வலம் வரும் நிகழ்ச்சிகள் பற்றி அறிய விருப்பமா?உங்களை போன்ற நேயர்கள் ஒலியை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கேட்க ஆவலா?ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு அன்புடன் ஒலி நிகழ்ச்சியை கேட்க மறவாதீர்கள்!இந்த நிகழ்ச்சியில் உங்கள் கருத்துக்களும் இடம் பெறலாம்.உங்கள் எண்ணங்களை கடிதம், மின்மடல், தொலைபிரதி வழியாக அனுப்பி வைக்கலாம்.அவற்றை வானொலியில் வாசிக்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.பிரதியை வைத்துக்கொண்டு, கடிதத்தை இந்த முகவரிக்கு அனுப்புங்கள்:

தயாரிப்பாளர்

அன்புடன் ஒலி 96.8

Farrer Road

அஞ்சல் பெட்டி எண் 968

சிங்கப்பூர் 912899

எங்கள் தொலைபிரதி எண் 62565968

சாதனை படைத்துள்ளது பிபிசி

நூறு நாடுகளில் நடத்தப்பட்ட சந்தை தொடர்பான ஆய்வு ஒன்றின்படி பிபிசி செய்திச் சேவையின் சர்வதேச நேயர்களின் அளவு சாதனை மட்டத்தை எட்டியுள்ளது.
பிபிசி நிறுவனத்தின் உலக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரிட்டனுக்கு வெளியே உள்ள நேயர்களுக்கான செய்தி இணையம் ஆகியவற்றை பார்ப்பவர்கள் மற்றும் கேட்பவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடம் வாரத்துக்கு 21 கோடியாக இருந்து தற்போது வாரத்துக்கு 23.3 கோடியாக அதிகரித்துள்ளது.
பிபிசி உலகசேவை வானொலி கடந்த வருடத்தில் இருந்ததை விட 20 லட்சம் நேயர்களால் அதிகரித்து, 18.3 கோடியை எட்டியுள்ளது.
/////////////

2004/05/040528_tamil_newsbulletin.shtml

Friday, May 18, 2007

நேயர் மன்றம் தொடர்பான கள ஆய்வு பணி

கிளீ......... நேயர்களே ஒரு தகவல் மன்ற தலைவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

கலை........ 2007ம் ஆண்டுக்கான நேயர் மன்ற கள ஆய்வு அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. மொத்தம் 490 கள ஆய்வு படிவங்களை அனைத்தின்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்ற தலைவர் எஸ் செல்வம் அவர்களுக்கு அனுப்பியுள்ளோம். மாவட்ட மன்ற தலைவர்களோ கிளை மன்ற தலைவர்களோ அனைவரும் தமது மன்ற உறுப்பினர்களின் நிலைமை தொழில் பின்னணி போன்ற தகவல் தெளிவாகவும் நுணுக்கமாகவும் படிவங்களில் பிரப்ப வேண்டும்.

கிளீ.........இது மட்டுமல்ல ஏற்கனவேயுள்ள நேயர் மன்றங்களின் தலைவர்களும் புதிதாக நிறுவப்பட்ட மன்ற தலைவர்களும் நிறுவ போகின்ற பிரதேசத்தின் மன்ற பொறுப்பாளர்களும் நடப்பு கள ஆய்வு பணியில் பங்கு ஆற்ற வேண்டும். ஆகவே இந்த நிகழ்ச்சியை கேட்ட பின் எஸ் செல்வம் அவர்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

கலை........அவருடன் தொடர்பு கொள்ள வல்ல செல்லிட பேசி எண் 9842038770. இந்த எண்ணை பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள்.

கிளி.......அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முகவரி பின் வருமாறு

S.SELVAM
381,BHARATHIYAR STREET
ASHOK NAGAR
LAWSPET,PONDICHERRY 605008
INDIA 印度

கலை.......கீழே இருக்கின்ற நேயர் மன்றம் தொடர்பான கள ஆய்வு படிவம்.

வெளிநாட்டில் சீன வானொலி நிலையத்தின்
நேயர் மன்றம் தொடர்பான கள ஆய்வு
முதலாவது பகுதி:

1. நேயர் மன்றத்தின் பெயர்
எந்த நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தது

2. மன்றம் நிறுவப்பட்ட நாள், திங்கள், ஆண்டு

3. மன்றத்தின் தலைவரின் பின்னணி(பெயர், பால், தொழில், வயது, கல்வி தகுதி, தொடர்பு முறை)

4. மன்றத்தின் நோக்கம்

5. மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை

6. உறுப்பினர்களில் ஆண்-பெண் விகிதம்

7. உறுப்பினர்களின் கல்வித் தகுதி

8. உறுப்பினர்களின் வயது விபரம்

(20 வயதிற்கு கீழ், 20-40 வயது, 40-60 வயது, 60 வயதிற்கு மேல்)

9.மன்றத்தின் நிலைமை விளக்கம்

10. மன்றத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டம்

(ஆண்டுக்கு எத்தனை புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது)

11. கூட்டம் அல்லது நடவடிக்கை நடத்தும் நிரந்தர இடம் உண்டா இல்லையா?

12. சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்க உறுப்பினர்களை அடிக்கடி அணிதிரட்டுவதா?

சீனா மற்றும் சீன வானொலி நிலையத்துடன் சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்வதா?

13. மற்ற சர்வதேச வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை கேட்க உறுப்பினர்களை அடிக்கடி அணிதிரட்டுவதா?

அத்துடன் இந்த நிலையங்களுடன் தொடர்பும் கொள்வதா?

14. மிகவும் விரும்பும் 3 சர்வதேச வானொலி நிலையங்களை குறிப்பிடுக

15. சீன வானொலி நிகழ்ச்சிகளில் மிகவும் விரும்பும் 3 நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுக

16. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி கேட்பதா?

இரண்டாவது பகுதி:

17.மன்ற உறுப்பினர்கள் சீனா பற்றி எந்த அளவில் அறிந்து கொண்டுள்ளனர்?

A. மிகவும் B. சாதாரணம்
C. குறைவு D. தெரியவில்லை

18. மன்ற உறுப்பினர்கள் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி மூலம் சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ள விட்டால் எந்த வடிவத்தில் செயல்படுவது நல்லது?

A. நேரடி கற்பித்தல்
B. வானொலி மூலம் கற்பித்தல்
C. இணையத்தின் மூலம் கற்பித்தல்
D. தொலை காட்சி மூலம் கற்பித்தல்

19. உங்கள் நாட்டு மக்கள் சீனாவின் எந்த செய்தி ஊடகங்களின் நிகழ்ச்சிகளை கேட்கலாம் அல்லது பார்க்கலாம்?

A. தொலைக் காட்சி B. வானொலி
C. செய்தியேடுகள் D. இணையம்

20. நீங்கள் உள்நாட்டிலிருந்து சீனாவின் எந்தெந்த இணைய தளங்களை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள்?

A. Sina.com.cn B. yahoo.com
C. sohu.com D. baidu.com
E. Chinabroadcast.cn F. மற்றவை

21. உங்கள் நாட்டு மக்கள் பொதுவாக வானொலி மூலம் எந்த வடிவத்திலான சீனாவின் நிகழ்ச்சிகளை செவிமடுக்க விரும்புகின்றனர்?

A. பொழுது போக்கு நிகழ்ச்சிகள்
B. செய்திகள்
C. பண்பாட்டு நிகழ்ச்சிகள்
D. சீன மொழி கற்பித்தல்
E. மற்றவை

22. உங்கள் நாட்டு மக்கள் சீன மொழியில் எத்தகைய சீன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விரும்புகின்றனர்?

A. தொலைகாட்சி நாடகம்
B. திரைப்படம்
C. பொழுத்து போக்கு நிகழ்ச்சிகள்
D. குதூகல கூட்டம்
E. சமூக செய்தி விளக்க திரைப்படம்

23. உங்கள் நாட்டில் சீன மொழி கற்பிக்கும் வகுப்பு உண்டா?

A. மிக அதிகம் B. அதிகம்
C. குறைவு D. மிக குறைவு

24. உங்கள் நாட்டில் சீன மொழி கற்பித்தல் எந்த வடிவத்தில் நடத்தப்படுகின்றது?

A. வீட்டு ஆசிரியர் B. தனியார் பள்ளி
C. பள்ளி பயிற்சி வகுப்பு
D. பள்ளியில் சீன மொழி கற்பித்தல் வகுப்பு

25. வெளிநாட்டில் சீன மொழி கற்பிக்கும் மையத்தை நிறுவுவதில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்? மூன்று பிரச்சினைகளை குறிப்பிடுக

26. உங்கள் நாட்டுக்கும் சீனாவுக்குமிடையில் வர்த்தகத் தொடர்பு எப்படி?

A. மிக அதிகம்
B. அதிகம்
C. சாதாரணம்
D. குறைவு
E. இல்லை

மூன்றாவது பகுதி

27. எதற்காக நீங்கள் சீன மொழி கற்றுக் கொள்கின்றீர்கள்?

28. சீன மொழி புத்தகம் பெறும் விருப்பம் உங்களுக்கு உண்டா?

29. படிப்பின் மூலம் சீன மொழி தேர்வில் கலந்து கொள்ளும் விருப்பம் உங்களுக்கு உண்டா?

30. உங்கள் மன்றத்திற்கு மொழி கற்பித்தல், கல்வி, மற்றும் பண்பாட்டு பரிமாற்ற அனுபவம் உண்டா?

A. உண்டு B. இல்லை

31. உங்கள் நாட்டில் சீன மொழி கற்பித்தல் வளர்ச்சி பற்றி மன்ற உறுப்பினர்கள் அறிந்து கொண்டுள்ளார்களா?

A. அறிந்து கொள்ளுதல் B. குறைவு
C. இல்லை

உங்கள் மன்ற உறுப்பினர்களுக்குச் சீன மொழி கற்று சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டா?

A. உண்டு B. இல்லை

32. சீன வானொலி நிலையம் கம்பியூஸியஸ் வகுப்பு நடத்துவது பற்றி மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியுமா?

A. தெரியும் B. சாதாரணம்
C. தெரியாது

சுயவிருப்பத்துடன் சீன வானொலி நிலையத்துடன் ஒத்துழைத்து வகுப்பு நடத்த மன்றம் விரும்புகின்றதா?

A. விருப்பம் B. விரும்பவில்லை

33. சீன வானொலி நிலையம் சீன அரசின் சீன மொழி பரவல் குழு ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் கற்பிக்கும் வரையறைகளுக்கு இணங்க கம்பியூஸியஸ் வகுப்புடன் தொடர்பற்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. இதை ஏற்க விருப்பமா?

A. விருப்பம் B. இல்லை

34. மன்றத்திற்கு வலிமையான பொருளாதார ஆற்றலும் நிர்வாக ஆற்றலும் உண்டா?கம்பியூஸியஸ் வகுப்பு நடத்துவதற்கு வீடு மனை மற்றும் நிதி முதலீட்டையும் ஆட்களையும் வழங்க முடியுமா?

A. முடியும் B. முடியாது

குறிப்பு:
மன்றத்தின் பின்னணி பற்றி விபரமாக எழுதிடுக.
மன்றக் கூட்டம் தொடர்பான 2, 3 நிழற்படங்களை அனுப்புக.
வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜுலை 10ம் நாள்

sarvadesavanoi


பிபிசி தமிழோசையில் விடைபெற்றார் அன்பரசன்

தமிழோசையில் கடந்த ஆறு ஆண்டு காலத்துக்கும் மேலாக நம்மோடு பணியாற்றி உங்களுக்கு நல்ல தரமான செய்திகளை தருவதில் ஊக்கமுடன் பணியாற்றிய நமது அன்பரசன் இன்றுடன் தமிழோசையிலிருந்து விலகுகிறார்.

அன்பரசன் பிபிசியிலிருந்து விலகவில்லை, பிபிசியின் ஆங்கிலப்பிரிவுக்கு மாற்றலாகியே செல்கிறார்.
நம்மோடு பணியாற்றிய கடந்த ஆறு ஆண்டுகளில், அன்பரசன், அன்றாட தயாரிப்புப் பணிகளை திறம்பட செய்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்துதந்துள்ளார் என்பதை நேயர்களாகிய நீங்கள் அறிவீர்கள். 2003ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலம் குறித்த பெட்டகம் , 2004 சுனாமியில் அந்தமான் தீவுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, 2005ல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள், பின்னர் 2006ல் ஜெனீவாவில் நடந்த இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் அன்பரசன் தமிழோசைக்காக தயாரித்து தந்த செய்திகள் குறிப்பிடத்தக்கவை.

தமிழோசையிலிருந்து பிரிந்து செல்லும் அன்பரசனுக்கு நமது வாழ்த்துக்கள்.
040528_tamil_currentaffairs.shtml

Tuesday, May 08, 2007

DTH-Radio in Tamil (AIR Chennai)

Time (IST hrs.) Programme
0600-0635 Vadya Vrinda, Classical Tamil Devotional
0635-0645 Thodu Vanam Infor variety
0645-0715 Regional News in Tamil, Magazine Programme
0715-0745 News in Tamil, Magazine programme contd.
0745-0815 Songs from Silver Screen
0815-0945 Ungal Viruppam, Classical Music
0945-1000 Phone in Listeners Choice
1000-1130 Idhu Ungal Choice, Women's Magazine Programme
1130-1300 Vadya Isai-Instrumental Music, Radio on Demand-Film Songs
1300-1345 Instrumental Music, Women's Magazine Programme, Film Songs
1345-1400 Regional News from Trichi, Instrumental Music
1400-1600 Humour Programme, Classical Music
1600-1700 Instrumental Music, Radio On Demand-Film Songs
1700-1900 Melodies Mix, Chat shows with film celebrities
1900-1930 Film Songs, News in Tamil, Instrumental Music
1930-2000 Endrum Iniyavai, Seidhi Kadambam
2000-2100 Kadambam Thematic Film Songs, Listeners Request film songs
2100-2200 Vannakal Anjiyam, Pudhuvaravu
2200-0000 Film Songs of Yesteryears, Radio on Demand - Film Songs
0000-0100 Classical Music/Sound Track Musical Discourse
0100-0220 Evergreen Melodies, Light Classical Music,
0220-0300 Mellisai-Light Music, Instrumental Music
0300-0400 Karnatic Music
0400-0600 Lingering Melodies, Nagaswaram, Non Film Devotional

Technical Information:

I. Receive System Comprises:
. 60-90 cm dish + LNB Converter.
. Set-top Box(STB)- Its output to be connected to TV set.

II. Set Top Box tuning information:
. Satellite-"NSS-6"(95°E).
. Down-link frequency ( GHz)-12.534(H) / 12.647(V) /12.729(V) / 10977(H) / 12688(H)
. Symbol rate-27.5MSPS.

Source: http://www.allindiaradio.gov.in/DTH-Radio/tamil.htm

சர்வதேச வானொலி - JANUARY 2007