Saturday, October 27, 2012

புதிய NewStar DR-111 – டிஜிட்டல் வானொலி விமர்சனம்


ஜார்ஜ் ரோஸ்,  பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் திவுகளில் இருந்து செயல்பட்டு வரும் KTWR வானொலியின் அதிர்வெண் மேலாளர், ட்ரான்ஸ் உலக வானொலியில் NewStar DR-111 ஐ பயன்படுத்திய அனுபவங்களை பற்றி எழுதுகிறார்
எங்கள் அலுவலகத்தில் உள்ள சக அலுவலர்களோடு சேர்ந்து நானும் சமீபத்தில் இந்த செங்டு DR-111 டி.ஆர்.எம் வானொலிப்பெட்டியை வாங்கினோம். அதனை குவாம் போன்ற சிறு தீவில் இயக்கி பார்க்க ஆர்வமுடன் இருந்தோம்.
அவர்கள் முதல் கிடைக்க பெற்றது என "சில மற்ற சக சேர்ந்து நான் பெற்றுக்கொள்ளும் ஒரு வாங்கினார். நாம் இந்த ஏற்பி நிகழ்ச்சி எப்படி பார்க்க KTWR குவாம் மிகவும் ஆர்வமாக இருந்தனர், மற்றும் டிஆர்எம் ஒளிபரப்பு அதிகரிக்க துவங்கும் என கேட்பவரின் ஒரு ஏற்பி இருப்பது சாத்தியம் ஆசியா பகுதியில் இங்கே உள்ளது.
எங்கள் முதல் சோதனையினை ரேடியோ நியுசிலாந்து வானொலியின் (RNZI) டிஆர்எம் ஒலிபரப்பினைக் கேட்டோம். எங்களுக்கும் ஒலிபரப்பும் நிலையத்திற்கும் தொலைவு 6500 கிலோ மீட்டர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனைக் கேட்பது மிகவும் சுவாரசியமாக இருந்தது. நாங்கள் RNZI வானொலியை அனலாக் டிரான்ஸ்மிஷன் மற்றும் டி.ஆர்.எம் ஒலிபரப்புகளை ஒப்பிட்டோம். அதில் டி.ஆர்.எம் ஒலிபரப்பு FM தரத்தினில் அருமையாக இருந்தது.
எங்களது சொந்த ஒலிபரப்பினையும் சோதனை செய்து பார்க்க விருப்பங்கொண்டு முதலில் இந்தியாவை நோக்கிய டி.ஆர்.எம் ஒலிபரப்பினைச் செய்தோம். இரண்டாவது சோதனை ஒலிபரப்பினை ஹாங்காங் நோக்கி செய்து பார்த்தோம்.
சோதனை 1: நாம் டிஆர்எம் முறையில் நாங்கள் முழு ஸ்டீரியோ முறையில் 64 QAM பயன்படுத்தி வடகிழக்கு இந்தியாவிற்கு முதல் சோதனை ஒலிபரப்பினைச் செய்தோம். இதற்காக உயர் தரமான இசையை ஜூலை மாத்தில் பதிவு செய்து ஒலிபரப்பினோம். ஒலிபரப்பின் தரம் மிக அறுமையாக இருந்த்து. நாம் தெற்கில் பெங்களூரிலும் வடக்கில் காத்மாண்டுவிலும் இருந்து கேட்டோம். இரண்டு பகுதிகளிலும் நன்றாகவே கிடைத்த்து. DR-111ல் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு எங்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆடியோ கோப்புகள் உயர் ஸ்டூடியோ தரத்துடன் இருந்த்து கண்டு மகிழ்ந்தோம்.
சோதனை 2: அடுத்து நாங்கள் ஹாங்காங் நோக்கி  ஒலிபரப்பு செய்தோம். இதனை நாங்கள் 16 க்யுஏஎம் தரத்தினில் மோனோவில் ஒலிபரப்பு செய்தோம். கட்டடம் நிறைந்த பகுதில் இந்த ஒலிபரப்பினைக் கேட்டோம். இங்கும் எந்தவித தடங்களும் இல்லாமல் தரமாகவே கிடைத்தது.
டி.ஆர்.எம் வானொலிகளில் குறைந்த விலையுள்ள இந்த வானொலியை நான் சர்வதேச வானொலி நேயர்களுக்கு பரிந்துரைக்கிறேன். காரணம் சந்தையில் மிக அதிக வானொலிப் பெட்டிகளுக்கு மத்தியில் இது ஒரு தரமான வானொலி என அடுத்துக் கூறலாம்.
மேலும் தகவலுக்கு செங்டு NewStar வலைத்தளத்திற்கு செல்ல http://www.cdnse.com/

Saturday, October 20, 2012

ரேடியோ பிரினேஸ்ட்ரோவ்ஸ்கி

மால்டோவா: ரேடியோ பிரினேஸ்ட்ரோவ்ஸ்கி - ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு மால்டோவா. ரஷ்யாவில் இருந்து பிரிந்த இந்த நாட்டின் வானொலியும் தற்பொழுது நேயர்கள் எழுதும் கடிதங்களுக்கு வண்ண அட்டையை அனுப்பி வருகிறது. இவர்களது நிகழ்ச்சிகளை ஜெர்மன் மொழியில் நேயர்கள் தினமும் இந்திய நேரம் அதிகாலை 01.15 முதல் 02.15 வரை 7290 கிலோ ஹெர்ட்சில் கேட்கலாம். இவர்களை வான் அஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ள: Radio PMR, ul. Pravdy 31, MD-3300 Tiraspol, Mldov, Email: radiopmr@inbox.ru, WEB: www.radiopmr.org (Partha Sarathi Goswami)

Saturday, October 13, 2012

இலங்கையின் சிட்டி எஃப்.எம்

சிட்டி எஃப்.எம்: இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து முற்றிலும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிவரும் சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பாக உள்ளதாக அதன் இயக்குனர் ஹட்சன் சமரசிங்கே தெரிவித்துள்ளார். அவ்வப்போது சிங்களத்திலும் ஒலிபரப்பான இந்த வர்த்தக வானொலி,  இனி தமிழிலும் ஒலிபரப்பாவது கண்டு நமக்கெல்லாம் மகிழ்ச்சியே.
இந்த மகிழ்ச்சிக்கு காரணமானவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆவார். அவர் சமீபத்தில் இலங்கை சென்றபோது “நாடு அமைதியாக இருக்க அனைத்து துறைகளிலும் கட்டாயம் மும்மொழிக் கொள்கை அவசியம்” என்று கூறியதன் பயனாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இலங்கை வானொலி. அப்படியே நமக்கும் கொழும்பு சர்வதேச வானொலியைக் கிடைக்கச் ஏற்பாடுச் செய்திருக்கலாம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர்?.

Saturday, October 06, 2012

‘லோட்டஸ் டவரில்’ 50 வானொலி சேவைகள்

கொழும்பு: சீனாவுடன் இணைந்து 350 மீட்டர் உயரமுள்ள ஒரு மிகப்பெரிய தொலைத்தொடர்பு கோபுரத்தினைக் கட்ட ஒப்பந்தமாகியுள்ளதாக மீடியா நெட்வொர்க் இணையதளம் கூறுகிறது. இந்த கோபுரத்தின் மூலம் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி  மற்றும் வானொலி ஒலிபரப்புகளைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. ‘லோட்டஸ் டவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் மூலம் 50 தொலைக்காட்சி நிலையங்கள், 50 வானொலி சேவைகள் மற்றும் 10 தொலைப்பேசி சேவைகள் செய்யப்பட உள்ளது. தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த டவராக இது இருப்பதோடு, உலகின் 19-வது மிக உயர்ந்த டவர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. (Source: Asia-Pacific Broadcasting Union)