Friday, May 31, 2013

இனி பார்க்க முடியாது... கேட்கலாம்!


 மத்திய அரசின் ஒவ்வோர் அறிக்கை வெளியாகும்போதும், நமக்கு ஏதேனும் ஓர் அதிர்ச்சித் தகவல் காத்திருக்கும். அந்தவகையில், சமீபத்தில் மத்திய அரசு இந்திய மக்களிடம் உள்ள வீட்டு உபயோகப் பொருள்களைப் பற்றி கணக்கெடுத்து அறிக்கையை வெளியிட்டது. அதில் அதிர்ச்சி தரக்கூடிய பல தகவல்கள் நமக்குக் கிடைத்தன. குறிப்பாக, இனி நாம் நம் கிராமங்களில்கூட வானொலிப் பெட்டிகளைக் காண முடியாது என்பதுதான் அது.
 இந்தியாவில் கடந்த 2001 கணக்கெடுப்பின்போது 35.1 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011 கணக்கெடுப்பின் முடிவில் 19.9 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இது எதைக் காட்டுகிறது எனில், வானொலிப் பெட்டியைத் தனியாக வாங்கி வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்பதையே.
 அதேசமயத்தில் தொலைக்காட்சி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2001 கணக்கெடுப்பின்போது 31.1 சதவிகிதமாக இருந்தது. 2011-ல் 47.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆக, வானொலி கேட்ட அனைவரும் தொலைக்காட்சியின் பக்கம் சென்றுவிட்டனர் என்றும் கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.
 இந்தச் சமயத்தில் நாம் இங்கு இன்னொன்றையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் தொலைபேசி வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்பதைக் கண்கூடாக இந்த கணக்கெடுப்பு முடிவுகளில் காண முடிகிறது.
 அதை நமது கணக்கெடுப்பு அறிக்கையும் உறுதி செய்கிறது. குறிப்பாக, கடந்த 2001-ன் கணக்கெடுப்பின்படி தொலைபேசி வைத்திருந்தவர்கள் வெறும் 9.1 சதவிகிதம் மட்டுமே. ஆனால், 2011-ல் இது அசுர வேகத்தில் வளர்ந்து 63.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆக, இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்றுள்ளது.
 வானொலியைத் தனியாக வானொலிப் பெட்டியில் கேட்போர் குறைந்து கைப்பேசி ஊடாக கேட்பவர்கள் அதிகரித்துள்ளனர் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் இன்றைய கைப்பேசிகளில் பண்பலை ஒலிபரப்புகளை மட்டுமே கேட்க முடியும் என்பதால் மத்திய அலை மற்றும் சிற்றலை வானொலிகளைக் கேட்க முடியாது. இதற்கான தொழில்நுட்பமும் விரைவில் வந்துவிட்டால் இனி தனியான வானொலிப் பெட்டிகளுக்குத் தேவை இருக்காது. இருந்தாலும் நம்மில் எத்தனைபேர் கைப்பேசியில் வானொலியைக் கேட்கிறோம் எனத் தெரியவில்லை.
 நமது நாடு அதிவேகத்தில் முன்னேறி வருகிறது என்பதற்கு மட்டும் ஒரு முக்கியச் சான்று இந்தக் கணக்கெடுப்பில் கிடைத்துள்ளது. 2001-ல் நமது நாட்டில் வானொலி, தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி என எதுவுமே இல்லாதவர்கள் மொத்தம் 50.4 சதவிகிதம். 2011-ல் இந்த விகிதாசாரம் வெகுவாகக் குறைந்து 27.4 சதவிகிதமாகியுள்ளது. ஆக, பாதிக்குப் பாதி இதில் வளர்ச்சி கண்டுள்ளோம்.
 இனி தமிழகத்துக்கு வருவோம். 43.5 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011-ல் 22.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆக, தமிழகத்திலும் வானொலிப் பெட்டி வைத்திருப்போர் வெகுவாகக் குறைந்துள்ளனர். 39.5 சதவிகிதமாக இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் இப்பொழுது 87 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதற்கு கடந்த ஆட்சி வழங்கிய இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஒரு காரணம் எனலாம்.
 தொலைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் 11.2-ல் இருந்து 74.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி என எதுவுமே இல்லாதவர்களின் எண்ணிக்கையும் 42.3-ல் இருந்து 6.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
 வானொலி கேட்டல் என்பது ஒரு கலை. ஆனால், அது இன்று பொழுதைப்போக்கத் தேவையான ஓர் ஊடகமாகிவிட்டது. வானொலி கேட்டல் பல்வேறு வகைகளில் பயன் மிகுந்ததாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. இடைப்பட்ட காலம் வானொலி கேட்டலை ஒரு பொழுதுபோக்கு ஊடகமாகவே சித்திரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது தனியார் துறை பண்பலை வானொலிகள் என்றால் அது மிகையில்லை.
 கிராமப்புறங்களில் இன்றும் வானொலி கேட்பவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிற வாதம் ஒன்று என்றுமே நம்மிடையே உண்டு. அதற்கும் இந்த 2011 கணக்கெடுப்பு முடிவுகள் விடை கண்டுள்ளது. கிராமப்புறங்களில் 2001-ல் 35.1 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011-ல் 17.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆக, பொதுவாக கூறப்பட்டு வந்த கருத்தும் இங்கு உடைபடுகிறது. இதுநாள் வரை கிராம மக்கள் வானொலி கேட்டலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதை இனி யாரும் கூற முடியாது.
 தமிழக கிராமங்களில் வானொலி கேட்பவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி அடுத்து நம் மனதில் கண்டிப்பாக உதிக்கும். 2001-ல் 38.6 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011 கணக்கெடுப்பில் 18.7 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
 ஆக, தமிழகமும் இதில் விதிவிலக்கல்ல என்பது இங்கு நிரூபணம் ஆகிறது. வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை மட்டுமே கொண்டு அந்த மாநிலங்களில் வானொலியை அதிகமானோர் கேட்கிறார்கள் என்ற முடிவுக்கும் வர முடியாது.
 நம்மில் பலரது வீடுகளிலும் வானொலிப் பெட்டி உண்டு. ஆக, கணக்கெடுப்பின்போது நம்மிடம் வானொலி வீட்டில் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நாம் இருக்கிறது என்றே பதில் கூறியிருப்போம். ஆனால், உண்மையில் நம்மில் எத்தனை பேர் வானொலியைத் தொடர்ந்து உபயோகிப்பவர்களாக உள்ளோம் என்பதையும் இங்கு சிந்தித்தாக வேண்டும். மேலும், எத்தனை பேர் வீடுகளில் வானொலிப் பெட்டியானது பரண் மேல் இருக்கிறது என்பதையும் இங்கு கணக்கில்கொள்ள வேண்டும். ஆக, பரண் மேல் கிடக்கும் வானொலிப் பெட்டிகளும் இந்தக் கணக்கெடுப்பில் வந்திருக்கும்.
 ஆனால், மணிப்பூர் மாநிலத்தில் வானொலிப் பெட்டி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலத்தில் மட்டும்தான் வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது அதிசயப்பட வைக்கிறது. 2001-ல் இங்கு வானொலிப் பெட்டி வைத்திருந்த வீடுகளின் எண்ணிக்கை 43 சதவிகிதமாகும்.
 2011-ல் இது 54.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தில் மட்டும் வானொலிப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன என்பதைக் கண்டிப்பாக ஆராய வேண்டியுள்ளது.
 மிகக் குறைந்த வானொலிப் பெட்டிகளைக் கொண்ட மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உள்ளது. 2011-ன் கணக்கெடுப்பின்படி 9.3 சதவிகித வீடுகளில் மட்டுமே வானொலிப் பெட்டிகள் உள்ளன. இதுவே 2001-ன் கணக்கெடுப்பின்படி 21.6 சதவிகிதமாக இருந்தது மறக்கலாகாது. ஆக, ஆந்திரத்தில் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.
 தொடர்பியலின் முக்கிய சாதனங்களாக வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசியுடன் இன்று இணையமும் சேர்ந்து கொண்டது. இதில் முதன்மையானது வானொலி. இதற்குக் காரணம் இது ஏழைகளின் ஊடகம். வானொலிப் பெட்டியை எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று கேட்க முடியும். வானொலிப் பெட்டி ஒன்றை வாங்கிவிட்டால் போதும். அதன் பிறகு அதற்கு முதலீடு தேவையில்லை. ஆனால், மற்ற ஊடகங்களுக்கு நாம் ஏதேனும் ஒருவகையில் பணம் செலுத்த வேண்டியுள்ளது.
 இன்று வானொலிக்குப் போட்டியாக இணையம் வந்துள்ளது. அதுவும் நம் கைப்பேசிகளின் ஊடாக இணையத்தைப் பயன்படுத்த வசதிகள் வந்தபின், இணையம் இன்னும் எளிமையாகிவிட்டது. என்ன ஒன்று, அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
 கிராமப்புறங்களில் மட்டும்தான் வானொலிப் பெட்டி வைத்திருப்போர் குறைந்துவிட்டனர் என்றில்லை. நகர்ப்புறங்களிலும் வானொலிப் பெட்டி வைத்திருப்போர் பெரிதும் குறைந்துள்ளனர். 2001-ல் 44.5 சதவிகிதமாக இருந்த வானொலிப் பெட்டிகள் 2011-ல் அது வெறும் 25.3 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
 ஆக, பண்பலை வானொலிகள் நகர்ப்புறங்களில் அதிகமாகத் தொடங்கப்பட்டாலும், வானொலிப் பெட்டி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாக, கைப்பேசியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் மனதில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
 வருங்காலத்தில் ஒருங்கிணைந்த வானொலிப் பெட்டி நம்மிடம் இருக்கலாம். அதாவது, நம் கைப்பேசியிலேயே அனைத்து வானொலிகளையும் கேட்கலாம். மாறாக தனியான வானொலிப் பெட்டிகளை இனி யாரும் விலை கொடுத்து வாங்குவது சந்தேகம்தான். எனவே, அவை இனி அருங்காட்சியகங்களுக்குச் சென்றாலும் ஆச்சரியப்பட வேண்டாம். அதற்கு அச்சாரமாக உள்ளது இந்த 2011 கணக்கெடுப்பு முடிவுகள்.
 கட்டுரையாளர்: பேராசிரியர்,
 தொடர்பியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
 கணக்கெடுப்பின்போது நம்மிடம் வானொலி வீட்டில் இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நாம் இருக்கிறது என்றே பதில் கூறியிருப்போம். ஆனால், உண்மையில் நம்மில் எத்தனை பேர் வானொலியைத் தொடர்ந்து உபயோகிப்பவர்களாக
First Published : 10 April 2012 01:03 AM IST
நன்றி: தினமணி

Monday, May 27, 2013

தமிழ் வளர்க்கும் சீனர்கள்


பெய்ஜிங்கில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 49 ஆண்டுகளாக சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தச் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் தற்போது மொத்தம் 18 சீனர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தமிழகம் வந்து தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் சிறப்பாகத் தமிழ் பேசுவதுடன் தங்கள் பெயர்களையும் தூய தமிழ்ப் பெயர்களாக சூட்டிக் கொண்டுள்ளனர்.
 படத்தில் இருப்பவர்களின் பெயர்கள் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது:
 இலக்கியா, ஈஸ்வரி, ஜெயா, கலைமகள், கலைமணி, மதியழகன், மீனா, மேகலா, மோகன், நிலானி, நிறைமதி, ஓவியா, பூங்கோதை, சரஸ்வதி, சிவகாமி, தேன்மொழி, வாணி, வான்மதி
நன்றி: தினமணி கொண்டாட்டம் 26/5/2013

தமிழ் வளர்க்கும் சீனர்கள்


பெய்ஜிங்கில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 49 ஆண்டுகளாக சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தச் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் தற்போது மொத்தம் 18 சீனர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தமிழகம் வந்து தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் சிறப்பாகத் தமிழ் பேசுவதுடன் தங்கள் பெயர்களையும் தூய தமிழ்ப் பெயர்களாக சூட்டிக் கொண்டுள்ளனர்.
 படத்தில் இருப்பவர்களின் பெயர்கள் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது:
 இலக்கியா, ஈஸ்வரி, ஜெயா, கலைமகள், கலைமணி, மதியழகன், மீனா, மேகலா, மோகன், நிலானி, நிறைமதி, ஓவியா, பூங்கோதை, சரஸ்வதி, சிவகாமி, தேன்மொழி, வாணி, வான்மதி
நன்றி: தினமணி கொண்டாட்டம் 26/5/2013

Friday, May 24, 2013

பொன்விழாக் காணும் சீனத் தமிழ் வானொலி



 சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி 2012 ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகின்றன. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான்.
 தமிழ் மொழியில் தேர்ச்சிபெற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்புகளை முறையாகக் கற்றபின் சீன வானொலியில் சேவையாற்றி வருகின்றனர்.
 "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ் ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது.
 சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.
 அந்தச் சமயத்தில் அவர்களுக்கு தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து மாகறல் கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார். இவரை அடுத்து சின்னத்தம்பி, சாரதா சர்மா, முனைவர் ந. கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் வல்லுநர்களாகச் சீன வானொலியில் சேவையாற்றினர்.
 முதலில் தமிழ் கற்ற அந்த மாணவர்களைக் கொண்டே அந்த முதல் தமிழ் ஒலிபரப்பு 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் அதன் பெயர் "பீகிங் வானொலி' என்று இருந்தது. அதன் பின் "பெய்ஜிங் வானொலி' எனப் பெயர் மாற்றம்பெற்று இன்று "சீன வானொலி' என்று தமிழிலும் "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.
 சீன வானொலி நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமானவை. தொடக்க காலத்தில் அரை மணி நேரமே ஒலிபரப்பி வந்த தமிழ் சேவை 2004 முதல் ஒரு மணி நேரச் சேவையாக உலா வந்தது.
 தினமும் இந்திய நேரம் இரவு 7.30 முதல் 8.30 வரையும், மீண்டும் 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
 மீண்டும் அதே நிகழ்ச்சிகள் மறுநாள் காலையும் 7.30 முதல் 8.30 வரையும், 8.30 முதல் 9.30 வரையும் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
 சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிற்றலை வானொலிப் பெட்டியில் மட்டுமே கேட்க முடியும்.
 இவர்கள் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சிகளில் மக்கள் சீனம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம், சீனாவில் இன்பப் பயணம், சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீன தேசிய இனக் குடும்பம், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை மற்றும் கலாசாரத்தினை அறிய உதவும் நிகழ்ச்சிகள் ஆகும்.
 "தமிழ் மூலம் சீனம்' என்ற பெயரில் ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. மிகவும் எளிதாக, மெதுவாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அந்த நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர்.
 அந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடத்திட்டங்களின்படி நூல்களும் அச்சிடப்பட்டு நேயர்களுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எவரும் எளிதாக இந்த நூல்களைக் கொண்டு சீன மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.
 நேயர்களையும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் நேருக்கு நேர், நேயர் நேரம், நட்புப் பாலம், உங்கள் குரல், கேள்வியும் பதிலும், நேயர் கடிதம் மற்றும் நேயர் விருப்பம் ஆகிய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகி வருகிறது.
 இதுதவிர சீன வானொலி நிலையம் நேயர்களுக்கு ஒவ்வோராண்டும் பொது அறிவுப் போட்டியை வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பரிசுகளை வழங்குவதோடு பம்பர் பரிசாக ஒரு நேயரை சீனாவுக்கு இலவசப் பயணமாக அழைத்துச் செல்கின்றனர்.
 இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தமிழக நேயர்கள் இலவசப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 சீன வானொலி தமிழ்ப் பிரிவினில் பணியாற்றும் சீனர்கள் அனைவரும் தங்களது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொண்டு ஒலிபரப்பி வருகின்றனர். சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமகள், கலைமணி போன்ற அறிவிப்பாளர்கள் சீன வானொலியின் நேயர்கள் மனதினில் இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும் பெயர்கள்.
 சீன வானொலிக்கு நேயர்கள் கடிதம் எழுதச் சிரமம் இருக்கக் கூடாது என்பதற்காக, நேயர்களுக்கு இலவச வான் அஞ்சல் கடித உரைகளை அனுப்பி வைக்கின்றனர். இதன் மூலம் நேயர்கள் விமர்சனக் கருத்துகளை பைசா செலவில்லாமல் அனுப்பி வருகின்றனர்.
 தமிழகத்தில் இந்த வானொலிக்காக "அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றம்' செயல்பட்டு வருகிறது. இவர்கள் ஒவ்வோராண்டும் நேயர்கள் கூடும் நிகழ்வாக கருத்தரங்கங்களை நடத்துகின்றனர்.
First Published : 31 July 2012 01:05 AM IST
நன்றி: தினமணி

Thursday, May 16, 2013

DX QUIZ 2013

                                                                Image: Yimbar

Saturday, May 11, 2013

DX QUIZ 2013

In 2013 the Ardic DX Club celebrates its 15th anniversary. For 15 years it has been the primary source of information for dxing enthusiasts all over the Tamil Nadu, India. In order to celebrate this event, a quiz is being organised. The quiz is open to anyone, regardless of location or club membership. The quiz does not solely deal with Tamil Dxing, but covers very different radio aspects. Answering following 25 questions you can show your radio knowledge.

No quiz without prizes of course. And to make the contest interesting to everybody, a few prizes will be given anomaly to entrants. So if the questions look hard, participate anyway. 

Schedule
Quiz starts from 15 May 2013, Last date for the entry 31 July 2013.
Quiz Questions
1. Sound of Hope is broadcast from which country?
a. Taiwan, b. India, c. Sri Lanka, d. England.

2. All India Radio Chennai celebrates it's ___ anniversary?
a. 65, b. 55, c. 85, d. 75.

3. This year DW Radio celebrates it's ____ anniversary. 
a. 50, b. 60, c. 70, d. 80.

4. Which Tamil Nadu station starts their DRM broadcast recently?
a. AIR Tiruchy, b. AIR Tirunelveli, c. AIR Chennai, d. AIR Madurai.

5. What is the name of the DX Programme broadcast in Gyanvani FM Tirunelveli?
a. Vaanoli Ulagam, b. Neyar Kaditham, c. Neyar Kural, d. Sincerely Yours.

6. Name of the DX Magazine recently stops their hard copy printing from UK?
a. Ariel, b. Contact, c. QST, d. Monitoring Times.

7. 15050 KHz used by which AIR Tx station?
a. Chennai, b. Tutucorin, c. Khampur, d. Bangalore.

8. From which country SENDER UND FREQUENZEN published?
a. Germany, b. Denmark, c. Nederland, d. Finland.

9. Name the book Mr. Simon James Potter recently wrote?
a. The World Service, b. On the Shortwave, c. Broadcasting Empire: The BBC and the British World, 1922-1970, d. Shortwave Guide.

10. CRI Tamil service started on which year?
a. 1963 Julyl 1, b. 1963 August 1, c. 1963 September 1, d. 1963 October 1.

11. RFA's 50th QSL theme is on _______?
a. IBB Biblis, b. d. IBB Saipen, c. IBB Iranawilla, d. IBB Kuwait. 

12. RMRC will broadcast their special programme on which frequency?
a. 9955, b. 9945, c. 9965, d. 9535.

13. Radio Puntland operate from which country?
a. Ruwanda, b. Uganda, c. Tanzania, d. Somalia,

14. DSNG stands for__________?
a. Digital Shortwave News Gathering, b. Digital Signal Noise Gathering, 
c. Digital Satellite News Gathering, d. DxerS Number Gathering.

15. AIR Tirunelveli starts its service on which year?
a. 4 May 1963, b. 1 December 1963, c. 4 December 1963, d. 1 May 1963.

16. Recently a Tamil book become popular which was written by Head of CRI Tamil section? Name the author of that book?
a. Kalaiyarasi, b. Kalaimagal, c. Vaani, d. Oviya.

17. RSL stands for?
a. Restricted Service Licenses, b. Restricted Shortwave Licenses, c. Receiver Service Licenses,
d. Radio Service Licenses.

18. How many languages were added recently in SBS Australia?
a. 12, b. 10, c. 8, d. 6,

19. In which area AWR 42nd year annual DX Contest conduct?
a. Focus on Asia, b. Focus on Pacific, c. Focus on Africa, d. Focus on South America.

20. Call sign of the Indian Standard Time and Frequency station?
a. ATB, b. ATA, c. AWZ, d. VU2.

21. Which shortwave station was closed by the BBC in april 13 as budget cutback measure?
a. Cyprus, b. Singapore, c. Meyerton, d. Rampisham.

22. Identify the new type of jamming used to suppress shortwave broadcasts of BBC, VOA etc in recent months.
a. Digital Normal Jamming, b. Digital Jamming, c. Digital Noise Jamming, d. Noise Jamming.

23. What is the new technique used to transmit text messages in shortwave broadcast?
a. Radiotx, b. RadioDX, c. Shorttxt, d. Radiogram

24. In phase-III auction how many FM radio frequencies allotted in Indian cities?
a. 859, b. 849, c. 839, d. 829.

25. Who is the current International Editor of WRTH?
a. Nicholas Hardyman, b. Sean Gilbert, c. Jerry Berg, d. Anker Peterson.


Please note the following things when you send the entry.
1. Every entry will get the special pennant in the memory of the Gyanvani FM 105.6 – Tiruneveli.
2. Every entry must send one reception report of any frequency of All India Radio for the anniversary special QSL.
3. Every entry should send any one radio sticker. Local radio sticker is appreciated.
4. Every entry should send one any radio QSL card / view card from broadcasting station. (Extra QSL cards from you collection, if not send the photo copy of the rare QSL in you collection.
5. Indian listeners must send Rs.25/- mint stamp for postage and International listeners must send 2 IRC or 2 US $. Those who are send US dollars; kindly send it only by register post. Otherwise it will be theft and the ADXC were not take the responsibility of your US $.
Send your answers to T.Jaisakthivel, Radio World, Gyanvani FM, Assistant Professor, Department of Communication, MS University, Abishekapatti, Tirunelveli – 627 012, Tamil Nadu, India. 

தமிழகத்தில் புதிய எப்.எம். நிலையம் தொடங்கும் சீன வானொலி!

சீனாவின் சர்வதேச வானொலி நிலையம் 1963-ம் ஆண்டு முதல் 

தமிழ் வானொலிப் பிரிவை நடத்தி வருகிறது. ஐம்பதாவது 

ஆண்டுவிழாவை கொண்டாடும் இந்த வருடத்தில் தமிழ் நாட்டில்...

Source; 


http://www.aanthaireporter.com/?p=31392

தமிழ்நாட்டில் புதிய எப்.எம். நிலையம் தொடங்குகிறது சீன ரேடியோ

பெய்ஜிங், மே 10- சீனாவின் சர்வதேச வானொலி நிலையம் 1963-ம் ஆண்டு முதல் தமிழ் வானொலிப் பிரிவை நடத்தி வருகிறது. ஐம்பதாவது ஆண்டுவிழாவை கொண்டாடும் இந்த வருடத்தில் தமிழ் நாட்டில் எப்.எம் வானொலி நிலையத்தை தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

சென்னையில் உள்ள சில எப்.எம் வானொலி நிலையங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக, சர்வதேச சீன வானொலியின் தமிழ் பிரிவின் இணை இயக்குனர் கெய் ஜுன் அக வானி தெரிவித்தார்.

சர்வதேச சீன வானொலி நிலையம் தமிழ் மட்டும் அல்லாமல் இந்தி, பெங்காலி மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் ஒலிபரப்பு செய்து வருகிறது. 

சீன மொழியில் உள்ள நிகழ்ச்சிகளை மொழிபெயர்த்து ஒலிபரப்புவதன் மூலம் சீனாவின் கலாச்சாரத்தை இந்திய நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என சீன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Friday, May 10, 2013

டிஜிட்டல் மயமாகும் இந்திய வானொலிகள்


 வானொலித் தொழில் நுட்பமானது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் வானொலிப் பெட்டிகளின் உற்பத்தி இந்தியாவில் அறவே நின்றுவிட்டது. இந்த சமயத்தில்தான் நமது அகில இந்திய வானொலி ஒரு புதிய தொழில்நுட்பத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. டி.ஆர்.எம். (டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் 3058) எனும் அந்தத் தொழில்நுட்பம்தான் இனி இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ஊர்களிலும் வரப்போகிறது.
இதற்கு  அச்சாரமாக இருந்தவை செயற்கைக்கோள் வானொலிகள். இந்த ஒலிபரப்புகளில் ஒலியின் தரம் மிகத்துல்லியமாக இருந்ததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான "வோல்ட் ஸ்பேஸ்' போன்ற வானொலிகள் புதுமையாக பார்க்கப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவை அனைத்தும் வந்த வேகத்திலேயேக் காணாமல் போயின. அதற்குக் காரணம், அந்த வானொலிகளை மாதாந்திர சந்தா கட்டியே கேட்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனால் இப்பொழுது "வோல்ட் ஸ்பேஸ்' மீண்டும் தனது சேவையைத் ஒரு தனியார் டி.டி.ஹெச். நிறுவனத்தோடு இணைந்து தொடங்கியுள்ளது.
அகில இந்திய வானொலியின் வரலாற்றில் 2009ஆம் வருடம் வரலாற்றில் பொறிக்க வேண்டிய ஒரு ஆண்டு. அந்த ஆண்டு தான் முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
புதுதில்லி காம்பூரில் அமைந்துள்ள உயர் சக்தி கொண்ட ஒலிபரப்பு நிலையத்தில் இருந்து 16 ஜனவரி 2009இல் தனது முதல் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கியது.
வானொலி கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகியும், இது வரை வானொலி ஒலிபரப்பானது "அனலாக்' முறையிலேயேச் செய்யப்பட்டு வந்தது. இதில் ஒலிபரப்பின் தரம் சுமாராகவே இருக்கும். ஆனால் "டிஜிட்டல்' தரத்தினைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
சாதாரண வானொலி ஒலிபரப்புகளில் நாம் குறிப்பிட்ட ஒலிபரப்பினை மட்டுமே கேட்க முடியும். ஆனால் டி.ஆர்.எம். ஒலிபரப்பில், வானொலி ஒலிபரப்போடு அந்த நிகழ்ச்சிகளின் விவரங்களும் டிஜிட்டல் திரையில் தெரியும். அத்துடன் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவும் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், "எலக்ட்ரானிக் புரோகிராம் கைடு' இதில் இருப்பதால் அடுத்தடுத்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும்  கண்டுகொள்ளலாம்.
இன்னும் எளிதாகப் புரியும்வண்ணம் கூற வேண்டும் எனில், ஒரு திரைப்படப் பாடல் ஒலிபரப்பாகிவரும் அதே சமயத்தினில், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம், வெளிவந்த ஆண்டு, பாடியவர்கள், பாடலை இயற்றியவர், இசையமைத்தவர் என அனைத்து விவரங்களும் அந்த டிஜிட்டல் திரையில் ஒரு சேர நமக்கு கிடைக்கும். இது டிஜிட்டல் ஒலிபரப்பில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
இவை அனைத்தினையும் விட முக்கியமானது, அதன் தரம். பண்பலை ஒலிபரப்பின் தரத்தினைவிட பன்மடங்கு துல்லியமானதாக இருக்கும். மேலும் இது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளையும் அதே தரத்தினில் கொடுக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனியான ஒலிபரப்பு கோபுரங்கள் தேவையில்லை. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கோபுரங்களே போதும். டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் என்பதில் உள்ள மோண்டியல் என்பது பிரென்ச் வார்த்தை. இதற்கு "உலகளாவிய' என்று அர்த்தமாகும். வார்த்தைக்குத் தகுந்தார்போன்றே அதன் ஒலிபரப்புத் தரமும் உலக நாடுகளால் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய தொழில்நுட்பத்திற்கு நாம் செய்ய வேண்டிய செலவு கூடுதலாக 10 முதல் 20 சதவீதம் மட்டுமே. ஆனால் அதே சமயத்தில் நமக்கு இதன் மூலம் 20 முதல் 40 வரை மின்சாரமானது சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் இது பாதிப்பதில்லை.
ஆசியக் கண்டத்தில் உள்ள நாடுகளில் டி.ஆர்.எம். ஒலிபரப்பினைத் தொடங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கே உரித்தான ஒன்று. ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இன்னும் இதில் அடியெடுத்து வைக்காத சமயத்தில் நாம் இதில் முன்னோடியாகத் திகழ்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தருகிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு நாம் மாறுவதன் மூலம், இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு குறைந்த ஒலிபரப்பிகளைக் கொண்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நேயர்களையும் சென்றடையலாம். இந்தியாவானது பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தில் டி.ஆர்.எம். ஒலிபரப்பிற்கு என ரூ.9.20 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 70 சதவீத மக்களை டி.ஆர்.எம். ஒலிபரப்பானது சென்றடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த டி.ஆர்.எம். தொழில்நுட்பத்தினை இன்னும் ஐந்தாண்டுகளில் அனைத்து நாடுகளும் கையாள உள்ளன. ஆனால் இதில் ஒரு குறை இப்பொழுது உள்ளது. டி.ஆர்.எம்.  ஒலிபரப்பினைக் கேட்க தனியான வானொலிப் பெட்டியினை நாம் வாங்க வேண்டும். நம்மிடம் ஏற்கெனவே உள்ள வானொலிப் பெட்டிகளில் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பினைக் கேட்க முடியாது.
ஏற்கெனவே இருந்த வோல்ட் ஸ்பேஸிலும் இதுதான் சிக்கலாக இருந்தது. டி.ஆர்.எம்.  வானொலிப் பெட்டியின் குறைந்தபட்ச விலையே ரூ.10,000 எனும்போது நிச்சயம் நம்மில் பலர் அதனை வாங்கவே யோசிப்போம். ஆனால் அரசின் கருத்தின்படி, முழுமையாக இந்தத் தொழில்நுட்பம் செயல்படத் தொடங்கிவிட்டால் வானொலிப் பெட்டியின் தேவை அதிகரிக்கும். அப்பொழுது விலை நிச்சயம் குறையும் என்கிறது அரசு. 
இன்று ஆண்ட்ராய்டு வசதி கொண்ட கைப்பேசிகளில் இலவசமாக டி.ஆர்.எம். மென்பொருட்களைப் பதிவேற்றி தனியான டி.ஆர்.எம். வானொலிப் பெட்டிகளை வாங்காமலேயே ஒலிபரப்புகளைக் கேட்க முடியும்.
First Published : 26 November 2012 04:01 AM IST
நன்றி: தினமணி

Tuesday, May 07, 2013

பொது ஒலிபரப்பு சேவையில் 65 ஆண்டுகள்


பொது ஒலிபரப்பு சேவையின் 65-வது ஆண்டு நவம்பர் 12, 2012 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பொதுத்துறை ஒலிபரப்பு என்றால், அது "அகில இந்திய வானொலி'தான்.
ஒவ்வொரு ஆண்டும் 12 நவம்பரை பொது ஒலிபரப்பு சேவை நாளாக கொண்டாடக் காரணம், மகாத்மா காந்தி குருúக்ஷத்திர நகரில் உள்ள அகில இந்திய வானொலி மூலம் பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்கு ஆறுதல் செய்தியை வழங்கினார். இது நடந்தது 12 நவம்பர் 1947. எனவே அந்த நாளையே பொது ஒலிபரப்பு சேவையின் நாளாக இன்று வரை அகில இந்திய வானொலி கொண்டாடி வருகிறது.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில், மகாத்மா காந்தி முதலும் கடைசியுமாகச் சென்ற ஒரே வானொலி நிலையம் இதுதான்.
பொதுமக்கள் தகவல்களைப் பெறவும், அவர்களின் அறிவாற்றலை கல்வி கற்பிப்பதன் மூலம் வளர்க்கவும், அதே சமயத்தில் மகிழ்ச்சியூட்டவும் செய்வதே நோக்கமாகும். அது இன்றளவும் அகில இந்திய வானொலியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பொது ஒலிபரப்பு சேவையானது இந்திய ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயரில் 1927இல் தொடங்கப்பட்டது. 1936இல் அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றம் அடையும் வரை இது வேகமாக வளர்ந்தது.
அதன் பின் பொது ஒளிபரப்பு சேவையில் தூர்தர்சனும் இணைந்து கொண்டது.
1990இல் தனியார் தொலைக்காட்சிகள் வரும்வரை தனிக்காட்டு ராஜாவாக இருந்தது தூர்தர்சன். இந்தியாவில் 1970இல் தொடங்கப்பட்ட தூர்தர்சன் பொது ஒளிபரப்பு சேவையில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்தது ஒரு காலம். 600 ஒளிபரப்பிகளைக் கொண்டு இந்தியாவின் அனைத்து இடங்களையும் சென்று சேர்ந்த முதல் தொலைக்காட்சி இதுவாகும்.
இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக தூர்தர்சன் இருக்கிறது.
பிரசார் பாரதி (இந்திய ஒலி-ஒளிபரப்பு கார்ப்பரேஷன்) நவம்பர் 23, 1997இல் அமைக்கப்பட்டது. இதன் நோக்கமே, அரசின் எந்த ஊடகமும் அதன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்துச் சுதந்திரமாக மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். 1990இல் நாடாளுமன்றத்தில் பிரசார் பாரதி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் செப்டம்பர் 15, 1997இல் தான் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் அரசு ஊடகங்களான அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் சுதந்திரமாகச் செயல்பட பிரசார் பாரதி சட்டம் வழிவகை செய்தது.
வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையில் இன்று பிரசார் பாரதி உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளதில் நமக்கெல்லாம் பெருமையே. அரசின் 250க்கும் மேற்பட்ட வானொலிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் முறையே 350க்கும் மேற்பட்ட வானொலி ஒலிபரப்பிகள் மற்றும் 1400க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பிகள் மூலம் இந்திய நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சென்றடைகிறது. இதன் மூலம் 40 கோடி மக்கள் பயனடைகின்றனர்.
First Published : 12 November 2012 03:47 AM IST
நன்றி: தினமணி

Friday, May 03, 2013

வானொலியின் தந்தை ஒரு இந்தியர்



ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு பெரிய வரலாறு புதைந்து இருக்கிறது. நம்மில் பலரும் வானொலியைக் கண்டுபிடித்தது மார்க்கோனி என்றுதான் கூறுவோம். ஆனால், அது தவறு. 
 வானொலியானது ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இது பலரின் கூட்டு முயற்சி. அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிதாமகனாக இருந்தவர் ஒரு இந்தியர் என்றால் அது நமக்கு எல்லாம் பெருமையே. மேற்கு வங்காளத்தில் பிறந்த ஜெகதீஸ் சந்திரபோஸ்தான் அந்தப் பெருமைக்குரியவர்.
 அவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அமெச்சூர் வானொலி தினமாக நவம்பர் 30-ஐ நாம் கொண்டாடுகிறோம். ஜெகதீஸ் சந்திரபோஸ் 1858 நவம்பர் 30-இல் பிறந்தார். அவர் ஆற்றிய சாதனைகள் பல. 
 கிரஸ்கோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இவர், இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதன் முறையாக 1904-ஆம் ஆண்டு தனது புதிய கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து காப்புரிமை பெற்றார். சுதந்திரத்துக்கு முன் பரந்து விரிந்த வங்காளத்தில், இன்றைய வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள பிக்ராம்பூரில் பிறந்தாலும், அவர் கல்வி பயின்றது,பணியாற்றியது எல்லாமே கொல்கத்தாவில்தான்.
 மேற்படிப்புக்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே மருத்துவப் படிப்பினை இடையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், நோபல் பரிசு பெற்ற லார்ட் ரேலிக் அவர்களோடு இணைந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.
 ரிமோட் வயர்லெஸ் சிக்னல் ஆய்வில் வெற்றிகண்ட போஸ், முதன்முதலாக செமிகண்டக்டரைக் கொண்டு வானொலி அலைகளை ஒலிபரப்ப முடியும் என நிரூபித்தார். இந்த ஆய்வின் முடிவுகளை சுயநலத்தோடு வியாபாரம் ஆக்காமல் அனைவரும் இதில் மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்.
 செடி, கொடிகளின் மீது இவரின் கவனம் திரும்பியதன் பயனாக உருவானதே கிரஸ்கோகிராப். இது செடிகளின் தொடர்பியலையும், அது எப்படி பாதிக்கப்படும்போது வலிகளை வெளிப்படுத்துகிறது போன்ற அதிசயத் தகவல்களையும் ஆய்வின் மூலம் நிரூபித்தார். 
 வானொலித் துறையில் ஜெகதீஸ் சந்திரபோஸ் பல முன் முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக அவரின் கண்டுபிடிப்பான கிரிஸ்டல் ரேடியோ டிடக்டர், வேவ்கைடு, ஹார்ன் ஆண்டனா போன்றவற்றை தனது மைக்ரோவேவ் டிடக்டரில் முதன்முறையாகப் பயன்படுத்தி சாதனை படைத்தார்.

 1893-இல் நிக்கோலஸ் டெஸ்லா வெளிநாட்டில் ஒரு பொது இடத்தில் வைத்து முதல்முறையாக வானொலி ஒலிபரப்பினை சோதனை முறையில் செய்து காட்டினார். அதற்கு அடுத்த ஆண்டே இந்தியாவில் ஜெகதீஸ் சந்திரபோஸ் கொல்கத்தாவில் உள்ள டவுன் ஹாலில் வைத்து ஒரு சோதனையை மக்கள் மத்தியில் செய்து காட்டினார். 
 போஸ் சர்வதேச ஆய்விதழ்களில் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதினார். இது சர்வதேச அளவில் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.
 இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் வழங்கிய அரிய தகவல்களைக் கொண்டுதான் மார்க்கோனி, வானொலி ஒலி அலைகளை சாலிஸ்பெரி சதுப்பு நிலத்தில் இருந்து தொலைதூரத்துக்கு அனுப்பினார். 
 மே 1897-இல் ஜெகதீஸ் சந்திரபோஸ் அதே போன்றதொரு சோதனையை மீண்டும் கொல்கத்தாவில் செய்து, வெற்றியும் கண்டார்.
 அதன் அடிப்படையில் அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் தனது ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். அது அங்கு கூடிய விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் அவர் மார்க்கோனியைச் சந்தித்து தனது ஆய்வின் முடிவுகளை விவாதித்தார். ஆனால் போஸ் தனது முடிவுகளை காப்புரிமை செய்ய விரும்பவில்லை. மார்க்கோனி முந்திக்கொன்டார். விளைவு, இன்று வானொலியைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவராக மார்க்கோனி திகழ்கிறார்.
 இதன் மூலம் வானொலி கண்டுபிடிப்பில் போஸின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியலாம். அதனாலேயே இவரின் நினைவாக தேசிய அமெச்சூர் வானொலி நாள், இவரது பிறந்தநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. 
 அமெச்சூர் வானொலி உரிமத்தினை இந்தியக் குடிமகன் யாரும் வாங்கலாம். அதற்கு அடிப்படைக் கல்வித்தகுதி இருந்தால் போதுமானது. மற்றும் 12 வயது பூர்த்தியான அனைவரும் தேர்வினை எழுதலாம். இதற்கான பிரத்யேகத் தேர்வினை எழுதித் தகுதி பெற்ற பின் உரிமம் வழங்கப்படும். அதன் பின் அதற்குத் தேவையான வானொலிப் பெட்டிகளை வாங்கி அனைவரும் அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்களாக ஆகலாம். By  தங்க. ஜெய்சக்திவேல்
First Published : 30 November 2012 04:16 PM IST
நன்றி: தினமணி சிறுவர்மணி