Wednesday, December 21, 2011

பம்பர் பரிசாக ATS 909X


பி.சி.ஜி மீடியா தற்பொழுது ‘மீடியா நெட்வொர்க் பிளஸ்’ எனும் தலைப்பினில் மாதம் ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதும் நேயர்களுக்கு வானொலிப் பெட்டிகளைப் பரிசளித்து வருகிறது. பம்பர் பரிசாக ‘சாங்கியன் 909எக்ஸ்’ வழங்க உள்ளது. இந்த மாதம் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி “வானொலி என்றால் உங்கள் பார்வையில் என்ன?” விடைகளை ஆங்கிலத்தில் நீங்கள் அனுப்ப வேண்டிய மின்அஞ்சல் ats909X@gmail.com. இந்த நிகழ்ச்சி தற்சமயம் இணையத்தில் ஒலிபரப்பாகி வருகிறது. இதில் ஏராளமான பழைய டி.எக்ஸ் நிகழ்ச்சிகளையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியைக் கேட்கhttp://medianetworkplus.wordpress.com எனும் வலைப்பூவை பார்க்கலாம்.

Wednesday, December 14, 2011

இலங்கை வானொலி புத்தளத்தினில்


புத்தளம் 1125: இலங்கை வானொலி புத்தளத்தினில் அமைத்துள்ள மத்திய அலை ஒலிபரப்பிகளை பற்றிய விபரங்கள் சமீபத்தில் இணையத்தினில் வெளியிடப்பட்டது. அந்த விபரங்கள் இதோ Frequency: 1125 KHz Rated Out Put: 50KW Transmitter: “NAUTEL” – ND 50, Solid state Transmitter Coverage Area: South India Detail of Antenna: 2 base –grounded guyed masts of galvanized steel, complete with shunt feed skirt and tuning series TML Azimath Pattern: 350 Degrees Directional, 8 .0 dBi gain. (Alokesh Gupta, VU3BSE, New Delhi)

Wednesday, December 07, 2011

இலங்கை வானொலி நேயர் மன்றம்


நாம் தமிழகத்தில் மட்டுமே இலங்கை வானொலியைக் கேட்கக் கூடிய நேயர்கள் உள்ளனர் என்று நினைக்கிறோம். ஆனால் வட இந்தியாவில் இந்த வானொலிக்கு ஏராளமான வானொலி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு மன்றம் சமீபத்தில் இலங்கை வானொலியின் சேவையைப் பாராட்டு தெரிவித்து பத்திரிகைளுக்கு செய்தி அனுப்பின. அவை இலங்கையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களிலும் இடம்பெறத் தவறவில்லை. அந்த செய்தியினை இந்தத் தொடுப்பினில் படிக்கலாம் http://www.news.lk/home/5371-radio-ceylon-fan-clubsin-india-appreciate-unique-sri-lankan-programmes (Alokesh Gupta, VU3BSE, New Delhi)

Wednesday, November 30, 2011

இலங்கை மீனவர்களுக்காக புதிதாக ‘சாயுரா எப்.எம்’


மீனவர்களுக்கான எப்.எம்: இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் இலங்கை மீனவர்களுக்காக புதிதாக ‘சாயுரா எப்.எம்’ என்ற பெயரில் ஒரு வானொலியைத் தொடங்கியுள்ளது. இது தினமும் அதிகாலை நான்கு மணி முதல் தனது சேவையைச் செய்யது வருகிறது என மீன் வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் நாயகம் நந்தனா ராஜபக்ஷா தெரிவித்துள்ளார்.
(Sunday observer)

Monday, November 28, 2011

சீன வானொலியின் 70வது ஆண்டு


சீன வானொலி நிலையம் 1941ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ம் நாள் முதல்முறையாக தனது ஒலிபரப்பைத் துவங்கியது. இவ்வாண்டு டிசம்பர் திங்களில் சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவை வரவேற்பதை முன்னிட்டு, சீன வானொலிக்கு தங்களுடைய  வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பும் நேயர்களுக்கு  வசதியளிக்கும் வகையில், தமிழ்ப் பிரிவு செல்லிடபேசி எண்ணை ஏற்பாடு செய்துள்ளது. அழகான ஆனால் சுருக்கமான வாழ்த்துக்களை நீங்கள் இந்தச் செல்லிடபேசிக்கு குறுந்தகவல்களாக அனுப்பலாம்.
இது குறுந்தகவல்களுக்கு மட்டும் தான். அழைத்துப் பேசுவதற்கானது அல்ல. ஆங்கிலத்திலோ அல்லது தமிழ்ச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலோ குறுந்தகவல்களாக அனுப்பவும். குறுந்தகவலில் தங்களுடைய பெயர் மற்றும் நேயர் எண் ஆகியவை இருக்க வேண்டும். தவிர, நீங்கள் மின் அஞ்சல் மூலமும் tamil@cri.com.cn என்ற முகவரிக்கு மேலதிக வாழ்த்துச் செய்திகளை அனுப்பலாம்..

Wednesday, November 23, 2011

இந்தியாவில் டி.ஆர்.எம்


பண்பலையில் டி.ஆர்.எம் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் புது தில்லியில் சோதனை செய்துப் பார்க்கப்பட்டது. அகில இந்திய வானொலியோடு டி.ஆர்.எம் அமைப்பு இணைந்து இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தது. பண்பலையில் செய்யப்படும் டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு ‘டி.ஆர்.எம் ப்ளஸ்’ என்று பெயர். ஏற்கனவே மத்திய அலையில் டி.ஆர்.எம் ஆய்வு நடந்து வருகிறது, இதற்கு ‘டி.ஆர்.எம் 30’ என்று பெயர். புது தில்−யில் டி.ஆர்.எம் ப்ளஸ் ஆய்விற்காக 100.1 அலைவரிசையில் 500 வாட் சக்தியில் ஒ−பரப்பு செய்யப்பட்டது. டி.ஆர்.எம் பற்றிய அந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்துகொள்ள சொடுக்கவும் www.drm.org. நீங்களும் இது போன்ற இனிவரும் டி.ஆர்.எம் ஆய்வினில் கலந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ளவும் projectoffice@drm.org.

Wednesday, November 16, 2011

டி.ஆர்.எம் தகவல்கள்


* டி.ஆர்.எம் அமைப்பிற்கு பிரேசிலின் தொடர்பியல் அமைச்சகம் “டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்” பற்றி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
* தென்ஆப்பிரிக்காவில் விரைவில் டி.ஆர்.எம் தொடங்கப்பட உள்ளது. கொரியாவில் நடைபெறவிருக்கும் 21வது கொரிய ஒலிபரப்புக் கண்காட்சியில் டி.ஆர்.எம் ஸ்டால் இடம்பெருகிறது. அதில் பல்வேறுத் தலைப்பினில் டி.ஆர்.எம் பற்றியக் கட்டுரைகளும்
வாசிக்கப்படுகின்றன. 
* ஆப்பிரிக்க நாடான சைல், டி.ஆர்.எம் தொடங்குவது பற்றி ஆய்வு நடத்தி வருகிறது. 
* புது தில்லியில் நடைபெற்ற ‘புராட்காஸ்ட் ஆசியா’ கருத்தரங்கில் தனியான ஸ்டால் ஒன்றை அமைத்திருந்தது டி.ஆர்.எம் அமைப்பு. இது அனைவரின் பாராட்டினையும் பெற்றது.
* 2011ஆம் வருடத்திற்கான சர்வதேச ஒலிபரப்பு தொடர்பியல் கூட்டத்தினில் டி.ஆர்.எம் அமைப்பினர் கலந்துகொள்ள உள்ளனர். டி.ஆர்.எம் பற்றிய உடனுக்குடனான தகவல்களுக்கு சொடுக்கவும் http://newsletters.lavishcreative.com

Wednesday, November 09, 2011

ஹாம் வானொலியில் ரிப்பீட்டர்களின் பங்கு


தொட்டபெட்டா ரிப்பீட்டர்: ஹாம் வானொலியில் ரிப்பீட்டர்களின் பங்கு அதாவது அஞ்சல் கோபுரங்களின் பங்கு மிகமுக்கியமானது. தமிழகத்தில் கொடைக்கானல், திருச்சங்கோடு மற்றும் சென்னைப் போன்ற இடங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டாவில் ஆனைமலை அமெச்சூர் ரேடியோ சொசைட்டியினரால் சீரமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் இதற்கான சிறப்பு வலைப்பூ ஒன்று தொடங்கப்பட்டது. ஏறாளமான புகைப்படங்களுடன் இந்த வலைப்பூ ரிப்பீட்டரைப் பற்றிய பல்வேறு விபரங்களை நமக்குத் தருகிறது. அவற்றைக் கான www.vu2irt.blogspot.com (Ibrahim-VU3IRH For AARC-Pollachi).

Wednesday, November 02, 2011

இஸ்ரோ ஹாம் வானொலி


ஹாம் சாட்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஹாம் வானொலிக்காகத் தனியான செயற்கைக்கோள் ஒன்றை ஏற்கனவே விண்ணில் ஏவியுள்ளது. விரைவில் அதனை மேம்படுத்தி மேலும் ஒரு செயற்கைக்கோள் ஒன்றை ஏவவுள்ளது. இதற்கான கலந்தாய்வு கூட்டத்தினைக் கடந்த ஏப்ரலில் பெங்களூரில் இஸ்ரோ ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களின் கருத்துக்களை திரு. சோமு (VU3HCJ) அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். முகவரி: sskummur@bsnl.in ஹாம் சாட் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.amsatindia.org (Via Nitin [VU3TYG], Secretary,AMSAT INDIA).

Wednesday, October 26, 2011

மெட்ராஸ் அமெச்சூர் ரேடியோ சொசைட்டி


ஹாம் கூட்டம்: மெட்ராஸ் அமெச்சூர் ரேடியோ சொசைட்டி (MARS) சென்னையில் மாதந்தோறும் கூட்டத்தினை நடத்தி வருகிறது. சமீபத்தியக் கூட்டம் கடந்த ஜூன் 4, 2011 அன்று வெப்பேரி YWCA -ல் நடைபெற்றது. இது பூந்தமல்லி ஹைரோட்டில் அமைந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள ஆர்வமுள்ள நேயர்கள் வரும் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்பினால் அதன் இணைச் செயலாளர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களைத் தொடர்புகொள்ளலாம். அவரது மின் அஞ்சல் vu2kls@@yahoo.com.

Wednesday, October 19, 2011

திருச்சி கல்லூரியில் ஹாம் வகுப்பு

திருச்சி ஜமால் முஹமது கல்லூரியில் பணியாற்றிவரும் இணை பேராசிரியர் திரு. ஏ. அஸ்லாம் ஹாம் வானொலித் தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். திருச்சியை சுற்றியுள்ள ஹாம் வானொலியில் ஆர்வமுள்ள நேயர்கள் கீழ்கண்ட முகவரியில் திரு. ஏ. அஸ்லாமைத் தொடர்பு கொள்ளலாம். முடிந்த மட்டிலும் குறுந்தகவல் அனுப்பவும், அவரே உங்களைத் தொடர்புகொள்வார். முகவரி: A. Aslam, (VU2AXL), Assistant Professor of Botany, Jamal Mohamed College, Trichy - 62002, Tamilnadu, India. Email: abu.aslam@gmail.com / aslammsc@yahoo.com, Phone +91 98942 52865 (Via Jose Jacob, VU2JOS).

Wednesday, October 12, 2011

ஹாம் திருவிழா 2011


இந்த ஆண்டிற்கான ஹாம் திருவிழா 2011 கொச்சியில் நடைபெறவுள்ளது. 10 டிசம்பர் 2011ல் நடைபெரும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் உண்டு. இந்த ஜøலை 31க்கு முன் செலுத்தினால் ரூ.400, அதன் பின் என்றால் ரூ.500. நேரடியாக அரங்கத்தில் செலுத்தினால் ரூ.1000. ஹாம் திருவிழா பற்றிய மேலதிக தகவல்களுக்கு: Mr JOSEPH KOTTOORAN, VU2JPC,KOTTOOR, 50/596 B, LENIN ROAD, EDAPPALLY (POST), KOCHI - 682 024, KERALA, Mobile; +91 9895033747, Email: vu2jpc@yahoo.co.in Web: http://www.hamfestIndia2011.com (K.C. Sivaraj,Idappadi)

Wednesday, October 05, 2011

‘எமர்ஜென்சி ரேடியோ’: டெக்சன் கிரீன் 88


மீடியா நெட்வொர்க் பிளஸ் தற்பொழுது பல்வேறு வானொ−ப் பெட்டிகளின் விமர்சனங்களை அதன் வலைப்பூவில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது டெக்சன் கிரீன் 88 மாடல் எண் கொண்ட வானொ−ப் பெட்டியை பற்றியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. நாம்
வெளியூர் பயணங்களில் எடுத்த செல்ல உகந்த வானொ−யாம் இது. அதுவும் குறிப்பாக மலையேற்றத்தின் போது இந்த வானொ− பல்வேறு வகைகளில் பயன்படுகிறதாம். அனலாக் டியூனிங், மத்திய அலை, சிற்றலை மற்றும் பண்பலை ஒ−பரப்புகளை இதில் கேட்கலாம். பேட்டரி லைட்டாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.

‘எமர்ஜென்சி ரேடியோ’ என்ற பெயரும் இதற்கு உண்டு. அதற்கு காரணம் இதன் பக்கவாட்டில் மின்சாரத்தினை தயாரிக்கக் கூடிய டைனமோ இதில் உள்ளது. எனவே மின்சார வசதியில்லாத பகுதிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 2200. இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. முகவரி: www.universal-radio.com இந்த வானொ−ப் பெட்டியின் பயன்பாட்டினை விடியோவில் கான http://www.youtube.com/brainman214
இலவச கையேடு பெற: Universal Radio Inc. #6830, Americana Pkwy., Reynoldsburg, Ohio – 43068, USA, Email: dx@universal-radio.com(ஏற்கனவேப் பயன்படுத்தப்பட்ட வானொ−ப்
பெட்டிகளும் இங்கு விற்பனைக்கு கிடைக்கின்றன. விரிவான கையேடு மேற்கண்ட முகவரியிலேயேத் தேவைக்கு அனுப்பப்படுகிறது. – ஆசிரியர்)

Wednesday, September 28, 2011

சிறப்பு QSL வண்ணஅட்டை

சர்வதேச அருங்காட்சியக வாரத்தினை முன்னிட்டு சமீபத்தில் பெங்களூர் அமெச்சூர் வானொலி மன்றம் ஒரு சிறப்பு ஒலிபரப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த சிறப்பு நிலையத்தின் பெயர் AT8VTM. இந்த நிலையமானது விஸ்வேஸ்வரய்யா தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப
அருங்காட்சியகத்தில் கடந்த ஜூனில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்த சிறப்பு ஒலிபரப்பினை VU2UR and VU2LX ஆகியோர் செயல்படுத்தினர். இந்த தினத்திற்கான சிறப்பு QSL வண்ணஅட்டையும் வெளியிடப்பட்டது. QSL வண்ணஅட்டைத் தேவைப்படுவர்கள் தகுந்த தபால்தலையுடன் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:Lion Ajoy VU2JHM, AT8VTM Special Event
Station, BANGALORE AMATEUR RADIO CLUB, Post Box # 5053, General Post Office,
BANGALORE - 560001. INDIA. http://www.barc.in

Wednesday, September 21, 2011

வாய்ஸ் ஆப் ஜெர்மனி மூடப்படவுள்ளது.

வாய்ஸ் ஆப் ஜெர்மனி - கடந்த மே 18ஆம் தேதி ஜெர்மன் வானொலியால் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி நீண்ட கால ஜெர்மன் வானொலி நேயர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. ஆம், வரும் நவம்பர் 1, 2011 முதல் தனது சிற்றலை சேவையை இந்தியாவுக்கு செய்யப் போவது இல்லை என அறிவித்துள்ளது. ஜெர்மன், ரஷ்யன், பார்சி மற்றும் இந்தோனேசிய சேவைகளையும் முற்றிலுமாக நிறுத்தவுள்ளதாகவும், இனி ஆங்கில சேவை ஆப்பிரிக்காவுக்கு மட்டுமே செய்யப்படும் என அறியத்தருகிறது அந்த செய்திக்குறிப்பு.

இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவெனில் இலங்கை, திரிகோணமலையில் செயல்பட்டு வந்த ஜெர்மன் வானொலிக்கான சிற்றலை அஞ்சல் நிலையம் மூடப்படவுள்ளது. இந்த அஞ்சல் நிலையம் தான் இந்தியாவிற்கான முதல் டி.ஆர்.எம் சேவையைச் செய்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாள் ஒன்றிற்கு 20 மணிநேரம் இந்த அஞ்சல் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து ஒலிபரப்பி வந்தது. (இது பற்றிய விரிவான கட்டுரையை “ஜெர்மன் வெளியே? சீனா உள்ளே??” என்ற
தலைப்பினில் இலங்கையின் பிரபல நேயர் விக்டர் குணத்திலகே www.dxasia.info
எனும் இணைய தளத்தினில் எழுதியுள்ளார்கள். – ஆசிரியர்)

Wednesday, September 14, 2011

இணையத்தில் சிற்றலை

இன்று உலகெங்கும் பரந்து விரிந்துவாழும் தமிழர்கள்
பல்வேறு வானொலிகளை இணைத்தில் தொடங்கி நடத்தி வருவதை நாம்
அறீவோம். ஆனால் தற்பொழுது தமிழகத்திலும் இதுபோன்ற
வானொலிகள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றினுள்
சென்றால் நாம் சிற்றலையில் கேட்கக்ககூடிய வானொலிகளைக் கூடத்
தெளிவாகக் கேட்க முடிகிறது. அவ்வாறு கிடைக்கும் ஒரு சில இணைய
வானொலிகள் இதோ…
www.tamilradios.com/sivan-kovil-bakthi-fm.html
www.tamilradios.com/chennai-fm-rainbow.html
www.tamilradios.com/shakthifm.html
www.123tamilradios.com/ibc-radio-london-html
www.123tamilradios.com/bbc-tamil-radio.html (Via FM Gopal B, Annasakaram)

Wednesday, September 07, 2011

புதிதாக 806 தனியார் பண்பலைகள்

தனியார் பண்பலை வானொலிக்கான மூன்றாவது கட்ட ஏலத்தினை விட்டுள்ளது மத்தியஅரசு. இதன் மூலம் புதிதாக இன்னும் 806 தனியார் பண்பலை வானொலிகள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட உள்ளன. இந்த முறை ஏலத்தினை இணையம் மூலமாகவே விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ,1733 கோடி ரூபாய் வருவாய் வரகவுள்ளது.

மேலும் இந்த முறை அந்நிய முதலீடும் 20ல் இருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 31 புதிய தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அனுமதியை வழங்கியுள்ளது அமைச்சகம். தற்சமயம் 653 தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பாகி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அம்பிகா சோனி பிடிஐ-க்கு
வழங்கிய ஒரு செவ்வியில் தெரிவித்து உள்ளார். (பொள்ளாச்சி விஜயன் உதவியுடன்)

Monday, September 05, 2011

Icom IC-R71A விற்பனைக்கு

விலை ரூ. 9000/-
தேவைக்கு தொடர்பு கொள்ளவும்
ardicdxclub (at) yahoo (dot) co (dot) in

Dynamo AM/FM Radio

Sunday, September 04, 2011

ரேடியோ ரோமேனியா இண்டர்நேசனல் போட்டி


ரேடியோ ரோமேனியா இண்டர்நேசனல் கீழ்கண்ட நான்கு வினாக்களுக்கான பதில்களை வரும் 30 செப்டம்பர் 2011 க்கு முன் அனுப்பி வானொலிப் பெட்டி உட்பட பல பரிசுகளை வெல்லும் வாய்பினை பெருங்கள்.

1. When and where was George Enescu born?
2. Name at least three compositions by Enescu.
3. Name at least three prestigious musicians attending this year’s edition of the festival (soloists,
conductors or orchestras)
4. Which edition of the “George Enescu” International Festival is running this year?

போட்டியில் வெல்பவர்களின் விபரங்கள் ஏப்ரல் மாதத்தில் வானொலி மற்றும் இணையதளத்தினிலும் வெளியிடப்படும். விடைகளை கீழ்கண்ட முகவரிக்கு வான் அஞ்சலில் அனுப்ப வேண்டும். Radio Romania International, 60-64 G-ral Berthelot Street, sector 1, Bucharest, PO Box 111, code 010165, fax 00.40.21.319.05.62, e-mail: eng@rri.ro.

Wednesday, August 31, 2011

ஒலி அலைகளைத் தேடி...

அகில இந்திய வானொலி - விசாகபட்டிணம்



வானொலி நிலையங்களை நேரடியாக சென்று பார்ப்பது என்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. வானொலி கேட்கின்ற நேயர்கள் அத்தனை பேருக்கும் வானொலி நிலையங்களை நேரடியாக தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. ஆனால் அந்த ஆர்வம் அனைத்து நேயர்களுக்கும் கைக்கூடுவது இல்லை. என்னுடைய நண்பர்களில் பலர் வெளிநாட்டு வானொலி நிலையங்களை யெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் நேரடியாக சென்று பார்த்தும் வந்துள்ளனர். எனக்கும் அது போன்ற ஆர்வம் உண்டு, அதுவே இங்கு ஒலி அலைகளைத் தேடியதாக அவ்வப்போது இங்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்த முறை நாம் பயணப்பட போவது ஆந்திர மாநிலத்திற்கு. சமீபத்தில் நான் அலுவல் நிமித்தமாக விசாகப்பட்டிணத்திற்கு சென்று வந்தேன். இம்முறை ஒரே ஊரில் இரண்டு நிலையங்களை காண்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதலில் நான் சென்று பார்த்தது அகில இந்திய வானொலி நிலையத்தினை. சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தினை
போன்றே இதுவும் வங்கக் கடலின் அருகிலேயே அமைந்துள்ளது.

நான் இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு தங்குவதாக இருந்தபடியால் முதல் நாளில் எனது அலுவல்களை முடித்துக் கொண்டேன். இரண்டாம் முழுவதும் வானொலி நிலையங்களை மட்டும் பார்க்க ஒதுக்கிக் கொண்டேன்.

எனது ரயில் பணத்தின் போதே பொதுவாக எந்த ஊர்களுக்குச் சென்றாலும் ஏதேனும் பெரிய டவர் தெரிகிறதா எனப் பார்ப்பது வழக்கம். காரணம் அது போன்ற பெரிய டவர்கள் மூலமே பண்பலை மற்றும் சிற்றலை வானொலிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இங்கு இன்னும் ஒன்றையும் குறிப்பாகச் சொல்ல வேண்டும். மத்திய அலை மற்றும் சிற்றலை ஒ−பரப்பு
கோபுரங்கள் நகரின் வெளியிலேயே நிர்மானிக்கப்படுகின்றன. ஆனால் பண்பலை கோபுரங்கள் மட்டும் நகரின் உள்ளேயே நிர்மானிக்கப்படுகிறது.

இதற்கான காரணத்தினை சொல்லித்தெரிய வேண்டியது இல்லை. ஆம் பண்பலையானது குறைந்த தூரத்திற்கு மட்டுமே செல்வதால் அதனை நகரின் மையப்பகுதியில் அமைக்கின்றனர். ஆனால் சென்னையில் பண்பலை ஒலிபரப்பியானது மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.

சென்னையைப் பொருத்தமட்டில் அது தொலைக்காட்சி நிலைய டவரில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே மிக உயர்ந்த டவர் அதுதான் என நிலையத்தில் உள்ளவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே தான் பண்பலை வானொலிகளைத் தொடங்கும் போது இதே டவர்களை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் சமீப காலமாக அந்தத் டவரில் எந்த ஒரு பண்பலை வானொலிகளுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. காரணம் ஏறக்குறை அதில் பத்துக்கும் மேற்பட்ட பண்பலைவரிசைகள் தற்பொழுது ஒலிபரப்பாகி வருகிறது. இந்த டவரில் இருந்து செய்யப்படும் ஒலிபரப்பானது செங்குத்து வகை ஆன்டனாவில் செய்யப்படுவதால் நகர் பகுதி மட்டுமல்லாமல் கடல் பகுதிக்கும் செல்கிறது.


இதனால் ஒலி அலைகளானது வீணாக்கப்படுகிறது என்று ஒரு கூற்று கூட ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது நகரை நோக்கிய ஆண்டனாக்களே பொருத்தப்பட்டுள்ளதை கீழே இருந்து பார்ப்பவர்கள் காணலாம்.

சென்னை சங்கதியை பிரிதொரு சமயத்தில் காணலாம். விசாகபட்டிணத்தில் நுழையும் போது அப்படி ஏதேனும் சென்னை டவரைப்போன்று தெரிகிறதா என உற்றுநோக்கினேன். எனக்கு கண்ணில் பட்டதொல்லாம் விசகபட்டிணத்தின் துறைமுகத்தில் உள்ள டவர்களும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள டவர்களும்தான். இனிமேல் சென்னை செல்பவர்கள்
ஆவடி வழியாக சென்றால் கண்டிப்பாக உங்கள் பார்வையை ஒரு சுற்று சுற்றுங்கள் காரணம், ஆவடியில் தான் 100 கிலோ வாட் சக்தி கொண்ட சிற்றலை ஒலிபரப்பியானது 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

விசாகப்பட்டிணத்தில் சிற்றலை வானொலி நிலையம் இல்லை. ஆனாலும் இதுவும் ஒரு பழமையான நிலையம் எனலாம். 927 MW 100 kw விசாகபட்டிணத்தில் உள்ள அகில இந்திய வானொலியின் முகவரி:

Station Director,
All India Radio,
Sripuram,
Vishakapatnam – 530 003,
Andra Pradesh.



விசாகபட்டிணத்தில் இயங்கி வரும் தினியார் பண்பலை வானொலிகள்

Radio City 91.1 (www.radiocity.in)
Big FM 92.7 (www.big927fm.com)
Red FM 93.5 (www.sunnetwork.org/redfm/index.htm)
Radio Mirchi 98.3 (www.radiomirchi.com)

ஞானவாணி அகில இந்திய வானொலியில் கோபுரத்தில் இருந்து ஞானவாணியின் ஒலிபரப்பு செய்யப்பட்டாலும் கலையகமானது வேறுஒரு இடத்தில் அமைந்துள்ளது. அதனைத் தேடி நமது அடுத்த பயணம் அமைந்தது. விசாபட்டிணத்தில் தொடங்கப்பட்ட ஞானவாணிக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட நான்கு நிலையங்களுள் இதுவும் ஒன்றாகும்.



ஞானவாணி நேரடி ஒலிபரப்பு கலையகம், விசாகப்பட்டிணம்


ஆந்திர பல்கலைக்கழக்தின் வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த வானொலி நிலையமானது முதல் தளத்தினில் அமைந்துள்ளது. நியைத்தில் உள்ளகலையகத்தினையும் ஒலிப்பதிவு கூடத்தினையும் பார்க்கும் பொழுது, அகில இந்திய வானொலிக்குள் தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தினை ஏற்படுத்துகிறது. காரணம் தொடக்கக்கால ஞானவாணி நிலையங்களை
அமைப்பதில் அகில இந்திய வானொலியின் தொழில்நுட்பப்பிரிவினர் பங்கேற்றனர்.

நிலையத்தினில் ஒரே ஒரு முழுநேரப்பணியாளர் மட்டும் உள்ளார். அவரும் அகில இந்திய வானொ−யில் இருந்து ஓய்வுப் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் அனைவரும் பகுதிநேர அறிவிப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 150க்கும் அதிகமான ஞானவாணி நிலையங்கள் உள்ளன. இதில் எதுவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு எந்த ஆய்வுகளும் இல்லை. 350 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தினால் யார் பயனடைந்து வருகின்றனர் என்பது இங்கு கேள்விக்குறியாகி வருகிறது.

விசாகபட்டிணம் ஞானவாணி நிலையமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அங்குள்ள நிலையத்தினை கண்ட பொழுது ஒரு எண்ணம் தலைப்பட்டது. காரணம் இந்த அளவு வசதிகள் கொண்ட சமுதாய வானொலிகள் செயல்பட்டுவரும் விதம் ஆச்சரியம் அளிக்கிறது. ரேடியோ நேதர்லாந்தின் குறுந்தகடுகள் ஒரு புறமும் ஜெர்மன் வானொலியின் குறுந்தகடுகள் ஒருபுறமும்
வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. சொந்த நிகழ்ச்சிகள் சமீபகாலமாக அவ்வளவாகத் தாயரிக்கப்படுவதில்லையாம். இதனால் தொடர்ந்து ஒலிபரப்பான நிகழ்ச்சிகளையே மறுஒலிபரப்பு செய்து வருகின்றனர்.

ஞானவாணி நிலையத்தில் பல்வேறு வசதிகள் இருந்தும் ஏன் அதனை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்று அங்குள்ள பொருப்பாளரிடம் கேட்ட போது, அதற்கு அவர் கூறிய பதில் ஒன்றும் வியப்பினை தரவில்லை. உள்ளூர் மொழியில் நீங்கள் எந்த நிகழ்ச்சியையும் ஒலிபரப்பாமல் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பினால் நேயர்கள் சோர்ந்து விடுகின்றனர். எந்த ஒரு வானொலி நிகழ்ச்சியும் நேயர்களை எளிதாக சென்று சேர வேண்டும். ஆனால் அது ஞானவாணியில் இல்லை. இதைச்செய்யாமல் என்ன செய்தாலும் நேயர்கள் இந்த வானொலியைக் கேட்பது கானல் நீர் தான்.

ஞானவாணியைத் தொடர்பு கொள்ள:
Station Manager,
Gyanvani FM 106.4,
School of Distance Education (SDE),
Andhra University,
Visakhapatnam,
Andhra Pradesh – 530003.

நமது பயணத்தில் இரண்டு முக்கிய வானொலிகளை இந்த மாதம் கண்டோம். அடுத்த மாதத்தினில் வேறு ஒரு வானொலி நிலையத்திற்கு ஒலி அலைகளைத் தேடி நமது பயணத்தினைத் தொடர்வோம்.

Sunday, August 28, 2011

டி.எக்ஸ் போட்டி - 2011 முடிவுகள்

1. எம். முரளிதரன், பெங்களூர் – World Radio TV Handbook 2011 by WRTH, UK.
2. பி. கிரிஷ் சடஹா, பெங்களூர் – World Radio TV Handbook 2011 by பிரிட்டிஷ் டி.எக்ஸ் கிளப், UK.
3. கே.சி. சிவராஜ், எடப்பாடி – World Radio TV Handbook 2011 by ஜப்பான் சிற்றலை வானொலி மன்றம் (JSWCI), Japan.
4. எம். கணேசன், கோவா – Passport to World Band Radio (Collectors copy) by ADXC, India.
5. சௌவுமியா கணேசன், கோவா - World Radio TV Handbook archive CD (1947-1958) by ADDX, Germany.
6. எஸ். முகமது சமீம், சுல்லிமணூர், கேரளா – DX Calendar from Rhein-Main-Radio-Club (RMRC), Germany.
7. முகேஷ் குமார், பீகார் – WRTH Bargraph Frequency Guide a11 CD by WRTH, UK.
8. பாலசுப்ரணிய ராஜா, சேலம் - DX Calendar from Rhein-Main-Radio-Club (RMRC), Germany.
9. எஸ். கண்ணன், திருக்கன்னமங்கை, திருவாரூர் - Passport to World Band Radio (Collectors copy) by ADXC, India.
10. என்.டி. சண்முகம், தாசப்பகவுண்டன்புதூர், ஈரோடு – ரேடியோ ஃப்ரீ
ஆசியா வழங்கும் COBY CX-CB12 (12 Bands AM/FM/LW/SW Pocket Radio)வானொ−ப் பெட்டி.
11. முஹமது இலியாஸ், பெல்லாரி, ஆந்திரா - WRTH Bargraph Frequency Guide a11 CD by WRTH, UK.
12. பிரித்திவ்லாஜ் புகஸ்யா, அஸ்ஸாம் - WRTH Bargraph Frequency Guide a11 CD by WRTH, UK.
13. வெற்றிவேல் ராஜ், ஈரோடு - WRTH Bargraph Frequency Guide a11 CD by WRTH, UK.
14. மோகன் ராஜ், வால்பாறை - அலோகேஸ் குப்தா வழங்கும் ஜோ
ஹார் எழதிய ஆன்டணா ஹேன்ட் புக்.
15. டி.ஆர். ராஜேஷ், திருச்சூர், கேரளா - ஐரோப்பிய மத்திய அலை
வானொ− மன்றம் வழங்கும் Medium Wave Guide.
16. எஸ். சந்தானராஜ், ஈரோடு - ஜெர்மன் வானொலி வழங்கும் பேனா
மற்றும் ஸ்டிக் பேட்.
17. திருமதி. முத்தம்மாள், திருப்பூர் - பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான
பாட்டொன்று கேட்டேன் குறுந்தகடு.
18. பி.எஸ். சேகர், தலைஞாயிறு - பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான
பாட்டொன்று கேட்டேன் குறுந்தகடு.
19. கே. அருண், மீனாட்சிபாளையம், நாமக்கல் - பிபிசி தமிழோசையில்
ஒ−பரப்பான பாட்டொன்று கேட்டேன் குறுந்தகடு.
20. சி. மனோகரன், திருப்பூர் – சர்வதேச வானொலி மாத இதழின் 1999-
2000 இதழ்களின் முழுமையான தொகுப்பு குறுந்தகட்டில்.
21. எம்.ஆர். நாகேந்திரன், விழுந்தமாவடி - ரேடியோ தைவான்
இண்டர்நேசனல் வழங்கும் பரிசு.
22. என். எழிலரசி, நாகப்பட்டிணம் - ஜெர்மன் வானொலி வழங்கும்
பேனா மற்றும் ஸ்டிக் பேட்.
23. மனோஜ் மனோகரன், திருப்பூர் - ஜெர்மன் வானொலி வழங்கும்
பேனா மற்றும் ஸ்டிக் பேட்.
24. டி.வி. இளங்கோவன், சேலம் - ஜெர்மன் வானொலி வழங்கும் பேனா
மற்றும் ஸ்டிக் பேட்.
25. கே. அனிதா, நாமக்கல் - ஜெர்மன் வானொலி வழங்கும் பேனா
மற்றும் ஸ்டிக் பேட்.
26. எம்.கே. பழனிவேல், கல்யாணியிருப்பு - ரேடியோ தைவான்
இண்டர்நேசனல் வழங்கும் பரிசு.
27. ஏ.எம். சுப்ரமணி, நெய்வே− ஜெர்மன் வானொலி வழங்கும் பேனா
மற்றும் ஸ்டிக் பேட்.
28. டி. அழகேசன், நல்லம்பள்ளி, தர்மபுரி - பிபிசி தமிழோசையில்
ஒலிபரப்பான பாட்டொன்று கேட்டேன் குறுந்தகடு.
29. ஜே. அருண்பிரகாஷ், நாகை - சர்வதேச வானொலி மாத இதழின்
1999-2000 இதழ்களின் முழுமையான தொகுப்பு குறுந்தகட்டில்.
30. எஸ். கலைவாணன் ராதிகா - பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான
பாட்டொன்று கேட்டேன் குறுந்தகடு.
31. வி.எஸ். குமரன், கடலூர் - பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான
பாட்டொன்று கேட்டேன் குறுந்தகடு.
32. எஸ். பொருனை பாலு, நெல்லை டவுன் - பிபிசி தமிழோசையில்
ஒலிபரப்பான பாட்டொன்று கேட்டேன் குறுந்தகடு.

சர்வதேச வெற்றியாளர்கள்
33. சைமன் பீட்டர் லெஹ்ர், ஜெர்மனி - DX Calendar from Rhein-Main-Radio-Club (RMRC), Germany.
34. பிஜோர்ன் பிரான்சன், சுவீடன் - DX Calendar from Rhein-Main-Radio-Club (RMRC), Germany.
35. பவுலோ மோரான்டடி, இத்தா− DX Calendar from Rhein-Main-Radio-Club (RMRC), Germany.
36. ஹேரால்டு வோரிங், அமெரிக்கா - டென்மார்கின் பழமையான
வானொ− மன்றமான DSWCI வழங்கும் Domestic Broadcasting Survey 2011.
37. கிரிஸ்டியன் ஹிப்குடா, பிரான்ஸ் - ஐரோப்பிய மத்திய அலை
வானொ− மன்றம் வழங்கும் Medium Wave Guide 2011 பரிசு.
38. பாட்ரிக் ரோபிக், ஆஸ்திரியா – பிரிட்டிஷ் டி.எக்ஸ் கிளப் வழங்கும்
Broadcast in English (A11).
வெற்றியாளர்கள் அனைவரையும் வாழ்த்தும் அதே நேரத்தில் உங்களுக்கான
பரிசுகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. நிகழ்ச்சி தர
அட்டவணை அனுப்பியவர்களுக்கு மட்டும் அகில இந்திய வானொலியின்
71வது ஆண்டு சிறப்பு வண்ண அட்டை (க்யு.எஸ்.எல்) மற்றும் முக்கோண
வடிவ ஞானவாணி பெனன்ட் ஆகியவை அனுப்பப்பட்டுள்ளது. அனுப்பாதவர்களும், போட்டியில் கலந்துகொள்ளாதவர்களும் அகில இந்திய
வானொலியின் 71வது ஆண்டு சிறப்பு வண்ண அட்டை (க்யு.எஸ்.எல்)
மற்றும் முக்கோண வடிவ பெனன்ட் வேண்டுமாயின், தமிழத்தின் ஏதேனும்
ஒரு அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி தர அட்டவணையை அனுப்பி
மீண்டும் பெற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளோம்.
நிகழ்ச்சி தர அட்டவணையில் நீங்கள் கேட்ட வானொலி நிலையத்தின்
பெயர், நாள், நேரம், அலைவரிசை, ஒ−பரப்பின் தரம், கேட்க பயன்படுத்திய
வானொலிப் பெட்டியின் பெயர் (மாடல் எண்ணுடன்), நிகழ்ச்சியின் பெயர்
மற்றும் அதன் விபரம் அகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
வண்ண அட்டை தேவைப்படும் ஒவ்வொருவரும் நுழைவுக் கட்டணமாக
ரூ. 5-க்கான தபால் தலையை சுய விலாசமிட்ட உறையில் ஒட்டி அனுப்ப
வேண்டும். ஒருவர் ஒரு நுழைவை மட்டுமே அனுப்ப வேண்டும். தபால் தலை
அனுப்பாதவர்களுக்கு பதில் அனுப்பப்படமாட்டாது. குறைந்த அளவே
வண்ண அட்டைகள் உள்ளதால் முத−ல் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை
வழங்கப்படும். 

Friday, August 26, 2011

எங்கும் எப்போதும், வானொலியைக் கேட்கலாம்

MeRadio வழி, எங்கும் எப்போதும், வானொலியைக் கேட்கலாம்.

MeRadio வழி, எங்கும் எப்போதும், வானொலியைக் கேட்கலாம்.


MeRadio வழி, எங்கும் எப்போதும், வானொலியைக் கேட்கலாம்.

MeRadio வழி, எங்கும் எப்போதும், வானொலியைக் கேட்கலாம்.

வானொலி நிலையங்களின் MeRadio, iPhone, iPad, Android, Blackberry -ல் வழங்கப்படும் சேவை.

MeRadio வழி, எங்கும் எப்போதும், வானொலியைக் கேட்டுக் கொண்டே செல்லலாம்.

எங்கள் 13 வானொலி நிலையங்களும் அதில் உண்டு.

அதில் 4 அற்புத அம்சங்கள் : "Background Streaming" - அதாவது, பின்னொலி அமைப்பில், உங்கள் நிலையத்தை வைத்துக் கொண்டால்,, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டே வானொலியைக் கேட்கலாம்.

"What's Playing" - என்ன ஒலித்துக் கொண்டிருக்கிறது? திரையில், பாடகர்-பாடல்-படத் தலைப்பு எனத் தகவல்கள் பெறலாம்.

பாடல் தகவல்களை, Twitter, மின்னஞ்சல் வழி பகிர்ந்துக்கொள்ளலாம்.

எண்களை அழுத்தாமல், மின்மடல் முகவரிகளைப் பதியாமல், வானொலி நிலையங்களுடன் தொடர்புக்கொள்ள வாய்ப்புள்ளது.

இலவசமாக இன்றே பதிவிரக்கம் செய்துப் பயன்படுத்துங்கள். http://www.meradio.sg/

Wednesday, August 24, 2011

இலங்கை வானொலி நாடகங்களில் நடித்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார்.


சுகவீனமுற்றிருந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்பில் காலமானதாக(7-7-2011) அவரது வீட்டார் தெரிவித்தனர்.

ஏற்கனவே சுகவீனம் உற்றிருந்த அவர், இருதயம் செயலிழந்த நிலையில் காலமானதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற பேராசிரியரான அவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்..

பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பான மேலதிக தகவல்கள்

பெருந்தகை வாழ்நாள் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி 1932 ம் ஆண்டு மே மாதம் 10 திகதி யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தார்.

இவர் தமது ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியிலும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இடைநிலை கல்வியையும் பெற்றார்.
இந்த கல்லுரியிலேயே அவர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையில் கல்வி கற்ற இவர் அங்கேயே தமது இளமானி மற்றும் முதுமானிப் பட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இங்கிலாந்தின் உள்ள பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற முனைவர் பட்டம் பெற்றார்.

1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.

இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகவும் சிவத்தம்பி பணியாற்றியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம், ஒக்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க பேக்லி பல்கலைக்கழகம், மற்றும் ஹாவட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் வருகைதரு போராசிரியராக சென்று ஆய்வுகளையும் விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

இன்றைய தமிழ் துறையிலேயே மிக மிக அதிகார அறிவினை பெற்ற தமிழ் அறிஞராக திகழ்ந்தார்.

கலைத்துறையை பொறுத்தவரையில் அவர் பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததுடன் பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

பின்னர் தமிழ் நாடகங்களின் தோற்றம் பற்றி விரிவாக ஆராய்ந்து வெளியிட்ட இவர் கிரேக்க நாடகங்களின் தோற்றம் வரலாறு தொடர்பிலும் ஆராய்ந்து நூல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையர்கோன் எழுதியுள்ள ‘விதானைமார் வீட்டில்’ எனும் தொடர் நாடகத்தில் இவர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பல்வேறு துறைகளிலும் ஆய்வு கட்டுரைகள், நூல்கள் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியுள்ளார்.

இலங்கை தமிழ் தொடர்பில் சுமார் 70க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில் இவரது படைப்புகள் உள்ளுரில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளன.

அவரது ஆர்வம் தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, மற்றும் கவின்கலை போன்ற பல்வேறு துறைகளில் பரவியிருந்தது.

மாக்ஸிச சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாண சமூதாயத்தின் பல்வேறு குறைபாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

1963 ஆம் அண்டு வல்வெட்டித்துறை பிரபல தொழில் அதிபரான நடராசா என்பவரின் மூத்த புதல்வியான ரூபவதி என்பவரை விவாகம் செய்து திருமணபந்தத்தில் இணைந்தார்.

இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இவருடைய ஓய்வு காலத்திற்கு பின்னர் ஆரசியல் அபிப்பிராய ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவந்தார்.

அத்துடன் கடந்தவருடம் தமிழகத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்று கொளரவமளிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 84வது வயதில் நேற்றிரவு 8.20 மணியளவில் காலமானார்.

பேரறிஞரின் இழப்பானது தமிழ் சமூகத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது திண்ணம். (Source: http://nerudal.com)

Tuesday, August 23, 2011

சீன வானொலி போட்டி


தனது 70வது ஆண்டு விழாவினைக் கொண்டாடி வருகிறது சீன வானொலி. அதனை சிறப்பிக்கும் வகையில் ஆங்கில மற்றும் தமிழ் பிரிவுகள் பல்வேறு போட்டிகளை நேயர்களுக்கு வைத்துவருகின்றன. உங்களது சீன வானொலி நேயர் மன்றம் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதியானவர் ஆகிறீர்கள். அது மட்டுமல்லாமல் தேசிய கவி ரவீந்தரநாத் தாகூர் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டும் ஒரு போட்டியினை வைத்துள்ளது தமிழ் பிரிவு. இவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு நிகழ்ச்சிகளை கேட்கலாம் அல்லது சீன வானொ−த் தமிழ் பிரிவின் இணைய தளமான www.tamil.cri.cn பார்க்லாம்.

Wednesday, August 17, 2011

இலங்கை வானொலி பற்றி 2000த்தில் ஒரு வலைபூவில் வந்த சுவாரஸ்ய செய்தி


இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இந்தியாவை எட்டுகின்றது


இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க! என்ற இந்திய தமிழ் நாட்டு முஸ்லிம்களின் வேண்டுகோள் நிறைவேறுகின்றது இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் கேட்கச் செய்ய ஆவன செய்து தருமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தொடர்புகொண்டு கோரிக்கை முன்வைக்குமாறு பல கோரிக்கைகள் இந்திய முஸ்லிம்களால் முன்வைக்க பட்டது குறிப்பாக அதிரை எக்ஸ்ப்ரஸ் வேண்டுகோள் விடுத்தது அவர்களின் இந்த கோரிக்கைகளை www.lankamuslim.org யும் பதிவு செய்திருந்தது என்பது குறிபிடதக்கது தற்போது இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் சேவையை இந்தியாவில் ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தென் இந்திய முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழ் நாட்டு சென்று இந்த விடையங்களை ஆராய இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் மூத்த ஒலிபரப்பாளர் M.Z. அஹமட் முனவ்வர் தலைமையிலான குழுவினர் நேற்று இந்தியா புறப்பட்டு சென்றுள்ளனர். (Source: http://lankamuslim.org)

Wednesday, August 10, 2011

பிபிசி கேட்கும் நேயர்களின் எண்ணிக்கை சரிவு

பிபிசி உலக சேவை சமீபத்தில் தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளனர். 186 மில்லியன் நேயர்களைக் கொண்ட பிபிசி 14 மில்லியன் நேயர்கள்களை இழந்து தற்பொழுது 164 மில்லியன் நேயர்களை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் தனது இணையதளத்தினை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது பிபிசி. ஐந்து வெளிநாட்டு மொழிகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்தப் பின்பே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 03, 2011

பாடல்களுக்கு ஆல் இந்தியா ரேடியோவை மட்டுமே அண்டியிருந்த காலம்.

.......பாடல்களுக்கு ஆல் இந்தியா ரேடியோவை மட்டுமே அண்டியிருந்த காலம். ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி சுமாருக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரம் சினிமா பாட்டாகப் போட்டுத்தள்ளுவார்கள். கையில் உள்ள பாட்டு புஸ்தகங்களை எடுத்து ரெடியாக வைத்துக்கொண்டு காத்திருப்பேன். என்னிடமுள்ள புத்தகங்களில் உள்ள பாடல் ஏதாவது ஒலிபரப்பானால் அது வரம். ரொம்ப சந்தோஷமாகிவிடும். ராத்திரி ஒன்பது மணிக்கப்புறமும் பாட்டு இருக்கும். ஆனால் கேட்கும் வாய்ப்பில்லை.......
விரிவாக படிக்க...சொடுக்கவும்

Thursday, July 28, 2011

இலங்கை வானொலியின் அறிய புகைப்படங்கள்


எலிசபெத் ராணியார் இலங்கை வானொலிக்கு
வருகை புரிந்தபோது ஆற்றிய உரை

பழமையான மருத்துவ மனையே இன்றைய இலங்கை வானொலி.

ஒரு சில பழமையான பகுதிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

பழமையான வானொலி ஒலிபரப்பிற்கு பயன்படுத்தப்பட்ட
கருவிகள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் புகைப்படங்கள் தொடர்பான விரிவான கட்டுரை
‘சர்வதேச வானொலி’ இதழில்....

புகைப்படங்கள் உதவி: சண்டே அப்சர்வர், இலங்கை

Thursday, July 21, 2011

வானொலி நிகழ்ச்சி வடிவங்கள்

செய்திகள்
கலந்துரையாடல்
நேர்முக வர்ணை
போட்டி நிகழ்ச்சிகள் (தமிழ்மூலம் உரையாடல்!, பொது அறிவு)
வானொலி நாடகங்கள்
விபரண நிகழ்ச்சிகள், பெட்டக நிகழ்ச்சிகள்
அறிவித்தல்கள்
ஆபத்துதவி நிகழ்ச்சிகள்
வாழ்த்துக்கள்
விளம்பரங்கள்
வானொலிச் சந்தை
நகைச்சுவை சொல்லல்
பாட்டுக்கள், பாட்டு நிகழ்ச்சிகள்
சந்திப்புக்கள், உரையாடல்
பட்டிமன்றம்
சிறுவர்/முதியவர்/இளையவர்/பெண்கள் நிகழ்ச்சிகள்
சமய நிகழ்ச்சிகள்
இலக்கிய நிகழ்ச்சிகள்
ஆய்வுரைகள் - analysis

Thursday, July 14, 2011

தமிழ் ஒலிபரப்புத்துறை

தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது. மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அமெரிக்காவில் 1907 ம் ஆண்டு ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பித்தன. 1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது. இலங்கையில் 1923 ஆம் ஆண்டிலேயே ஒலிபரப்பு சோதனை முயற்சிகள் நடைபெற்று, 1925 இல் சீரான ஒலிபரப்பு துவங்கப்பட்டது. தமிழின் ஒலிபரப்புத்துறை ரேடியோ சிலோனின் மூலமே . For want to add more news in this chapter, kindly click here for the contribution

Monday, July 11, 2011

எஸ்.எம்.எஸ்., மூலம் சேவை செய்யும் இளைய தலைமுறை

இளைய தலைமுறை, எப்போதும் மொபைல் போனில் வெட்டியாக அரட்டை அடிப்பதையும், விடிய விடிய எஸ்.எம்.எஸ்.,சில், "கடலை' போடுவதையும், மொபைல் போன் வாங்கித் தரும் பெரியவர்கள் ரசிப்பதில்லை. இதற்கு மறுபக்கமும் உள்ளது என்பது போல், இளைஞர்கள் கூட்டம், குறுந்தகவலை, சமூக சேவைக்காக பயன்படுத்திக் காட்டியுள்ளது.சேலம் மாவட்டம், ஊஞ்சகாடு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் தன் மொபைலில் இருந்து, தினமும் காலையில், 200 பேருக்கு, "தகவல் மேடை' என்ற பெயரில், பொது அறிவு செய்திகளையும், மாலை, "உங்களின் சிந்தனைக்கு' என்ற தலைப்பில், அறிஞர்களின் சிந்தனைகள், போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் தினங்களில் அன்றைய தினத்தின் சிறப்பு, அதற்கான அவசியம் குறித்து குறுந்தகவல் அனுப்புகிறார்.


""டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், "நீங்கள் தினமும் அனுப்பிய பொது அறிவு, அறிஞர்களின் பொன்மொழி ஊக்கமாக இருந்தது. தேர்வில் கேட்கப்பட்ட பல கேள்விக்கான பதில்களை, நீங்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளீர்கள்' என்ற போது, உண்மையாகவே சிலிர்த்து போனேன்,'' என கூறிய தேவராஜ், "தேவா எஸ்.எம்.எஸ்., நெட்' என்ற பெயரில், குறுஞ்செய்தி வட்டாரத்தை நடத்தி வருகிறார்.புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயகுமார், "இனியா' என்ற பெயரில் குறுந்தகவலாக வாரம் ஒரு முறை வெளியாகும் இதழை நடத்துகிறார்.


இலக்கியம், அறிவியல், சமூக விழிப்புணர்வு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த இதழுக்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். இதில் வெளியாகும் கவிதைகள், "ஏழைதாசன்' என்ற சிற்றிதழில் வெளியாகின்றன.""புதிதாக எழுத வருகிறவர்களை ஊக்குவிப்பது தான், குறுந்தகவல் இதழின் நோக்கம்,'' என்ற விஜயகுமார், ""பிரபல பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பி, பிரசுரமாகாத படைப்பாளர்கள் பலரை ஊக்குவிப்பது தான், எங்கள் பணி. அதை முடிந்த அளவிற்கு சரியாக செய்து வருகிறேன். நான் ஒரு சிலருக்கு அனுப்புவேன். அவர்கள் இதழோட தரத்தை பார்த்து, பலருக்கு அனுப்புறாங்க...'' என்கிறார்.


சென்னையில், எஸ்.எம்.எஸ்., வட்டார நண்பர்களுக்காக வலைப்பூ bcsms.blogspot.com) நடத்தும் சந்திரசேகர், தினமும் 350 பேருக்கு, பயனுள்ள செய்திகளை, காலை மற்றும் மாலையும் அனுப்புகிறார்.நண்பர் வட்டாரங்களில் வரும் சிறந்த குறுஞ்செய்திகளை, தன் வலைப்பூவில் பதித்து, உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். இவரது குறுஞ்செய்திகள், திருநங்கைகள், குழந்தைத் தொழிலாளர் என, சமூக பிரச்னைகளைப் பேசுகின்றன.


கே.எம்.ஆர்., மூலிகை நெட் குறுஞ்செய்தி இதழ், சமீபத்தில், 1,500 நாள் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. மூலிகை குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த குறுந்தகவல் இதழ் நடத்தப்படுகிறது. இதிலிருந்து தினமும் 700 பேருக்கு தகவல் அனுப்பப்படுகிறது.இந்த இதழின் தொடர்ச்சியான வேண்டுகோளை ஏற்று, பலர் இயற்கை உணவு முறைக்கு மாறியுள்ளனர். ""நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் பிடியில் சிக்கி, இயற்கையை மறந்து வருகிறோம்.


இதை மாற்ற வேண்டும் என்பது தான் என் கொள்கை. அதற்கு எஸ்.எம்.எஸ்., இதழை பயன்படுத்தி வருகிறேன்,'' என கூறுகிறார், மூலிகை நெட் நடத்தும், சென்னையைச் சேர்ந்த, பாஸ்டர் எம். ராஜூ .ரசிக்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் என்பது மட்டும் இல்லாமல், பலரின் வாழ்வில் நல்ல பயனைத் தந்துள்ளது குறுந்தகவல் வசதி. ""என் தங்கை திருமணத்திற்கு காசில்லாமல் சிரமப்பட்ட போது, என் நெருங்கிய நண்பன் மூலமாக, எஸ்.எம்.எஸ்., வட்டார நண்பர்களுக்கு செய்தி பரவி, அவர்கள் அளித்த நிதியுதவியுடன் என் தங்கை திருமணம் நடந்தது,'' என, கண்களில் நீர் வழிய சொல்கிறார், குறுந்தகவல் வட்டாரத்தில் பங்கேற்கும் புவனேந்திரன்.- அ.ப.இராசா -

நன்றி: தினமலர் 

Saturday, July 09, 2011

தமிழோசைக்கு வயது 70

சர்வதேச ஒலிபரப்பு வரலாற்றில் தனி இடம் பிடித்திருக்கும் பிபிசி உலக சேவையின் பல்வேறு மொழிப்பிரிவுகளில், தெற்காசிய மொழிப்பிரிவுகளில் ஒன்றான, பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகிறது.


தமிழோசை தொடங்கப்பட்ட காலம் என்பது இரண்டாம் உலகப்போர் முற்றிய காலகட்டம், பின்னர் காலனித்துவத்தின் சரிவின் ஆரம்ப காலம் ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் அமைந்திருந்தது.
1941 மே மாதம் மூன்றாம் நாள் தனது ஒலிபரப்பைத் தொடங்கிய பிபிசி தமிழ்ப் பிரிவு, வாரம் ஒருமுறை இலங்கை மடல் என்ற பெயரில் தான் தனது ஒலிபரப்பை முதலில் நடத்தியது.

முதலில் வாரம் ஒரு முறை, பின்னர் வாரமிருமுறை இலங்கை மடலாக ஒலித்து வந்த தமிழோசை, அப்போதைய காலகட்டங்களில் சஞ்சிகை வடிவிலேயே வந்தது. தமிழ் இலக்கியம், நாடகம், கலை என செய்திகளைவிட பிற அம்சங்களை அதிகம் தாங்கி ஒலித்தது தமிழோசை.

அப்போதெல்லாம், தமிழோசையின் தயாரிப்பாளர்கள் சொந்தமாக வடித்த நாடகங்கள் தவிர ஆங்கில மற்றும் பிற மொழி நாடகங்களின் மொழியாக்கங்களும் தமிழோசையில் இடம்பெற்று வந்தன. குறிப்பாக, புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்கள் தமிழோசையின் ஆசிரியர் சங்கர் என்ற சங்கரமூர்த்தியால் தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழோசையில் அரங்கேறின.

இனப்பிரச்சினை

எண்பதுகளின் முற்பகுதியில் இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதாக வெடித்த போது , தமிழோசை அந்தப்பிரச்சினையினை செய்திகள் மற்றும் பேட்டிகள் மூலம் நேயர்களுக்கு விளக்க உதவியது.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அப்போதைய தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் லண்டன் வந்தபோது தமிழோசைக்கு பேட்டி அளித்தார்.

தமிழர் அரசியலில் மிதவாதம் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆயுத அரசியலின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோது 1986ல் பெங்களூரில் நடந்த சார்க் மாநாட்டின் போது பெங்களூர் வந்திருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தமிழோசைக்கு பேட்டியளித்தார்.

இலங்கைப் பிரச்சினை மட்டுமல்லாது, தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் இந்திய அரசியலையும் பிரதிபலிக்கும் செய்திகளையும் தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பியுள்ளது.



Monday, July 04, 2011

வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு

“பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே” என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் “ஜோதி ஸ்டோர்ஸ்” புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே விளம்பரதாரர்கள் இந்த ஒலி ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைக்குப் பெரும்பாலான வானொலிகளில் முக்கியமான பாடல் நிகழ்ச்சிகளில் கூட விளம்பரத்தின் ஆக்கிரமிப்பில் பாடல்கள் துண்டாடப்படும்.

அகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய காரணியாக இந்த இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை எனலாம். பாடல், களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களே முதுகெலும்பாய் அமைந்தன. நாடகங்களுக்கும் (குறிப்பாக தணியாத தாகம்), பாட்டுக்குப் பாட்டுப் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணையாக அமைந்த விளம்பரங்கள் குறித்த நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெற்ற அபிமானத்துக்கு நிகரான புகழைப் பெற்றன. இவை மூலம் குறித்த வர்த்தக ஸ்தாபனங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு பலமடங்காயிற்று என்றால் மிகையாகாது. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு சிறந்ததோர் உதாரணம்.

இந்திய வானொலியில் எஸ்.வி.ரமணன் குரல், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியின் சகோதரி (பெயர் நினைவிலில்லை) ஆகியவை எவ்வளவு தூரம் விளம்பரங்களுக்கு எடுப்பாக அமைந்து விட்டன என்பதற்கு நிஜாம் பாக்கு, கோபால் பற்பொடி விளம்பரங்களைச் சுட்டமுடியும். அதே போன்று இந்திய வானொலியில் இரவு நேர விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இருபது வருஷங்களுக்கு முன்னர் பயன்பட்ட ஒரு பாடல்
“என் அத்தானின் வயல் தனிலே அருவி போல் தண்ணீரு பாயுதே” (பெண் குரல்)
“பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமிது” (ஆண் குரல்)
மேற்குறித்த விளம்பரப் பாடல் இன்று வரை சினிமாப்பாடல்களுக்கு நிகராக என் நினைவில் தங்கியிருப்பதற்கும் குறித்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களையே சாரும்.

இலங்கை வானொலியை எடுத்துக் கொண்டால் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் வானொலிப் பங்கில் விளம்பரத்தின் அவர் கையாண்ட புதுமை பதியப்பட வேண்டியது. ஈரடி வெண்பா பாணியில் விளம்பரங்களை உருவாக்கி அதைப் பொருத்தமான ஆண் பெண் குரலில் பாடவைத்துக் குறித்த விளம்பரங்களைப் பாடல்களாய் முணுமுணுக்க வைத்ததற்கு ஓர் உதாரணம் இலங்கை வானொலிச் சரித்திரத்தில் மிகப்பெரும் புகழ் பெற்ற நாடகமான “தணியாத தாகம்” நாடகத்தில் வரும் “அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே” என்ற பாடல். சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகள் தம் செழுமையான இலக்கிய அறிவை வானொலி ஊடகத்துக்குத் தகுந்தாற் போல இவ்வகையை மெல்லிசை விளம்பரப்பாடல்களாக ஆக்கியளித்தார்கள் என்றால் மறுபுறம் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா ஆகியோரின் திறன் சினிமாப்பாடல்களை வைத்து விளம்பர வல்லமை படைத்தது. அதாவது ஏதாவது சினிமாப்பாடலின் முதல் அடியை எடுத்து அதைச் சுவை கலந்த உரையாடலோடு நுட்பமான வகையில் செதுக்கி விளம்பரப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய “தங்கமே தங்கமே” என்ற காதல் பாடல் நகைக்கடை விளம்பரமாகியது. கே.எஸ்.ராஜாவின் தனித்துவமான குரலில் மிளிர்ந்த “திரைவிருந்து”என்ற நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சி என்பதையே மறக்கடிக்கச் செய்து சுவாரஸ்யமான வர்த்தக நிகழ்ச்சியானதற்கும் இந்தக் கலைஞனின் திறமையே குறிப்பிடத்தக்கதாகும். முன்பெல்லாம் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் திரையிட்டு முன்வரிசையில் இருந்தவாறே ரேப் ரெக்கோடரில் அதைப் பதிவு செய்து பின்னர் வானொலிக் கலையகத்தில் வந்து முன்னர் பதிவு செய்யப்பட்ட குறித்த திரைப்படத்தின் வசனங்களைத் திரைப்படத்திற்கான விளம்பரத்தோடு இணைத்தார்களாம். முன் சொன்ன அறிவிப்பாளர்களோடு வானொலி விளம்பரத்துறையின் பங்காளிகளாக மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம், கமலினி செல்வராஜன் என்று ஒரு பெரும் பட்டியல் நீளும். இலங்கை வானொலியின் விளம்பரங்களின் தோற்றம், அவற்றின் பரிணாணம் இவையெல்லாம் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஒரு ஆய்வுக்கு ஒப்பானது. இந்தப் பணியை இலங்கை வானொலியின் பொற்காலமாக இருந்து விட்ட எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை பணியாற்றியோர் மட்டுமே ஆழ அகலமாகச் செய்ய முடியும். என் வானொலி கேட்டல் அனுபவங்கள், அவதானிப்புக்கள், வானொலியாளர்களோடு பழகியபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையே முன் சொன்ன பத்திகளில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.

தமிழ் வானொலிகளின் எண்ணிக்கை பரவலாக உலகெங்கும் வியாபித்த போது விளம்பரங்களின் தேவையும் பன்மடங்காக வளர்ந்துள்ளமை இந்தத் துறையோடு நேரடி அனுபவம் மிக்கவர்களுக்கு மிக நெருக்கமான உண்மை.1996 ஆம் ஆண்டில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலியாக கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ஒன்று இரண்டாக வானொலிகள் முளைக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் மட்டுமே வானொலிச் சேவை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்திருக்கின்றது. சிங்கப்பூர், மலேசியா விதிவிலக்காக சற்று அதிகப்படியான நேரங்களோடு நாளாந்த சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த சூழலில் சிங்கப்பூர், மலேசிய வானொலிகள், பிபிசி தமிழ்சேவை தவிர்ந்த மற்றைய வானொலிகள் ஈழத்தமிழ் சமூகத்தால் உருவாக்கி நடாத்தப்பட்டு வந்தன, வருகின்றன. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியும் மலேசிய தமிழ் வானொலியும் மெல்ல 24 மணி நேரத்திற்குத் தம் சேவையை விரிவுபடுத்துகின்றன. இலங்கையிலும் தனியார் வானொலிகள் புதிதாக முளைக்கின்றன. சக்தி, சூரியன், சுவர்ணஒலி (இப்போது இல்லை), வெற்றி என்று அவை 24 மணி நேர வானொலிகளாக மாறும் போது அங்கேயும் முதுகெலும்பாய் இருப்பது விளம்பரதாரர்களது சேவை என்பது தவிர்க்கமுடியாதது. வானொலிகளின் வருகையைப் பற்றிய அறிமுகத்தை இங்கே நான் குறிப்பிட்டதற்குப் பின்னால் வர இருக்கும் பத்திகளுக்கான தேவையாக அமைந்திருக்கின்றது. மற்றப்படி தமிழ் வானொலிகளின் தோற்றம் குறித்தும் இன்னொரு விரிவான பதிவு தேவையாக அமைகின்றது.

சிங்கப்பூர் வானொலி போன்ற ஊடகங்களில் அந்த நாட்டில் இருக்கும் பல நூறு தமிழ்வர்த்தக ஸ்தாபனங்களோடு ஒப்பிடும் போது விளம்பரங்கள் என்று பார்த்தால் ஒரு சில நிறுவனங்களே பயன்பட்டால் இருக்கின்றன. அதற்கு வானொலியின் சில கட்டுப்பாடுகள். விளம்பர விதிமுறைகள், கட்டணங்கள் காரணியாக இருக்கலாம். இதற்கு நேர்மாறாக மலேசியாவின் THR ராகா என்ற தனியார் வானொலியில் மணிக்கொரு தடவை 15 நிமிடத்துக்கு மேலாக குறித்த சில வர்த்தக ஸ்தாபனக்களின் சிறப்பு விளம்பரதார் நேரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த THR ராகா வானொலியில் வரும் விளம்பரங்களில் ஆனந்தாவும் சங்கராவும் இணைந்து நடத்தும் ஶ்ரீ மீனாட்சி நிறுவனத்தின் ஊறுகாய், மசாலாப்பொடி விளம்பர நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த்து இன்று வரை நான் கேட்டு ரசிக்கின்றேன். அதில் அவர்கள் இருவரும் கற்பனைத் திறனோடு நகைச்சுவை கலந்து உருவாகிய இந்த விளம்பரப்படைப்பின் வெற்றி விளம்பரம் செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் மலேசியாவில் இருந்து சிட்னிக் கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது கடல் கடந்த நாட்டில் வாழும் என்னைப் போன்ற நுகர்வோனையும் எட்டியிருக்கின்றது.

அந்த ஒலிப்பதிவுகளை இங்கே தருகின்றேன்

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் பின்னர் வானொலியிலும் ஒலிவடிவில் பயன்படுத்தப்படும் கூத்தும் இருக்கின்றது. குறிப்பாக சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் என்ற பழைய விளம்பரம் இந்திய வானொலியில் இருந்து உதாரணம் காட்டும் அதே வேளை இன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் காலை நிகழ்ச்சியான ஆனந்தம் ஆரம்பம் நிகழ்ச்சிக்குப் பயன்படும் “ப்ரூ காபி” விளம்பரமும் இத்தகையதே”.

வானொலி ஊடகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பங்களிப்பும் இருக்கின்ற காரணத்தினால் உள் வீட்டு விவகாரங்கள் சிலவற்றையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல்லின வானொலிச் சேவைகள் ஒருபக்கம் (பிபிசி தமிழ் சேவை) இருக்க முழுமையான தனியார் தமிழ் வானொலிகள் என்று அமையும் பட்சத்திலே அங்கே ஒரு சிலரின் முதலீடும் விளம்பரங்களின் அனுசரணையுமே பெரும் தேவையாக அமைகின்றது. அரச அனுசரணையோடு இயங்கும் வானொலிகளில் வர்த்தக விளம்பரங்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடும் விதிமுறைகளும் உண்டு. குறிப்பாக சில நொடிகள் மட்டுமே இருத்தல் வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தலாகாது ஆகியவை சில உதாரணங்கள்.
தனியார் வானொலிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் விளம்பரதாரர்களின் தேவையும் அவசியமும் கணிசமான அளவு பங்கை வகிக்கக் காரணம் வானொலி இயங்குவதற்கான உரிமம், இயங்கு கருவிகள், தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், தொலைபேசிக் கட்டணங்கள் (குறிப்பாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துப் பேட்டி, செய்திச் சேவையைப் பெறுவதற்காக) இவையெல்லாம் தவிர தமிழில் எந்தெந்தப் படங்கள் நேற்றிலிருந்து இன்று வரை வெளியாகியிருக்கின்றனவோ அவற்றின் பாடல் இசைத்தட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்ற தேவையும் இருக்கின்றது. நொள்ளை சொள்ளை நல்லது கெட்டது என்றில்லாமல் எல்லாப் படங்களது பாடல் இசைத்தட்டுக்களையும் வாங்கி வைத்திருக்கும் தேவை ஏற்படுகின்றது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவுஸ்திரேலியாவில் இயங்கும் வானொலிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ஊதியமற்ற சேவையை வழங்குகின்றார்கள். மற்றைய எல்லா நாடுகளில் இருக்கும் வானொலிச் சேவையாளர்களுக்கு சேவை நேரத்தைப் பொறுத்து ஊதியமும் வழங்கப்படுகின்றது. இங்கேயும் விளம்பரவருவாயே இதைத் தீர்மானிக்கின்றது.

விளம்பரம் என்று எடுக்கும் போது கூட வானொலியில் அவற்றைப் பல்வேறு வகையினதாகக் கையாளுவார்கள். சமூக அறிவித்தல்கள் என்ற பிரிவின் கீழ் தொண்டு ஸ்தாபனங்கள், பல்வேறு நல அமைப்புக்களின் அறிவித்தல்கள் அடக்கப்பட்டு அவை பிரதான செய்திகளுக்குப் பின் இலவசமாக வாசிக்கப்படும். இவற்றுக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு சொற்களுக்கும் இத்தனை பைசா என்று அறவிடப்படும். (நான் பணியுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மரண அறிவித்தல்களுக்குப் பணம் அறவிடப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது).

அடுத்தது வர்த்தக விளம்பரங்கள் இவற்றில் குறுகிய கால நோக்கினதான விளம்பரங்களும் , நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான விளம்பரங்களும் அடங்கும். குறுகிய கால விளம்பரங்களுக்குச் சிறந்த உதாரணமாக தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் அடங்கும். நீண்டகால நோக்கிலான விளம்பரங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம், ஒரு வருஷம் என அமையும். இங்கே சில விபரீதமான செயற்பாடுகளையும் சொல்லி வைக்க வேண்டும். வானொலிகளுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டிகள் காரணமாக ஒரு வானொலி இன்னொரு வானொலியில் விளம்பரம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தும் மீறினால் இரட்டிப்பான கட்டணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும். குறித்த வானொலி சமூகத்தில் தான் செல்வாக்கானதொரு வானொலியாக ஏற்படுத்தும் பிரமையில் மயங்கிப் பின்னால் போய்விடும் வர்த்தகர்களும் உண்டு. இது ஒருபுறம் இருக்க இன்னொரு வகையான விபரீதம் என்னவென்றால் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள் செய்யும் ஏய்ப்பு. புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலியைத் தேடி விளம்பரம் செய்ய வேண்டும் என்று வரும் வர்த்தக ஸ்தாபனங்கள் மிகச் சொற்பமே. வானொலிகளே வர்த்தகர்களைத் தேடிப் போய் விளம்பரங்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்ற காரணத்தினால் வர்த்தகர்களின் நிபந்தனைகளுக்குள் கட்டுப்படவேண்டிய நிலை உருவாகின்றது. உதாரணமாக விளம்பரத்துக்காக முற்கூட்டியே பணம் தரப்படமாட்டாது, விளம்பரம் செய்தும் எனக்கு வியாபாரம் இல்லையென்றால் பணம் தரமாட்டேன் இப்படியான நிபந்தனைகள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் குறித்த கடை விளம்பரம் ஒரு வருடம் ஓடிக்கொண்டிருக்கின்றதால் 12 வது மாதம் கடையையும் காணோம், கடைக்காரரையும் காணோம் என்ற நிலை பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, அவை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் இலங்கை இந்திய தமிழ் வர்த்தக நிறுவனங்கள் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லையில் இருப்பதால் கடை கடையாகத் தேடிப் போய் எட்டிப் பிடிக்கும் விளம்பரங்களைத் தயாரிப்பதில் எவ்வளவு தூரம் கரிசனை காட்டப்படுகின்றது என்பதற்கு இணையமூலம் வரும் வானொலிகளை நீங்கள் கேட்டாலே நல்ல உதாரணக்களைப் பிடிக்க முடியும். இந்த விஷயத்தில் 24 மணி நேர வானொலிகளின் முன்னோடியான கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்யும் விளம்பரங்களில் ஈழத்தவரின் குணாதிசியங்களை எள்ளல் பாணியில் காட்டிச் செய்யும் நகைச்சுவை கலந்த வர்த்தக விளம்பரங்களின் உருவாக்கம் அலாதியானது. கனேடியத் தமிழ் வானொலியில் இளம் அறிவிப்பாளர்கள் தயாரித்து ஒலிபரப்பாகும் விளம்பரங்களும் சளைத்தவை அல்ல. ஐரோப்பிய வானொலிகளில் ஐபிசி வானொலி போன்ற குறிப்பிட்ட சில ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு இருக்கின்றது. சிங்கப்பூர் வானொலியில் ஏற்கனவே இந்திய ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்கள் சில மீளப் பெறப்பட்டு ஒலிபரப்பாகக் காரணம் இறக்குமதிச் சந்தை நோக்கிய விளம்பரங்களாக அவை அமைந்து காணப்படுகின்றன. இலங்கையில் தனியார் வானொலிகள் ஒவ்வொன்றுமே போட்டி போட்டுக் கொண்டு அவரவர் பாணியில் தனித்துவமாக விளம்பரங்களைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த வானொலி ஊடகங்களில் பரவலாக ஒப்பு நோக்கினால் வானொலி விளம்பரங்களைச் செய்ய எடுக்கும் முனைப்பும், கற்பனைத் திறனும் மிகவும் சொற்பமாக அமைந்து அவை அற்பமாக மாறி விடுகின்றன. ஏனோ தானோ என்று ஏண்டா எடுப்பாகச் செய்யப்படும் சில வானொலி விளம்பரங்களைக் கேட்கும் போது வானொலியின் காதைத் திருகத் தோன்றும். விளம்பரம் என்பதே கலை அதுவும் வானொலி விளம்பரம் என்னும் போது அதற்கான ஈர்ப்பு இன்னும் ஒரு படி மேல். எனவே பொருத்தமான வானொலிக் கலைஞர்கள், படைப்பாளிகளை வைத்து இவற்றை உருவாக்கி மெருகேற்றுவது இருக்கும் விளம்பரதாரரை தக்கவைக்கும் என்பது மட்டுமல்ல இனி வரப்போகும் விளம்பரதாரர்களுக்கும் இவற்றினை உதாரணங் காட்டி இழுக்க முடியும் என்பதே உண்மை.

ஒருமுறை இணையமூலம் குறித்த வானொலி ஒன்றைக் கேட்ட போது எனக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த வானொலி விளம்பரம் இப்படிப் போகின்றது. “போகாதே போகாதே” என்று ஒரு பெண் கூக்குரல் இடுவார். பின்னால் “…..அந்த உணவகத்தைத் தவிர வேறு உணவகம் போகாதே” என்று விளம்பரம் போகும். இங்கே சொல்லப்படும் செய்தி என்னவென்றால் குறித்த இந்திய உணவகம் தவிர வேறு இந்திய உணவகம் போகாதே என்பதே. இப்படியொரு விளம்பரம் செய்து விட்டு அதே வானொலி இன்னொரு இந்திய உணவகத்தைப் பற்றி விளம்பரம் செய்தால் எப்படியானதொரு கேலிக்கூத்தாக அமையும் என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன். குறித்த சில நாட்களுக்குப் பின் அந்த வானொலி விளம்பரம் தூக்கப்பட்டு விட்டது நிச்சயமாக இதே போன்ற ஒரு கண்டனத்தை அவர்கள் பெற்றதன் வெளிப்பாடாகத் தான் சொல்ல வேண்டும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.

இந்தப் பதிவு முடியும் தறுவாயில் ஒரு விஷயத்தைச் சொல்லி வைக்கின்றேன். ஈழத்தின் படைப்பாளி, பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரை அவர்களின் “விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூல் குறித்த ஒரு பகிர்வை வழங்குவதற்கான அறிமுகமாகத் தான் இந்தப் பதிவின் ஆரம்பப் பகிர்வுகளை வழங்க ஆரம்பித்தேன். ஆனால் மேலே சில விஷயங்களை விலக்காமல் தொடரவேண்டிய தேவை ஏற்பட்டதால் பதிவின் திசை மாறி விட்டது. இருப்பினும் காவலூர் ராசதுரை அவர்களின் “விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூல் குறித்த என் பகிர்வை அடுத்த பதிவில் தருகின்றேன்.

Saturday, June 25, 2011

ஆண்டனா பற்றிய இலவச புத்தகம்


எட்மாண் போர்டெ அவர்களால் 1952ல் எழுதப்பட்ட ஆண்டனா பற்றிய “ரேடியோ ஆண்டனா என்ஜினியரிங்” எனும் புத்தகமானது தற்பொழுது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. மத்திய அலை, சிற்றலை வானொலிகளைத் தெளிவாக கேட்க எந்த வகையான ஆண்டனாக்களை பயன்படுத்தலாம் போன்ற தகவல்கள் இந்த புத்தகத்தில் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்ய..

Tuesday, June 21, 2011

சீன வானொலியின் தலைச்சிறந்த நேயர் மன்றத் தேர்வு

2011ஆம் ஆண்டு சீன வானொலி நிறுவப்பட்ட 70வது நிறைவு ஆண்டாகும். அதேவேளையில் வெளிநாடுகளில் முதலாவது நேயர் மன்றமான ஜப்பான்-பெய்ஜிங் ஒலிபரப்பு நேயர் மன்றம் நிறுவப்பட்ட 50வது நிறைவு ஆண்டாகும். சீன வானொலி நிலையம் தொடங்கிய 70 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வெளிநாடுகளில் உள்ள சீன வானொலி நேயர் மன்றங்களின் வளர்ச்சியை முன்னேற்ற ஜுன் முதல் நாள் தொடக்கம் டிசெம்பர் முதல் நாள் வரையான காலக்கட்டத்தில் சீன வானொலி "உலகளவிலான கொண்டாட்டம் மற்றும் பத்து தலைச்சிறந்த நேயர் மன்றங்களின் தேர்வு"என்னும் நடவடிக்கையை மேற்கொள்ளும். 61 மொழிகளின் சிற்றலை வானொலி, இணையதள வானொலி, நிழற்படங்கள், எழுத்துக்கள், ஒலி, ஒளி முதலிய பல்லூடக வடிவங்களில் சீன வானொலியின் நேயர்களிடையில் இந்த நடவடிக்கை பரப்புரை செய்யப்படுகின்றது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் நேயர் மன்றங்களில் தலைசிறந்த பத்து நேயர் மன்றங்களை தேர்ந்தெடுக்க சீன வானொலி சிறப்பு தேர்வு பணியகத்தை நிறுவும்.

இந்த பத்து தலைச்சிறந்த நேயர் மன்றங்கள் பன்னாடுகளிலுள்ள சீனா வானொலி நேயர் மன்றங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.

தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளும் சீன வானொலி நேயர் மன்றங்கள் கிளை மன்றங்களோடு சேர்த்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அடிக்கடி நேயர்களுடன் தொடர்பு கொண்டு சீன வானொலி நிலையத்தின் பல்லூடகங்கள் மூலம் வழங்கப்படும் நிகழ்ச்சிகளை கேட்க வேண்டும். இதற்கிடையில் சீனப் பண்பாட்டைப் பரவ செய்து, சீன வானொலி நிலையம் பற்றி பரப்புரை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஊக்கத்துடன் கலந்து கொள்ள வேண்டும். சீன வானொலி நிறுவப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள நேயர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு நிறைவடைந்த பின் பத்து தலைசிறந்த நேயர் மன்றங்கள் பற்றிய விபரமான தகவல்கள் சீன வானொலியின் 61 மொழிகளின் ஒலிபரப்பு மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பத்து நேயர் மன்றங்களுக்கு 2011 தலைச்சிறந்த வெளிநாட்டு நேயர் மன்றம் என்ற பெருமை வழங்கப்படும். இவ்வாண்டு டிசெம்பர் திங்கள் சீனாவுக்கு வந்து பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள தேந்தெடுக்கப்படும் நேயர் மன்ற பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதேவேளை சீன வானொலி நிலையத்தின் கொண்டாட்டத்திலும் இதர சுற்றுலா பயணத்திலும் அவர்கள் கலந்து கொள்வர்.

இப்போது உலகில் பரவியுள்ள சீன வானொலி நிலையத்தின் நேயர் மன்றங்களின் மொத்த எண்ணிக்கை 3165ஐ எட்டியுள்ளது. இவற்றில் சிற்றலை வானொலி நேயர் மன்றங்களும் இணையபயன்பாட்டாளர் மன்றங்களும் உள்ளன. கடந்த பல ஆண்டுகளில் சீன வானொலி நிலையத்தின் நேயர் மன்றங்கள் சீனப் பண்பாட்டை பரவல் செய்து, சீன வானொலி நிலையத்தை பரப்புரை செய்து சீனாவுடனான பல்வேறு நாடுகளின் புரிந்துணர்வையும் நட்பையும் முன்னேற்றுவதில் ஆக்கமுள்ள பங்கை வெளிக்கொணர்ந்துள்ளன.

தலைச்சிறந்த நேயர் மன்றத் தேர்வில் கலந்துகொள்ளும் அமைப்புக்கள்

உலகிலுள்ள சீன வானொலியின் நேயர் மன்றங்கள்

காலம்:

2011ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள்- டிசம்பர் முதல் நாள்

கோரிக்கைகள்:

இன்றியமையாத நிபந்தனைகள்:

சரியான மன்ற அமைப்புமுறை இருக்க வேண்டும்;

சீன வானொலியின் நிகழ்ச்சிகளைக் கேட்குமாறு அடிக்கடி நேயர்களை திரட்ட வேண்டும்;

சீனா மற்றும் சீன வானொலிக்காக அடிக்கடி பரப்புரை மேற்கொள்ள வேண்டும்

சிறப்பு கோரிக்கைகள்:

1. செய்தி ஊடங்களில் சீன வானொலி மற்றும் சீன பண்பாட்டை பரவல் செய்து, ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளையும், கட்டுரைகளையும், படங்களையும் வெளியிடுவது.

2. சீன வானொலி நிறுவப்பட்ட 70 ஆண்டு நிறைவுக்காக, நேயர் மன்றங்கள் இடம்பெறுகின்ற நாட்டின் முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துக்களைப் பெறுவது

3. முக்கியபிரமுகர்கள் நேயர் மன்றத்தில் சேர்வதையும், நேயர் மன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதையும் உத்தரவாதம் செய்வது.

4. சீன வானொலி நிறுவப்பட்ட 70 ஆண்டு நிறைவைத் தலைப்பாகக் கொண்டு, அதிக செல்வாக்கு மிகுந்த நடவடிக்கைகளை நடத்துவது. சீன வானொலி நிலையம் நடத்தும் பொது அறிவு போட்டியில் கலந்துகொள்வது.

5. பரப்புரை ஒளிப்பதிவைத் தாயாரிப்பது, நேயர்களுக்கான இதழ்களை வெளியிடுவது.

இந்த தேர்வில் கலந்து கொள்ளும் அமைப்புகள், 2011ஆம் ஆண்டு ஆக்ஸ்டு திங்கள் முதல் நாளுக்கு முன், தேர்வு செய்யப்படும் கேரிக்கைகளுக்கு உகந்த தகவல்களை வழங்கி விட வேண்டும்.

விருதுகள்

1. தேர்வு செய்யப்பட்ட பத்து நேயர் மன்றங்களுக்கு, 2011ஆம் ஆண்டு தலைச்சிறத்த நேயர் மன்றம் என்னும் பட்டம் வழங்கப்படும். இந்த நேயர் மன்றங்களின் பிரதிநிதிகள், 2011ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் சீனாவுக்கு வந்து, விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சீன வானொலியின் கொண்டாட்ட நடவடிக்கைகளிலும், வேறு பயணங்களிலும் கலந்துகொள்ளலாம்.

2. தலைச்சிறந்த நேயர் மன்றங்களுக்கும், மிகவும் மதிப்புள்ள பங்காற்றிய அமைப்புகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் (3000~10000 ரென்மின்பி யுவான்)

தொடர்பு:

+861068892363

tamil@cri.com.cn

TAMIL SERVICE, CRI-9

CHINA RADIO INTERNATIONAL

P.O.Box 4216, BEIJING

P.R.CHINA 100040