Sunday, March 09, 2014

களஞ்சியம் சமுதாய வானொலி

வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எல்லாம் ஏதேனும் ஒரு வானொலி நிலையத்தினை சென்று பார்த்துவிடுவது எனது வழக்கம். அதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. அதனை எப்படி சொல்வது எனப் புரியவில்லை. அப்படி சமீபத்தில் நான் சென்று பார்த்த வானொலி நாகப்பட்டிணத்திற்கு அருகில், விழுந்தமாவடி எனும் கிராமத்தில் இருந்து செயல்பட்டு வருகின்ற களஞ்சியம் சமூக வானொலியைக் கூறியே ஆக வேண்டும். 


இந்த வானொலியின் பொறுப்பாளர் திரு.நகுவீர் பிரசாத் எனது நீண்ட கால நண்பர். எங்களது பல்கலையில் சமுதாய வானொலிகள் குறித்த தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஒரு எளிய நண்பர்.


பல இன்னல்களுக்கு இடையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும்  சமூக வானொலிகளில் இதுவும் ஒன்று. பல முறை இந்த வானொலியின் ஒலிபரப்பி புயல் காரணமாக விழுந்தது. தற்பொழுது ஸ்திரமாக அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது நாகப்பட்டிணம் மாவட்டத்தைப் பற்றித்தான் நமக்குத் தெரியுமே!


ஊரின் பலப்பகுதிகளிலும் கீழ்கண்ட ஸ்டிக்கரை ஒட்டி வைத்துள்ளனர். இதன் மூலம் அந்த மக்களை ஒன்றிணைத்து செயல்பட்டுவருகிறது


சிற்றலையின் காதலன்


வானொலியின் மீது ஆர்வம் கொண்டவர்கள் பல ஊர்களிலும் உள்ளனர். நண்பர் எம்.ஆர்.நாகேந்திரன் பல ஆண்டு கால நண்பர். சமீபத்தில் அவரை அவரது சொந்த ஊரான நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள விழுந்தமாவடியில்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர் கல்யாணியிருப்பு எம்.கே.பழனிவேல் அவர்களுடன் சென்று சந்தித்தேன். தான் சிற்றலை வானொலிகளோடு கொண்டு இருந்த தொடர்பினை மலரும் நினைவுகளாக எங்களோடு பகிர்ந்து கொண்டார். 


 தான் உலகின் பல முக்கிய வானொலிகளோடு தொடர்பு கொண்டு உறுப்பினர் எண் வாங்கியதை எம்மோடு பகிர்ந்து கொண்ட போது அவரின் கண்களைப் பார்த்தேன். அதில் ஒரு ஏக்கம் தொக்கி நின்றதைக் காண முடிந்தது.இன்றும் பல சிற்றலை வானொலி நேயர்கள் நான் உட்பட இவரைப் போன்றே இது போன்ற பொக்கிசங்களை பாதுகாத்து வருகிறோம். கீழே உள்ள இந்த பானாசோனிக் வானொலிப் பெட்டியில் தான் இவர் உலகின் பல வானொலிகளைக் கேட்டுள்ளார். வீட்டின் ஒரு அலமாரியில் நமது சர்வதேச வானொலி இதழ்களைப் பாதுகாத்து வைத்து இருந்தார்.அவற்றைப் பார்கையில் எம் மனதிற்கும் அந்த ஏக்கம் தொற்றிக்கொண்டது.


Saturday, March 08, 2014

ஆன்டிராய்டு இயங்குதள கைபேசியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மென்ஒருங்குநேயர் நண்பர்களே, வணக்கம். சீன
வானொலி தமிழ் ஒலிபரப்பு, இணையம்
போன்ற சேவைகளை நேயர்கள் எளிதாக
அனுபவிக்க வசதி அளிக்கப்படும்
வகையில், கைபேசிகளில் இயங்கும் "Tamil-
CRI"எனும் மென்ஒருங்கை உருவாக்க
தமிழ்ப் பிரிவு பெரிதும்
முயற்சி எடுத்துள்ளது.
இப்போது,ஆன்டிராய்டு[Android]
கைபேசியில் இயங்கும்
மென்ஒருங்கு வெளியாகியுள்ளது.
அதன் சோதனைப்
பதிப்பு தற்போது வழங்கப்படுகிறது.
அதில், தமிழப் பிரிவின்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகள், இணைய
செய்திகள் மற்றும் கட்டுரைகள்,
சிறப்புப் பகுதிகள், குறிப்பாக
தற்போது நடைபெறுகிற சீனாவில்
இரு பரும் கூட்டத் தொடர்கள்
இடம்பெறுகின்றன.
கண்டு கேட்டு மகிழுங்கள். இந்த
மென்ஒருங்கு பற்றி உங்கள்
கருத்துக்களையும்
ஆலோசனைகளையும் ஆர்வத்துடன்
எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி!
பயன்பாட்டுக் குறிப்புகள்:
ஒன்று, கைபேசி மூலம் இப்பக்கத்தில்
உலா வந்து, மென்ஒருங்கு பதிவிறக்கம்
செய்ய விரும்பினால்,
இங்கே சொடுக்கவும்,  அல்லது,
கைபேசியில் 'app.cri.com.cn'என்ற
இணையதளத்தில் இந்த
மென்ஒருங்கை பதிவிறக்கம்
செய்யுங்கள்
இரண்டு, தமிழ் எழுத்துக்களை உங்கள்
கைபேசியில் இயல்பாக காணும்
வகையில், ஆன்ராய்டு இயங்குதளத்தின்
பதிப்பு 4.0க்கு மேல் இருக்க வேண்டும்
என்பதை அறிவுறுத்துகின்றோம்.

Tuesday, March 04, 2014

தமிழத்தில் சர்வதேச வானொலி

சென்னையிலிருந்து வெளிவருகிற வானொலி தொடர்பான இதழ் வான்9, ஒலி4. இந்த இதழ் இணையதளத்திலும் வலைப்பூவாக வெளிவருகிறது. உலகம் முழுவதும் ஒலிபரப்பப்படுகிற வானொலி நிலையங்கள் பற்றிய செய்தியைத் தாங்கி வெளிவருகிறது இந்த இதழ். தமிழ்ச் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசைப் பட்டியலை வெளியிட்டு அதற்கான நேரங்களையும் குறிப்பிட்டுள்ளது. பல்வேறு வானொலி ஒலிபரப்புகள் பற்றிய செய்திக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. வானொலி தொடர்பாக நிகழுகிற விழாக்களை அறிமுகப்படுத்துகிறது. வானொலி வாசகர் சந்திப்பையும் குறிப்பிட்டுள்ளது. வானொலி நடத்துகிற போட்டிகள் பற்றிய குறிப்பும் இதழில் காணப்படுகிறது. உலக அளவில் ஒலிபரப்பாகுகிற நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கான தரமான வானொலி பற்றிய குறிப்பையும் இதழின் பின்பக்க உள் அட்டையில் குறிப்பிட்டுள்ளது. வானொலி நிகழ்ச்சியாளர்களுடனான நேர்காணலையும் வெளியிட்டுள்ளது. பெரிய அளவில் 16 பக்கங்களில் திங்கள் ஒருமுறை வெளிவரும் இந்த இதழ் தொடர வாழ்த்துகிறேன்.....
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, 
Source: http://www.thamizham.net/ithazh/newmag/nm/nm040-u8.htm

Saturday, March 01, 2014

டி.என்.ஜி ஓய்வு பெறுகிறார்


பணி ஓய்வு பெறுகிறார் டி.என்.கோபாலன்
டி என் கோபாலன்

வெள்ளிக்கிழமையோடு நமது சென்னை செய்தியாளர்
டி.என்.கோபாலன் பணி ஓய்வு பெற்றுச்
செல்கிறார்.
தமிழோசையின் செய்தியாளராக
சென்னையிலிருந்து 1998லிருந்து பணியாற்றிய
கோபாலன், தமிழோசையில் பணிபுரிந்த பல
ஆண்டுகளில், பல்வேறு நடப்புச் செய்திகளோடு, பல
சிறப்புத் தொடர்களையும் தந்தவர்.
தமிழகத்தில் தலித்துகளின் நிலை, தமிழக
முஸ்லீம்களின் பிரச்சினைகள் குறித்த
அவரது தொடர்கள் நேயர்களின் பாராட்டுக்களைப்
பெற்றவை.
அரசியல் செய்திகள் மட்டுமின்றி,
கலை கலாசாரத்துறையிலும் அவர்
தனது ஆர்வத்தைப் பயன்படுத்தி திறம்பட
செய்திகளைத் தந்தார்.
தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி குறித்து, அவர்
தயாரித்தளித்த 'காயாத கானகத்தே' தொடர் மற்றும்
தமிழிசை குறித்த தொடர்
போன்றவை நேயர்களுக்கு நினைவிருக்கலாம்.
இதழியல் மற்றும் ஒலிபரப்பு சேவையில் பல
ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும்
டி.என்.கோபாலனுக்கு நமது வாழ்த்துகள்.
தமிழோசையில் பணியாற்றிய அனுபவம்
குறித்து கூறும் கோபாலன் , பிபிசியில்
பணிபுரிந்த ஏறத்தாழ 16 ஆண்டுகள் காலம்
என்பது மகிழ்ச்சியான தருணங்களும்,
ஏமாற்றமளித்த தருணங்களும், கசப்பான
தருணங்களும் என எல்லாமுமான
ஒரு கலவை என்கிறார்.
புதிய மனிதர்கள், புதிய செய்திகள், புதிய
தொழில் நுணுக்கங்கள் இப்படிப் பலவற்றைத்
தெரிந்துகொள்ளும்
ஒரு வாய்ப்பு தனக்கு பிபிசியில்
கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார் .
தலித் மக்கள் மற்றும் முஸ்லீம்களின்
வாழ்நிலை, தமிழிசை, தமிழ் நாடகம்
குறித்த தொடர்கள் மனநிறைவைத் தந்தன
என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஊக்குவித்த, ஒத்துழைத்த,
பொறுத்துக்கொண்ட சக ஊழியர்களுக்கும்,
நேயர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என அவர்
தெரிவித்துள்ளார்
தமிழோசை மென்மேலும் சிறக்க
வாழ்த்துக்கள் என்றும் கோபாலன் கூறுகிறார்.
நன்றி: பிபிசி தமிழோசை